பிய்த்து உதறி விட்டிர்கள் பதுருதீன் அவர்களே... உங்கள் பல வருட அனுபவத்தை ஒரு நிமிடத்தில் எங்களுக்கு புரியும் வகையில் விளக்கி விட்டிர்கள்... மிக்க நன்றி...
16-மே-2013 11:53:11 IST
நாமக்கல் பள்ளிகளை பற்றி குறை சொல்லும் பலர், அங்குள்ள முன்னணி பள்ளிகளில் திறமையான ஏழை மாணவர்களுக்கு அவர்கள் கொடுக்கும் தரம் வாய்ந்த இலவச கல்வி குறித்து பாராட்ட மறந்து விடுகின்றனர்.
11-மே-2013 12:17:49 IST
கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக என்னை போன்று பலரின் பெரு முயற்சியால் போராடி பெற்ற இந்த ரயில் தற்போது நிஜமாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மே 3 ஆம் தேதி பன்வேல் ரயில் நிலையத்தில் இந்த ரயிலை வரவேற்க ஆவலாக உள்ளோம்.
01-மே-2013 15:12:50 IST
சி ஆர் பி எப் வீரர்களுக்கு பதிலாக சி ஐ எஸ் எப் வீரர்களை பாதுகாப்புக்கு நியமிக்கலாம்.... ஏற்கனவே சி ஐ எஸ் எப் வீரர்கள் பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்கள், விமான நிலையங்கள் மற்றும் முக்கிய பகுதிகளை பாதுகாத்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த வேலை மிகவும் பொருந்திவரும் ஒன்று..
29-ஏப்-2013 12:25:25 IST
ராஜகோபால் அவர்கள் என்ன சொல்ல வருகிறார் என்பதே கடைசி வரைக்கும் புரியவில்லை... "ஈ.வெ.ரா., பிறக்கவில்லை என்றால், தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது' என்பது, அவரது கண்டுபிடிப்பு என்று வைத்து கொண்டால், "கிறிஸ்துவ அமைப்புகள் வரவில்லை என்றால், தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது என்பது உங்கள் கண்டுபிடிப்பு ", அப்படித்தானே? அவர் பேசியதற்கும் கிறிஸ்துவ அமைப்புகளுக்கும் எப்படித்தான் தொடர்புபடுத்தி பேச ஆரம்பிக்கிறிர்களோ? உங்களுக்காக ஒரு தகவல், ஈ. வே. ரா. அவர்கள் ஈரோட்டில், சிக்கையா நாயக்கர் கல்லூரி கட்டுவதற்கு பெரும்பங்கு வகித்துள்ளார். அது தவிர, எத்தனை பள்ளிக்கூடங்கள் கட்டினார் என்பதை விசாரித்துவிட்டு கருத்து எழுதவும்.
28-ஏப்-2013 11:11:36 IST
மும்பையில் ஒவ்வொரு உணவகத்திலும், ஒவ்வொரு கடையிலும் ஒரு தீ தடுப்பான் கருவி கட்டாயம் வெளியில் தெரியுமாறு வைக்கப்பட்டு இருக்கும். இது முதற்கட்டமாக தீயை அணைப்பதற்கு பெரிதும் உதவுகிறது . நமது ஊரில் இது போன்று பார்த்தது கிடையாது.
27-ஏப்-2013 14:22:43 IST
மாவட்டம் முழுவதிலும், மூலை முடுக்குகளில் உள்ள குக்கிராமங்கள் மற்றும் சிறிய ஊர்களில் வசிக்கும் மக்களுக்கு, மிக சிறந்த மருத்துவ சேவை பெற மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வந்தே ஆக வேண்டும். அவர்கள் பயணம் செய்ய அதிகபட்சம் இரண்டு மணி நேரம் கூட ஆகலாம், ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு பேருந்துகள் மட்டுமே வந்து செல்லும் நிலையும் உண்டு. இந்த நிலையில், கை செலவுக்கு கூட கடன் வாங்கிதான் பெரும்பாலானோர் வருகின்றனர். எனவே, அரசு எந்த தாமதமும் இன்றி, அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் மலிவு விலை உணவகத்தை திறக்க வேண்டும் என்று மக்கள் சார்பாக தினமலர் வாசகர்களாகிய நாங்களும் கோரிக்கை வைக்கிறோம்.
25-ஏப்-2013 13:23:09 IST
மும்பையில் இருப்பதால் வீட்டிற்கு நினைத்த நேரத்திற்கு எந்த தடையும் இல்லாமல் வந்து செல்லலாம். ஐரோப்பாவில் படிக்கும் என் நண்பன் வீட்டிற்கு ஒரே வாரிசு. அவனது தந்தை எதிர்பாராமல் இறந்து விட, இந்தியா திரும்பி வர அவனுக்கு உடனே அனுமதி கிடைக்கவில்லை. மூன்று நாள் கழித்துதான் வர முடிந்தது. அதுவரை குளிர்சாதன பெட்டியில் அவனது தந்தையின் உடலை வைத்து பார்க்கும் அவல நிலைதான் மிச்சம். இது அவனது இயலாமை நிலை. செல்வமும் கிடையாது. இந்த வாசகிக்கோ, செல்வ செழிப்பான நிலையிலும், பேராசை விட்டபாடில்லை. எதுவும் ஒரு அளவுக்கு மேல் தேவைப்படாது. இங்கு மும்பை வந்த பிறகும் கூட, வெளிநாடுகளில் சில மாதங்கள் பணி நிமித்தம் செல்லலாமே? அதை விடுத்து, ஆணாதிக்கம் அல்லது வேறு சில காரணங்களை சொல்லிக்கொண்டு பிரச்சினையை திசை திருப்புவதை ஏற்றுகொள்ள முடியாது. Their negative mentality is stopping them to arrive at a right solution to this issue. சென்னையை சேர்ந்த இவருக்கு அமெரிக்க கலாசாரத்தை கற்றுகொள்ளும் ஆர்வம் இருப்பதாக சொல்வது சுத்த பொய், மும்பையிலும் அதே தொடர்பில்லாத கலாசாரம் காத்துகொண்டு இருக்கிறது. எல்லாம், நான், என் முடிவு என்று பிடிவாதம் பிடிப்பது மட்டுமே பிரச்சினை. ஏதோ சிறு வயதில் ஆசைப்பட்டது கிடைக்கவில்லையாம்? யாருக்கு எல்லாமும் கிடைக்கிறது? எத்தனையோ பேருக்கு ஐஸ்வர்யா ராயை மனம் செய்து கொள்ள ஆசைதான், அது எப்படி நடைமுறைக்கு ஒத்து வராது என்று கேலி செய்கிறோமோ, கிட்டத்தட்ட இதுவும் அந்த அளவிற்கான பேராசைதான். எட்டிவிடும் தூரம் மட்டுமே வித்தியாசம். சொந்த நாட்டில் வாழும் வாய்ப்பை சப்பை கட்டு கட்டி எட்டி உதைக்கும் வாசகியின் நிலை பரிதாபத்திற்கு உரியது.
14-ஏப்-2013 14:00:27 IST