Advertisement
saraathi : கருத்துக்கள் ( 184 )
saraathi
Advertisement
Advertisement
ஜூலை
4
2015
பொது வெளிநாட்டு சொத்து மதிப்பீடு புதிய விதிமுறைகள் வெளியீடு
வெளிநாடுகளில் பணிபுரிவோர் வங்கிகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பணப்பரிமாற்று வழிமுறைகள்முலம் மட்டுமே பணம் அனுப்பப்படுவதை இந்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.இதனால் குருவி மற்றும் சட்டபூர்வமற்ற வழிகளில் பணம் கையாளப்படுவது தடுக்கப்படுவதுடன் அரசுக்கும் அன்னியசெலவானி எளிதாக கிடைக்கும். அதே சமயத்தில் கிராமப்புற பகுதிகளில் உள்ளவர்களும் எளிதில் அந்த பணத்தை பெற்றுகொள்வதற்கான நடைமுறைகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.   07:24:45 IST
Rate this:
0 members
1 members
2 members
Share this Comment

ஜூலை
2
2015
உலகம் வந்துவிட்டது "கொத்தனார் ரோபோ இரண்டே நாட்களில் வீட்டை கட்டி முடிக்கும்
இந்த கையில சிகிரெட்டு அந்த கையில கரண்டி ,தான் செய்யும் தொழில் மேல எந்த அக்கறையும் இல்லாமல் ஏனோ தானோவென்று வேலைசெய்யும் ஆட்களை பார்த்தால் இந்த தொழிலைமேற்ப்பார்வை பார்ப்பதை விட்டுவிட்டு ஓடிவிடலாம் என்றுதான் தோன்றுகிறது.   10:53:14 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
2
2015
அரசியல் ஜவாஹிருல்லா மிரட்ட வேண்டாம்
மத ரீதியாக இல்லாவிடினும் சட்டம் ஒழுங்கு எனும் அடிப்படியில் கூட எந்த கட்சியினரும் கேள்வி கேட்காமல் கள்ள மௌனம் சாதிப்பது அவர்களின் சுய ரூபத்தை தெள்ள தெளிவாக காட்டுகிறது.   10:10:58 IST
Rate this:
0 members
0 members
59 members
Share this Comment

ஜூலை
1
2015
உலகம் இந்திய கிரிக்கெட் வீரர்களை அவமதிக்கும் வங்கதேச விளம்பரம்
சற்றே அதிகமான துடுக்குத்தனம் இது என்ற போதும் இந்திய பத்திரிக்கைகள் மட்டும் எப்படியாம்? இந்த அளவிற்கு இல்லை என்றாலும் அடிப்படை கருத்தில் இதே மாதிரிதான் செயல்படுகின்றன.எதிரணியினரை எதிரிகள் என்று வர்ணிப்பதிலாகட்டும் அதிலும் பாகிஸ்தானுடன் என்றால் இவர்களது வர்ணனைகளை கேட்கவே வேண்டாம்.சும்மா அடித்துவிடுவார்கள். விளையாட்டை தகுதி மற்றும் திறமையின் அடிப்படியில் இல்லாமல் வெறுப்புணர்வை துண்டும் வகையில் விமர்சிப்பதில் இந்திய பத்திரிகை ஊடகங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.   15:32:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
1
2015
அரசியல் ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு கையெழுத்திட அன்பழகன் மறுப்பு?
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளால் சோர்வுற்று இடை தேர்தலை புறக்கணித்தது போலவே நீதி மன்ற நடவடிக்கைகளால் வெறுப்புற்று முறையீடு வேண்டாமென நீதி மன்றத்தையும் புறக்கணிக்க எண்ணி இருப்பாரோ?   08:43:31 IST
Rate this:
144 members
1 members
110 members
Share this Comment

ஜூன்
24
2015
அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு கவனிப்பு கிடைக்குமா? பிரசாரம் இன்று ஓய்வதால் எதிர்பார்ப்பு அதிகரிப்பு
ஓட்டுக்கு பணம் கொடுக்கும் நிகழ்வுகள் பற்றி ஒரு ஜனநாயக சீர்கேடான செய்திபோல அல்லாமல் ஒரு நலத்திட்ட செய்தியைபோல வெளியிடுவது நல்ல பத்திரிகைகளுக்கு அழகல்ல.இது பத்திரிகைகள் தங்களது தார்மீக கடமையிலிருந்து விலகி இருப்பதைத்தான் காட்டுகிறது.சீர்கெட்டுவரும் ஜனநாயகத்திற்கு பத்திரிகைகளும் ஆதரவளிப்பது நல்லதல்ல.ஒரு குற்றசெயலை எந்தவித குற்றவுணர்வும் இல்லாது குற்றத்தையும் உணர்த்தும் வண்ணம் இல்லாது மக்களின் எதிர்பார்ப்பாக பதிவிடுவதும் ஒரு சீர்கெட்ட செயலே.   07:14:56 IST
Rate this:
134 members
1 members
119 members
Share this Comment

ஜூன்
15
2015
பொது பெங்களூரு பயங்கரவாதிகளின் புகலிடம் ஆகிறதா
"பெங்களூருவில், மக்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் தீவிரவாதிகள், சமூக விரோதிகள் பதுங்கியிருப்பதை கண்டுபிடிப்பது சிரமம்".,,,,,பத்தாம் பசலித்தனமான கருத்து இது.பெங்களுரு விமான நிலையத்தைவிட சிங்கபுரின் சாங்கிவிமான நிலையம் பலமடங்கு ( பலப்பல நாட்டை சேர்ந்த ) பயணிகளை கையாளும் போளுதும் அங்கு பயணிகளின் வசதிகளுக்கோ நாட்டின் பாதுகாபிற்கோ எந்த ஒரு குறையும் இல்லாமல் பயணிகளின் சேவையில் தரமிக்கதொரு விமான நிலையமாக சேவையளித்துகொண்டிருக்கையில் அதிக மக்கள் எண்ணிகையை பாதுகாப்பு குறைபாட்டுக்கான காரணமாக கூறுவதை ஏற்க்கமுடியாது.   16:47:09 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மே
21
2015
உலகம் தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்
இந்தியாவில் இந்த விசயத்திற்கு இவ்வளவு மெனக்கெட வேண்டியதில்லை.ஒரு நாற்காலியும் குடையும் வைத்துகொண்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு முன்னாள் உட்கார்ந்தாலே போதும் .   13:18:45 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
17
2015
உலகம் இந்துயிசம் மதம் அல்ல வாழ்வியல் முறை-மோடி
மிகவும் உன்னதமான மற்றும் உண்மையான கருத்து இது.இன்றைய சுழலில் தைரியமான ஒரு நபரால் மட்டுமே இவ்வாறு கூற முடியும். இன்றைய மதங்கள் அனைத்தும் தத்தம் சடங்குகள் மூலமாகவே அடையாளம் காணப்படுகின்றன.சடங்குகள் என்பவை அந்தந்த பகுதி மக்களின் வாழ்க்கை முறை( பருவ நிலை,உணவு,உடை,சுகாதாராம்,மக்களின் பாதுகாப்பு, மன நிலை )அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டவை.எனவே ஒரு பகுதியினருக்கு உரைக்கப்பட்ட சடங்கு முறைகள் வேறு பகுதியில் வாழும் மக்களுக்கு நிச்சயம் பொருந்தாது.ஆனால் அவை சொல்லும் அடிப்படை செய்திகள் அனைவருக்கும் பொதுவானதாகவும் பொருந்துவதாகவும் இருக்கும். திறந்த மனதுடன் பார்ப்பவர்களுக்கு இது புரிந்தே இருக்கும்.ஆனால் சாராம்சத்தை விட சடங்குகளை முக்கியமாக கருதும் இக்காலத்தில் இதை உணர்ந்துகொள்வது கடினமே. உண்மையான மதவாதி என்பவரிடம் சகிப்புத்தன்மைதான் அதிகமிருக்கும். ஆனால் இந்நாளில் தனது மதத்தின் பேரில் தாக்குதல் நடத்துபவர்களும் கொலை செய்பவர்களும்தான்( அனைத்து மதத்திலும் ) சிறந்த மத வாதிகளாக கருதப்படுகிறார்கள்.இது நமது புரிந்துணர்வின் குறைபாடே.   15:31:17 IST
Rate this:
2 members
0 members
18 members
Share this Comment

ஏப்ரல்
16
2015
அரசியல் ஒரு வழியாக நாடு திரும்பினார் ராகுல்
இவர் இல்லாததினால் முடங்கிப்போனது என்ன ?வந்துவிட்டதால் ஆகப்போவது என்ன?   07:04:55 IST
Rate this:
2 members
0 members
21 members
Share this Comment