Advertisement
Netizen : கருத்துக்கள் ( 9 )
Netizen
Advertisement
Advertisement
மே
28
2014
அரசியல் இந்திய அரசியலில் அபூர்வம் முன்னாள் பிரதமர் மன்மோகன் வீட்டுக்கு சென்ற பிரதமர் மோடி
திரு மோடி அவர்கள் பல விதத்திலும் முன் மாதிரியாக இருக்கிறார். இது பலருக்கு இயலாத காரியம். மிளகுப்பொடி தூவுதல், மைக்கை எறிதல், வேட்டி புடவை உருவுதல், எழுதமுடியாத வார்த்தைகளால் வசை பாடுதல், ஆபாச வீடியோ கண்டு களிப்பது, என்று தினம் ஒரு கூத்தும் பொழுதொரு கண்ட்றாவியுமாக அரங்கேறிய அரங்கமாகத்தான் பாராளுமன்றம் இருந்தது. ஆனால், இவரோ செய்யும் தொழிலே தெய்வம் என்று பாராளுமன்றத்தை ஆலயமாய் கருதி நமஸ்கரித்தார். இனி யாரேனும் இதை கறைப் படுத்தி விட தயங்குவர், அதன் மாட்சிமை மீட்கப்பட்டுள்ளது. ஒரே வாரத்துக்குள் சார்க் அமைப்பினர் அனைவரையும் அழைத்து கௌரவித்து பதவி ஏற்பு என்று ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்க ஆரம்பம். இதனால், செய்தி சொல்ல வேண்டியவர்களுக்கு சென்று சேர்ந்தது. கூட்டணிக் கட்சிகளின் எடுப்பார் கைப்பிள்ளையாக இல்லாமல் போனது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்? கை நிறைய லட்டு கிடைத்திருக்கிறது சுகர் நோயாளிக்கு நிலைமை நம் தமிழகத்து பதில். பல விதத்திலும் சீரழிந்துகொண்டிருக்கும் இந்தியாவினை சரியான வழியில் திசை திருப்பி நாட்டின் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாய் செயல் படுவார் மோடி என்று எதிர்பார்க்கலாம். தனது ஒவ்வொரு செயலிலும் ஒரு பாடம் சொல்லிச்செல்கிறார். உற்று நோக்குங்கால் உண்மை கிட்டும். நல்லிணக்கத்தின் அடையாளமாக மீனவர்கள் விடுதலை என்பதே, ஒரு நற்செய்தி. நொடிந்து போன நிர்வாகத்தை சீராக்க மோடியின் கையில் மந்திரக்கோல் இல்லைதான். இருப்பினும்,வாழ்த்துவோம் நல்லாட்சி வேண்டும் என்று.   04:01:13 IST
Rate this:
0 members
1 members
83 members
Share this Comment

நவம்பர்
6
2013
பொது மங்கள்யான் செவ்வாய் கிரகம் செல்ல 10 மாதங்கள் ஏன்?
திரு குஞ்சுமணி சென்னை அவர்களே, என்னுயிர்த்தமிழகமே கேட்கிற கேள்வி தெரியாததினால்தானே ஒழிய, கிண்டல் பேச்சு பதில் எதிர்பார்த்து இல்லை. நமக்கு நாம் மெத்த அறிந்திருக்கிறோம் என்று நினைப்பது தவறு. எல்லோருக்கும் வாய்ப்பதில்லை கல்வியும், அறிவும் எல்லோரைப்போலவும். அறிந்தால் சொல்லவேண்டும் இல்லையேல் கிண்டல் கூடாது. மறைந்த திரு சுஜாதா அவர்களின் "ஏன்? எதற்கு? எப்படி?" என்னும் எளிய தமிழ் அறிவியல் தொகுப்பு படித்தால் நிறைய தெரிந்து கொள்ளலாம். வேண்டுவோர் scribd - இல் தட்டுக   16:55:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
6
2013
பொது மங்கள்யான் செவ்வாய் கிரகம் செல்ல 10 மாதங்கள் ஏன்?
அன்பார்ந்த வாழ்த்துக்கள். இது எவ்வளவு பெரிய வெற்றி என்பது மற்றைய நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது மட்டுமே நம்மால் உணர முடியும். மனம் மகிழ்கிறது இதற்கான செலவினங்கள், மனித வளம், தொழில் நுட்பம், எல்லாமே நம்மால் முடிந்துள்ளது. நெஞ்சம் நிமிரச் செய்யும் ஒரு சாதனை என்றால் மிகை அல்ல. இதை படைத்த திரு மிகு கலாம் ஐயா போன்ற நம் அறிவியல் வல்லுனர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். வந்தே மாதரம். வாழ்க பாரதம், வளர்க நாடு.   02:13:28 IST
Rate this:
3 members
1 members
53 members
Share this Comment

