டாக்டர் அம்பேத்கர் உலக மஹா தலைவர். இந்திய பெருந்தலைவர். மா மேதை. நம் இந்திய திரு நாட்டின் சட்ட மேதை. அவரை ஒரு சிறிய வட்டத்திற்குள் கொண்டு சில தமிழ் நாட்டு கட்சிகள் அரசியல் நடத்துகிறார்கள். ஏதோ அம்பேத்கரை இவர்கள் உருவாக்கியது போல் நினைக்கிறார்கள். அவர் சொல்படி மேற்படி கட்சிகள் நடப்பதில்லை. வன்முறை உருவாக்குகிறார்கள். குளிர் காய்கிறார்கள். நாம் புனே நகரில் உள்ள அம்பேத்கர் நினைவாலயம் சென்று பார்த்தால் அவர் பெருமை நமக்கு விளங்கும். அந்த மகானின் வாழ்வு எத்தகையது என்று. இங்கு வன்முறை செய்யும் அனைவரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும். அப்பொழுதுதான் ஜாதி பெயரில் நடைபெறும் வன்முறை ஒழியும். அதற்கு மக்களாகிய நாம் ஒருங்கிணைத்து அரசாங்கத்திற்கு ஒத்துழைக்கவேண்டும்.
05-மே-2013 16:58:43 IST
அரசாங்க வேலையில் சேர்ந்தவுடன் முதலில் தெரிந்து கொள்வது தினமும் எப்படி பணம் சம்பாரிப்பது என்பதுதான். வேலை பழகிக்கொள்வதில்லை. பணம் சம்பாரிக்க எப்படி வீம்பு செய்வது என்பதை முதலில் அறிந்து கொள்கிறார்கள். பின்பு எப்படி விதி மீறலை தடுப்பது? இதுதான் இன்றைய நிலை.
27-ஏப்-2013 08:30:22 IST
இவர் ஆட்சி காலத்தில் இவர் மகன் ஸ்டாலின் அவர்கள் ஊர் ஊராக சென்று அரசு ஊழியர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார். ஒரு அலுவலகத்தில் மேலாளர் செய்யவேண்டிய வேலை அது. மிகப்பெரிய சாதனை அது. இவர் மானாட மயிலாட, தங்கதலைவன் பாராட்டு, நடிகர்கள் பாராட்டு, கவிகள் பாராட்டு, போன்ற இன்னும் பல பாராட்டு விழாக்களில் கலந்து கொண்டு ஒய்வு இல்லாமல் மக்களுக்கு சேவை ஆற்றினார். இவர் ஆட்சியில் பாலும் தேனும் ஆறாக ஓடியது. மக்கள் நிம்மதியாக இருந்தனர். இவருடைய அடிவருடிகள் தமிழ் நாட்டையே விலை பேசி விட்டார்கள். நிலமை இவ்வாறு இருக்க இவர் JJ அவர்களை குறை சொல்கிறார். எந்த விதியில் சொன்னால் என்ன? அவர் நிறைவான பலத்துடன் ஆட்சி புரிகிறார். 5 ஆண்டுகள் முடியட்டும். பின்பு குறை சொல்லுங்கள். அதை விடுத்தது சட்டசபை செல்லாமல் வெளியில் இருந்து 110 விதி என்றும் தினம் ஒரு அறிக்கை தேவை இல்லை. உங்கள் ஆட்சியை விட நன்குதான் செல்கிறது.
12-ஏப்-2013 07:37:44 IST
கண்டு பிடித்து விட்டார் பெரிய ஊழலை. வாழ்க இவர் தொண்டு. வேறு வேலை இல்லை. நாம் எல்லாம் மறந்து விட்டோம் என்று எண்ணுகிறார். இவர்கள் செய்த ஊழல்கள், மிரட்டல்கள், கட்டபஞ்சயத்துக்கள், நில அபகரிப்புக்கள், 2 G , சேது சமுத்திரம், உரம், தேசிய நெடுஞ்சாலை போன்ற ஊழல்கள், தலைவர் மு. க. செய்த வீராணம் ஊழல், பூச்சி மருந்து ஊழல் மற்றும் விஞ்ஞான ஊழல் எண்ணில் அடங்கா. 5 வருடங்கள் துணை முதல்வர் பதவி முடிந்துவிட்டது. அடுத்தவரை 5 வருடங்கள் ஆழ விடுங்கள். பின் நிறை குறை பார்த்து மக்களாகிய நாம் முடிவு செய்வோம்.
28-மார்-2013 18:50:31 IST
படிக்கவேண்டிய வயது படிக்கவேண்டும். இந்தி எதிர்ப்பு என்று எங்களுடைய வாழ்வு DMK யால் பாழ் பட்டது. இன்று நினைத்தாலும் மனம் ஒரு நிலைப்படவில்லை. மாணவர்கள் போராடக்கூடாது. நன்கு படிக்கவேண்டும்.
15-மார்-2013 17:28:28 IST
தமிழ் நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. dmk அதை எல்லாம் மறைத்து நாடகம் ஆடுகிறார்கள். மத்தியில் நல்ல பதவிகளில் செல்வாக்குடன் உள்ளார்கள். தமிழ் நாட்டு மக்களுக்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. ஒரு வேலை நன்கு செய்கிறார்கள். அது JJ வை குறை சொல்வது. அவர் செய்யவில்லை என்றால் நீங்கள் மக்களுக்கு நன்மை செய்யுங்கள். மக்கள் மறக்கமாட்டார்கள். இவர்கள் செய்யும் டெசோ பந்தை இலங்கை தமிழர்கள் விரும்புகிறார்களா? அதாவது இங்கு குறிப்பிடப்படும் இலங்கை தமிழர்கள் யாழ் தமிழர்கள். இலங்கையில் உள்ள மற்ற தமிழர்கள் அங்கு போராட்டம் எதுவும் செய்யவில்லையே? ஏன்? அங்கே தமிழர்கள் பல பிரிவுகளாக உள்ளனர். அப்படி உள்ளபோது இவர்கள் செய்யும் பந்த் ஓட்டுக்காக மட்டும்தான்.
12-மார்-2013 21:01:07 IST
நம் கருணா (திமுக தலைவர்) அவர்கள் இது போன்ற பந்த் தமிழ் நாட்டில் செய்யாமல் வருபவர்களை அழைத்துக்கொண்டு இலங்கை சென்று தமிழர் பகுதிகளில் போராட்டங்கள் நடத்தலாம். அங்குள்ள மக்கள் பாராட்டுவார்கள். இங்குள்ள தொப்புள்கொடி உறவுகள் பாராட்டும். அதை விடுத்தது தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களை படாத பாடு படுத்துகிறார். கனி, பாலு, திருமா போன்றவர்களையும் கூட்டிக்கொண்டு செல்ல வேண்டும் இலங்கைக்கு. ஏனென்றால் அவர்களை இலங்கை ஜனாதிபதி ராஜ பட்செக்கு இவர்களை நன்கு தெரியும். எனவே கலைஞர் அவர்கள் இந்த முயற்சி எடுத்து இலங்கை தமிழர்களுக்கு பாடு படலாம்.
12-மார்-2013 18:49:19 IST
இலவசங்கள் அனைத்தையும் நிறுத்தவேண்டும். அரசாங்கம் வரி கட்டுபவர்களை மேலும் தொந்தரவு செய்வதை விட்டு, புதிதாக வரி கட்டாதவர்களை கட்ட செய்யவேண்டும். பெரிய கல்விக்கூடங்கள் வைத்து இருப்பவர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், வக்கீல்கள், டாக்டர்கள், தனியார் மருத்துவமனைகள் போன்றவர்களிடம் சரியான வரி வசூல் செய்யவேண்டும். அதுபோல் அரசாங்கம் எந்த தொழிலும் செய்யக்கூடாது. உதாரணமாக போக்குவரத்து கழகங்கள். இன்னும் பலவிதங்களில் செய்யலாம்.
08-மார்-2013 10:50:31 IST