இந்த பெண்ணிற்கு வருகின்ற 28 /04/2013 அன்று கோவையில் ஒரு அமைப்பு பாராட்டு விழா நடத்தறாங்க .
ஒரு விஷயம் எந்த ஊரிலும் இதுவரை ஒரு மயானதொளிலாளிக்கு பாராட்டுவிழா நடத்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துக்கள் வைரமணி
06-ஏப்-2013 18:54:58 IST
03/02/12 காலை தினமலர் வாரப்பத்திரிக்கையில் வந்த செய்தியை தொடர்ந்து அலைபேசியில் வாழ்த்துக்கள் குவியத்தொடங்கியது. யார் யாரோ வாழ்த்தினார்கள். என்னவெல்லாமோ சொல்லி வாழ்த்தினார்கள். நூறாண்டுகள் இல்லை இருநூறாண்டுகள் வாழவேண்டுமென்று வாழ்த்துகிறார்கள். கடவுள் என்றார்கள். மனிதாபிமானத்தின் மறு உருவம் என்றார்கள். இரக்கத்தின் இன்னொரு பெயர் என்றார்கள். எல்லா வாழ்த்துக்களும் என் செவிகளை தீண்டின. மனம் மட்டும் தவித்தது. இது ஒருவர் மட்டும் செய்யும் செயலோ சாதனையோ இல்லையே.... ஒவ்வொருவரும் தங்கள் கடமையை உணர்ந்து தங்கள் பிள்ளைகளை தாங்கள் அரவணைத்தால், தங்கள் பெற்றோரை தாங்கள் அரவணைத்தால் இது போன்ற செயல்களுக்கு இடமே இல்லையே. ஆதரவற்றவர்கள் என்பதே இல்லாமல் இருக்குமே.
இதை தொடர்ந்து சில செயல்கள் மனதுக்கு சற்று இதமளித்தது. அந்த வாரப்பத்திரிக்கையை பார்த்த சில இளைஞர்கள் இனி தாங்களும் இது போல் செயல் பட போவதாக தெரிவித்தனர். ஈரநெஞ்சம் போல் ஒரு அமைப்பை உருவாக்கி தாங்களும் தங்களால் இயன்ற வரையில் தங்கள் கடமையை செய்யப்போவதாக தெரிவித்தனர்.
மேலும் பல்வேறு பள்ளிகளில் இந்த கட்டுரையின் சாராம்சம் குழந்தைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன் பின் குழந்தைகளும் அனைவரும் தாங்கள் தங்கள் பெற்றோரை கை விட்டு விடாமல் காலம் முழுதும் அரவணைத்து காப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டனர்.
கடந்த ஐந்து நாட்களாக வீதியில் விடப்பட்ட தாயை இந்த கட்டுரையை படித்துவிட்டு மீண்டும் தங்களது தாயை அழைத்துக்கொண்டு சென்றார்கள் என்பதை கேட்க்கும் போது தினமலரின் கட்டுரையின் வெற்றியை உணர்ந்தேன்.
எனக்கு அழைத்த அநேகம் பேர் 70 வயதை கடந்த தாத்தா பாட்டி, அந்த அனைவருக்கும் மரண பயத்தை காட்டிலும் தனிமை என்ற பயமே கொல்கின்றதை முதியவர்களின் கண்ணீரால் உணரமுடிந்தது.
என்னை வாழ்த்தியவர்களில் ஒருவர் மட்டும் சொன்னது மனதில் பதிந்தது. மனித நேயம் என்பதே மறைய வேண்டும், உங்கள் பாரம் குறைய வேண்டும் என்றார் அவர். ஆமாம் அனைரும் தங்கள் குழந்தைகளையும், தங்கள் பெற்றோர்களையும் பாசமுடன் பராமரித்து வந்தால் தங்கள் கடமையை சரியாக செய்தால் ஆதரவற்றவர்கள் என்பவர்களே இருக்க மாட்டார்கள். பிறகு எதற்கு மனித நேயம் தேவைப்படும்.? அப்படி ஒரு நிலைமை வரவேண்டும். அதுவே என் செயல்களுக்கு கிடைக்கும் வெகுமதியாக நான் கருதுகிறேன்.
நன்றி தினமலர்ருக்கு
நன்றி மனம் மாற்றிய மனிதர்களுக்கு
நன்றி என்னை பெற்ற அம்மா அப்பா அவர்களுக்கு
நன்றி என் நண்பர்களுக்கு
நன்றி ஈரநெஞ்சம் உறுப்பினர்களுக்கும்
நன்றி ஈரநெஞ்சம் கொண்ட அனைவருக்கும்
வணங்குகிறேன்...
~மகேந்திரன்
15-பிப்-2013 17:10:12 IST
வணக்கம்
நல்லது நினைத்தாலே போதுமானதுங்க. எதோ ஒரு இடத்தில நாம் நினைத்த அந்த நல்ல செயல் நடந்தேறிடும், இது ஒன்றும் சாதனை செயல் இல்லைங்க நம்முடைய கடமைதான். சுதந்திர தினம் போல, மனிதநேய தினம் இருந்தால் என்ன ?
எதற்கு எதற்கோ பெயரை சொல்லி தினம் என்று கொண்டாடுகிறோம்...
சுதந்திரம் என்றால் தேசபற்று, அது நாட்டில் உள்ள 120 கோடி பேர் மீது மட்டும் கொண்ட சுயநலம்...
மனிதநேய தினம் என்று கொண்டாடுகிறோமா?
அப்படி கொண்டாடினால் உலகில் உள்ள எந்த ஒரு பகுதியில் வாழும் ஆடை அணிய தெரியாத மனிதன் மீது கொண்ட அன்பின் அடையாளம் ஆகும்.
தேசபற்று இருந்தால் நாட்டில் வாழும் அதிகபச்சம் 120 கோடி பேர்மீது மட்டுமே நம் பாதுகாப்பு இருக்கும் , அதுவே கேள்விகுறி...
மனித நேயம் இருந்தால் தீவிரவாதிகளாக இருப்போர்கள் எல்லோரும் தீவிரமான தன்னார்வ நலபனியில் இருப்பார்கள்,
யோசிங்க
மனிதநேய தினம் கொண்டாடுவோமா
~மகேந்திரன்
நன்றி எல்.முருகராஜ் அண்ணா .
29-ஜன-2013 06:58:59 IST