மத்திய அரசிலிருந்து விலகத் தயாரா? - திமுகவுக்கு வைகோ கேள்வி -ரியல் நியூஸ்-
இலங்கை அதிபரும், ஈழப் போரில் தமிழர்களை ஒடுக்கியவருமான ராஜபக்ஷே இந்தியா வருகை தருவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள சூழலில், மத்திய அரசிலிருந்து திமுக விலகத் தயாரா?என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
மதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று திங்களன்று நடைபெற்றது. அக்கூட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, " திமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசுதான் இலங்கை அதிபர் ராஜபக்ஷெவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கிறது.
எனவே, மற்ற கட்சிகளைப் போல ராஜபக்ஷே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவும் அறிக்கை வெளியிடுவதை ஏற்க முடியாது" என்றார்.
"மத்திய அரசை வற்புறுத்தி ராஜபக்க்ஷே வருகையைத் தடுத்து நிறுத்த இயலாவிட்டால் மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக வெளியேற வேண்டும். அதற்கு திமுக தயாராக உள்ளதா?" என்று வைகோ கேள்வி எழுப்பினார்
05-பிப்-2013 11:29:22 IST