Palanivel Naattaar : கருத்துக்கள் ( 35 )
 Palanivel Naattaar
Advertisement
Advertisement
செப்டம்பர்
3
2016
பொது நாடு முழுவதும் டாக்டர்களுக்கு பற்றாக்குறை! கிராமப்புற மக்கள் கடும் தவிப்பு
தமிழகத்தில் தற்போது 1,674 பேருக்கு, ஒரு டாக்டர் என்ற விகிதாச்சார அளவு உள்ளது இது மிகவும் அபாயகரமானது. (WHO )உலக சுகாதார நிறுவன விகிதாச்சாரப் படி, 1,000 பேருக்கு, ஒரு டாக்டர் என்ற அளவு இருக்க வேண்டும், மத்திய மாநில அரசுகள் ,உச்சநீதிமன்றம் மற்றும் மருத்துவ துறையின் கூட்டு குழப்பதினால் இந்தாண்டு தற்போது மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையினை நீட் தேர்வின் மூலம் தேர்வு செய்ததன் மூலம் பெருமளவு கல்லூரிகளில் பாதியளவு இடங்கள் கூட நிரப்பப்படாமல் ஆகப்போகிறது,இது வரும் காலங்களில் மருத்துவர்களின் எண்ணிக்கையினை இன்னும் குறைக்கக்கூடிய நிலைமை இருக்கிறது.கிராம புறங்களில் இருந்து மாநில தேர்வு எழுதி அதிக மதிப்பெண் எடுத்தும் CBSE யின் குறிகிய கால தேர்வு அறிவிப்பினால் இந்த NEET தேர்வில் தகுதிபெறமுடியாமல் போய் மருத்துவ படிப்பில் படிக்க வாய்ப்பை இழந்த மாணவர்களுக்கு இதுவரையில் மாநில அரசால் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை இதுபற்றி மருத்துவ துரையின் மானிய கோரிக்கையில் கூட மருத்துவம் படித்த அமைச்சரால் ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனை பற்றி இங்குள்ள அரசியல் வாதிகளுக்கோ ஆளும் கட்சிக்கோ எதிர்கட்சிக்கோ அல்லது மருத்துவ சுகாதார துறைக்கோ துளி அளவும் அக்கறை இல்லை என்பது வேதனை அளிக்கிறது.இவர்களுக்கு சட்டசபை வாத,எதிர்வாதங்கள் வெளிநடப்புகள் மட்டுமே முக்கியம்.தினமலர் போன்று உள்ள அணைத்து அச்சு ஊடகங்கள் இதனை சமூக அக்கறையோடு முன்பக்க செய்தியாக வெளியிட்டு அரசுக்கு அறிவுரையை வழங்கியால் மட்டுமே இதற்க்கு ஒரு நல்ல தீர்வு ஏற்படும் என்பது என்போன்ற பொதுவானவர்களின் நம்பிக்கை.   13:13:52 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
31
2016
சம்பவம் ஒரு தலை காதலில் மேலும் ஒரு விபரீதம் ஆசிரியையை கொன்றவன் தற்கொலை
பிரான்சினாவை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.காவல்துறையை கையில் வைத்துள்ள பெண் முதல்வரால் ஆளப்படும் தமிழகத்தில் பெண் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பில்லை, பெற்றோர்களும் பள்ளிக்கோ கல்லூரிக்கோ சென்ற தங்களது மகள் வீடு திரும்பியால் தான் நிச்சயம் என்ற ஒரு நிலை உருவாகியுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. இதற்க்கு மூலகாரணம் சினிமாத்துறை என்பது உண்மையே.தலைவலியும் திருகுவலியும் தமக்கு வந்தால்தான் தெரியும் என்பதற்கு சேரன் குடும்ப விவகாரம் நமக்கு முன் உள்ள சாட்சி. மாணவிகளை கட்டாயமாக காதலிக்க வைப்பது இல்லையேல் அவர்களை சாகடிப்பது என்ற சைக்கோ மனநிலை உள்ள நாய்களை காவல்துறையும் நீதித்துறையும் காப்பாற்றுகிறது என்றுதான் சொல்லவேண்டும்.இங்குள்ள நீதிபதிகள் மற்றும் காவல் துறை குடும்பங்களுக்கும் இதுபோன்ற சம்பவம் வரும்போதுதான் துரித நடவடிக்கை எடுப்பார்கள் என்றால் அதுபோன்று சம்பவம் மிக விரைவில் நடக்கட்டும். பல நீதிபதிகள் மற்றும் காவல் துறை வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது நினைவிருக்கட்டும்.இதுபோன்ற சம்பவங்களை வழக்குகளை விரைவு நீதிமன்றங்கள் மூலம் முன்னுரிமை அளிக்கப்பட்டு தினமும் விசாரணை நடத்தி அதிகபட்ச தண்டனை வழங்கியால் மட்டுமே சைக்கோ மனநிலைக்கு மாணவர்கள் செல்வதை தடுக்கமுடியும். பெற்றோர்களும் பிள்ளைகளை பெற்றால் மட்டும் போதாது நல்ல பழக்க வழக்கங்களை சொல்லிக்கொடுத்து அதன்படி பிள்ளைகள் நடக்கிறார்களா என்பதையும் கண்காணிக்கவேண்டும்.   11:55:23 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2016
