Advertisement
தினமலர் முதல் பக்கம் » Michael அவரது கருத்துக்கள்
Michael : கருத்துக்கள் ( 75 )
Michael
Advertisement
மே
15
2013
சம்பவம் தி.மு.க.,வில் தொடர்கிறது "வாக்கிங் கொலை
இது ஒன்றும் நகைப்புக்குரிய செய்தி அல்ல தலைப்பை இப்படி கொடுக்க. உண்மையில் சமூகம் வெகுண்டெழ வேண்டிய மிகமிக முக்கிய பிரச்சனை இது. எத்தனை உயிர்கள் இதுபோன்று பறிக்கப் பட்டிருக்கின்றன. ஆளுகின்ற அரசு உண்மையில் வெட்கித் தலை குனிய வேண்டிய கையாலாகாத்தனம் இதுபோன்ற கொலைகள் தொடர்வது. என்ன பாதுகாப்பு மக்களுக்கு இருக்கிறது?? எவ்வளவு கொடூரமான கொலைகள்?? எவ்வளவு எண்ணிக்கையில் நடக்கின்றன?? முதல்வரால் தொலைக்காட்சியில் தோன்றி இதுபோன்ற கொலைகளுக்கு எதிரான உறுதியான இறுதியான எச்சரிக்கை விட முடியாதா??? இதுபோன்ற கூலிப்படைகளை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட முயற்சி செய்யக்கூடாதா??? என்ன அநியாயம் அற்பக் காரியங்களுக்காகக் கூட கூலிப்படைகளை அமர்த்தும் காரியங்கள் இங்கே வெகு இயல்பாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. நமது சகிப்புத்தன்மையின் அளவு அறுத்துவிடும் நூலின் கணத்தில்தான் இப்போது இருக்கிறது. எதிரியை இல்லாமல் செய்வதே நாம் இருப்பதற்கான ஒரே வழி என்ற போதனை அரசியல் தொடங்கி, சமூகத்தின் சாதாரண நிலையில் இருக்கும் ஒரு சாமான்ய மனிதனின் மனத்திலும் ஆழ விதைக்கப்பட்டிருக்கிறது. கொலைகள் மனித நேயமற்றவை என்ற வாழ்க்கை நெறிமுறையோ, கொலைபுரிவோர் மறுவுலகில் நரகத்திலே நெருப்பில் வெந்து சாவர் என்ற மதங்களின் எச்சரிக்கையோ இன்றைய மக்களை கட்டுப்படுத்தவில்லை. ஆளும் அரசுகளின் பக்கசார்பில்லாத, கடுமையான சட்ட நடைமுறைகளே இன்றைய போக்கிரி மக்களை கட்டுப்படுத்த முடியும். இது கண்டிப்பாக எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கும் மிகமிக கொடிய சட்டம் ஒழுங்கு பிரச்சனை. எந்த அளவு கொடூரமாக கொலைகள் நடக்கின்றனவோ அதே அளவிற்கு கொடூரமான தண்டனைகளையும் சமூகம் எதிர்பார்ப்பதில் எந்த மனித உரிமை மீறலும் இருக்க வாய்ப்பில்லை. சட்டம் ஒழுங்கிற்கு எப்போதும் முன்னிரிமை அளிக்கும் தற்போதைய முதல்வர், இந்த பிரச்சனையில் தனிப்பட்ட அக்கறை செலுத்தி குற்றவாளிகளை வேரறுப்பதுடன், சமூகத்தில் இனிமேலும் கூலிப்படை கொலைக் குற்றவாளிகள் உருவாகாத, உருவாக்காத வண்ணம் மக்களுக்கு நற்போதனை செய்யும் வழிகளையும் ஆராய வேண்டும். என்னைப் பொறுத்த அளவில் தமிழகம் சமகாலத்தில் எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் இந்த கூலிப்படையின் கொடூரக் கொலைகளே. எப்பாடுபட்டும் இதன் தலையில் ஆணி அடிக்க வேண்டும்.   16:03:43 IST
Rate this:
55 members
0 members
11 members
Share this Comment

மே
14
2013
அரசியல் மதுரையில் தமிழ் தாய் சிலை அமைக்க.ரூ.100 கோடி! பிரமாண்டமாக நிறுவ தமிழக அரசு திட்டம்
தப்பில்லை, கண்டிப்பாக செய்யலாம். செய்ய வேண்டும். பொருத்தமானதும் கூட. ஒரு சில கோயில்களை விட நம்மிடம் சொல்லிக் கொள்ளும்படியான கட்டுமானங்கள் இல்லை. அதை மாற்ற இது போன்றவை உதவலாம். ஏழைகள் எந்த நாளும் எந்த நாட்டையும் விட்டு அகலப் போவதில்லை. எனவே அவர்கள் இருக்கும் வரை இதுபோன்ற செலவுகளை செய்யக் கூடாது என்ற எண்ணத்தில் மற்றவர்களுக்கான வசதிகளை நிராகரிப்பதில் நியாயம் இல்லை. இந்த நூறு கோடி பணத்தை சில ஆண்டுகளிலேயே சுற்றுலா வருமானம் மூலம் எடுத்து விடலாம். மதுரைக்கு மேலும் ஒரு சுற்றுலாத் தளம் கிடைக்கும். ஆனால் கட்டுமானம் சிறப்பானதாகவும், நூற்றாண்டுகளை கடந்து நிலைக்குமளவிற்கு உறுதியானதாகவும் தரமானதாகவும் இருக்க வேண்டும். அதை சுற்றி அமைய இருக்கும் பூங்காக்கள் சிறப்பாக வடிவமைக்கப் படுவதுடன் பொறுப்புடன் பராமரிக்கவும் பட வேண்டும். தாஜ்மகாலை சுற்றியே சாக்கடையை ஓடவிடும் சனம் நாம். முதல்வரின் ஆசையை நான் ஆதரிக்கிறேன். ஆனால் நம்ம PWD மாதிரி ஆட்களிடம் கொடுத்து குட்டிச்சுவராக்கிவிடாமல் இருந்தால் சரி. தொழில்நுட்பம் எவ்வளவோ முன்னேறி இருக்கிறது. நல்ல வடிவமைப்பாளர்களை வெளிநாட்டில் கூட தேடி சிறப்பானவர்களை கொண்டு அமைக்கப் படுவதை முதல்வர் உறுதி செய்ய வேண்டும்.   16:13:42 IST
Rate this:
75 members
0 members
24 members
Share this Comment

ஏப்ரல்
15
2013
பொது சர்க்கரை நோய் பாதிப்பு தமிழகத்தில் அதிகரிப்பு ஏன்? வேளாண் துறை இயக்குனர் புது விளக்கம்
உண்மை... உண்மை... சிறு தானியங்கள் என்று வகைபடுத்தப்பட்டுள்ள கம்பு சாமை போன்றவற்றை மக்கள் பெருமளவு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசி பயன்பாடு குறைய வேண்டும். அதிக மகசூல் கிடைக்கும் வகையில் வீரிய சிறுதானிய இரகங்களை வேளாண்மைத்துறை உருவாக்க வேண்டும். ஆனால் விளைவிக்க தமிழ்நாட்டில் நிலம் இருக்குமா நீர் இருக்குமா என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறி   13:04:16 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மார்ச்
21
2013
உலகம் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது; திருத்தம் கொண்டு வராததால் தி.மு.க., ஏமாற்றம்
JJ, 1. ஒசாமாவையும் பிரபாகரனையும் ஒப்பிடுவது தவறு. காரணம், தீவிர இஸ்லாத்தை வன்முறை மூலம் தன் சொந்த எல்லை தாண்டி உலகம் முழுவதும் பரப்பும் நோக்கம் கொண்டது முன்னவரின் கொள்கை. இரண்டாமவர் தன் சொந்த மக்களின் வாழ்வுரிமைக்காக தன் எல்லைக்குள்ளேயே போராடியவர், ராஜீவின் கொலை நீங்கலாக. அவரின் கதை முடிந்து விட்டது. இனியும், தன் சொந்த குடிமக்களின் நலன்களை, இனத்தின் அடிப்படையில் பாகுபடுத்திப் புறக்கணிக்கும் இலங்கையை அப்படியே விட்டு விடுவதா?? 2. தடை செய்யப்பட்ட இயக்கங்களை பொதுமக்கள் ஆதரிப்பது தவறில்லை என்று இந்திய உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கி இருக்கும் நிலையில் பிரபாகரனின் உருவப்படத்தை தாங்கிச் சென்ற அந்த மாணவி சட்டப்படி எந்த தவறும் செய்திருக்கவில்லை. 3. "கசாப்பை தூக்கில் போட்டதற்கு இந்தியாவை போர் குற்றவாளி என பாகிஸ்தான் அறிவிக்கும்" என்ற உங்கள் கருத்து தெளிவான மன நிலையில் எழுதப்பட்டதா?? 100க்கும் மேற்பட்ட சாதாரண பொதுமக்களை தன் நாட்டில் கொன்று குவித்த ஒரு அந்நியக் குழுவின் உறுப்பினரை கொல்லாமல் விட்டுவிட்டு இந்தியாவில் சட்ட ஆட்சியைப் பற்றி பேச முடியுமா? அப்படி ஒரு காரியத்தை பாகிஸ்தான் ஆதரிக்கிறது என்பதற்காக அதை புனிதப் போர் என்று எடுத்துக் கொள்ள முடியுமா?? கசாப் அந்தக் காரியத்தை பாகிஸ்தானில் நிகழ்த்தி இருந்தால் பாகிஸ்தானியர் அப்படித்தான் எடுத்துக் கொள்வார்களா?? 4. ஒருவனிடம் பற்று இருக்கிறதா என்பதுதான் அடிப்படையில் கேட்கப்படவேண்டிய கேள்வி. மொழிப்பற்றையும் நாட்டுப்பற்றையும் பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இதுபோன்ற ஒரு கேள்வியை தான் இந்திக்காரர்கள் தான் அடிக்கடி எழுப்பி இந்தியின் நிலையை வலுப்படுத்திக் கொள்கிறார்கள். மற்றவர்களை குறிப்பாக தமிழர்களை பிரிவினைவாதிகளாகக் காட்டி வருகிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. நம் நாட்டுப் பற்று எவரின் பற்றிற்கும் குறைவானது அல்ல. ஆனால் தேசம் என்பது, அனைவரும் சமமாக மதிக்கப்படுவதில்தான் வாழ்கிறது. அதில் குறைபாடு வரும்போதுதான் குரல் எழுப்ப வேண்டி இருக்கிறதேயன்றி நாட்டுப்பற்றின் குறைபாட்டினால் அல்ல. உண்மையில், மொழியை நேசிக்கும் ஒருவனால்தான் நாட்டை பலமாக நேசிக்க முடியும். 5. காலனித்துவம் முடிந்துவிட்டது. ஆனால் உலகம் இன்னும் வலுவானவர்களால்தான் ஆளப்பட்டு வருகிறது. அதுதான் உலக நியதி. இரண்டு சாதாரண குடிமக்களுக்காக ஒரு பெரிய நாட்டையே மிரட்டிப் பார்க்க முனைந்தது இத்தாலி. காரணம் என்னவாக இருக்க முடியும்? தாங்கள் வலுவானவர்கள், உயர்ந்தவர்கள் என்ற நினைப்பினால் தான். ஐரோப்பிய நாடு என்றில்லை, வலுவான வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத்தர மேம்பாடு இங்கே ஆசிய சிங்கப்பூரிலும் கூட ஒவ்வொரு சிங்கபூரரையும் தாங்கள் உயர்ந்தவர்கள் பலமானவர்கள் என்று என்ன வைத்திருக்கிறது. ஒவ்வொரு முறை நாம் ஏவும் ஏவுகணைகள் வெற்றி பெறும்போதும் உள்ளம் துள்ளுகிறதே, எதற்காக?? நாமும் பலம் பெறுகிறோம், நாமும் அதிகாரம் பெறுகிறோம், நம் குரலும் மதிக்கப்படும், நம் மக்களும் மதிக்கப்படுவர் என்ற எதிர்பார்ப்பில் தான். ஆனால் தமிழக மீனவர்களை, ஒரு சிறிய நாட்டின் படை நடுக்கடலில் எந்தவித பயமும் இன்றி துன்புறுத்தும் போது, எதற்காக இந்த ஏவுகணை சோதனைகள் நடத்தப்பட வேண்டும், எதற்காக என் பணம் அதற்குப் பயன்பட வேண்டும் என்றுதானே தோன்றுகிறது. 6. இந்த மாணவரின் எழுச்சி, இலங்கைத் தமிழருக்கு ஆதரவான குரல் என்று மட்டும் என்னால் கருத முடியவில்லை. அதையும் தாண்டி, ஒரு பெரிய நாட்டின் மாநில மீனவர்களை ஒரு சிறிய நாட்டின் படை தொடர்ச்சியாக துன்புறுத்துவதையும், அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் அந்தப் பெரிய நாட்டின் நிலையையும் கண்ட வெறுப்பில் ஏற்பட்ட ஒன்று என்றே நான் கருதுகிறேன். இந்தியா, ஒரு நாடாக வெளிநாடுகளில் மரியாதையை எதிர்பார்ப்பது போல தனி மனிதர்களும் எதிர்பார்க்கிறார்கள் என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் இந்தியாவின் வளர்ச்சியின் பலன்களை உணரவேண்டும். தனிமனிதர்கள், உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் மதிக்கப்படுவதை இந்திய அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். அதை அடையும் வழிகளை ஆராய்ந்து விரைவில் அடைய முயற்சிக்க வேண்டும். அதுதான் இந்தப் போராட்டம் சொல்லித் தரும் பாடம்.   10:51:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
23
2013
பொது தண்ணீர் பஞ்சம் ஏற்படும் : எச்சரிக்கை
அதெல்லாம் ஒன்னும் வராது சார். தண்ணீர்ப் பஞ்சம் என்பது நீரை பகிர்ந்து கொள்வதில் இருக்கும் குறைபாடுதானே அன்றி நீர் இல்லாமல் இருக்கும் நிலை அல்ல. மூன்றில் இரண்டு பங்கு நீர் இருக்கும் பூமி தண்ணீர்ப் பஞ்சத்தில் சிக்க வாய்ப்பே இல்லை. அதிலும் நீண்ட கடற்கரை கொண்ட தமிழகம் நீர்ப் பஞ்சத்தில் சிக்க சிறிதும் வாய்ப்பில்லை, மக்கள் மண்டையைப் பயன்படுத்துவோராய் இருக்கும் வரை. நிலத்திலிருந்து கடல் நோக்கி பாயும் ஆற்றை, கடலிலிருந்து நிலம் நோக்கி பாயும் வகையில் மாற்றி அமைப்பதுதானே உம் போன்ற அறிஞர்களின் வேலை. உம் காலத்தில் அது முடியாமல் போனாலும், உம் மாணவர்கள் அதை விரைவில் செய்து முடிப்பார்கள் என்றே நான் எதிர்பார்க்கிறேன். மனிதன், மரத்தைப் போல, தொழில்நுட்பத்தால், சுயமாக சக்தியைப் பெரும் காலம் வெகு தொலைவில் இல்லை.   12:58:21 IST
Rate this:
17 members
0 members
21 members
Share this Comment

ஜனவரி
23
2013
பொது சிலை வைக்கத் தடை ; அன்றே சொன்னது தினமலர்
ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் சிலை வைக்கலாம், ஏற்கனவே இருந்த சிலைகளை காட்சியகத்தில் வைக்கலாம் என்றெல்லாம் வாசகர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஊருக்கு ஒதுக்குப்புறம் ஊராக ரொம்ப நாளாகாது அதேபோல இந்த அலங்கோலத்தை கொண்டுபோய் காட்சியகத்தில் வேறு வைக்க வேண்டுமா?? அதற்கு வேறு பணத்தை கொட்டி அழிக்க வேண்டுமா?? பொதுமக்கள் முன்னிலையில், எல்லா சிலைகளையும் உடைத்து அப்புறப்படுத்தவேண்டும் என்பதே என் கருத்து. உண்மையான தலைவர்கள் சிலை வடிவில்தான் வாழவேண்டும் என்ற அவசியம் கிடையாது.   12:41:48 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
21
2013
உலகம் பணத்தால் எனக்கு பயன் இல்லை: சொல்பவர் பில்கேட்ஸ்
எப்பேற்பட்ட மனிதர் இவர். இந்த பில் கேட்ஸ் மற்றும் வாரன் பப்பட் போன்ற மனிதர்கள் உலகம் இதுவரை கண்டிராத மாமனிதர்கள், சம காலத்தில் வாழும் புனிதர்கள். என்னை நெகிழ வைக்கிறார்கள் இந்த இருவரும். தங்கள் சொத்து முழுவதையும் அறப்பணிக்கு கொடுக்க முன் வந்ததால் மட்டும் இதை நான் சொல்ல வில்லை. எளியவற்றை நினைக்கும் சாமியார்கள், கார்ப்பரேட் சாமியார்களாய் படாடோபத்தில் மூழ்கிப் போன போது, வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடி வதங்குகிற இந்த கார்ப்பரேட் மாமன்னர்கள், வள்ளலாரின் வடிவமாகவே தெரிவதால் சொல்கிறேன். இவர்களிருவரும் சேர்ந்து ஏற்படுத்தியிருக்கிற கொடை அமைப்பில், அமெரிக்கப் பணக்கார்களில் பலர் பங்களிப்பதாக கொடுத்திருக்கும் உறுதி மொழி "மனிதம் உலகில் இன்னும் மறையவில்லை" என்பதற்கு நம் காலத்தில் நாம் காணும் சான்று. உறுப்பிடாத பிள்ளைகளுக்காய் காலங்காலத்துக்கும் சொத்து சேக்க, நாட்டின் வளத்தை சுரண்டி திண்ணும், சமூக சிந்தனை அறவே இல்லாத நம் கார்ப்பரேட்களை நினைக்கிறேன். "தூ" என்று துப்ப வேண்டும் போல இருக்கிறது. அம்பானியும், மிட்டலும் சேர்ந்தால், பள்ளிகள் இல்லாத, மருத்துவமனைகள் இல்லாத, பொதுக் கழிவறைகள் இல்லாத ஊர்களே இங்கு இல்லை என்ற நிலை இந்தியாவில் உருவாகாதா என்ன??? இந்தியா பணத்தால் ஏழை நாடல்ல. இது கோடிக்கணக்கான பணக்காரரின் ஏழையாகிப் போன மனங்களால் ஏழையான பணக்கார நாடு. கடவுளுக்கு நன்றி சொல்வதுபோல இந்த இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை கூறிக் கொள்கிறேன்.   15:43:20 IST
Rate this:
3 members
0 members
108 members
Share this Comment

ஜனவரி
18
2013
பொது ஆங்கிலத்தில் பேசி அசத்தும் கிராமத்து பள்ளி மாணவர்கள்
மெத்த மகிழ்ச்சி. நன்றி பெஞ்சமின். இதுபோன்ற வெற்றிச் செய்திகள்தான் ஆங்கில மொழி மீதான நமது பார்வையை கூர்மையாக்கும் என்று நான் நம்புகிறேன். நான் ஒவ்வொரு முறையும் இதைத்தான் சொல்லி வருகிறேன். ஆங்கிலம் நமக்கு மிக மிக இன்றியமையாதது. "அது நம்மை அடிமைப்படுத்தியவர்களின் மொழி" என்று பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. அது ஒரு உலக மொழி. ஆங்கிலம் தெரியாததால் நமது ஆளுமை பாதிக்கப்பட்டிருப்பது முழு உண்மை. இந்தியா போன்ற பன்மொழி பேசும் நாட்டில் இணைப்பு மொழியாக முழுத் தகுதியும் உடைய மொழி ஆங்கிலம் மட்டுமே. இந்தியா, அனைத்து மக்களையும் சமமாக நடத்த வேண்டும் என்று விரும்பினால், சேர்ந்து முன்னேற வேண்டும் என்று விரும்பினால், ஒரே வழி ஆங்கிலத்தை ஆரத் தழுவுவதுதான். நவீன தமிழகத்தில் இளம் தலைமுறையினரிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் அனைத்திற்கும் ஆங்கில மொழிப் புலமையில் உள்ள பெரும் வேறுபாடுகளே காரணம். ஆங்கிலம் பேசுபவர்கள் மதிக்கப்படுவதும் மற்றவர்கள் கீழாகப் பார்க்கப்படுவதும், பெரும் சமூக அவலத்திற்கு இட்டுச் செல்லும் காரணமாய் ஆகிவிட்டது. கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் இருந்து வரும் பிள்ளைகளுக்கு சரியான ஆங்கிலத்தை அளிக்காததன் மூலம் அவர்கள் அனுபவிக்கும் மனஅழுத்தத்தை நாம் கண்கூடாகக் காண்கிறோம். நல்ல ஆங்கிலம் பேச வேண்டும் என்ற அனைவரின் எதிர்பார்ப்பும் தவறல்ல. நல்ல ஆங்கிலம் பேசுவது சமுதாயத்தின் மிகச் சிறந்த முதலீடு. அதை எப்பாடு பட்டும் விரைவில் அடைய வேண்டும். "ஆங்கிலத்தால் தமிழ் அழிந்துவிடும்" என்பதில் எனக்கு உடன்பாடில்லை. சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு ஆங்கிலம் ஒரு காரணமாய் இருப்பதாலேயே தற்போது அனைவருக்கும் ஆங்கிலத்தின் மீது கிறக்கமும், தமிழ் மொழியில் நாட்டமில்லாதது போன்ற தோற்றமும் உருவாகி உள்ளது. ஏற்றத்தாழ்வின் இந்தக் காரணி எவ்வளவு விரைவில் களையப்படுகிறதோ அவ்வளவு விரைவில் "தாம் தமிழர்" என்பதை மக்கள் உணர்வர். எனக்கு நல்ல ஆங்கிலம் தெரியும். ஆனால் என் எழுத்துக்களில் உள்ள தமிழ் என் தமிழ்ப் பற்றை புலப்படுத்தும்.   11:16:19 IST
Rate this:
0 members
0 members
32 members
Share this Comment

ஜனவரி
18
2013
கோர்ட் பொது இடங்களில் தலைவர்களுக்கு சிலை வைக்க... தடை! * மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
எல்லாத்துக்கும் கோர்ட் உத்தரவு வேண்டும் என்றால் இங்கே எதற்கு அரசுகள்? இருந்தாலும் இந்த நல்ல தருணத்தை பயன்படுத்தி, அனைத்து சிலைகளையும், ரோடு வளைஞ்சு போக காரணமாக இருக்கும் உண்டியலை முன்னிறுத்தும் வழிபாட்டு இடங்களையும் உடைத்து அப்புறத்தி விடுவது சாலச் சிறந்தது. காந்தி, நேரு சிலைகளையும் விட்டு வைக்க வேண்டியதில்லை. இந்த சிலைகளை அமைத்ததன் மூலம் நாம் அவர்களை பெருமைப்படுத்தவில்லை, மாறாக காகங்களை கழியவைத்து சிறுமைப் படுத்தி கொல்கிறோம். பல சமூக கலவரங்களுக்கு இந்த ஒன்றுக்கும் உதவாத சிலைகளே காரணம். செத்துப்போன பிறகும் சாகடிக்கிறார்கள் உதவாக்கரை மனிதர்கள் இந்த சிலைகளின் வடிவில்   10:15:27 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
16
2013
பொது வரும் 2050ல் உலகின் மூன்றாவது பொருளாதார வல்லரசு இந்தியா: ஆய்வில் தகவல்
"எனினும், இந்த இடத்தை அடைவதற்கு தற்போது வளர்ந்து வரும் நாடுகள் மிகவும் கடினமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்" என்ற கருத்தைதான் நாம் இங்கு உற்று நோக்க வேண்டும். இந்த முன்னுரைப்பு எல்லாம் அனுமானத்தின் மீதான, எல்லாம் சரியாக நடக்கும் என்ற அடிப்படையில் உருவானவை. இந்தியாவைப் பொறுத்த அளவில், உலகின் மூன்றாவது பொருளாதார வளம் வாய்ந்த நாடு என்ற கனத்தை தாங்கும் அளவில் அரசியல் இல்லை, அதிகாரிகள் இல்லை, மக்களும் இல்லை. வெளிநாட்டிற்கு கூலி வேலைக்கு ஆண்களையும், வீட்டு வேலைக்கு பெண்களையும் அனுப்பும் நாடு மக்கள் மனதில் உயர்ந்த எண்ணத்தை விதைக்க முடியாது. சொந்த மக்களிடம் அற்ப சல்யூட்களை எதிர்பார்க்கும், பணத்திற்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் அதிகாரிகளையும், கூழைக் கும்பிடு போடும் கையாலாகாதவர்களாய் ஆக்கப்பட்டிருக்கும் மக்களையும் வைத்துக் கொண்டு மற்ற நாட்டை மிரள வைக்கும் மனோபலம் வாய்ந்த சமுதாயத்தை உருவாக்க முடியாது. தகுதியற்ற மனிதர்களை தலைவர்களாகக் கொண்டுள்ள நமது அரசியலை வைத்துக் கொண்டு 10 ட்ரில்லியனுக்கும் அதிகமான GDP உடைய நாட்டை ஆளவே முடியாது. எனவே நான் இந்த முன்னுரைப்பை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதற்காக, இது ஏற முடியாத மலை உச்சியுமல்ல.   10:40:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment