Advertisement
தினமலர் முதல் பக்கம் » K.vijayaragavan அவரது கருத்துக்கள்
K.vijayaragavan : கருத்துக்கள் ( 239 )
K.vijayaragavan
Advertisement
மே
19
2013
அரசியல் வாட்டி எடுக்கும் மின் தடை அமைச்சர் அறிவிப்பு புஸ்வாணமானது
காற்றாலை உற்பத்திக்கு குறைவுக்கும், மின் நிலையங்களில் பழுது ஏற்படுவதற்கும் கருணாநிதியே காரணம் என்று மக்களே தங்களை சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டியது தான். இதே போல் வீட்டில் சாக்கடை குழாய் அடித்துக்கொண்டாலும், மாடு சாணி போட்டாலும் கருணாநிதியே காரணம் என்று நாமே சொல்லிக்கொண்டு ஆறுதல் அடைய வேண்டும். இல்லாவிட்டால் நாம் வலுக்கட்டாயமாக திமுக ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு விடுவோம். தமிழன்னைக்கு நூறு கோடி இலவசங்களுக்கு ஆயிரம் கோடி என்று மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவழிக்கும் அதிமுக அன்னைக்கு மக்கள் அன்றாடம் மின்சாரம் இல்லாமல் படும் அவதிகளும், ஒரு குடம் தண்ணீருக்கு நாயாய் அலைவதும் பற்றி கவலை இல்லை.மக்கள் குறைகளை பேச வேண்டிய சட்டசபை ஜால்ராக்கள் தட்டும் பஜனை மடமாகி விட்டது. மக்கள் பிரச்சினைகளை பற்றி பேசும் எதிர்கட்சி உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்றுவதுஅவையிலிருந்து நீக்குவது என்று ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பது என்று காட்டு தர்பார் நடத்தும் போயஸ் மகாராணியின் ஆட்சியில் கஷ்டங்களை தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? உணவகங்களை ஏதோ தன் கைக்காசிலிருந்து நடத்துவது போல் தன் பெயரை சூட்டி பெருமைப்படும் புரச்சி தலைவிக்கு டாஸ்மாக்குக்கு தன் பெயரை சூட்ட சொன்னால் மட்டும் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. பொறுப்பற்ற, தான்தோன்றித்தனமான ஆட்சிக்கு ஒரு நல்ல உதாரணம் இன்றைய அதிமுக ஆட்சி, இந்த உண்மை அதிமுக அடிமைகளுக்கு வேண்டுமானால் கசக்கலாம். ஆனால், நடுநிலையாளர்களுக்கு இது நெஞ்சை சுடும் நிஜம்.   05:32:16 IST
Rate this:
14 members
3 members
469 members
Share this Comment

மே
14
2013
அரசியல் மதுரையில் தமிழ் தாய் சிலை அமைக்க.ரூ.100 கோடி! பிரமாண்டமாக நிறுவ தமிழக அரசு திட்டம்
அன்று தாத்தா பத்து கோடியில் வள்ளுவருக்கு குமரியில் சிலை கண்டார் இன்று இந்த பாட்டி நூறு கோடியில் தமிழ் அன்னைக்கு மதுரையில் சிலை வைக்கிறது. மொழியை வைத்து மக்களை முட்டாள்களாக்கும் இந்த கேவலம் கழகங்களால் வந்த வினை. மொழிக்கு ஏதோ வரக்கூடாத ஆபத்து வந்து விட்டதை போல் திடீர் திடீரென்று விழித்துக்கொண்டு கூப்பாடு போடுவது கழகங்களின் நிரந்தர வியாதி. பிரச்சினைகளை சமாளிக்க முடியாதபோது, மக்கள் கவனத்தை திசை திருப்ப இப்படி நாடகங்கள் ஆடுவதும் கழகங்களின் தனி குணம். இதில் பாழாவது மக்களின் வரிப்பணம். நூறு கோடி ருபாய் என்பது என்ன சாதாரண தொகையா? எவ்வளவோ அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்படாமலேயே இருக்க, இப்போது தமிழ் அன்னைக்கு சிலை வைக்க நூறு கோடி ரூபாயை செலவழிக்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது? இதை கேட்டால், கருணாநிதி சிலை வைக்கவில்லையா என்று அதிமுக அடிமைகள் கேள்வி கேட்பார்கள். அவர் செய்த தவறை நீங்களும் செய்வது ஏன்? இப்படி செலவழித்து சிலைகள் வைப்பது பிறகு ஆட்சி மாறியதும் அதை கவனிப்பாரன்றி பாழாக்குவது. இதே கழகங்களின் வாடிக்கை, தட்டிக்கேட்க ஆளில்லாததால் வருவது இது. மக்கள் கேட்க வேண்டாம். மேலிருந்து ஒருவன் பார்த்துக்கொண்டு இருக்கிறான். அவன் கேட்பான்.   13:26:12 IST
Rate this:
2 members
0 members
15 members
Share this Comment

மே
13
2013
அரசியல் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிகளை தடை செய்ய அரசு தயங்காது முதல்வர் எச்சரிக்கை
திமுக, தேமுதிக ஆகிய கட்சிகளை உடனே தடை செய்யுங்கள். ஏனென்றால் அவைகள் தான் உங்கள் அமைதியை கெடுக்கின்றன. அதிலும் திமுகவை உடனே தடை செய்யுங்கள். அவர்கள் தான் நாளுக்கொரு போராட்டம் அறிவித்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கிறார்கள். தேமுதிக எதிலும் லேட் பிக்கப். ஆனாலும் அவர்களும் இப்போது மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம், மறியல் என்று திமுக வழியில் செல்ல ஆரம்பித்து விட்டார்கள். இதனால் உங்களால் நிம்மதியாக சசிகலாவோடு பொழுதை கழிக்க முடியவில்லை. ஆகவே உடனே இவ்விரண்டு கட்சிகளையும் தடை செய்யுங்கள். இதேபோல், தமிழ்நாட்டில் காங்கிரசையையும் தடை செய்யலாம். ஆனால் அதை செய்ய உங்களுக்கு மனம் வராது. ஏனென்றால், இன்னும் காங்கிரஸ் கூட்டணிக்கு ஏக்கம் இருக்கிறது. மேலும், கர்நாடகாவில் நடக்கும் வழக்கில் காங்கிரஸ் தயவு தேவை. அதனால் காங்கிரசை தடை செய்ய மனம் வராது. வைகோ மீண்டும் சசி கலா வரிசையில் சேர்ந்து, பாவ மன்னிப்பு பெற்று கொடுத்ததை வாங்கிக்கொண்டு, நாடாளுமன்ற தேர்தலில் ஜால்ரா தட்ட ரெடியாகி விட்டார். ஆகவே அவர் போராட்டங்கள், மறியல்கள் நடத்தி, அதனால் பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்பட்டாலும் அது கண்ணுக்கு தெரியாது. திருமாவும் சரண்டர். உங்கள் நிம்மதியை கெடுப்பதே திமுகவும், தேமுதிகவும் தான். பா.ம.கவோடு சேர்த்து இவர்களையும் தடை செய்து விட்டால், தைரியமாக நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளலாம். பா,ம.க ஜாதி வெறியை தூண்டியதால் அதையும், திமுக, தேமுதிகவை போராட்டங்கள் நடத்துவதால் அவற்றையும் தடை செய்ததாக கூறி ஒரு அறிக்கை விட்டால் தீர்ந்தது, மக்கள் மெய் சிலிர்த்து போய் விடுவார்கள்.   16:31:37 IST
Rate this:
77 members
0 members
120 members
Share this Comment

ஏப்ரல்
29
2013
அரசியல் "ஆட்சியையும், முதல்வரையும் விமர்சிக்க வேண்டாம்! தே.மு.தி.க., பேச்சாளர்களுக்கு ரகசிய கட்டுப்பாடு
உங்க தலைவியை இந்தளவுக்கு நம்புற அளவுக்கு அவ்வளவு அப்ராணியா நீங்க? உங்க தலைவிக்கு இப்ப தேவை அதிக அளவில் எம்.பிக்கள். அதற்காக யார் காலிலும் விழ தயார். அதனால் ஓவராக பில்டப் வேண்டாம். கேப்டனுக்கு பீதியில் பேதியாகி இருப்பதால் தானாகவே சரணாகதி அடைந்து விட்டதால், இந்த கூட்டணி அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவதூறு வழக்குகள் போட்டதே இதற்காகத்தான் என்பது இப்போது தெளிவாகி விட்டது. இது புரியாமல் இன்னும் துதி பாடுவது உங்கள் விசுவாசத்தை மட்டும் காட்டவில்லை. அதிமுக அடிமைகளுக்கு அரசியல் அறிவு எவ்வளவு என்பதையும் காட்டுகிறது.   13:39:21 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
29
2013
பொது மனிதாபிமான அடிப்படையில் சரப்ஜித்தை விடுவியுங்கள் இந்தியா கோரிக்கை
பாகிஸ்தான் என்ன கேணையா? அல்லது நாட்டை சீரழித்த குண்டு வெடிப்புக்கு காரணமான அப்துல் கசாப்புக்கு மக்கள் வரிப்பணத்தில் மாப்பிள்ளை உபச்சாரம் செய்த உங்களைப்போல கோழையா? மதசார்பின்மை என்ற பெயரில் போலி மதசார்பின்மையை பரப்பி, ஓட்டுகளுக்காக நியாயத்தையும், நேர்மையையும் குழி தோண்டிபுதைக்கும் கேடு கெட்ட அரசாங்கம் அங்கே இல்லை. சரியோ, தவறோ, எதிரி என்றால் எதிரி தான். அங்கே அவர்கள் கையாலாகத்தனத்தை மறைக்க அகிம்சையை உபயோகிப்பதில்லை. நாட்டுக்கு எதிரி என்றால் அவனிடம் சகிப்புத்தன்மையையோ, கருணையோ காட்டுவதில்லை. கசாபை தூக்கில் போட்டதற்கு ஜீவ காருணியம் பேசிய புண்ணியவான்கள் இப்போது சரப்ஜித் சிங்கிற்கு ஆதரவாக வாய் திறக்காதது சிறுபான்மை ஓட்டுகள் கிடைக்காமல் போய் விடுமோ?என்ற பயம் மட்டுமே காரணமாக இருக்க முடியும். துப்பு கெட்ட காங்கிரஸ் இருக்கும் வரை இத்தகைய கொடூரங்களை பாகிஸ்தான் அரங்கேற்றவே செய்யும். அதை விட கேவலம் அதையும் ஆதரிக்க இங்கு சில ஜென்மங்கள் இருப்பது தான். தேசபக்தியே இல்லாதவர்களிடம் ஆட்சி இருக்கும் வரை பாரதத்திற்கு இத்தகைய தலைகுனிவுகள் தவிர்க்க முடியாது. சகோதரர் சரப்ஜித் சிங் விரைவில் நினைவு திரும்பி, நலம் பெற்று, பாகிஸ்தான் பாவிகளின் மனம் திருந்தி அவரை விடுதலை செய்ய எல்லாம் வல்ல இறைவனை மனசாட்சியுள்ள அத்தனை பாரதீயர்களும் வேண்டுவோம். இது நமது கடமை. இதை மனப்பூர்வமாக செய்வோம்.   19:18:28 IST
Rate this:
9 members
0 members
21 members
Share this Comment

ஏப்ரல்
25
2013
உலகம் சமாதானப் புறாவை "சுட்டுத் தின்னும் சீனா
நாசமாய்ப்போன நேருவின் உளுத்துப்போன வெளிஉறவு கொள்கைகளால் வந்த வினை இது. சுயநல நேரு குடும்பத்தின் ஆட்சியால் இன்று பாரதம் அத்துமீறல்களையும், ஆக்கிரமிப்புகளையும் அனுமதித்து, அஞ்சி நடுங்கும் கேவலமான நிலை ஏற்பட்டுள்ளது. அறுபத்தைந்து ஆண்டு கால ஆட்சியில் நேரு குடும்பம் மட்டுமே செழித்துள்ளது. இன்னும் முப்பது கோடி மக்களுக்கும் மேல் வறுமை கோட்டுக்கும் கீழே வாழ்வதோடு, உள்நாட்டில் எந்த அடிப்படை கட்டமைப்பும் இல்லாத அவலமும், தேச பாதுகாப்புக்கு உரிய எந்த நடவடிக்கையும் இல்லாத கேவலமும் தான் நேரு குடும்பம் இந்த நாட்டுக்கு அளித்துள்ள பரிசு. இனியும் தாமதித்தால் சீன பொறம்போக்கு இந்தியாவின் உள்ளேயே பிரவேசித்து விடுவான். அவன் பல ஆண்டுகளாகவே திட்டமிட்டே எல்லையில் தன் கட்டமைப்புகளை பெருக்கி வந்திருக்கிறான். இத்தாலிய இளவரசிக்கு இந்தியா எக்கேடு கேட்டாலும் கவலை இல்லை.காங்கிரஸ் அடிவருடிகளுக்கும், இங்குள்ள பிராந்திய கட்சிகளுக்கும் நாடு மீண்டும் அடிமை ஆனாலும் அக்கறை இல்லை. அவர்கள் நாளையே சீனாவின் தாசர்களாகி தங்களை காப்பாற்றிக்கொள்வார்கள். நம்மை போன்ற சாமானியர்கள் நிலை தான் பரிதாபம். உண்மையான தேசபக்தர்களை அவமதித்து, புறக்கணித்து, காங்கிரஸ் பித்தலாட்ட அரசியலுக்கு மயங்கி ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்த பாவத்துக்கு காலம் நமக்களித்த தண்டனை இது.   03:51:25 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஏப்ரல்