சம்பவம் உரிய ஆவணங்கள் இல்லைசொகுசு பஸ் பறிமுதல்
40 குடும்பங்களின் உயிருடன் விளையாடிய சொகுசு பஸ்ஓனர், ஓட்டுநர், நடத்துனர், மற்றும் இதற்க்கு துணைபோன அதிகாரிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.   18:56:53 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2016
பொது தண்ணி காட்டும் நடிகர் அருண் விஜய்
விஜயகுமாரின் மகன் அருண் விஜய் போலீஸ் வேன் மீது பலமாக மோதி, விபத்து ஏற்படுத்தி விட்டதன் பேரில் காவல்நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கிருந்து அவர் தப்பித்துவிட்டார் என்ற செய்தி படிக்கும்போது காரி துப்பவேண்டி இருக்கிறது.அவனை புடைக்க சென்னை காவல் துறைக்கு துப்பில்லையா? சமீபத்தில் இதேபோன்று ஒரு உயிர் இழப்பு சம்பவம் நடந்ததை காவல்துறை மறந்துவிட்டதா? இந்த சம்பவத்தில் குற்றவாளியை திட்டமிட்டே அனுப்பிவிட்டு காவல்துறை நாடகம் ஆடுகிறது.இதே போல சம்பவம் சாதாரணமானவன் செய்திருந்தால் காவல்துறை சும்மா இருந்திருக்குமா? உடனே அவனது வீட்டில் உள்ளவர்களை தூக்குவார்களா இல்லையா? அதேபோல அருண் அப்பா விஜயகுமாரை கொண்டுவந்து காவல் நிலையத்தில் உட்கார வையுங்கள் உடனடியாக அருண் வருவான்.   18:47:01 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2016
பொது நீட் தேர்வு ரிசல்ட் வெளியீடு நான்கு லட்சம் பேர் தேர்ச்சி
மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு இந்த ஆண்டு எந்த அடிப்படையில் மாணவர்களை சேர்க்கப் போகிறார்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட கல்லூரிகளும் மார்க் அடிப்படையில் சேர்ப்பதா அல்லது ரேங்க் அடிப்படையில் சேர்ப்பதா என்பது பற்றி ஒரு தெளிவில்லாமல் இருக்கிறார்கள்.   11:42:36 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2016
பொது ஆனந்தயாழை மீட்டுகிறாய் புகழ் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைவு
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களின் மறைவு தமிழ் திரை உலகில் மற்றுமொரு ஈடு செய்யமுடியாத இழப்பு அவரது குடுமபத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இறைவன் அவர்களுக்கு மன தைரியத்தை கொடுக்க வேண்டுகிறேன். முத்துக்குமார் அவர்கள் மஞ்சள் காமாலை என்னும் கொடிய நோயினால் இறந்ததாக அறிகிறேன். இந்த கொடிய நோய்க்கு முன்னோர்கள் முதல் இன்று வரை நாட்டு வைத்தியம் மூலம் குணமாவதை அறிகிறோம் தகவலுக்காக வேளாங்கண்ணி அருகில் உள்ள பறவை என்னும் இடத்திலும், விழுப்புரம் to பாண்டிச்சேரி செல்லும் வழியில் 16 km தொலைவில் உள்ள கெங்கராயன் பாளையம் என்னும் இடத்திலும் இதற்காக நாட்டு மருந்து கொடுக்கிறார்கள் நோயின் தன்மையை பொறுத்து அவர்கள் கொடுக்கும் நாட்டு மருந்துடன் சேர்த்து தயார் செய்த சோற்று உருண்டை சாப்பிடவேண்டும் எனக்கு தெரிந்து பல நபர்கள் இந்த மருந்தை சாப்பிட்டு குணமடைந்துள்ளனர் இதை படிக்கும் வாசகர்களும் இந்த தகவலை தயவு செய்து நண்பர்களுக்கு பகிர்வதன் மூலம் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களை நாம் இழந்தது போல இல்லாமல் பலரை காப்பாற்றலாம்.   14:02:29 IST
Rate this:
0 members
0 members
29 members
Share this Comment

ஆகஸ்ட்
9
2016
அரசியல் ஜெ., முதலிடம் நாயுடு மோசம் மார்க் போடுகிறார் ரோஜா
