வலியில் சுகம் காண்பவர்கள் உண்டு அதில் நீங்களும் ஒன்று .. ஆனால் மற்றவர்களையும் துன்பத்திற்கு தள்ளிவிட்டு இப்படி நிம்மதி அடைவது அதீத சுயநலத்தை காட்டுது .. உங்கள் பிள்ளை பெண் பிள்ளையாய் இருந்தால் (ஒரு வேளை உங்களவள் மூலமாக ) அந்த பெண்ணின் கணவன் இதையே செய்தா உங்களுக்கு சரியே என்றே படுமோ ?.. இதை ஈகோ லூசு சொல்வதை விட வறட்டு பிடிவாதம் என்று வைத்துக்கொள்ளுங்கள் ... அது மட்டும் இல்ல இன்று எத்தனயோ இல்லறத்தில் தலைவனும் தலைவியும் மனதில் முதல் காதலை தென்றலாய் வருட விட்டுத்தான் அவர்கள் இல்லறத்தை சிறப்பித்து கொண்டிருக்கின்றனர் ... அவர்கள் கண்களுக்கு அவர்கள் மனைவி தொல்லையாய் தெரிவதில்லை ... புரிந்து கொள்ளுங்கள் உங்கள் பிடிவாதம் உங்கள் தொல்லை .. ஏதும் பிழை செய்யாத உங்கள் மனைவியும் பிள்ளையும் எந்த விதத்தில் உங்கள் அன்பை பங்கிட தகுதி அற்றவர்கள் இல்லையெல் எந்த தகுதி உங்களுக்கு உண்டு அவர்களை ஒதுக்க ... எனக்கு புரிந்தவரை அவர்கள் உங்க அன்புக்கு ஏங்கிய காலம் போய் உங்கள் நிழலுக்கு எங்க தொடங்கி இருப்பர் ... அதை செய்ய தொடங்குங்க .. அந்த நிழலில் கொஞ்சம் ஈரம் ..இருக்கட்டும் ..
08-பிப்-2013 13:02:19 IST
மிகவும் சரி. அந்த பெண் மறக்க நேரம் ஒதுக்குவதே இந்த பிரச்சினையை நீடிக்க செய்கிறது. அன்பை பெற இயலாத ஒருவரிடம அன்பை எதிர்ப்பார்ப்பதை விட கிடைத்த அன்பிற்கு உங்கள் மனதில் இடம் ஒதுக்குங்கள். முற்று புள்ளிக்கும் அருகில் ஒரு புள்ளி வைத்தாலும் அது தொடர் கதையே .. உங்கள் வாழ்வை தொடங்க நல்ல தொடக்கமாக ஒரு முற்று புள்ளியை வைத்து பாருங்கள்..
06-பிப்-2013 08:27:59 IST
மறக்க நினைக்கவோ இல்லை முயற்சித்தோ பயனில்லை அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது மறுக்காமல் மறப்பதே ... அதை மறக்க உங்கள் கணவருடன் அதிக நேரம் செலவு செய்யுங்கள் .. அவரை அணு அணுவாய் கவனியுங்கள் உங்கள் மனதை அவரை சுற்றி வர செய்யுங்கள் .. வாழ்வில் அதிகம் உள்ளது நினைப்பதற்கும் யோசனை செய்யவும் .. மனதை வாழ்வின் வேறொரு பகுதிக்கு இட்டு செல்லுங்கள்
05-பிப்-2013 11:05:46 IST
உங்கள் மனைவியை நீங்கள் இறந்த பிறகு உங்களுக்கு பிடிக்குமா ?.. அபொழுது அவள் உங்களவள் ஆக தெரிவாளா ? உங்கள் மனதில் இருக்கும் தேவையற்ற என்னத்தை சாகடியுங்கள் .. ஒரு பெண்ணை நோகடித்து இன்னொரு பெண்ணோடு நன்றாக வாழ முடியுமா என்று யோசனை செய்ய .வேண்டும் .
05-பிப்-2013 10:50:43 IST