E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
P. Kannan : கருத்துக்கள் ( 1496 )
P. Kannan
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
27
2014
பொது அரசின் மாற்று படிப்பு யோசனை ஏற்க மறுப்பு டி.டி., மாணவர்களுடன் நடந்த பேச்சு தோல்வி
இதில் நியாயமான விதத்தில் அரசு செயல் பட நினைத்தால் அவர்களுக்கு மற்று கல்வி அளிப்பதோடு அரசின் பொறுப்பு முடிந்து விடுவது இல்லை. அவர்கள் அந்த மருத்துவபடிப்புக்காக கட்டிய பணத்தை அவர்களுக்கு திரும்ப பெற்று கொடுக்க வேண்டும். செய்யுமா அரசு.   09:09:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2014
அரசியல் களையிழந்த விஜயகாந்த் பிறந்த நாள் விழா 100 பேருக்கு நிதியுதவி மட்டன் பிரியாணி
செய்யாத தொழிலை செய்தவனும் கெட்டான், செய்த தொழிலை விட்டவனும் கெட்டான் என்றொரு பழமொழி உண்டு. புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டதாம் இப்படியும் ஒரு பழமொழி உண்டு.   09:10:35 IST
Rate this:
3 members
0 members
22 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2014
அரசியல் அடுத்த மாதத்தில் கருணாநிதி அழகிரி சந்திப்பு கே.பி.ராமலிங்கம் நடத்திய பேச்சில் உடன்பாடு
நீதி காக்கப்படவேண்டும், நீதி வழங்கவேண்டும் அப்பொழுதுதான் சமதர்மம் நிலைக்கும்.   09:05:59 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2014
அரசியல் கேரளாவில் மதுபான கடைகளுக்கு பூட்டு 5 சதவீத கூடுதல் வரி விதித்து முதல்வர் உத்தரவு
கேரளா விஷயத்தில் நாம கவனிக்க வேண்டியது என்னென்னா கள்ளுக்கடைய முழுமையாக ஆதரித்துள்ளது, அந்த தொழிலுக்கு பாதுகாப்பு வழங்க முடிவெடுத்துள்ளது, அந்த தொழில் செய்பவர்களுக்கும் பாதுகாப்பு வழங்குவது. எப்படி, ஆக குடிக்கிறவன் குடித்துக்கொண்டுதான் இருப்பான். அது கள்ளா இருந்தா என்ன சாராயமா இருந்தா என்ன ? வெளிநாட்டு மது வா இருந்தா என்ன? கள் குடித்தாலும் இதே கதிதான். குடும்பத்தை குடிகாரன் காப்பாற்ற மாட்டான். இதுல அரசாங்கம் என்னய்யா செய்யும். கள்ள சாராயத்த குடித்து சாகாதிங்கடான்னு வெளிநாட்டு சரக்க குடுக்கிறான். தப்பா. ஆனா ஒன்னு நம்மாலே செய்ய முடியும். இந்த அரசாங்கத்தையே நாம அலற வைக்கலாம். எப்படின்னு நீங்க கேட்கிறது நல்லாவே தெரியுது. பேசாம குடிக்கிறத இன்னையில் இருந்து விட்டுடலாம். அப்படி முடியாதுன்னு சொல்லுகிறவர்கள். இன்னொரு பாட்டிலை வாங்கிவந்து பொண்டாட்டிக்கும் கொடுத்து குடிக்க வை. குடிக்கிறான் என்ற பிரச்சினையே வராது. பொம்பள குடிக்க ஆரம்பிச்சா மாப்பிள நீ குடிக்கிறத உடனே விட்டுருவே. இது ஒரு விஷயமுன்னு காலங்காத்தால உட்கார்ந்து கமெண்ட் எழுதிக்கொண்டு இருக்கிறோம். இந்த நாட்டில் குடிக்காதவன் எல்லாம் செத்தா போயிட்டான். உன் பக்கத்து வீட்டில் பாரு எத்துனை பேர் குடிக்காம இருக்கிறான் என்று. அவனை பார்த்து திருந்து. விஷயத்தை உன்னில் இருந்து ஆரம்பி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.   05:43:45 IST
Rate this:
7 members
1 members
49 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2014
அரசியல் பா.ஜ., முதல்வர் வேட்பாளர் நடிகர் ரஜினி?அமித் ஷா பேச்சுக்கு பின் பரபரப்பு
என்னய்யா கமெண்ட் இது, ரஜினி வரும் தேர்தலில் ஜெயாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்தால்தான் கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புண்டு என்பதை கூட கணக்கிடமுடியவில்லையா?????   05:57:43 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2014
அரசியல் கருணாநிதிக்கு அழகிரி விதித்த 5 நிபந்தனைகள் திசை மாறியதா சமாதான படலம்?
ஸ்டாலின் செயல் வீரர் அல்ல, அதிகமாக சொதப்புவார். அழகிரி கிட்ட பதவியை கொடுத்து பாருங்கள், குறிப்பாக கட்சி பதவியை, கட்சி எவ்வளவு சுருசுருப்பாகுதுன்னு பின்ன தெரிஞ்சுக்குவீங்க. வளவள கொல கொல எல்லாம் அழகிரியிடம் கிடையாது. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று தான் நடவடிக்கை இருக்கும். ரொம்போ சார்ப். ஸ்டாலின் தம்பி தானே, தம்பியாவே இருந்துட்டு போகட்டுமே. அண்ணனா எப்படி ஆகமுடியும். நாளைக்கு நம்ம குடும்பத்திலேயும் அப்படித்தானே நடக்கும் என்று கட்சிக்காரன் நினைக்க மாட்டானா.   05:50:31 IST
Rate this:
10 members
0 members
23 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2014
அரசியல் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கேரள அரசு முடிவு முதல்வர் சாண்டி அறிவிப்பு
கேரளா காரங்கலாவது குடிக்கிறதை விடுதறாவது. அரசியல் தான் இது. முல்லை பெரியார் விஷயம் ஊத்திக்கிச்சு. அதுனால அடுத்த விஷயத்த கையில் எடுத்து விட்டார்கள். இல்லையென்றால் மக்கள் மறந்து விடுவார்கள் அல்லவா? சரி அப்படியே கேரளா அரசு மதுவிலக்கை அமல் படுத்தினால் நம்ம மக்களுக்கு நல்லது தானே. மழையும் பெய்ய மாட்டேன்கிறது, விவசாயமும் போச்சு. இங்கே சரக்கு கிடைக்காத போது ஒரு நடை நடந்து போய் குவாட்டர வாங்கியாந்து இங்கே வித்து காசு பாத்தோமில்ல. அதே போல இனி இங்கிருந்து அங்கு குவாடரை கடத்துவோம். மக்களுக்கு ஒரு வேலை வாய்ப்பை கேரளா அரசு ஏற்படுத்தி தருகிறது. அதை ஏன் வேண்டாம் என்று சொல்ல வேண்டும். கேரளா அரசு வாழ்க.   05:35:44 IST
Rate this:
25 members
1 members
14 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2014
அரசியல் பா.ஜ., முதல்வர் வேட்பாளர் நடிகர் ரஜினி?அமித் ஷா பேச்சுக்கு பின் பரபரப்பு
கலைங்கருக்கு வாய்ப்பு மறுபடியும் உதிக்கும் போல் தெரிகிறது, ஜெயா ஓட்டை பிரிக்க இப்பொழுதே ஒரு நடிகர் தயாராகி விட்டார். இன்னும் ஒரு பத்து பதினைந்து ஆண்டுகள் ரஜினியை வைத்து அரசியல் செய்யலாம். ஒரு வேளை ஜெயாவிற்கு சாதகமான தீர்ப்பு பெங்களூரில் இருந்து வரவில்லை என்றால் தன் அரசியல் அனுபவத்தின் முழுபலத்தையும் காட்டி ஒரே அடியாக அடுத்த முதல்வராகி விடுவார் கருணாநிதி. வழக்கில் ஜெயா தோற்றால் அதை வைத்தே ரஜினி பிரச்சாரத்தை ஆரம்பிப்பார், அதை தவிர வேறு வழி ரஜினிக்கு இல்லை. ரஜினியின் சொல் நன்றாக மக்கள் மத்தியில் எடுபடும். அது ஜெயா வின் வெற்றி பெறும் ஓட்டை பிரிக்கும். அதை கருணாநிதியை விட ரஜினியால் நன்றாக செய்ய இயலும். ஆனால் திமுகவிடம் உள்ள உள்கட்டமைப்பு பிஜேபியிடம் இல்லை. இது போல் சந்தர்ப்பத்தை கருணாநிதியும், திமுக தொண்டர்களும் எக்காரணத்தை கொண்டும் தவற விட மாட்டார்கள். மக்களின் அறியாமையை ஓட்டுக்களாக மாற்றி வெற்றியை எப்படி கைபற்ற வேண்டும் என்பது கருணாநிதிக்கு நன்றாகவே தெரியும். கிரௌண்ட் வொர்க்கில் நல்ல அனுபவம் வாய்ந்த கட்சி இப்பொழுது உள்ளதில் திமுக மட்டுமே. அவர்கள் துவண்டு போய் கிடக்கிறார்கள் உட்கட்சி பூசலால். இந்த வாய்ப்பு பழம் நழுவி பாலில் வீழ்ந்தது போல். இந்த செய்தி கருணாநிதியை பொறுத்த வரை ஒரு இனிப்பு செய்தி. திமுக வின் உயிர் காக்கும் செய்தி. அதே போல் அதிமுகாவில் இதுபோல் ஒரு நிலை வந்து விடும் என்று தெரிந்தாலும், தைரியமாக உள்ளடி வேலை பார்த்து காசு சம்பாரித்து அதிமுகவை தோற்க வைக்க தயங்க மாட்டார்கள். ரஜினி எப்படி தமிழகத்தில் அரசியல் செய்கிறார் என்று பார்ப்போம். இந்தியாவே மதசார்பற்ற நாடாகி விட்ட போது, தமிழகம் ஏன் மொழி சார்பற்ற மாநிலமாக மாற்றி நாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கக்கூடாது ????   07:32:53 IST
Rate this:
177 members
3 members
25 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2014
பொது தேசிய நெடுஞ்சாலைகளில் அம்மா உணவகம்?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
இதை எல்லாம் அரசு செய்தாலும், மற்றவர்கள் காசு பார்ப்பதிலேயே இருப்பார்கள். ஆகவே இவையெல்லாம் தோல்வியிலேயே முடியும். சாதாரணமான முறையில் இந்த உணவு பிரச்சினையை சரிசெய்யலாம். சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு செல்வது தான் அதிக தூரம். அதிகமாக இரண்டு வேலை சாப்பாடு புளியோதரையோ, எலுமிச்சை சாதமோ, சப்பாத்தியோ கொண்டு செல்லலாம், கூட பழங்கள்,பிஸ்கட். உணவை வீட்டு அருகில் உள்ள தரமான ஹோட்டலில் வாங்கிச் செல்லலாம். ஒரு பிளாஸ்கில் காபி, டீ, பால் கொண்டு செல்லலாம். நமக்கு தேவையான போது சாப்பிடலாம்.   08:38:12 IST
Rate this:
4 members
1 members
72 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2014
அரசியல் காங்கிரசின் தோல்விக்கு காரணம் என்ன?அந்தோணி குழு அறிக்கையால் சலசலப்பு
நால்வர் குழு எதற்கு நானே பதில் சொல்கிறேன், மன்மோகன் சிங் கை பொம்மையாகியது, சோனியாவும், ராகுலும் ஆட்சியில் ஆட்டம் போட்டது. மத்தியில் காங்கிரஸ் கட்சியின் பதவியில் உள்ளவர்களுக்கு மாநில கட்சியை பற்றியும் மாநிலத்தை பற்றியும் நேரடியாக ஒன்றுமே தெரியாதது. கேரளா கிறிஸ்தவர்களை ஆட்சியிலும், கட்சியிலும் அதிகமாக சோனியா அமர்த்திக் கொண்டு அவர்களின் ஆலோசனைப்படியே எல்லா காரியங்களையும் நிறைவேற்றியது. சோனியா வின் சொந்த விருப்பு வெறுப்பிற்காக ஒரு மாநில மக்களையே பழிவாங்கியது. சோனியா தன மகனை பிரதமராக்குவதற்கே மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை நடத்த முயற்சித்தது. இது நாட்டு மக்களுக்கு அப்பட்டமாக புரிந்தது. மேலும் ராகுலின் கோமாளித்தனமான நடவடிக்கை பிரதமரை நேரடியாக இழிவுபடுத்துவது போன்று மக்களுக்கு புரிந்தது. இவை எல்லாம் காரணங்கள் அடுக்கிகொண்டே போகலாம்.   08:24:16 IST
Rate this:
3 members
0 members
35 members
Share this Comment