செப்டம்பர்
25
2013
விவாதம் கிரிமினல்களைப் பாதுகாக்க அவசர சட்டம்
கிரிமினல், அதுவும் இரண்டாண்டுக்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்கள் எப்படி மக்கள் நலனில் கண்ணியவாங்கலாக இருக்க முடியும்? அப்போ, அதற்கும் குறைவான தண்டனை பெற்றவர்கள் என்ன யோக்கியர்களா? அவர்களின் பதவியும் பறிக்க பட வேண்டும். குற்றவாளி என்று ஆனா பின்னர், பதவியில் இருப்பது மேலும் குற்றம் செய்ய தூண்டும், பழிவாங்கும் நடவடிக்கைகள் வரலாம், தப்பை தப்பில்லாமல் செய்ய கற்ற பின்னர் அவனை எப்படி தண்டிப்பது? இந்த அவசர சட்டம் சரியல்ல. குற்றவாளி யாராக இருப்பினும் மக்களாட்சியில் சமமாக நடத்தப்பட வேண்டும். இது ஒரு தவறான முன்மாதிரி. கொண்டுவந்த கட்சிக்கே வேட்டாகிப்போகும் காரியம் இது மிசாவினால் மண் அள்ளிப்போட்டுக்கொண்டது போல் இருக்கிறது. தப்பு செய்த அரசியல் வாதியினை பழிவாங்கவும் கூட முடியாதோ?   20:55:05 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
13
2013
கோர்ட் கற்பழிப்பு வழக்கில் ‘சூப்பர் ’-தீர்ப்பு 4 பேருக்கு மரணத்தண்டனை விதிப்பு
நீதித்துறைக்கு நன்றி. தீர்ப்பு சரியானதே. பாலியல் கொடுமைகள் பற்றி அறியாத நிஷாந்தன் சொல்வது சரியல்ல. பெண்களை மதித்து நடக்க வேண்டும். அது போலவே, பெண்களும் மதிக்கும் படியாக நடக்கவும் இருக்கவும் வேண்டும். பெண்களின் நடத்தை பற்றி கேட்பவர்களுக்கு ஒன்று - நடத்தை கெட்டவலாகவே இருந்தாலும், அனுமதி இன்றி தீண்டுவது தவறே. கணவன் என்ற சொல்லுக்கு களங்கம் சேர்க்காதீர்கள். "கடந்து செல்லும் பிராணிகளை ஆணா , பெண்ணா என்று பார்க்காதவனும்" - இவ்ளோ மோசமாவா யோசிப்பீங்க? நீங்க அடுக்குன செய்கைகள் எல்லாம் பார்த்தால் அந்த நாலு பேருக்கு பிறந்தவர் போல வக்காலத்து வாங்குறீங்களே? நியாயமா? தீர்ப்பு உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். வேதனையுடன் உயிர் நீத்த அந்தப் பெண்ணின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.   17:31:40 IST
Rate this:
1 members
0 members
32 members
Share this Comment