23
2013
அரசியல் அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடியாது: தே.மு.தி.க., கோரிக்கையை நிராகரித்தார் முதல்வர்
ஆத்திரப்படுவானேன்?அவஸ்தைப் படுவானேன்?அரசின் குறைகளை நாகரீமாக சுட்டிக்காட்டி, மக்கள் உணரும் வகையில் நடந்து கொண்டால் இத்தகைய அவதூறு வழக்குகளை சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காதே?மேலும், வீராதி வீரர், சூராதி சூரர் போல எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடட்டும் சந்திக்க தயார் என்று டயலாக் அடித்து விட்டு, இப்போது அம்மா தாயே வழக்குகளை வாபஸ் வாங்குங்கம்மா என்று கெஞ்சுவது கேவலமாக இல்லை? எண்ணி துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவம் என்பதிழுக்கு. வள்ளுவன் சொல்லை மீறியதால் வந்த வினையை கேப்டன் அனுபவிக்கிறார். அவர் பின்னால் சென்ற பாவத்துக்கு கட்சியினர் அனுபவிக்கிறார்கள்.   05:30:08 IST
Rate this:
106 members
57 members
89 members
Share this Comment

ஏப்ரல்
22
2013
அரசியல் மூன்றாவது அணி?முதல்வர் ஜெ.,வுடன் உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ் திடீர் சந்திப்பு
அட ஆண்டவா என்னடா இது சோதனை? கட்ட துரைக்கு கட்டம் சரியில்லை போல் இருக்கிறது.மூன்றாவது அணி?அதுவும் யாரை நம்பி?ஜெயாவை நம்பியா? முலாயம் சிங்கிற்கு மூளை குழம்பி விட்டதா? ஆசை யாரை விட்டது? ஆனால், தம்பி அகிலேஷை பாராட்டியே தீர வேண்டும். அதிமுக அடிமைகளை போலவே கச்சிதமாக குனிந்து இருக்கிறாரே?சபாஷ். கூட்டணிக்கான முதல் தகுதி வந்து விட்டது. அடுத்த முறை இன்னும் நன்றாக குனிந்து, அதற்கடுத்த சந்திப்பில் சாஷ்டாங்க நமஸ்காரம் தான். ஆனால், என்ன செய்தாலும், உன் இடுப்பு பத்திரம். மொத்தத்தில் , மகனே.இனி உனக்கு ஏழரை தாண்டி.   05:21:54 IST
Rate this:
87 members
1 members
216 members
Share this Comment

ஏப்ரல்
22
2013
அரசியல் எம்.எல்.ஏ.,வை அ.தி.மு.க.,விற்கு அனுப்பி வைக்க தயார்: விஜயகாந்த் அறிவிப்பு
ஐயோ பாவம். புரச்சி தலைவர் தோற்றுவித்த கட்சி இப்படியா ஆக வேண்டும்? துஷ்ட சகவாசம் பிராண சங்கடம் அல்ப சகவாசம் மான சங்கடம் என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்? கடந்த சட்ட மன்ற தேர்தலில் கூட்டு வைக்கவே தானே இந்த கேவலம்? அப்படி சேர்ந்திராவிட்டால், திமுக வந்திருக்கும் என்பது அர்த்தமற்ற வாதம். மக்கள் திமுகவுக்கு எதிராக கொந்தளித்துக்கொண்டிருந்ததால் நிச்சயம் அதிமுகவுக்கு அமோக ஆதரவை அள்ளிக்குவித்திருப்பார்கள். சரி முடிந்து போன கல்யாணத்துக்கு மேளம் வாசித்து பிரயோஜனம் இல்லை. இனியாவது கூட்டணி விஷயத்தில் உஷாராக இருப்பது நல்லது. கெழப்டன் சொன்னது போல்,. அருண் சுப்பிரமணியம் தவறு செய்திருந்தால் ஆக்கிரமித்த பகுதியை இடித்திருக்கலாமே? தவறுக்கு தண்டனையாக அபராதம் விதித்திருக்கலாமே? அதிமுக அடிமைகள் செய்யாத அராஜகங்களா? அவர்கள் செய்யாத ஆக்கிரமிப்பா?அதற்காக அருண் சுப்ரமணியம் செய்தது சரியென்று வாதிடவில்லை. எதிர்கட்சி உறுப்பினர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை எதுவாக இருந்தாலும் அது பழி வாங்கும் நடவடிக்கையாக சித்தரிக்கப்படும் அபாயம் இருப்பதால், அது குறித்த விஷயங்கள் வெளிப்படையாகவும், தெளிவாகவும் இருந்தால், அவர்களின் புகார் எடுபடாது. மேலும், எதற்கெடுத்தாலும், வழக்கு போடுவது, எதிர்கட்சிகளையே குறை கூறுவது என்று இருந்தால், ஆளும் கட்சியின் மீது நம்பிக்கை போய்விடும். அரசின் நடவடிக்கைகள் எல்லாவற்றிலும் வெளிப்படையாக இருக்க முடியாதுதேவையும் இல்லை என்றாலும், இதுபோன்ற விஷயங்களில் அப்படி இருப்பது ஆளும் கட்சி மீதான மதிப்பை உயர்த்தும். அருண் சுப்ரமணியம் விஷயத்தில் என்ன நடந்தது என்பதை தெளிவாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. அப்படி செய்வது கடமை என்பது மட்டுமல்ல இது போன்ற தேவையற்ற விமரிசனங்களுக்கும், குழப்பங்களுக்கும் அது முற்றுபுள்ளி வைக்கும் என்பதால். இது ஜெயாவுக்கு புரிந்தால் கட்சிக்கும் நல்லதுஆட்சிக்கும் நல்லது. ஏற்கனவே எதிர்கட்சி எம்.எல்.ஏக்களை குறிப்பாக தேமுதிக எம்.எல்.ஏக்களை ஆறுமாதம் சச்பெண்ட் செய்த விவகாரத்தில் மக்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது, இது போன்ற நடவடிக்கைகள் அதை மேலும் வளர்க்க உதவும். அப்படி நேராமல் தடுப்பது ஜெயாவிடம் தான் உள்ளது.   05:14:56 IST
Rate this:
33 members
2 members
217 members
Share this Comment

ஏப்ரல்
20
2013
பொது இந்திய எல்லைக்குள் 10 கி.மீ., தூரம் ஊடுருவியுள்ள சீன ராணுவத்தினர்
வெறும் பனிப்ரதேசம் தானே போனால் போகட்டும். அதற்காக சீனாவோடு சண்டை போட வேண்டாம் என்று தடுத்த புண்ணியவான் நேருவின் வாரிசுகளுக்கு சீனா பாரதத்தையே பிடித்தாலும் கவலை இல்லை. சுண்டைக்காய் நாடுகள் எல்லாம் தங்களை விட பெரியநாடுகளோடு மல்லுக்குநின்று தேவைப்பட்டால் பார்டர் தாண்டி போய் அடித்து விட்டு வருகின்றன. காலடியில் கரப்பான் பூச்சி போல் கிடக்கும் இலங்கையை பார்த்து நடுங்கிக்கொண்டிருக்கும் கேவலமான காங்கிரஸ் ஆட்சியில் சீனாவை கண்டிப்பதே நடக்காது என்னும்போது சீனாவின் உள்ளே புகுந்து அதை புரட்டி அடிப்பதை கற்பனை கூட செய்ய முடியாது. ஒரு சாமானிய இந்தியனுக்கு இருக்கும் ரோஷமும்,மானமும், தேசபக்தியும் காங்கிரசுக்கோ அதன் தலைமைக்கோ கிடையாது. உண்மையிலேயே தாங்களும், தங்கள் சந்ததியும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்தால், வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இத்தாலி காங்கிரஸ் ஓட ஓட விரட்டி, உண்மையான தேச பக்தர்கள் கையில் நாட்டை ஒப்படைக்க ஒவ்வொருவரும் உறுதி ஏற்கவேண்டும். இல்லாவிட்டால், அருணாச்சல பிரதேசம், காஷ்மீர் என்று ஒவ்வொன்றாக போய், கடைசியில் ஒட்டுமொத்த பாரதமும் சீனாவுக்கு அடிமையாகும் அவலம் நேர்ந்து விடும். காங்கிரசை விரட்டுவோம் பாரத அன்னையை காப்போம் போலோ பாரத் மாதா கீ ஜெய்.    14:32:16 IST
Rate this:
2 members
0 members
24 members
Share this Comment