ரோஜா அவர்களே, தமிழ் சினிமா மூலம் தான் பிரபலமானீர்கள். பிறகு MLA. தமிழ்நாடு வந்தாரை வாழவைக்கும் நாடு. இங்குள்ள மக்களாகிய நாங்களும் இங்கிருக்கும் தலைவர்களுக்கு வாய்ப்பளிக்க மாட்டோம். எனவே MGR ,ஜெயலலிதா, குஷ்பூ போல இங்கு நிரந்தரமாக வந்து விடுங்கள்..பிறகு பாருங்கள் கோவில் கூட கட்டி விடுவோம் தேவைப்பட்டால்.   10:24:15 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2016
சம்பவம் சசிகலா புஷ்பா வீட்டில் பாலியல் துன்புறுத்தல் எஸ்.பி.,யிடம் சகோதரிகள் பகீர் புகார்
தகுதி இல்லாதவருக்கு பதவி கிடைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம் புஷ்பா சசிகலா.தினம் தினம் வருகின்ற செய்திகளை பார்த்தால் இவரைப்போல பெண் MP ஒருவரை இவருக்கு முன் இந்திய பாராளுமன்றம் பெற்றிருக்கவில்லை என்பது தெரிகிறது.அரசியலில் பதவிசுகம் ஒருவரை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதற்கு இவரே உதாரணம்.இவர் செய்தது எல்லாம் இவருடைய தனிப்பட்ட வாழ்க்கை என்றாலும் எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை வேண்டாமா? கணவர் உயிருடன் இருக்கும்போதே பல நபர்களுடன் இவர் குடும்பமாக இருந்துள்ளது தெரிகிறது.இவர் சாதாரண ஒரு பொம்பளயாக இருந்தால் இதே வெளியில் தெரிய வர போவதில்லை இவர் ஒரு ஆளும் கட்சியின் MP ஆக பிரபலமானவர், ஒரு பொது இடத்தில் வைத்து திருச்சி சிவாவை அடித்த இந்த பெண்ணால் தமிழக பெண்களுக்கு உலக அளவில் கெட்டபெயர் தான் கிடைத்துள்ளது. சிவாவும் கோபத்தில் இவரை திருப்பி அடித்திருந்தால் மகளிர் ஆணையம் முதல் அனைத்து அமைப்புகளும் துணி இல்லாமல் குதித்திருப்பார்கள்.ஆனால் இப்போது ஒருவரும் வாய் திறக்கவில்லை. இவரின் மேல் வரும் குற்றசாட்டுகள் விசாரணை என்று வந்தாலும் இவரது கையில் உள்ள பல கலைகளை கொண்டு எல்லாவற்றையும் இவர் லாவகமாக சமாளித்துவிடுவார் என்று நம்பலாம் அது நடக்காத பட்சத்தில் இவரது பதவிக்காலம் முடியும் வரை அல்லது இவரது MP பதவியை ராஜினாமா செய்யும் வரை டெல்லி முதல் தூத்துக்குடிக்கு தினசரி விமானடிக்கெட் புக்கிங் செய்து வைக்க வேண்டிவரும். தமிழகத்தில் இவரது எஞ்சிய வாழ்நாள் அம்மாவின் ஆசிகளோடு இனி சிறையில்.....கும்மாளதோடு கழிக்கலாம்.   10:16:45 IST
Rate this:
9 members
0 members
12 members
Share this Comment

ஜூலை
23
2016
பொது இன்று இரண்டாம் கட்ட நீட் தேர்வு 4.7 லட்சம் பேர் விண்ணப்பம்
இந்த வருடம் ஒரு தெளிவான முடிவு இல்லாமல் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேருவதற்கான, தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வான, 'நீட்' தேர்வு இன்று நடைபெறுகிறது. மாணவர்களையும் பெற்றோர்களையும் இந்த ஆண்டு குழப்பியதில் மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் சரிவிகிதம் கொண்டுள்ளன.மாநில கல்வி பாடத்திட்டத்தில் பாடம் பயின்ற மாணவர்கள் வெறும் 43 நாட்களை கொண்டு மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடங்களை கோச்சிங் சென்டர் மூலம் படித்து தேர்வு எழுதுகின்றனர் வெற்றிபெற வாழ்த்துக்கள். இங்குள்ள மாநில மற்றும் மத்திய அரசும் நீதித்துறையும் இந்த விஷயத்தில் பெரிதாக கண்டுகொள்ளாமல் செயல்படுகிறது. அதோடு மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.   11:52:18 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
29
2016
பொது நாடு முழுவதும் போலி டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்போர் 5 கோடி பேர்! தடுக்க அபராதம், தண்டனையை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்
R.T.O அலுவலரும் காவல் துறையும் மனது வைத்தால் இதை கட்டுப்படுத்தலாம் அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் அதனை முழு அளவில் நடைமுறை படுத்தவேண்டும்.   18:24:17 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment