இந்த குளறுபடிகளுக்கு அடிப்படைக்காரணம் விடைத்தாள் திருத்தும் முறை. திருத்தும் தாள்கள் அந்த ஆசிரியரின் பாடத்தை சேர்ந்ததாகவே இருக்க வேண்டும். அதாவது, கணித ஆசிரியர், கணித விடைத்தாளை மட்டுமே திருத்த வேண்டும். ஆங்கில ஆசிரியர் ஆங்கில விடைத்தாள் மட்டுமே. அப்போதுதான், மாணவன் எந்த அளவு பாடத்தை புரிந்து கொண்டு இருக்கிறான், என்ன சொள்ளவருகிறான் என்று புரிந்து திருத்த இயலும். நடைமுறையில், மொழி ஆசிரியர், அறிவியல் பாடத்தையும், வரலாறு பாட ஆசிரியர் மொழி பாடங்களையும், விடைக்குறிப்புகளை [ கீ ஆன்சர் சீட்] வைத்துக்கொண்டு, அதன் அடிப்படையில் மட்டுமே திருத்துகின்றன்ர். கீ ஆன்சர் சீட் ஒன்றை மட்டுமே முழு மொத்த வழிகாட்டியாக கொள்ள இயலாது. மறு மதிப்பீட்டின் போது பாட ஆசிரியர் குறிப்பிட்ட பாடத்தை திருத்தும்போது, முன்னாள் திருத்தலின் குறைகள் வெளிப்படுகின்றன. இது முழுக்க , முழுக்க, கல்வித்துறை அதிகாரிகளின் அறிவுகெட்டத்தனம். [ குறிப்பிட்ட பாட ஆசிரியர், தான் சம்பந்தப்பட்ட பாட விடைத்தாள்களை மட்டுமே திருத்த பணிக்கபடவேண்டும். முற்றிலும் தொடர்பற்ற, பாட விடைத்தாள்களை திருத்த வைத்தால் இப்படித்தான், சகல குளறுபடிகளும் நடக்கும்.] இன்னொன்று, ஒரு நாளைக்கு, நிதானமாக, அதிக பட்சம் பத்து முதல் இருபது விடைத்தாள்களை மட்டுமே தவறு இன்றி திருத்த முடியும். ஆனால் இந்த அதிகாரிகள், சுமார் நாற்பது தாள்கள் வரை திருத்த நிர்பந்தம் செய்கிறார்கள். மேலும், இந்த விடைத்தாள் திருத்தும் மையங்களில், அடிப்படை வசதிகள் சுத்தமாக இருக்காது. கழிப்பறை வசதி கூட இல்லாமல், சுமார் எட்டு மணிநேரம் எப்படி வேலை பார்க்க இயலும்? குடிநீர், வெளிச்சம், காற்று வசதிகள் என்பது மருந்துக்கு கூட கிடையாது. கொட்டடியை விட மோசமான ஒரு கட்டிடத்தில் செய்யப்படும், பணி எந்த அளவுக்கு சரியான அளவில் இருக்கும்?? செம்பியன் தமிழவேள், திருவள்ளூர்......
15-ஜூன்-2013 11:01:30 IST
நமது ராணுவம், சொந்த மக்களைக் கொல்லவும்,பாலியல் வன்முறையில் ஈடுபடவுமே லாயக்கு. பிசாத்து சிங்கலவனைக்கூட சமாளிக்க இயலாத இவர்களை, நாளை பாக்கிஸ்தான் என்ன, சோமாலிய ராணுவம் இந்தியாவின் உள்ளே நுழைந்து சுட்டால் கூட வியப்படைவதற்கு ஒன்றும் இல்லை. தமிழனைக்கொன்ற பாவம் தலைமுறைக்கும் தொடரும்.[அறம் நின்று கொல்லும்.....தமிழ் துரோக இந்தியனை..../]
08-ஜூன்-2013 10:28:04 IST
அரசு வேலையைப்போன்ற பணி பாதுகாப்பு, ஊதியம், ஓய்வுகால பலன்களை,தனியாருக்கும் வரன்முறை செய்துவிட்டால், ஏன் அரசு வேலைக்கு அலையப்போகிறார்கள். ஐரோப்பிய நாடுகளைப்போன்ற ஒரு ஊதிய வரைமுறை கொண்டுவருவது காலத்தின் கட்டாயம்.
07-ஜூன்-2013 14:17:03 IST
பெட்டி கொடுத்தால், கேட்கும் தீர்ப்பு[ அது எப்படி இருந்தாலும்] உடனடியாக தரப்படும். எவன் பாதிப்பு அடைந்தால் என்ன? செத்தால் என்ன?? ஸ்டெர்லைட் க்கு சாதகமாக தீர்ப்பு சொல்வதற்காகத்தான் இந்த வழக்கு டெல்லிக்கு மாற்றப்பட்டது. தீர்ப்பை நியாயப்படுத்த முட்டாள்தனமான கேள்விகளும் கேட்கப்படும். [ எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்?- என்பது போல] இதையெல்லாம் பெரிது படுத்தினால், பின்பு எப்படித்தான் பத்து தலைமுறைக்கு சொத்து சேர்ப்பது?? [ தாலி அறுந்தாலும் கூட, தங்கம் கிடைத்தால் சரி- என்பது போல] உருப்படுமா இந்த நாடு????
07-ஜூன்-2013 13:01:43 IST
இந்தியா என்ற, கையாலாகாத, முட்டாள், வருண, சாதி, வெறியர்களின் நாடு, சுமார் பதினைந்து ஆண்டுகளுக்குள், பீஸ், பீஸாக சிதறிப்போகும் காட்சி, எமது கண்முன்னால் விரிகிறது. இந்தியனுக்கு ஆட்சி செய்ய வக்கு இல்லை என்று, வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னது எந்த அளவு தீர்க்கதரிசனம் என்பது இப்போது புரிகிறதா?? மொழிவழி மாநினமாக இருந்தால் அமெரிக்க முறையிலான கூட்டாட்சி[ யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா] என்று இருந்திருக்க வேண்டும். இல்லை என்றால், சுமார் 10 பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டு இருக்கவேண்டும்.[சோவியத் ரஷ்யா போல] இப்படி, இரண்டும்கெட்டாந்தனமாக இருந்தால் உருப்படாமல்தான் போகவேண்டும். இன்றைய இந்தியாவிலிருந்து, தெற்கு, மேற்கு மற்றும் பஞ்சாப் ஐ பிரித்துவிட்டால், மிச்சம் உள்ள இந்தியா சொமாலியாவை விட படு கேவலமாகத்தான் இருக்கும். [ இந்த இந்தி பெல்ட் காரர்கள் முன்யோசனையோ, நிதர்சனமோ கொஞ்சம்கூட இல்லாமல் நாட்டாமை செய்து கொண்டு அலைகிறார்கள். தங்களது அரசியல் திறமை என்பது முழு பூஜ்யம் என்பது இன்னும் அவர்களுக்கு விளங்கவில்லை]
செம்பியன் தமிழவேள், திருவள்ளூர்....
07-ஜூன்-2013 11:43:42 IST
வியாதி உள்ளவன் மட்டுமே மருந்து உண்ணவேண்டும். தோஷம் உள்ளவர்கள் மட்டுமே பரிகாரம் செய்யவேண்டும். இதுதான் விதி. ஆனால், தமிழகத்தின் பெரும்பான்மை கோயில்களில், பரிகாரம் செய்யவேண்டும் என்று வற்புறுத்தி தேவை இல்லாமல் பூசைப்பொருட்களை கையில் திணித்து காசு பிடுங்கும் அடாவடிதான் நடக்கிறது. அர்ச்சனை தட்டு வாங்கி கொடுத்துதான் கடவுளை வணங்கவேண்டும் என்று எங்கும் கட்டுப்பாடு விதிக்கபடவில்லையே.
கோயிலுக்குள் சென்று, தரிசனம் மட்டும் செய்துவிட்டு, சிறிதுநேரம் தியானம் செய்துவிட்டு வருவது , என்று ஒரு வழக்கத்தை ஏற்படுத்திகொண்டால், இந்த வியாபார கூட்டம், தன்னாலேயே காலாவதி ஆகி விடும். [பரிகாரப்பைத்திய கூட்டம் இருக்கும் வரை, இந்த பணம் பிடுங்கிக்கூட்டமும் வளமாக வாழும்.] செம்பியன் தமிழவேள். திருவள்ளூர்......
05-ஜூன்-2013 13:49:51 IST
அனைத்து பேருந்துகளின் முன் / பின் புற கண்ணாடிகள், பக்கவாட்டு சன்னல்களுக்கு இரும்பு வலை [ போலீஸ் வாகனங்களில் உள்ளது போல ] இருந்தால் போதுமானது. ஓட்டுனர்களுக்கு ஹெல்மெட் தேவை இல்லை...
10-மே-2013 15:49:14 IST
அளவுக்கு மீறிய ஏ.சி. க்களின் செயல்பாடு மின் நுகர்வை அதிகப்படுத்துகிறது. தேவையற்ற இடங்களின் ஏ.சி, பயன்படுத்துவது எதற்கு.? சென்னையில் இது மிகவும் கொடுமையான ஒன்று. அதிக எண்ணிக்கையிலான ஏ.சி க்கள் மின்மாற்றிகளை பழுது அடைய செய்கின்றன. ஏ.சி.க்கு அதிகமான மின்கட்டணம் விதிக்கபட வேண்டும். வெட்டி பந்தாவுக்காக ஏ.சி. பயன்படுத்தும் சென்னைக்கு, இரண்டு மணிநேர மின்வெட்டு போதாது. குறைந்தது நான்கு அல்லது ஆறு மணி நேரமாக்க வேண்டும்.......ஷாப்பிங் மால்கள், திரைப்பட கொட்டகைகளுக்கு அரசு மின்சாரம் ஏன்? டீசல் ஜெனரேட்டர்களை உபயோகப்படுத்தட்டுமே....
07-மே-2013 13:42:57 IST
சென்னையை போன்ற மெகா சைஸ் ஊருக்கு, நான்கு பஸ் நிலையங்கள் தேவை. வண்டலூரில் ஒன்று, திருநின்றவூரில் ஒன்று, கோயம்பேட்டில் ஒன்று, மற்றும் ரெட் ஹில்ஸ் இல் ஒன்று. இந்த நான்கு பஸ் நிலையங்களும் இருபத்து நான்கு மணிநேரமும் பேருந்து சர்வீஸ் ஆல் இணைக்கப்படவேண்டும். தற்போது, இருப்பிடங்களிலிருந்து கோயம்பேட்டுக்கு இரண்டு மணிநேரம், கோயம்பேட்டிலிருந்து சென்னை எல்லையை தாண்ட இரண்டுமணிநேரம், கோயம்பேட்டில் காத்திருக்கும் நேரம் ஒருமணிநேரம் என, சுமார் ஐந்து மணிநேரம் வெட்டியாக சென்னையிலேயே கழிகிறது. இந்த நேர வீனடிப்பை தவிர்க்க முன்பு மதுரையில் இருந்ததுபோல சுமார் நான்கு அல்லது ஐந்து பஸ் நிலையங்கள் அவசியம் தேவை. இரண்டாவதாக, மாவட்ட தலைநகரமான திருவள்ளூர் இல், உள்ள பஸ் நிலையம் பதினைந்து பேருந்துகள் மட்டும் நிறுத்தும் அளவுக்கே உள்ளது. பெரிய அளவிலான பேருந்து நிலையம் தேவை. திருவள்ளுரிலிருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் நேரடி பேருந்து வசதி தேவை.
தற்போது கொயம்பெட்டுடன் நிறுத்தப்படும் தென்மாவட்ட பேருந்துகளில் சுமார் இருபது சதவிகித பேருந்துகளை திருவள்ளூர் வரை நீட்டிக்க வேண்டும். இது இன்றைய நிலையில் ஒரு இன்றியமையாத அவசிய தேவை ஆகும்....
30-ஏப்-2013 17:10:51 IST
தனி நபர் பிரச்சினைகள், சாதிய அமைப்புகளால் சமூக பிரச்சினை ஆக்கப்பட்டு, குறிப்பாக, சமூக விடுதலைக்கான சட்டங்களை தவறாக கையாண்டு, குறுக்கு வழியில் பணக்கொள்ளை அடிக்க உப்யோகிக்கபடுவதால் தான், ராமதாஸ் இந்த மாதிரி செயல்களை முன்னெடுக்கிறார்,. காதலிக்க தூண்டுவதும், ஓடிப்போவதற்கு உதவுவதும், மிரட்டி சில்லறை சம்பாதிப்பதும் சாதிக்கட்சிகளின், சாதி அமைப்புகளின் வேலையா?? முதலில், இந்த கூத்தாடிகளின் ரசிகர் மன்றங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டால் தான், சமூக அமைதி நிலவும். கல்வி அறிவு பெறுவது, பொருளாதார முன்னேற்றத்தை, [வேலை வாய்ப்புகள் / சுய தொழில் முயற்சிகள் மூலம்] பெறுவது என்ற குறிக்கோளை அடைய முயற்சி செய்யாமல், வேலை வெட்டியற்ற, கட்டை பஞ்சாயத்து, கட்சிகளின் பின்னே செல்லும் சமுதாயம் [ அது முன்னேறியதோ, தாழ்தப்பட்டதோ, அல்லது, பிற்படுத்தப்பட்டதோ. எதுவாக இருந்தாலும்] உருப்பட முடியாது.
சமுதாயங்களிடையே, சச்சரவை மூட்டி விட்டு, குளிர்காயும்,சம்பாதிக்கும் , அரசியல், சமூக தலைவர்களை, அந்தந்த சாதிகளும் இனம்கண்டு, அடித்து துரத்தாதவரை, விமோசனம் கிடையாது. - இது அனைத்து, சாதி அமைப்புகளுக்கும் பொருந்தும். தற்போதுள்ள சாதி தலைவர்களும், அவர்களது குறுகிய லாப நோக்கமுமே இப்போது பெரும் பிரச்சினை. இந்த கூட்டம் ஒழிக்கப்பட்டால், சமூக பிரச்சினைகள் என்பவை பெரிதாக எழாது...கூடவே, மதுக்கடைகள் என்பன முற்றிலுமாக, சமூகத்திலிருந்தே ஒழிக்கப்படவேண்டும். குடிகார சமுதாயமும், கூத்து பார்க்கும் [கூத்து வெறி பிடித்த]
சமுதாயமும், உருப்பட்டதாக, வாழ்ந்ததாக வரலாறு கிடையாது...... செம்பியன் தமிழவேள், திருவள்ளூர்.
27-ஏப்-2013 13:21:35 IST