Advertisement
தினமலர் முதல் பக்கம் » Freethinker அவரது கருத்துக்கள்
Freethinker : கருத்துக்கள் ( 48 )
Freethinker
Advertisement
மே
11
2013
விவாதம் பாங்க் மூலம் மான்யம் பலன் தருமா?
நாட்டு நடப்பு தெரியாத புள்ளிவிவர காகித புலிகளால் இன்று நாடு நடத்த படிக்கிறது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் புள்ளிவிவரங்கள். அவ்வளவுதான். மக்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது அவர்கள் இந்த திட்டத்தை எப்படி எதிகொள்வார்கள் என்ற சிந்தனை துளியும் இல்லாமல் போடப்பட்ட திட்டம் இது. உதாரணம் - நம் நாட்டில் எரிவாயு மற்றும் ரேசன் போன்ற பொருட்களை வாங்கும் கடமையை பெரும்பாலும் குடும்பத்தலைவிகள் ஏற்றுகொண்டிருகிரார்கள். இப்போது என்ன நடக்கும்? அவர்கள் அதிக விலை கொடுத்து வாங்க திணறுவார்கள். அதான் அரசு பணம் தருகிறதே என்று நீங்கள் கூறலாம்? குடிகார கணவனை கொண்ட மனைவிகள் அந்த பணத்தை எப்படி தனதாகிகொள்ள முடியும்? அது சாத்தியமாகுமா? இந்த திட்டத்தால் ஏழை தாய்மார்களின் தாலி அருந்துபோவது நிச்சயம். குடிகார கணவன்களுக்கு கொண்டாட்டம். மதிய அரசு பணத்தை மாநில அரசு கைப்பற்றுவது நிச்சயம் [உபயம் - டாஸ்மாக்]. ஆக, கண்ணீரில் மிதக்க போவது ஏழை தாய்மார்கள்தான்.   07:13:15 IST
Rate this:
0 members
0 members
68 members
Share this Comment

மே
9
2013
சிறப்பு பகுதிகள் டீ கடை பெஞ்சு
சந்திரா, சிவகாமின்னு, சில பெரிய தலைகள் .... - இவிங்க எல்லாம் யாருன்னு தமிழகத்தில் 99.9 வீதம் பேருக்கு தெருயாது. சும்மா நீங்க பில்டப் கொடுக்காதீங்க. இப்படி கண்டவங்களையும் ஏத்தி விட்டே தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடாதீங்க. உண்மையில் மக்களுக்காக தன்னலம் இன்றி போராடுபர்கள் பெயரை மட்டும் போடுங்கள்.   07:28:55 IST
Rate this:
2 members
0 members
15 members
Share this Comment

ஏப்ரல்
22
2013
அரசியல் வைகோவுக்கு பிரதமர் கடிதம்
ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டும் வந்து வாக்காளர்களையும் பொதுமக்களையும் சந்திக்கும் ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சிகள் தேர்தல் முடிந்த அடுத்த நாளே மக்கள் மத்தியில் இருந்து காணாமல் போகும் இன்றைய நிலையில் மதிமுக மட்டுமே மக்களுக்காக தொடர்ந்து ஓய்வின்றி போராடி வருகிறது. வைகோ வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதே ஒரு சிறப்புதான். எவ்வளவு போராட்டங்கள்... முல்லை பெரியாறு, மூவர் தூக்கு விவகாரம், கெயில் நில ஆக்கிரமிப்பு எதிர்ப்பு , தூத்துக்குடி sterlite எதிர்ப்பு போராட்டம் என்று ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்காகவும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் போராடுகிறார். நன்றி.    07:20:04 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
17
2013
அரசியல் ராஜிவ் கொலையாளிகள் தூக்கு ரத்து செய்ய முயற்சி: வைகோ தகவல்
தினமலர் தயவு செய்து "ராஜீவ் கொலையாளிகள்" என்று செய்தி வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். அவர்கள் கொலை செய்யவில்லை. இந்த கொலையின் மைய பகுதியில் இருந்து அவர்கள் எங்கோ இருகிறார்கள். இன்னும் சொல்ல போனால் சம்பந்த படுத்த படிருகிரார்கள். ஆகவே, தயவு செய்து "ராஜீவ் கொலையாளிகள்" என்று கூற வேண்டாம். வேண்டுமானால். ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்ட என்று போடுங்கள். ஏனென்றால் நம் நாட்டில் நிறைய செய்தி படிப்பவர்கள் தலைப்பை வைத்தே தீர்ப்பை வழங்கிவிடுகிறார்கள்.    08:15:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
16
2013
பொது புல்லாரின் தூக்கு தண்டனை ஆயுளாக குறைக்கப்படும்? பரிசீலிக்க அரசு தயார்
புல்லரை தூக்கில் போடுவது காங்கிரசின் பச்சை அயோக்கியத்தனம். புல்லருக்கு எதிராக எந்த சாட்சியும் இல்லை. அவருக்கு எதிராக சமர்பிக்கபட்டிருக்கும் ஒரே சாட்சி, அவருடைய ஒப்புதல் வாக்கு மூலம். அதுவும் கை ரேகையிட்டு. இதை நம்ப முடிகிறதா? புல்லர் Ph D முடித்த ஒரு பேராசிரியர். அவர் எதற்கு கை ரேகையிடவேண்டும்? அதுவுமந்த பேப்பர் டைப் செய்யப்பட்டது. இந்த இரண்டுமே போதும் இது பலவந்தபடுத்தி பெறப்பட்டது என்று. இந்தியாவில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. இது போன்ற செயல்கள் நல்லதுக்கு அல்ல என்று மட்டும் எனக்கு தோன்றுகிறது. புல்லரின் தந்தை, மாமா, மற்றும் அவரின் நண்பர் போலிஸ் கஸ்டடியில் இறந்திருகின்றனர். நாளை நானே ஒரு கொலையை செய்துவிட்டு வேறு ஒருவரை மிரட்டி ஒப்புதல் வாக்குமூலம் வாங்கிவிட்டால் அவனை தூக்கில் போடுவது எந்த அளவுக்கு அயோக்கியத்தனமோ அதுபோல தான் இவரை தூக்கில் போடுவதும். இந்தியாவில் தவறு மேல் தவறு நடந்துகொண்டிருக்கிறது.   07:53:03 IST
Rate this:
4 members
1 members
8 members
Share this Comment

ஏப்ரல்
3
2013
அரசியல் "தமிழ் ஈழம் மலரும்': பா.ஜ., தலைவர் யஷ்வந்த் சின்கா பேச்சு
இவரின் பேச்சு குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதாக அமைந்தவிட கூடாது. இது இவரின் சொந்த கருத்தா அல்லது பாஜகவின் கருத்தா என்பதை முதலில் தெளிவு படுத்த வேண்டும். ஏனென்றால் சில நாட்களுக்கு முன் அத்வானி வேறு விதமாக சொன்னார் [அதுவும் அத்வானி கருத்தா பாஜக கருத்தா என்றும் தெரியவில்லை]. தமிழர்கள் உணர்ச்சிவசப்பட்டு எல்லோரையும் நம்பியது அந்தகாலம். அப்படிதான் ஒருவரை உலக தமிழ் இனத்திற்கே தலைவர் என்று சிம்மாசனத்தில் ஏற்றிவிட்டோம். இன்று அவர் கதை என்ன என்று அனைவருக்கும் தெரியும். தமிழின மீட்சியில் நடுவில் சில பல வர்டுடங்களை இழந்ததுதான் மிச்சம். ஆக, பாஜகவினர் செய்யவேண்டியது என்னவென்றால் இது பாஜகவின் கருத்து என்றால் அவர்கள் கட்சியின் மேலிடத்தை கூட்டி தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு அதற்காக பாடுபடுவோம் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்ற சொல்லுங்கள். இதை தவிர வேறு என்ன செய்தாலும் சொல்லினாலும் நாங்கள் நம்ப போவது இல்லை. அது உங்களுக்கும் எங்களுக்கும் நேர விரயமே. அது எங்களுக்கு தேவையும் இல்லை. இது இவரின் சொந்த கருத்து என்றால் அவரை பாஜக தலைவர்களிடம் நேரிடையாக பேசி கட்சி சார்பாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற சொல்லுங்கள். அதன்பின்னர் பார்க்கலாம். எதை சொன்னாலும் நம்புவதற்கு நாங்கள் முந்தைய தலைமுறை தமிழர்கள் அல்ல. [உண்மையிலே பாஜக மீது அக்கறை உள்ளவர்கள் இதை அவரிடமும் பாஜக மேலிடத்திலும் தெரிவியுங்கள்]   07:17:24 IST
Rate this:
40 members
0 members
40 members
Share this Comment

மார்ச்
29
2013
அரசியல் தமிழக சட்டசபை தீர்மானம் மத்திய அரசு ஏற்காது: குர்ஷித்
அப்படியென்றால் நம்மை மதிக்கும் ஒரு நாடாளுமன்றத்தை அமைப்போம்.    07:33:26 IST
Rate this:
7 members
0 members
15 members
Share this Comment

மார்ச்
21
2013
அரசியல் சி.பி.ஐ., ரெய்டில் அரசின் பங்கில்லை என்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்
அரசின் பங்கிலேயே இவர் இல்லை என்பதை யாராவது இவருக்கு எடுத்து சொல்வார்களா?   07:22:01 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
21
2013
சம்பவம் மு.க.,ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு ; மகன் உதயநிதி வாங்கிய வெளிநாட்டு காரால் வினை
நான் கருணாநிதியின் ஆதரவாளன் இல்லை. கருணா குடும்பத்தின்மீது நடவடிக்கை எடுப்பது அவசியம்தான். ஆனால் அதற்க்கு காங்கிரசுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்பதுதான் எனது கேள்வி. 9 வருடமாக தெரியாதது 24 மணி நேரத்துக்குள் தெரிந்துவிட்டதா? இது பச்சை அயோக்கியத்தனம். C B I என்பது ஆட்சியாலகளின் அஸ்திரமாக தொடர்வது ஜனநாயகத்துக்கு மிகவும் ஆபத்தானது. எதிர்கட்சிகளுக்கு குண்டர்படை இருப்பது போல ஆளும்கட்சிக்கு சிபிஐ இருக்கிறது. சிபிஐயை தேர்தல் கமிசன் போல சுதந்திர அமைப்பாக மாற்றுவதுதான் ஒரே வழி.   08:42:22 IST
Rate this:
15 members
23 members
84 members
Share this Comment

மார்ச்
18
2013
சிறப்பு பகுதிகள் டீ கடை பெஞ்சு
அவருடைய யதார்த்தமான பேச்சைக் கேட்டு, நம்ம ஊரு தலைவர்களும், அசந்து போயிட்டாங்க பா.. - இவிங்கள அசர வைக்க இதெல்லாம் பேச வேண்டுமா என்ன? அவன் ஒன்னுக்கு போனாலே நேரு கொள்ளு பேரன் என்ன அழகா ஒன்னுக்கு போறான் பாருன்னு அசந்து போயிட மாட்டாங்களா என்ன?   08:03:48 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment