Sithu Muruganandam : கருத்துக்கள் ( 167 )
Sithu Muruganandam
Advertisement
Advertisement
ஜூலை
4
2018
சம்பவம் சொர்க்கத்தை அடைவதற்காக 11 பேரும் தற்கொலை சிசிடிவி.,யால் அம்பலம்
சொர்க்கம் என்பது ஆன்மிக மதக் கருத்துக்களே. மதவெறி ஒழியும் வரை இதற்கெல்லாம் மருந்தே இல்லை.   05:27:35 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
25
2018
சம்பவம் மேஜர் மனைவியை கொன்றது ஏன்? ராணுவ அதிகாரி திடுக் வாக்குமூலம்
இரண்டு புருஷன்கள் வைத்துக் கொண்டால் இந்த மாதிரி பிரச்சனைகளை சந்தித்துத்தான் ஆக வேண்டும்.   06:42:12 IST
Rate this:
2 members
0 members
29 members
Share this Comment

ஜூன்
5
2018
எக்ஸ்குளுசிவ் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு வளைவு உச்ச நீதிமன்ற தடையால் சிக்கல்
இந்த எம்.ஜி.ஆர் நுாற்றாண்டு விழா நினைவு வளைவு இல்லாவிட்டால் தமிழகத்தில் மழை பெய்யாதா? யார் சம்பாதிக்க இந்த வளைவு?   03:03:50 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

மே
25
2018
பொது புற்றுநோயிலிருந்து உயிர் மீட்டிய புனித பசு
மாடு, பசு மாடாக இருந்தாலும் அல்லது எருமை மாடாக இருந்தாலும் அது ஒரு விலங்கு. பஞ்சகாவ்யம் குடித்ததால் எனக்கு புற்று நோய் குணமானது என்று ஒரு பொருளாதார மேதை சொல்வதை ஏற்பதைவிட இதை ஒரு மருத்துவ மேதை சொன்னால் அதை ஏற்கலாம்.   03:16:16 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
14
2018
உலகம் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்
கருந்துளைகள் பற்றிய இவரது ஆராய்ச்சி எல்லா விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கும் ஒரு வழிகாட்டி. விஞ்ஞான உலகிற்கு இது ஒரு மிகப்பெரிய இழப்பு என்பதில் துளிகூட சந்தேகம் இல்லை. மனது கனக்கிறது.   12:13:00 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

மார்ச்
8
2018
பொது சென்னை டூ கோவைக்கு விமானம் ஓட்டி அசத்தல் இது மகளிர் தின  ஸ்பெஷல்
ஆண்கள் செய்யும் அத்தனை வேலையையும் பெண்கள் என்ன ஒரு குரங்குக்கு குட்டி கூட செய்ய முடியும், ஒரே ஒரு விரல் இருந்தால் போதும் கீ போர்டைத்தட்டுவதற்கு. சிவில் சப்ளை கிடங்கில் பாரம் தூக்கும் தொழிலாளி எழுபத்து ஐந்து கிலோ மூடையை அனாயாசமாகத் தூக்கி போடுகிறானே, பெண்ணைத்தூக்கச்சொல்ப்பார்க்கலாம். பெண்ணுடன் ஆணை ஒப்பிடாதீர்கள். பெண் பெண்தான் ஆண் ஆண்தான். இயந்திரங்கள் வந்த பிறகு யார் வேண்டுமானாலும் எவ்வளவு பெரிய வேலையையும் செய்ய முடியும். இதில் வலிமை என்ன வேண்டிக்கிடக்கிறது?   14:32:14 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
19
2018
பொது பெண்ணின் வளர்ச்சி... ஆணுக்கு அலர்ஜி! பிடி பிடியென பிடிக்கிறார் கவிஞர் பிரியா
ஆமாம் பெரிய எழுத்தாளராகி கமலா தாஸ் மாதிரி ஆகிவிடலாம்.   14:09:30 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
21
2018
அரசியல் தொட்டு பாருங்கள் சுட்டுவிடும் கமல்
ஊழல் அற்ற ஆட்சியைக் கொடுப்போம் என்கிறார். இவரிடம் கோடி கோடியாய் பணம் இருக்கிறது. ஆனால் அதிலிருந்து ஒரு ரூபாய் கூட இவர் செலவுசெய்ய மாட்டார். மற்றவர்கள்தான் செலவு செய்ய வேண்டும்.கட்சியை நடத்த ஏராளமாக பணம் வேண்டும். ஆயிரக்கணக்கான பொறுப்பாளர்கள் வேண்டும். அவர்களெல்லாம் இவரைப்போல் கோடீஸ்வரர்கள் இல்லை. ஆசை உள்ள சாதாரண மனிதர்களே. அவர்கள் எப்படி பணம் சேர்க்கும் விருப்பம் இல்லாதவர்களாக இருக்க முடியும்? இது என்ன கம்யூனிஸ்ட்டு கட்சியா? ஊழல் என்பது புற்று நோய் போன்றது. எங்கிருந்து ஆரம்பமாகிறது என்றே தெரியாது. ஆனால் கடைசியில் மரணத்தில் முடியும்.அண்ணா நேர்மையான மனிதர். கட்சி ஊழலுக்கு எதிராகத்தான் ஆரம்பிக்கப் பட்டது. ஆனால் இன்று? சொல்வது எளிது, மிக எளிது.இவர் மற்றவர்களைக் கட்டுப்படுத்தும் திறனற்றவர். அரசியல் நிர்வாகத் திறனும் இல்லை.சொந்த வாழ்க்கையே சான்று. இவருக்கு கட்டுப்பட்டு யாரும் இவரிடம் இருந்ததில்லை.இவரை வைத்து மற்றவர்கள் கோடிக்கணக்கில் சேர்த்துக் கொள்வார்கள். தாக்குப்பிடிக்க முடியாது.இது சினிமாஅல்ல.கூட இருக்கிறவர்கள் ஊழல் செய்வதைக் கண்டும் காணாமல் இருந்தால்தான் அரசியல் செய்ய முடியும். அவர்கள் செய்ததைச் சரி என்று ஆதரிக்கவும் வேண்டும். இவரால் ஒருபோதும் முடியாது. இவரைப்போன்றவர்கள் அரசியலுக்குத் தகுதியானவர்கள் இல்லை. பல லட்சம் செலவு செய்த இந்த மேடை யார் போட்டுக் கொடுத்தார்கள் என்ற கேள்விக்கு இவரிடம் பதில் இருக்குமா? இவருக்காக ஒரு கோடி செலவு செய்கிறவர் அதை பல கோடியாய் எடுக்கவே பார்ப்பார். யதார்த்தம் இதுதான்.   06:11:23 IST
Rate this:
1 members
1 members
12 members
Share this Comment

பிப்ரவரி
17
2018
அரசியல் பிரதமர் சொன்னதால் அணிகள் இணைப்புக்கு சம்மதித்தேன்! பன்னீர் பேச்சால் அ.தி.மு.க.,வில் அதிர்வலை
மக்களிடம் செல்வாக்குப் பெற எவ்வளவோ செய்தும் முடியவில்லை. தினகரன் மேலும் மேலும் வளர்வதும் பிடிக்கவில்லை என்னசெய்வது? கடைசி ஆயுதமாக அனுதாபம் பெறப்பார்க்கிறார்.   06:25:10 IST
Rate this:
3 members
0 members
16 members
Share this Comment

பிப்ரவரி
17
2018
பொது அலகாபாத் கும்பமேளாவுக்கு நிதி ஒதுக்கீடு...ரூ.1,500 கோடி ! உ.பி.,யில் ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்த திட்டம்
இப்படியெல்லாம் மக்களின் வரிப்பணத்தை ஆன்மிகம், கோயில்,புனித யாத்திரை என்று மக்களுக்கு ஒரு பயனும் இல்லாத திட்டங்களுக்கு வாரி இறைப்பது நாட்டை பின்னோக்கியே தள்ளும். இவையெல்லாம் மக்களின் தனிப்பட்ட வெறும் நம்பிக்கை சார்ந்த விஷயங்களே.. அவர்களின் சொந்தப்பணத்தில் இவற்றைச் செய்துகொள்ளவேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு திருப்தியும் பயனும் கிடைக்கும் என்று விட்டுவிட வேண்டும். கடையில் இருக்கிற தேங்காயை எடுத்து வழியில் இருக்கிற பிள்ளையாருக்கு உடைத்துவிட்டு தனக்குப் புண்ணியம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பதற்குச் சமம். பக்கத்தில் இருக்கிற சீனா தொழில் நுட்பத்தில் எப்படி முன்னேறி கொண்டிருக்கிறது என்பதைப் பார்த்தாவது அரசு திருந்த வேண்டும். உருப்படியாய் பணத்தைச் செலவுசெய்ய வேண்டும். எப்போதுதான் இவர்களெல்லாம் திருந்த போகிறார்களோ தெரியவில்லை. நாட்டை முன்னேறவே விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டுள்ளது போல் தெரிகிறது.   06:07:24 IST
Rate this:
6 members
0 members
20 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X