Advertisement
G.Prabakaran : கருத்துக்கள் ( 445 )
G.Prabakaran
Advertisement
Advertisement
ஜூலை
29
2016
சினிமா கபாலி வெற்றி விழாவில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தாணு பேசியது...
இது எப்படி வெற்றி படம் ஆகும். எந்தவொரு பொழுதுபோக்கு அம்சம் இல்லாத படம் வலுவற்ற திரைக்கதை மிக பெரிய பலவீனம். வெறும் விளம்பர உத்தியால் அப்பாவி ரசிகனை ஏமாற்றி கோடிகளை வேண்டுமானால் அள்ளலாம் அநியாய வசூல் செய்து ஏமாற்றியதும் ஒருவித கர்மா இந்த கர்மா பட தாயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் ரஜினியை சாரும். ரஜினிக்காக தான் அனைவரும் விழுந்தடித்து விளம்பரங்களால் ஏமாந்து இப்படத்தை பார்த்துள்ளனர். ஆகவே தாணுவுக்கு முன்பே இது ஒரு தோல்வி படமாக அமையும் என எதிர்பார்த்தே இப்படத்துக்கு முதல் மூன்று நாளிலேயே அனைத்து சினிமா அரங்குகளில் திரை இட செய்து பணத்தை அள்ளியுள்ளார்.   22:57:48 IST
Rate this:
4 members
0 members
16 members
Share this Comment

ஜூலை
18
2016
அரசியல் திருவள்ளுவர் சிலை அகற்றம் நாட்டின் ஒற்றுமையை சீர்குழைக்கும் தருண் விஜய்
இதற்காக தமிழர்கள் மிக பெரிய அளவில் போராட்டங்கள் நடத்துவார்களா... எங்கே சென்றார் சீமான் வைகோ நெடுமாறன் ராம்தாஸ் போன்ற தமிழ் குடி தாங்கிகள்.. தமிழருக்கு நேர்ந்த மிக பெரிய அவமானம் திருவள்ளுவர் சிலையை அப்புறப்படுத்தி ஏதோ ஒரு பூங்காவில் தரையில் கிடத்தி இருப்பதை பார்க்கும் போது நெஞ்சை பிழிகிறது. தருண் விஜயின் முயற்சியை கட்சி சார்பற்று பார்க்க வேண்டும்.   03:07:42 IST
Rate this:
4 members
0 members
25 members
Share this Comment

ஜூலை
15
2016
கோர்ட் நோட்டீஸ்! நத்தம் விஸ்வநாதன் மீதான புகாரில் தமிழக அரசுக்கு ஐகோர்ட்... மின் வாரியத்திற்கு ரூ.25,000 கோடி இழப்பு ஏற்படுத்திய விவகாரம்
மின் வெட்டு தமிழகத்தில் இல்லை எனும் முதல்வரின் பொய் அறிக்கைக்கு இந்த செய்தியே பதிலாகும். இவ்வளவு ஆயிரம் கோடிகள் இழப்பு ஏற்படுத்தியதற்கு பதில் எத்தனை மின் திட்டங்கள் தொடங்கி இருக்கலாம். எந்த திட்டமும் இவர் ஆட்சியில் தொடங்காமலேயே இருந்ததற்கு காரணம் இப்படி அமைதியாக கொள்ளை அடிக்கலாம் என்பதால் தான் என நினைக்கிறேன். இப்படி கொள்ளை அடித்த பணத்தை இவரிடமிருந்தும் அதிகாரிகளிடமிருந்தும் எப்படி மீட்கப் போகிறார்கள்.   03:52:47 IST
Rate this:
3 members
1 members
31 members
Share this Comment

ஜூலை
15
2016
அரசியல் மின்உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு ஜெ., பெருமிதம்
எப்படி மின் உற்பத்தியே பண்ணாம தன் நிறைவு.   19:38:28 IST
Rate this:
6 members
0 members
22 members
Share this Comment

ஜூலை
15
2016
உலகம் கூட்டத்தில் டிரக்கை மோதச் செய்து தாக்குதல் பிரான்சில் 60 பேர் பலி
மசூதிகளில் வெள்ளிக்கிழமை நடக்கும் தொழுகைகளின் போது மத துவேஷ பிரச்சாரங்களை அனுமதிக்க கூடாது. மசூதி உள்ள பகுதி முழுவதும் சுவரொட்டிகள் அச்சுறுத்தும் வகையிலான வாசகங்கள் உள்ளதை கண்டுள்ளேன். குறிப்பாக இஸ்லாம் மதம் மாறியவர்கள் இளைஞர்கள் தீவிரவாதிகளாக மூளை சலவை செய்யப்பட்டு மாற்றப்படுகிறார்கள்.   16:33:33 IST
Rate this:
1 members
0 members
49 members
Share this Comment

ஜூலை
9
2016
சம்பவம் காஷ்மீரில் வன்முறை துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலி 100 பேர் காயம்
மோடி அவர்கள் தன் ஆப்பிரிக்கா சுற்று பயணத்தை ரத்து செய்து உடனே திரும்ப வேண்டும். தீவிரவாதிகளை ஆதரிக்கும் வன்முறையாளர்களை சுட்டு தள்ள வேண்டும்.   20:25:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
5
2016
சம்பவம் தமிழகம் முழுவதும் கஞ்சா சாக்லேட் வேட்டை
இந்த கஞ்சா சாக்கலேட் சாப்பிட்டு தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பரத், 13, என்ற மாணவன், உயிருக்கு ஆபத்தான நிலையில், எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான் எனும் செய்தி தினமலர் நாளிதழில் வந்து இந்த அரசு எடுக்கும் அதிரடி நடவடிக்கை பாராட்டத்தக்கது. இந்த போதை பழக்கம் ஒரு தலைமுறையையே நாசமாக்கி விடும். இந்த கஞ்சா சாக்கலேட் பின்னணியில் உள்ள வர்த்தக மையங்களை எங்கிருந்தாலும் கண்டறிந்து அவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும்.   01:27:11 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
5
2016
பொது தன்னை உணர்தல் தான் கடவுள் நிலை
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள் முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள் பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள் சென்னியில் வைத்த சிவனருளாலே - திருமூலரின் திருமந்திரம் தன்னை அறிய தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கேடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தானிருந்தானே திருமூலரின் திருமந்திரம் தன்னை அறிதல் என்றாலே எனக்கு இந்த திருமூலரின் திருமந்திர வரிகள் நினைவுக்கு வரும் மற்றும் தன்னை அறிதலின் பயிற்சியாக நான் யார் எனும் ஆத்ம விசாரணையில் உள்ளே சென்று பார்க்க பார்க்க ஏற்படும் சுயானுபவத்திலேயே தன்னை அறிய முடியும் எனும் பகவான் ரமணரின் அற்புதமான வாக்கியமும் நினைவில் வரும்.   01:18:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
4
2016
கோர்ட் ரூ.570 கோடி விவகாரம் சி.பி.ஐ., விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு
சிபிஐ விசாரணை என்பது ஓர் சடங்கு. ஒன்றும் நடக்கப் போவதில்லை. பல சமூக வலைத்தளங்களில் எழுப்பிய நியாயமான வினாக்களுக்கு இதுவரையில் மத்திய அரசிடமிருந்து ஒரு பதிலும் வர வில்லை.   21:59:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
4
2016
பொது சுவாதி கொலை வழக்கு போலீசுக்கு ஐடி., துறையினர் பாராட்டு
போலீஸ் இந்த விஷயத்தில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய துப்பு எல்லாம் கொலையான அன்றே கிடைத்துள்ளது. கொலையான அடுத்தநாளே மேன்ஷனில் விசாரித்துள்ளனர். கொலையாளியின் ரத்த கரை படிந்த சட்டை கிடைத்துள்ளது. கொலையாளியின் மொபைல் போன் active வாகவே இருந்து உள்ளது. ஆனால் ஏன் 8 நாட்கள் எடுத்துக் கொண்டார்கள் என தெரிய வில்லை. மற்ற கொலை குற்றங்களையும் விரைவில் துப்பு துலக்கி குற்றவாளிகள் தண்டிக்க போலீஸ் தன் கடமையை விரைந்து செயலாற்ற வேண்டும்.   21:37:04 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment