Advertisement
bellevueindian : கருத்துக்கள் ( 4 )
bellevueindian
Advertisement
Advertisement
பிப்ரவரி
6
2013
அரசியல் களைகட்டுது முதல்வர் பிறந்த நாள் விழா ஏற்பாடுகள்:வசூல் வேட்டையும் துவக்கம்
இஸ்லாமிய சகோதரகளுக்கு கோரிக்கை இந்த பூனைக்கு யார் மணி கட்டுவது போன்று குழம்பிய விஷயத்திற்கு நீங்கள் ஒற்றுமையாய் கோரிய கோரிக்கை அதனால் அரசின் முன் மாதிரி முடிவு எடுக்க வைத்ததிற்கு மிக்க நன்றி. உங்கள் மீது உங்கள் அன்பு இந்து சகோதரனுக்கு ஒரு சிறிய வருத்தம், அது என்னவென்றால், நீங்கள் விஸ்வரூப படக்காட்சிகளை நீக்க சொல்லும் போதே, இஸ்லாமிய கதை நாயகன் இந்துக்களை புண்படுத்தும் காட்சிகளை இஸ்லாம் அங்கீகரிக்காது என்று சொல்லி நீக்க கோரியிருக்க வேண்டும் பரவாயில்லை விடுங்கள். நாம் இனி வரும் காலங்களில் ஒற்றுமையுடன் இருந்து இரு மத சம்மந்தப்பட்ட புண்படுத்தும் காட்சிகளை நீக்க கோருவோம், நம் இரு அமைப்பும் இனைந்து கோரிக்கை விடுத்தால் போராட்டம் நடத்தினால் , 8 காட்சி என்ன 16 காட்சி வரை நீக்க கோரலாம். நம இரு அமைப்பும் இனைந்து சமுதாய பணியாற வேண்டியது நிறைய உள்ளது, நீங்கள் கமல் பேட்டியை பார்த்திருப்பீர்கள், அவர் பேட்டியில், இஸ்லாமிய சகோதரகளுக்கு ஒரு விஷயத்தை சொன்னார், அதாவது அவர் எதையும் கற்பனையாக எடுக்க வில்லையாம், அப்கானிஸ்தான் தீவிரவாதத்தை பற்றி யூ-டியுப் இல் இருப்பதை வைத்து தான் எடுத்தாராம். இதற்கெல்லாம் என்ன காரணம்? இந்த யூ-டியுப் தான், இந்த யூ-டியுப் மூலம் நம் இரு மதமும் புண் பட்டு போயுள்ளது, கருமம் கத்தரிக்காய் வெட்டுவது முதல் தீவிரவாதி தலை வெட்டுவதை வரை எதற்கும் வரை முறை இல்லாமல் போட்டு விடுகின்றனர், இவ்வளவு ஏன் எங்கள் மதத்திநரை புண்படுத்தும் விதமாக, எங்கள் நித்தியானந்தாவை கிண்டலடித்து எத்தனை வீடியோக்கள், இவற்றிக்கெல்லாம் உச்சமாய், நித்தியானந்தா அவர் சிஷ்யை ரஞ்சிதாவிற்கு சிறப்பு யோகா கற்று கற்றுகொடுக்கும் காட்சிகளை எல்லாம் காமம் என்ற பெயரில் கொச்சை படுத்தி போட்டுவிகின்றனர், இவற்றை நாம் எதிர்க்க நம் இரு அமைப்பும் இந்த யூ-டியுப் கலாசாரிக்கு எதிராக போராடுவோம். வாழ்க நம் ஒற்றுமை. வாழ்க கருத்து சுதந்திரம்   08:58:17 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
6
2013
அரசியல் களைகட்டுது முதல்வர் பிறந்த நாள் விழா ஏற்பாடுகள்:வசூல் வேட்டையும் துவக்கம்
மத்திய அரசாங்கதிற்கும் தணிகை துறைக்கும் எங்கள் அன்பான கோரிக்கை நம் நாட்டில் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள், கருத்து சுதந்திரம் உண்டு என்று நினைத்டுகொண்டிர்கிரார்கள், அவர்கள் தணிக்கை குழு அனுமதித்த படத்தை தடை செய்வது, அவற்றை கோர்ட்க்கு வெளியே பேசி தீர்ப்பது போன்ற விஷயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், சட்டத்தை மீறி எல்லாம் நடக்கிறது என்கிற அவர்களின் வருத்ததை போக்குவது நம் கடமை. அதனால் எல்லாம் சட்டப்படி தான் நடக்கிறது என்ற நில்லைக்கு நாம் மாற்ற வேண்டும். அதனால் அவர் அவர் மத விருப்படி காட்சிகளை வெட்டுவதை சட்ட பூர்வமானதாக அறிவிக்க வேண்டும். தற்போது CBFC (Central Board of Film Certification) எனும் அமைப்பு உள்ளது, அத்துடன், HBFC (Hindu Board of Film Certification) மற்றும் MBFC (Muslim Board of Film Certification) என்னும் அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும், எங்கள் ஹிந்து பிரதிநதிகள் HBFC இல் அங்கம் வகிப்பார்கள், நமது இஸ்லாமிய சகோதரர்கள் MBFC யில் அங்கம் வகிப்பார்கள். CBFC அமைப்பு அவர்கள் அலகுபடி தணிக்கை செய்து தேவையற்ற காட்சிகளை வெட்டிவிட்டு, மீத படத்தை MBFC மற்றும் HBFC கும் கொடுப்பார்கள், நாங்கள் தத்தம் மதங்களை புண்படுத்தும் காட்சிகளை நீக்கிவிட்டு மீதம் (இருந்தால்) காட்சிகளை தயாரிப்பாளரிடம் கொடுத்துவிடுவோம், அவர் திரையரங்கில் வெளியிட்டு கொள்ளலாம். இக்கோரிக்கையை பரிவுடன் மத்திய அரசு ஏற்க வேண்டும்.   08:57:58 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
6
2013
அரசியல் சட்டசபையில் கதைகளுக்கு இனி பஞ்சமிருக்காது!
ஒரு வலைப்பூவிலிருந்து ( ப்ளாகில் இருந்து ) மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சி தலைவிக்கு நன்றி. முதலில் எங்கள் கூட்டமைப்பு நமது மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சி தலைவிக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது. ஒரு அரசாங்க அமைப்பான தணிக்கை வாரியம் சட்டப்படி அனுமதித்தாலும் ஒரு திரைப்படம் 40 பேர் கொண்ட குழுவுக்கு மனம் புண்படும் படி இருந்தால் மேலும் அந்த 40 பேரின் அமைப்பில்/கட்சியில் பல லட்சம் உறுப்பினர் இருந்தால் சட்டம் ஒழுங்கை மனதில் வைத்து போலிசாரின் எண்ணிக்கையை மனதில் கொண்டு போலீசார் எண்ணிக்கை மற்றும் குழுவின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கணித ரீதியில் அணுகி படத்தை தடை செய்யலாம் என்ற புதிய புரட்சிகரான முடிவெடுத்து ஒரு புது நடை முறையை உருவாக்கிய நம் முதல்வருக்கு நன்றி. அம்மா ஆனால் எங்களுக்கு நீங்கள் எடுத்த முடிவில் ஒரு பயம் கலந்த வருத்தம் உள்ளது, அது என்னவென்றால், சட்ட அமைப்பு (தணிக்கை) அனுமதித்தாலும், போலிசார் எண்ணிக்கை vs போராட்டகாரகள் எண்ணிக்கை அடிப்படையில் நீங்கள் தடைவித்தித்து பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க சொல்லிய உங்கள் உன்னத திட்டத்தை கருணாநிதி தவறாய் பயன் படுதிவிடுவாரோ என்று பயபடுகிறோம். ஆமாம் அம்மா, சட்ட அமைப்பான தேர்தல் முறை உங்களை முதல்வராக தேர்தெடுத்தாலும், லட்சோப லட்சம் மக்கள் உறுப்பினர் உள்ள கட்சியின் தலைவர் என்ற முறையில் கருணாநிதிக்கு நீங்கள் முதல்வராய் இருப்பது அவருக்கும் அவர் கட்சிக்கும் மனம் புண் படுவதாய் சொல்லி உங்களிடம் முறையிட்டால், எங்கே நீங்கள் இதே கணித முறைப்படி இளகிய மனம் கொண்டு, அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர் விருப்பத்தை நிறைவேர்ரி விடுவீர்களோ என்ற பயமே காரணம். அம்மா தயவு செய்து நீங்கள் அப்படி ஒரு முடிவெடுக்க கூடாது, இந்த கணித ரீதியான முடிவு திரைப்படத்திற்கும் மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு மட்டும் தான் பொருந்தவேண்டும் தங்கள் ஆட்சிக்கும், பதிவிக்கும் பொருந்தகூடாது.   08:56:22 IST
Rate this:
1 members
0 members
297 members
Share this Comment

பிப்ரவரி
6
2013
அரசியல் சட்டசபையில் கதைகளுக்கு இனி பஞ்சமிருக்காது!
தே.மு.தி.க சட்ட மன்ற உறுப்பினர்களை இலந்த பழமும், இளநீரும் விற்க வைக்காமல் விட மாட்டார்கள் போல் உள்ளது   08:48:57 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment