sellamuthu kandasamy : கருத்துக்கள் ( 1 )
sellamuthu kandasamy
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
6
2016
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
புது விதிகள் ஒன்றுமில்லை. பல தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக ஒரே பள்ளியில் இருக்கின்றனர்.பாவம் நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள். அவர்களுக்கு விடிவு காலம் பிறக்கவில்லை. அவர்களுக்கு முதுநிலை ஆசிரியராக தகுதியில்லை. இதைப்பற்றி கல்விச்செயலரோ கல்வி இயக்குநர்களோ ஆசிரிய கூட்டமைப்புகளோ சிந்திக்கவில்லை.பள்ளிக்கல்வியில்50%உம் நடுநிலைப்பள்ளியிலிருந்து 50% பட்டதாரி ஆசிரியர்களுக்கு சீனியரிட்டி படி முதுநிலை ஆசிரியர்கள் பணிக்கு பரிந்துரைக்கலாம். அது மட்டுமல்லாது பள்ளிக்கல்வி ,நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கும் வேறுபாடில்லாமல் ஒரே பொதுமாறுதல் நடத்தலாம். நடுநிலைப்பள்ளியில் ஒன்றியத்திற்குள்,ஒன்றியம் விட்டு ஒன்றியம்,பின் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் என்ற நிலையை மாற்றி முதலில் மாவட்டம் பின் ஒன்றியம் விட்டு ஒன்றியம் பின் ஒன்றியத்திற்குள் பின் பதவிஉயர்வு என்றிருந்தால் பள்ளியில் கலிப்பாணியிடம் இருக்காது ,இப்போது இருப்பதுபோல் நடுநிலைப்பள்ளி மாறுதல் நடந்தால் மாவட்ட மறுதலுக்குப்பின் சென்றவரின் இடம் காலியாக இருக்கும் விதிமுறைப்படி மாவட்ட மAறுதலுக்குப்பின் மாறுதல் நடத்த கூடாது ,இல்லையேல் தவறு செய்தால் தான் (ஊழல்) இடம் நிரப்பு இயலும் ,இதைபோல் இடைநிலை ஆசிரியர்களுக்கும் நடத்தலாம் இதுபோல் செய்தால் ஆசிரியர்களும் திருப்தி அடைவர் கல்வித்துறையும் அவப்பெயரிலிருந்து விடுபடலாம் கல்வியும் வளரும் ,நான் U G C N E T தேர்வில் தேர்வான நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ,கல்வி இயக்குநர்களோ , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களோ U G C N E T தேர்வில் வெற்றிபெற்றவர்களா என்பது தெரியாது ஆனால் அரசு கல்விச்செயலர் இயக்குனர்கள் முதன்மை கல்வி அதிகாரிகள் ஏன் கல்வி அமைச்சரும் ,தமிழக முதல்வரும் கூட ஆசிரியர்களின் நலனுக்ககாகவும் ,நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக நல்ல திட்டங்களை செயல்படுத்தலாம்.ஆசிரியர்கள் நீண்ட தூர பயணமின்றி கற்பித்தால் நன்றாக கற்பிக்க இயலும்,ஓரிரு ஆண்டுகளில் ஓய்வு பெரும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை கொடுத்து சொந்த மாவட்டத்தில் பணிபுரிய வாய்ப்பளிக்கலாம் . கல்வி வளர்ச்சிக்காகவும் மாணவர்களின் நலனுக்காகவும் பலமுறை முதல்வருக்கும் ,பாரத பிரதமருக்கும், மனிதவளமேம்பாட்டு அமைச்சருக்கும் எழுதி வெற்றிகண்டிருக்கிறான் ,இது ஆசிரியர்களின் நலன் ,நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு நன் எடுக்கும் முயற்சியே தவிர யார் மனதும் புண்பட எழுதவில்லை என்பதை அரசும், அதிகாரிகளும் உணர வேண்டும் என பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன் .   06:38:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X