Advertisement
Sembiyan Thamizhvel : கருத்துக்கள் ( 148 )
Sembiyan Thamizhvel
Advertisement
Advertisement
அக்டோபர்
5
2015
பொது மருத்துவ கல்லூரியில் சேர வருகிறது நுழைவுத்தேர்வு?
இந்த நுழைவு தேர்வை ஆங்கிலத்தில் மட்டும் நடத்தவேண்டும். ஹிந்தியில் நடத்தினால் ஹிந்திக்காரன் மட்டும் அனைத்து மாநிலங்களிலும் இடம் பெற்றுவிடுவான். ஆங்கிலத்தில் மட்டுமென்றால், தகுதியுள்ளோருக்கு மட்டும் கிடைக்கும்...   12:29:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
5
2015
பொது ஓட்டை, உடைசல் பஸ்களை களையெடுக்க ஆய்வுக்கு மேல் ஆய்வு செய்ய முடிவு
தி.மு.க ஆட்சிகாலத்தில் இந்தமாதிரி 600 பஸ்களை கொடி காட்ட ஆளில்லை என்று துருபிடிக்கவிட்டதில்லை. நகர பேருந்துகளுக்கு 40.கி.மீ/மா.போ.க வுக்கு 50கி.மீ என்று அதிக தூரம் இயக்க செய்து,போக்குவரத்து வசதியை நன்றாகவே வைத்திருந்தார்கள்.அம்மாவை போல ஸ்பேர் பார்ட் வாங்காமலே ,வாங்கியதாக கணக்கு எழுதவில்லை. [அது சரி. அது என்னாங்க உங்க ஆட்சியில மட்டும், மந்திரியை அழைத்து செல்லும்போது முன்னாள் சாவு கொட்டு கொட்டி கூட்டி செல்கிறார்கள்???? சிம்பாலிக்கா 'சங்கு'ன்னு சொல்றீங்களா???]   12:21:28 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
5
2015
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
5
2015
கோர்ட் காஷ்மீரில் மாட்டிறைச்சி விற்கப்படுமா? மூன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கும்
நீங்க கூட இருந்து பார்த்தீங்களா???? அகோரி என்னும் காட்டுமிராண்டி பிரிவினருக்கு வக்காலத்து வாங்குவது வேண்டாத வேலை..   12:11:55 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
5
2015
கோர்ட் காஷ்மீரில் மாட்டிறைச்சி விற்கப்படுமா? மூன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கும்
குதிரை கறியை பர்கரில் வைத்து சப்ளை செய்தவனையே ஒன்றும் செய்ய முடியவில்லை. உணவு என்பது அவனவன் உரிமை. அதில் அரசு தலையிடுவது வேண்டாத வேலை.   12:10:37 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
3
2015
எக்ஸ்குளுசிவ் பேரீச்சம்பழ பஸ்கள்... பேரச்சத்தில் பயணிகள்...
தமிழக அரசின் பஸ் பாடி வடிவமைப்பு 2001 வரையில் மிக நல்ல முறையில் தான் இருந்தது. அனைத்து போக்குவரத்து கழகங்களும் தங்களுக்கு என பஸ் கூண்டு வடிவமைப்பு தொழிலகத்தை நடத்திவந்தன. திருவள்ளுவர் போக்குவரத்து கழகத்தின் முதல் வடிவமைப்பு [இந்தியாவிலேயே முதல் வடிவமைப்பு] குளிர்சாதன வசதியுடன் கூடிய படுக்கை வசதி /கழிவறை வசதியுடன் கூடிய பேருந்து 1980-இல் அறிமுகம் செய்யப்பட்டது. [தவறான வகையில் வருமானமே வராத ஈரோடு-சென்னை வழித்தடத்தில், எதிர்ப்பை மீறி அப்போதைய அமைச்சர் முத்துசாமியால் துவக்கப்பட்ட இந்த பேருந்து முற்றிலும் கைவிடப்பட்டது. வேறு தடங்களுக்கு மாற்றக்கூட ஒப்புக்கொள்ளவில்லை. அப்போதைய சூப்பர் டீலக்ஸ் பேருந்துகள் வடிவமைப்பு மிகவும் நன்றாகவே, பயணிகளுக்கு வசதியாகவே இருந்தது. தனியாருக்கு பாடி பில்டிங் காண்ட்ராக்ட் கொடுத்து சில்லறை பார்த்தது 2001-2006 வரை இருந்த அம்மா அரசு. போக்குவரத்து கழகம் உருப்படாமல் போக துவங்கியது அப்போதுதான். தவறுகளுக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுத்து தூண்டியது ADMK அரசுதான்,,   15:21:53 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
3
2015
எக்ஸ்குளுசிவ் பேரீச்சம்பழ பஸ்கள்... பேரச்சத்தில் பயணிகள்...
வெறுமனே பஸ் மட்டும் ஓட்டிகொண்டிருந்தால் ஓகே. தேவையின்றி எந்த தொகுதிக்கு யாருக்கு ஓட்டு போடவேண்டும் என்று வெற்றிலை சத்தியம் வாங்குவது, போன்ற வேண்டாத வேலைகளில் ஈடுபட்டதால் தான் பஸ் தேசியமயம் செய்ய வேண்டி வந்தது. கிராமங்களுக்கு பஸ் இயக்க மறுப்பது. லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு குறிப்பிட்ட தடங்களில் மட்டும் இயக்குவது போன்றவையும், பஸ் அரசுடமைக்கு காரணங்கள்....   15:15:10 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
2
2015
பொது தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் தெற்கு ரயில்வே பொது மேலாளர் உறுதி
ராயபுரத்தில் 80 ஹெக்டேர் நிலமிருந்தும், மீண்டும் மீண்டும் முனையம் அமைக்கும் சாத்திய கூறு கிடையாது என்று கீறல் விழுந்த ரெகார்ட் போல சொலவதுதான் சந்தேகப்பட வைக்கிறது... 80 ஹெக்டேர் நிலத்தை விழுங்க முயற்சிகள் நடப்பதாக தெரிகின்றன. தாம்பரம் முனையம் வடசென்னை / மேற்கு சென்னை பயணிகளுக்கு ஒரு பெருந்துன்பமாகவே இருக்கும். மதுரைக்கு 8 மணி நேரம் பயணம். ஆனால், அந்த ரயிலை தாம்பரத்தில் பிடிக்க 4 மணி நேரம் பயணம் மற்றும் ஒரு நாள் /உள்ளூர் போக்குவரத்து/உணவு என்று தேவையில்லாத செலவுகள் கூடும். GM /சென்னை DRM அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் பெரும்பாலும், தென் சென்னையை சார்ந்தவர்கள், மேலும் தென் சென்னையின் ரியல் எஸ்டேட் தொழிலில் பங்குடையவர்கள் என்பதால், இந்த தாம்பரம் முனையம், எத்தனை எதிர்ப்புகள் இருந்தாலும் முன்னேடுக்கபடுகிறது....ராயபுரம் முனையம் மிக தேவையான ஒன்று. வடசென்னை/மேற்குசென்னையில் இதனால் அதிருப்தி பெருகும், போராட்டங்கள் தூண்டப்படும்.....   11:30:53 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
30
2015
கோர்ட் வக்கீல்கள் மீதான அவதூறு வழக்கு முழு பெஞ்ச் விசாரணைக்கு உத்தரவு
ஹைகோர்டின் மதுரை பெஞ்சுக்கு இந்த நீதியரசர்கள் துவக்க காலமுதலே வேண்டா வெறுப்பாகத்தான் அனுமதி அளித்து இருந்தனர். தென்மாவட்ட மக்கள் சென்னைக்கு அலைவதில் இவர்களுக்கு என்ன விருப்பமோ, தெரியாது. மேலும், தமிழ் வழக்காடு மொழியாக இருக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுக்க துவங்கியது இந்த நீதி அரசர்களுக்கு பிடிக்கவில்லை. வேப்பங்காயாக கசக்கிறது..தமிழ் வழக்காடு மொழி கோரிக்கையை முற்றிலும் நசுக்குவதற்காக இவர்கள் மதுரை பெஞ்ச் ஐ மூட வேண்டும்., வக்கீல்கள் மீது நடவடிக்கை என்டுக்கவேண்டும் என்று மானாவாரியாக பேச துவங்கியுள்ளனர். ஹிந்தியை ஆதரிக்கும் இவர்கள், ஏன் தமிழ் , மற்றும் அந்தந்த மாநில மொழிகள் வழக்காடு மொழிகலாவதை எதிர்க்கிறார்கள்?? ஹிந்தி மீது இவர்களுக்கு அப்படி என்ன [கள்ளக் ]காதல்?? மாநில மொழியில் வழக்காடுதல் இயலாது என்றால், பாட்னா, அலஹாபாத், போபால், ஜெய்பூர் ஹை கோர்ட்களில் மட்டும் எப்படி ஹிந்தியில் சகல அலுவல்களும் செய்கிறார்கள்? ஹிந்தியை மட்டும் இந்தியாவின் மொழி என்று உருவாக்கி, இந்து இந்தி இந்தியா என்ற ஒற்றை உருவாக்கத்துக்கு நீதி மன்றம், மற்றும் நீதியரசர்கள் துணை போகிறார்களா??? ஹெல்மெட் விவகாரத்துக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்பது என்பது கண் துடிப்பு. தமிழ் வழக்காடு மொழி கோரிக்கை ஒன்றையே குறி வைத்து சிதைக்க நினைக்கிறார்கள்.....இது தமிழுக்கு எதிராக நீதிமன்றம் எடுக்கும் விரோத நிலை....   17:51:22 IST
Rate this:
0 members
1 members
0 members
Share this Comment

செப்டம்பர்
30
2015
பொது பூந்தமல்லி - வண்டலூர் இடையே பேருந்து சேவை போக்குவரத்து துறை விரைவு நடவடிக்கை தேவை
பூவிருந்தவல்லி -வண்டலூர் என்பதற்கு பதிலாக, திருநின்றவூர்-பூவிருந்தவல்லி-வண்டலூர் மற்றும் திருவள்ளூர்-தாம்பரம் வழி-திருநின்றவூர் ORR பூவிருந்தவல்லி,வண்டலூர் என்று இயக்கலாமே. தாம்பரம் வந்துசேர 1 முதல் 1.30 மணி நேரம் போதும். இந்த சாலையில் பேருந்து நிறுத்தங்கள், நிழற்குடைகள், இருக்கைகள் மற்றும் பஸ் பே க்கள் அமைக்கப்பட்டு வெறுமனே இருக்கின்றன. அவை ஆக்கிரமிப்பு அல்லது கழற்றப்பட்டு காயலான் கடைக்கு போவதற்கு முன்பு உபயோகபடுத்தலாமே?? ஆவடி-பட்டாபிராம்-ORR பூவிருந்தவல்லி- வண்டலூர்-தாம்பரம் அல்லது கூடுவாஞ்சேரி மார்க்கமாக பேருந்துகள் இயக்கபடுவதும் சாத்தியமான ஒன்றே...இந்த தடத்தில் தென் மாவட்டங்கள் செல்லும் பேருந்துகள் ஒரு சில ஆவடி அல்லது செங்குன்றத்திலிருந்து இயக்கப்பட்டால், சென்னைக்குள் வந்து நெரிசலில் சிக்காமல், குறைந்த நேரத்தில் செங்கல்பட்டு மற்றும் GST சாலை மூலம் தென்மாவட்டங்களுக்கு செல்ல இயலுமே...[கோயம்பேடு போக்குவரத்து நெரிசலும் குறையும்..4/6 வழி சாலையான ஸ்ரீபெரும்புதூர்-ஓரகடம்-சிங்கபெருமாள் கோவில் சாலையையும் வடக்கு /மேற்கு சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள்/மேற்கு மாவட்டங்களுக்கு செல்ல பயன்படுத்தும்போது, இந்த பகுதிமக்கள், தேவையின்றி கோயம்பேடு வந்து பேருந்து ஏறும் தொல்லையும் குறையும்.கோயம்பேடு நெரிசலிலிருந்து சிறிது விடுபடும்....அரசு முயற்சிக்கலாமே??   17:37:49 IST
Rate this:
0 members
1 members
0 members
Share this Comment