ஆகஸ்ட்
31
2013
பொது ஊருக்கொரு "பசுமை பஞ்சாயத்து அமைக்கலாம்... அரசுகளுக்கெல்லாம் வழி காட்டுகிறது அரசூர் - எக்ஸ்.செல்வக்குமார் -
இது போன்ற நற்செய்திகளை வெளியிடும் தினமலருக்கு நன்றி. பலர் சிரித்தாலும், எதையும் பொருட்படுத்தாமல் செவ்வனே செய்து கொண்டிருக்கும் இந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. தமிழகம் பசுமைக் காடாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை. நல்லார் ஒருவர் உளரேல், அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை உங்களுக்கு பெய்யாமலா போகும்? நம்பி இறங்கினீர்கள் அல்லவா? முயற்சி நான்காம் முறை வெற்றி தந்தது. வெற்றி உங்களுக்கே. மூச்சு திணரவிருக்கும் வருங்கால சந்ததியினருக்கு ஆக்சிஜென் பொருத்தும் மருத்துவர்கள் நீங்கள். வாழ்க நீவீர் அனைவரும் பல்லாண்டு.   21:14:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
1
2013
விவாதம் அமைச்சர்கள் நீக்கப்படுவதற்கான காரணத்தை தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டுமா?
களை எடுப்பதின் காரணம் அறியப்பட வேண்டும். அது ஆள்பவரின் ஆளுமைக்கு பலன் சேர்க்கும். திறமையின்மை காரணமாக இருந்தாலும் அறியப்பட வேண்டும். அடுத்து வருபவர் மெருகேற்ற வாய்ப்பு இருக்கிறது அல்லவா?   17:22:42 IST
Rate this:
1 members
0 members
33 members
Share this Comment

பிப்ரவரி
24
2013
சம்பவம் ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு
இந்த அசிட் வீச்சு சந்திராலேகாவில் ஆரம்பித்தது. செய்தது அரசியல் கட்சிகளே. அது இப்போது கிளை விட்டு இருக்கிறது. என்னைக் கேட்டால் ஒரே வழி, போட்டு தள்ளுங்கள். கேள்வியே இல்லை. என் கவுன்ட்டர் என் கவுன்ட்டர். இல்லன்ன அவனய பிடிச்சி உக்காரவச்சி ஆசிட் ஐ ஊற்ற வேண்டிய இடத்திலேயே ஊற்றி என்ஜாய் பண்ண சொல்லலாம். கேடு கேட்ட ஜென்மங்களே...இது காதலே இல்லை காமமும் இல்லை. மனித உரு கொண்டு அலையும் கொலைகாரர்கள். இரும்புக்கரம் கொண்டு நசுக்க வேண்டிய விஷயம் இது. தீர்மானிப்போம்.    20:28:09 IST
Rate this:
7 members
1 members
9 members
Share this Comment

ஜனவரி
17
2013
பொது பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர்
ஒரு நல்ல உள்ளத்தை, செய்யும் ஒரு நல்ல காரியத்தை, இங்கு பலர் வேலை வாங்க தெரியாதவர் என்பது போல குறை கூறி இருக்கிறார்கள். அவர்தான் சொல்லிவிட்டாரல்லவா என்னுடைய குழந்தைகள் என்று. குழந்தையும் தெய்வமும் ஒன்று என நினைத்து இறைத்தொண்டு செய்கிறார் என்று கொள்ளலாமே? கவியரசு கண்ணதாசன் கூறியது நினைவுக்கு வருகிறது போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுபவர் தூற்றட்டும் ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் எடுத்துச்சொன்னால் எடுத்து இயம்புவேன் எவர் வரினும் நில்லேன் அஞ்சேன் அய்யா திருமிகு கில்பர்ட் அவர்களே, உங்களின் செயல்களுக்கு முட்டுக்கட்டை பலரும் போட நினைக்கிறார்கள். விட்டுத்தள்ளுங்கள். வெற்றி உங்களுக்கே. நாளைய ஒரு நல்ல சமுதாயம் உங்களால் உருவாக்கப்படுகிறது. அது பல தலைமுறை பேசப்படும். உங்கள் பள்ளி மாணவர்கள் கொடுத்துவைத்தவர்கள். வாழ்க நீவீர்.   21:09:24 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment