Advertisement
தினமலர் முதல் பக்கம் » செயலாளர் சேந்தமங்கலம் பயனீட்டாளர் சங்கம் நாமக்கல் அவரது கருத்துக்கள்
செயலாளர் சேந்தமங்கலம் பயனீட்டாளர் சங்கம் நாமக்கல் : கருத்துக்கள் ( 50 )
செயலாளர்  சேந்தமங்கலம்  பயனீட்டாளர் சங்கம்  நாமக்கல்
Advertisement
மே
17
2013
பொது நிதி முறைகேடு கொற்கை ஊராட்சி மன்றத்தலைவர் நீக்கம்
நிதி முறைகேட்டிற்காக இந்த ஊராட்சித் தலைவர், மாவட்ட ஆட்சியரால் நிரந்தர பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், நாமக்கல் மாவட்டத்தில். வெளியூர்க்காரர் தம் ஊரில் நிலம் வாங்கியுள்ளார் என்ற காரணத்துக்காக, தமது விவசாய நிலத்திற்குள் செல்ல இயலாதவாறு, அரசியலமைப்புக்கு எதிராக ஊராட்சித் தலைவரால் பொது வழிதடம் மறிக்கப்பட்டு, அதில் - நடுப்பாதையில் தண்ணீர் டேங் வைக்கப்பட்டு தனியொரு மனிதரின் சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது. பொது வழித் தடம் - வழித்தடமாகவே பயன்படுத்தப்பட மாவட்ட ஆட்சியர், சார்-ஆட்சியர் ஆகியோர் உத்தரவிட்டும், பொது வழித்தடத்தை உரிய காரணத்துக்காக பயன்படுத்த இதுநாள் வரை நாமக்கல் வட்டாட்சியர் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.   16:36:23 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
9
2013
முக்கிய செய்திகள் வருவாய் துறை பதிவேட்டில் மாற்றம் செய்வதில் அலட்சியம் 50 ஆண்டுகளாக போராடும் மக்களுக்கு விடிவு கிடைக்குமா?
இது கூடப் பரவாயில்லை, காப்புக்காடுகள் என்றாவது பதிவேட்டில் உள்ளது. ஆன்னால், நாமக்கல் வட்டம் பெரியகுளம் கிராமம், 137 / 220 சர்வே எண், புதுகாந்திபுரத்தில், எஸ்டேட் மானேஜர்/ தனி தாசில்தார் என்ற அதிகாரியால் எம்.ஜி.ஆர். ஆட்சி தமிழகத்தில் உதயமானவுடன் பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அந்தப் பட்டாவும் செல்லாது என்கின்றனர், வருவாய் ஆவணங்களிலும் இந்த எண் நிலம் என்ன வகை, அளவு எவ்வளவு என்பதே இல்லாமல் மக்கள் பட்டாமாற்ற இயலாமல் தவிக்கின்றனர். கடந்த பத்தாண்டுகளாக தங்கள் பெயரிலுள்ள பட்டா, தங்கள் நிலத்தின் வகை ஆகியவற்றின் நிலை பற்றி தெரிந்துகொள்ள போராடி வருகின்றனர். ஆ.தவமணி, செயலாளர், சேந்தமங்கலம் பயனீட்டாளர் சங்கம். நாமக்கல்.   17:47:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
6
2013
கோர்ட் கூடங்குளத்திற்கு சுப்ரீம் கோர்ட் "ஓகே! "வளர்ச்சி திட்டங்களை தடுக்க கூடாது
அரசியலமைப்பு சட்டத்தில் நம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு எதிராக, நமது பாராளுமன்றமோ அல்லது நம் நாட்டிலுள்ள எந்த ஒரு மாநிலத்தின் சட்டமன்றமோ - எந்தவிதமான சட்டங்களை இயற்றினாலும், அரசியலமைப்பின் அடிப்படையில் அச்சட்டங்களை ஆய்வு செய்து, மக்கள் நலன்களுக்கெதிரான சட்டங்களுக்கு தடை விதித்து, நமது சட்டத்தின் ஆட்சியில், சட்டத்தால் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பாதுகாத்து வரும் நமது மேன்மைமிக்க. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பாணையை விமரிசிக்கும் அரசியல்வாதிகளும் , அவர்களின் கட்சியை சார்ந்தவர்களும் தேர்தலில் நிற்க தடையாணை பிறப்பித்து இந்திய நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும். இது என்ன சட்டத்தின் ஆட்சியா ?   22:44:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
6
2013
கோர்ட் கூடங்குளத்திற்கு சுப்ரீம் கோர்ட் "ஓகே! "வளர்ச்சி திட்டங்களை தடுக்க கூடாது
அரசியலமைப்பு சட்டத்தில் நம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு எதிராக, நமது பாராளுமன்றமோ அல்லது நம் நாட்டிலுள்ள எந்த ஒரு மாநிலத்தின் சட்டமன்றமோ - எந்தவிதமான சட்டங்களை இயற்றினாலும், அரசியலமைப்பின் அடிப்படையில் அச்சட்டங்களை ஆய்வு செய்து, மக்கள் நலன்களுக்கெதிரான சட்டங்களுக்கு தடை விதித்து, நமது சட்டத்தின் ஆட்சியில், சட்டத்தால் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பாதுகாத்து வரும் நமது மேன்மைமிக்க. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பாணையை விமரிசிக்கும் அரசியல்வாதிகளும் , அவர்களின் கட்சியை சார்ந்தவர்களும் தேர்தலில் நிற்க தடையாணை பிறப்பித்து இந்திய நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும். ஆ.தவமணி, சேந்தமங்கலம், நாமக்கல்.   22:06:05 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
6
2013
முக்கிய செய்திகள் அட்டகாசம்!சேலம் தனியார் ஹோட்டல் நிர்வாகம்... பின் வாங்கிய மாநகராட்சி அதிகாரிகள்
மாநகராட்சியின் துணையாக காவல்துறை இல்லாதது வருத்தமளிக்கிறது   22:13:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
5
2013
கோர்ட் வழக்கு தொடர்வதற்கு ஐகோர்ட்டில் புதிய விதிமுறைகள்
பொதுநல மனுக்களுக்கும், நீக்கறவு வேண்டி பிரார்த்திக்கும் மனுக்களுக்கும் உடனடி தீர்ப்பு வழங்க மேதகு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். ஆ.தவமணி, செயலாளர், சேந்தமங்கலம் பயனீட்டாளர் சங்கம் நாமக்கல்.   23:09:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
5
2013
கோர்ட் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 2015 வரை கெடு * ஐகோர்ட் உத்தரவு
தகுதி தேர்வுக்கு விலக்கு கேட்கும் ஆசிரிய (?) பெருமக்கள் எவ்வாறு மாணவர்களை தேர்வுக்கு தகுதி உள்ளவர்களாக உருவாக்குவார்கள் என்பதுதான் மிக,மிக விந்தையாக உள்ளது. எதிர்கால இந்தியாவின் ஒளிவிளக்குகளை உருவாக்கும் ஆசிரியப் பணியில் நீதிமன்றம் காட்டியுள்ள கண்டிப்பும், அதே சமயம் கால அவகாசம் வழங்கியுள்ள கருணையும் வரவேற்கத்தக்கது. ஆ.தவமணி, செயலாளர், சேந்தமங்கலம் பயனீட்டாளர் சங்கம், நாமக்கல்.   23:02:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
2
2013
கோர்ட் பா.ம.க., அங்கிகாரத்தை ரத்து செய்ய கோரி ஐகோர்டில் மனு
மத, மொழி, இன, ஜாதி சார்பற்ற சமதர்ம, சோஷலிஸ இந்தியக் குடியரசு நாட்டில், புனிதமான அரசிலமைப்பு சட்டத்தால் நியமனம் செய்யப்பட மத்திய அமைச்சர் பதவியை வகித்த டாக்டர். அன்புமணி, அதே அரசியலமைப்புக்குட்பட்ட தமிழ் நாட்டில் எதிர்காலத்தில் ஆட்சியமைப்போம் என்று கூறி வரும் டாக்டர் ராமதாஸ் ஆகிய தலைவர்கள், சட்டத்தின் அதிகாரத்திற்குட்பட்டு, அரசியல் கட்சி துவங்கி, சட்டம் இயற்றும் பாராளுமன்றம் சட்டமன்றம் ஆகியவற்றில் உறுப்பினர்களாக தம் கட்சியினர் உள்ள காலத்தே, சட்டத்தின் ஆட்சியில். "சட்டத்தை மீறுவோம், எங்களை கைது செய்யுங்கள்" என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு சவால் விட்டு, பின் அதுபோலவே தாமும் நடந்துகொண்டதுடம், தங்களை தலைவர்களாக ஏற்றுக்கொண்ட அப்பாவி இந்தியக் குடிமக்களையும் சட்டத்தை மீறும்படி தூண்டி விடும் செயல்பாடுகள் ஒரு ஜனநாயக நாட்டில், அரசியல் அமைப்புக்கு உட்பட்ட அரசியல் கட்சி செய்யும் செயலாக இல்லை. மக்களாட்சிக்கு - இந்திய குடிமக்களின் ஒருமைபாட்டுக்கெதிரான ஒரு தீவிரவாத செயல் போன்றே காட்சியளிக்கிறது. ஆகவே, கற்றறிந்த சான்றோர்களான பா.ம.க. தலைவர்கள் சட்டத்தின் ஆட்சியை மதித்து, சட்டத்திற்குட்பட்டு தாங்களும் நடந்துகொண்டு, தங்களை பின்பற்றும் தம் கட்சியினரும் சட்டத்தை மதிக்க அறிவுரை கூற வேண்டும். ஏனென்றால், அப்போதுதான் இவர்கள் ஆட்சி பீடத்திலமர்ந்தாலும், சட்டமும், அரசும் மதிக்கப்படும். ஆ.தவமணி, காந்திபுரம், சேந்தமங்கலம்.   14:45:33 IST
Rate this:
16 members
2 members
25 members
Share this Comment

மே
1
2013
கோர்ட் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைப்பு மத்திய அரசை எதிர்த்து தமிழக அரசு மனு
2011 ல் தானே தி.மு.க. ஆட்சி மக்களால் அகற்றப்பட்டு, தமிழக மக்களால்ஜெயலலிதா முதல்வராக அமர்த்தப்பட்டார். தி.மு.க.விடம் சண்டைபோட்டு சீட் வாங்கியும் தங்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் கூட தமிழக சட்ட மன்ற உறுப்பினர்களாக முடியவில்லை என்ற ஆதங்கத்தில் / கோபத்தில் மண்ணெண்ணெய் அளவைக் குறைத்து, பாராளுமன்ற தேர்தலிலும் தமிழ்நாட்டில் டெபாசிட்டை இழக்க காங்கிரஸ் தயாராகி வருகிறது ஆ.தவமணி, சேந்தமங்கலம்,நாமக்கல்.   21:23:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
1
2013
அரசியல் பா.ம.க., தலைவர் ராமதாஸ்.கைது திருச்சி சிறையில் அடைப்பு
ஜனநாயக முறையில் டாக்டர். ராமதாஸ் கட்சி நடத்தினால், தம் இன மக்களே ஓட்டு போடவில்லை - இனிமேலும் ஓட்டு போடமாட்டார்கள் என்பதையும், இனிமேல் சவாரி செய்ய எந்த கட்சியும் அகப்படவில்லை என்பதையும் தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொண்ட பின்னரே ஆரம்ப கால - கற்கால மாடலில் தற்போது அரசியல் செய்ய ஆரம்பித்து, தமிழக ஆட்சியை பிடிக்க உள்ளார். இதுகூட நமக்கு தெரியவில்லை ஆ.தவமணி, நாமக்கல்.   10:03:52 IST
Rate this:
7 members
0 members
70 members
Share this Comment