Rajarajan : கருத்துக்கள் ( 380 )
Rajarajan
Advertisement
Advertisement
நவம்பர்
27
2018
அரசியல் ராகுல் ஒரு காஷ்மீர் பிராமணர்
ஐயையோ, இது பகுத்தறிவு பகலவங்களுக்கு ஆகாதே இனி எப்படி தி. மு. க., ராகுல் பிராமணரிடம் தொடர்பு வைத்து கொள்ளும், கூட்டணி வைத்து கொள்ளும் ?? இவர்களது குடும்ப உறுப்பினரின் பூணூலை அறுக்க சொல்லி, தாலியை கழட்டி வீச சொல்லி, குங்குமத்தை அழிக்க சொல்லி போராட்டம் நடுத்துவரே ஓ புரிகிறது, இதெல்லாம் சும்ம்மா சும்மம்மா, தொண்டர்களை ஏமாற்ற மட்டுமே. இல்லையென்றால், இவர்களது டப்பா கழண்டு போகும். இதை யாராவது தட்டி கேட்டால், இதற்க்கு ஏதாவது நொண்டி சமாதானம் நிச்சயம் யாரும். எல்லாம் பணம் படுத்தும் பாடு. வசதி இருப்பவன் சாணியை தின்றால், அவன் மருந்துக்கு தின்பதாக சொல்வர். ஆனால், பட்டினியில் இருப்பவன் தின்றால், அவன் வயிற்றிற்கு திண்பதாக சொல்வர். இதில் தி.மு.க. எந்த ரகம் என்பதை அவரவர் முடிவுக்கே விட்டு விடுவோம்.   06:26:51 IST
Rate this:
3 members
0 members
24 members
Share this Comment

நவம்பர்
27
2018
பொது வருகிறது புதிய வருமான வரி சட்டம் அடுத்த அதிரடிக்கு தயாராகிறார் மோடி
ஓட்டை குடத்தில் எவ்வளவு தான் நிறைத்தாலும், அது எங்கோயோ போய்க்கொண்டே தான் இருக்கும். அதே போல அரசு கஜானாவில் எவ்வளவு தான் வருமானம் சேர்த்தாலும், தேவையற்ற அரசு நிறுவனங்கள் / அரசு ஊழியர்களின் அதிக சம்பளம், சலுகைகள், அவ்வப்போது பஞ்சபடி, அதிக ஊழியர்கள் போன்றவற்றின் தண்ட செலவுகளால், அரசு திவால் தான் ஆகும். மேலும் பொறுப்பற்ற MLA / MP / அமைச்சர்களையும் இதில் சேர்த்துக்கொள்ளவும். பொதுமக்கள் எங்கள் வியர்வை மற்றும் ரத்தத்தை வரியாக செலுத்திக்கொண்டே இருக்கிறோம். நீங்கள் அதை விழலுக்கு இறைக்கும் நீராகவும் மற்றும் நோக்கமல் நொங்கெடுத்து, ரத்தத்தை உறிஞ்சி குடிக்கும் ரத்த காட்டேரியாகவும் இருங்கள். நாடு விளங்கும்.   06:17:44 IST
Rate this:
11 members
1 members
45 members
Share this Comment

நவம்பர்
26
2018
அரசியல் கூட்டணியில் கழற்றி விட்டதால் வைகோ விரக்தி வடை போச்சே!
இவரை கட்சியில் இருந்து நீக்கிய போது, கருணாநிதி கணக்கு காட்ட தயாரா என்று கேட்டார் வைகோ. இவரால் உயிருக்கு ஆபத்து என்றார் கருணாநிதி. ஆக, இன்றுவரை இதை இருதரப்பும் தவறு என்று ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் ஏன் வீறாப்பாக, தி.மு.க. வை எதிர்த்து கட்சி தொடங்க வேண்டும் ? தனது கட்சியின் முதலில் தொடக்க உரையில், "வைகறையில் பேசுகிறேன், உங்களை ஏமாற்றமாட்டேன்" என்று ஏன் வீர வசன உரையை தொடங்கி இருக்க வேண்டும். குப்பற கவுந்தது நாங்கதான், ஆனால் எங்கள் மீசையில் ஒட்டிய மண் எங்களது இல்லை என்கிறாரோ ?? இவரை நம்பி தீக்குளித்த தொண்டன், ஏமாந்த சோணகிரி தான், வேறு என்ன இதுதான் சொல்வது, திராவிட பகுத்தறிவுகளை எளிதாக உசுப்பேற்றி, கவுத்துவிடலாம் என்று. அடுத்தவனுக்காக பல்லாக்கு தூக்கியே, வாய்சேவடாலில் மற்றும் சாராயம் / பிரியாணி / ஜாதி பெயரை சொல்லி மீசை முறுக்கியே, தனக்கு தானே மண்ணைப் போட்டுக்கொள்ளும் திராவிட பகலவன்கள். சரி, இதைப்பற்றியெல்லாம், எந்த கட்சி தொண்டனாவது இவரிடம் கேட்டானா பாருங்கள். குவாட்டர் பாட்டிலை காட்டினால், குப்பற கவிழ்ந்துவிடுவார் என்ற ரகசியத்தை உணர்ந்தவர்கள் நமது திராவிட தலைவர்கள்.   07:12:39 IST
Rate this:
1 members
0 members
43 members
Share this Comment

நவம்பர்
22
2018
கோர்ட் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் குட்டு!
இது மிகவும் சரியான கேள்வி. ஆனால், இலவசங்கள் மற்றும் இடவொதுக்கீட்டை, நோகாமல் நொங்கெடுக்கும் தங்களுக்கு சாதகமாக உபயோகிக்கும் மக்களுக்கு, எப்படி இதை பற்றி யோசிக்க மற்றும் எதிர்க்க மற்றும் மறுக்க மனம் வரும் ?? இலவசத்தை கை நீட்டி வாங்கும்போது, இது நமது வரி பணம், எனவே பெறுவதில் தவறில்லை என்று நொண்டி சாக்கு சொல்வர். இடவொதுக்கீட்டை பெறும்போது, இது எங்களது ஜாதியின் உரிமை என்று பல்லிளிப்பர். பின்னர், எப்படி அடுத்தவன் தவறை தட்டி கேட்க யோக்கியதை வரும் ?? குளிக்கப்போய் சேற்றை பூசுகின்றனர் என்பது தெரிந்தும், இந்த மானம்கெட்ட பிழைப்பை பிழைக்க, பாழாய்ப்போன சோம்பேறித்தனம் மற்றும் உழைக்க மறுப்பு மற்றும் திறனை வளர்க்க முடியாமை மற்றும் போட்டித்திறன் அற்ற, கேடுகெட்ட புத்தி தானே அப்படி தூண்டுகிறது. இவற்றிற்கு வெண்சாமரம் வீச, அரசியல் மற்றும் ஜாதி கட்சிகள் வேறு. உருப்பட்ட மாதிரி தான்.   05:10:50 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
18
2018
முக்கிய செய்திகள் அதிருப்திபணமில்லாமல் வழக்கமான பலன் பெற முடியவில்லைஉதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் குமுறல்
ஜாதியின் பெயரால் வேலை பெறுதல், தகுதி இல்லாமை, தொடர்ந்து தகுதி வளர்க்காமை, மேலும் எல்லவத்திற்கும் லஞ்சம் பெறும், எப்போதும் போராட்டம் நடத்தும் அரசு ஊழியர், இதைப்பற்றி பேச யோக்கியதை இல்லை.   15:50:30 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
18
2018
சினிமா 2.0 டிக்கெட் : ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை...
எப்போதும் கெட்டவனை நம்பலாம், அதேபோல் எப்போதும் நல்லவனை நம்பலாம். அரசியலுக்கு வரும்போது, சுயநலத்திற்காக நல்லவனாக நடிக்கும் சுயநலவாதிகள் வந்து தான், நாட்டை திருத்தவேண்டுமா ?? ஊருக்கு உபதேசிப்பவன், முதலில் தான் ஒழுங்காக இருக்கவேண்டும். அதுசரி, அரசுத்துறைகளை நிர்வகிக்க, துறை தலைவர்களுக்கு என்று குறிப்பிட்ட கல்வித்தகுதி மற்றும் திறன் உள்ளதே. ஆனால், இவர்களை நிர்வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் அனைவரையும் நிர்வகிக்கும் முதலமைச்சருக்கு மட்டும் எந்த கல்வி தகுதி மற்றும் திறன் இல்லையென்றால், நாடு எப்படி விளங்கும் ?? தூயவர் ரஜினி இதை பற்றி சிந்தித்தாரா ?? அல்லது சிந்தித்து மறைத்தாரா ??   15:43:33 IST
Rate this:
4 members
0 members
25 members
Share this Comment

நவம்பர்
10
2018
அரசியல் ரஜினி கருத்துக்கு எதிர்ப்பு அ.தி.மு.க., ஆவேசம்
தற்போது தமிழக முதல்வராக துடிக்கும் நடிகர்களுக்கு, ஒன்று சொல்வது வாடிக்கையாகி விட்டது. அதாவது, எனக்கு அள்ளி அள்ளி கொடுத்த தமிழக மக்களுக்கு ஏதாவது நன்மை செய்யவேண்டுமென்று நினைப்பதாக சொல்வது. யார் செய்யவேண்டாம் என்று சொன்னது ?? உங்களது சொந்த பணத்திலிருந்து செய்யுங்கள், உங்களது ரசிகர்களின் நேரத்தை / வாழ்க்கையை / எதிர்காலத்தை சீரழித்ததிற்காக பிராயசித்தம் செய்யுங்கள். நல்லது செய்வதாக நினைத்தால், MGR போன்று உங்கள் சொத்துக்கள் அனைத்தையும் பொதுமக்களுக்கு எழுதி வையுங்கள் பார்ப்போம் ??? மக்களின் வரிப்பணத்தை எடுத்து, எங்களுக்கே செலவு செய்வது என்பது என்ன புதிய சித்தாந்தமா ?? அதன் பெயர் தானே அரசாங்கம். மக்களின் வாழ்வில் அங்கம் கொண்டு, வரன்முறையுடன் ஆட்சி புரிவது தான் அரசு. எனவே, அரசு + அங்கம் = அரசாங்கம். இதற்க்கு பணம் தேவை. அது மக்களிடம் வரியாக பெற்று, மக்களுக்கே திரும்ப போய் சேரும். இந்த அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள் எல்லாம் நாளைய தமிழக முதல்வர்கள். நடிகர்கள் வேண்டுமானால் ஒன்று செய்யலாம். தயவுசெய்து, நிர்வாகத்தில் அடிப்படை கல்வி கற்று, தேர்ந்து, அடிப்படை உறுப்பினராக மக்களின் பணியாற்றி, பின்னர் மக்கள் விருப்பப்பட்டால், நாங்களே உங்களை முதல்வராக்குகிறோம். அரசியல்வாதியானால் அது எப்படியோ தானாகவே ஒரு நாள் தமிழக முதல்வர் ஆக்கிவிடும் என்ற நிலை, எனவே நோகாமல் நொங்கு தின்ன ஆசை. ஆனால், தகுதி மற்றும் கல்வி அறிவு மட்டும் பூச்சியம். நல்லவராக, அநீதியை தட்டி கேட்பவராக நடித்தால், அவர் நிஜத்தில் நல்லவரா ?? அப்படியானால், கற்பழிப்பு காட்சிகளில் கூட தான் ஆரம்ப நாட்களில் நடித்திருக்கின்றனர் சில நடிகர்கள். எனவே, ஆட்சிக்கு வந்தால், இதன்படி நடந்துகொள்வர் என எடுத்துக்கொள்ளலாமா ?? அது என்ன காலம் கடந்த ஞானோதயம் ?? ரசிகர்களின் ரத்தம் மற்றும் வியர்வையை உறிஞ்சி, அவர்களின் எதிர்காலத்தை பாழடித்து, கோடி கோடியாக சம்பாதித்தும், அவர்கள் வாரிசுகள் இப்போதும் சம்பாதித்தும், கோலூன்றும் வயதில் கோடிகளை குவித்தும், இன்னும் பணத்தின் மீது வெறி அடங்கவில்லை. இந்த அழகில், அடுத்தவருக்கு உபதேசம் மற்றும் சாமியாராக இந்த மலை மற்றும் அந்த மலைக்கு போவாராம். ஏமாறுபவன் இருக்கும் வரை, ஏமாற்றுபவனுக்கு கொண்டாட்டம் தான் எப்போதும். இது தமிழக முதல்வர் கனவில் மிதக்கும் எல்லா நடிகர்கள் மற்றும் மற்றவர்களுக்கும் பொருந்தும். ரசிகர்களுக்கு வேண்டுமெனில், அவர்கள் தனியாக ராஜ்ஜியம் அமைத்து, அவர்களது நடிகர்களை அதில் முதலமைச்சர் ஆக்கி கொள்ளட்டும். படித்த மற்றும் விஷயம் தெரிந்தவர்களிடையே இவர்களுக்கு கிஞ்சித்தும் மதிப்பில்லை. அவர்கள் இவர்களை ஏற்றுக்கொள்ள தயாரில்லை. மாயா மாயா எல்லாம் மாயா, சாயா சாயா எல்லாம் சாயா.   06:02:53 IST
Rate this:
4 members
0 members
12 members
Share this Comment

நவம்பர்
9
2018
அரசியல் அ.தி.மு.க., பெண் எம்.எல்.ஏ.,வை ராங் நம்பர் என கலாய்த்த மக்கள்
இப்படித்தான் எங்கள் ஊரு கவுன்சிலரை கலாய்தேன்., கூட வந்த அல்லக்கைகளை , உங்கள் நம்பர் மற்றும் விலாசங்களை கொடுங்கள், பிரச்சினை என்றால் உங்களை தான் கூப்பிடுவேன், ஏனென்றால் நீங்கள் தான் இவருக்கு வாக்கு போடுங்கள் என்று கேட்கிறீர்கள் என்று. மேலும், தொகுதிக்கு என்ன என்ன திட்டங்கள் வைத்துள்ளீர்கள் என்ற பட்டியலை கொடுங்கள், எப்போது அவற்றை முடிக்க திட்டம், நான் அதில் பங்கேற்க எனக்கு என்ன அதிகாரம் கொடுப்பீர்கள் என்று எல்லாம் சரமாரியாக கேட்டேன். பின்னர் எடுத்தனர் ஓட்டம். அதன்பின்னர், எங்கள் தெரு பக்கம் வோட்டு கேட்டு வராமல், தலைதெறிக்க வேறுபக்கம் ஓடுகின்றனர். என்னை சாலை மற்றும் கடைகளில் தப்பி தவறி பார்த்துவிட்டால், முகத்தை திருப்பி கொள்கின்றனர். மழை நீர் எங்கள் தெருவில் சேர்ந்து ஆறாக பெருகி, வீடுகளில் நுழைவதை பற்றி குறை தெரிவித்து ஒருவரும் வரவில்லை. தேடி சென்று கேட்ட போது, ஏதேதோ வெட்டி கதை சொன்னார். பின்னர் நானே தனி ஆளாக நின்று அதை சர்வ சாதாரணமாக முடித்துக்காட்டிய பின்னர், தற்போது தெருவின் பெயரை சொன்னாலே அவர்களுக்கு கிலி தான். பெரும்பாலான இடங்களில் இதே நிலை தான். உங்கள் வோட்டுக்கு பணம் கொடுக்க அம்மா சொன்னார் (ஜெயலலிதா உயிருடன் இருந்த போது) என்ற போது, அவர் எப்போது சொன்னார் ? அவருக்கு என்னை எப்படி தெரியும் ?? என்னிடம் வாங்கிக்கொள்ள சொல்லவில்லையே ?? அவரிடம் இப்போது போன் செய்து கொடுங்கள், நான் பேசி கேட்கிறேன் என்றதும், ஓடிய கூட்டம் இன்று வரை திரும்பவில்லை.   16:11:07 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

நவம்பர்
7
2018
பொது நெருக்கடியில் பொது துறை வங்கிகள் அவசர தேவை ரூ.1.20 லட்சம் கோடி
நான் பலமுறை கூறி வந்திருக்கிறேன். அரசு நிறுவனங்களின் வரவை விட, செலவு பல மடங்கு. மேலும், நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை தொடர்ந்து நடத்துவது, அனைத்து அரசு ஊழியருக்கு வீண் மற்றும் தண்ட சம்பளம், ஊதிய உயர்வு, பஞ்ச படி, அதிக ஊழியர்கள், குறைந்த வேலை திறன் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாதது. ஊழியர்களின் மற்றும் அரசியல் கட்சிகளின் சுயநல போக்கினால், நிர்வாக சீர்திருத்தம் செய்ய முடியாமை மற்றும் இழுத்து மூட முடியாத நிலைமை ஆகியவை தான் காரணங்கள். இதனால் வரவை விட செலவு அதிகம் ஆகி, திவால் ஆகி, கடைசியில் நாட்டின் பாதுகாப்பிற்கான ரிசர்வ் வங்கியின் ரிசர்வ் சேமிப்பிலேயே கை வைத்து, நாட்டை திவாலாக அறிவிக்கும் சூழ்நிலை. பின்னர், வரியை உயர்த்தாமல், விலைவாசி உயராமல், வரவை எப்படி உயர்த்துவது, செலவை எப்படி சமாளிப்பது ? யாரோ ஒரு சிலரின் சுயநலத்திற்காக, கடைசியில் நாடு திவாலாகி, ஒட்டுமொத்த பேரும் மூழ்கும் நிலைமை. இந்தியா திவாலாகும் என்று சொன்னது படிப்படியாக முன்னேறி வருகிறது. இல்லையேல், மேலும் வரிவிதிப்பிற்கு தயாராக இருக்கவும். ஏழை மற்றும் நடுத்தர மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், ஈர துணியை வாங்கி தயாராக வைத்திருக்கவும். பசித்தால், வயிற்றில் கட்டிக்கொள்ளவும் (நான் ஏற்கனவே வாங்கி வைத்துவிட்டேன்).   07:56:31 IST
Rate this:
1 members
1 members
18 members
Share this Comment

நவம்பர்
3
2018
சினிமா லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் : ரஜினி...
இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்னோட்டமா, தனது குடும்ப உறுப்பினர் சகிதம், விழாவுல கலந்துக்கிட்டதா செய்தி வந்திருக்கு. இதுக்கு முன்ன இப்படி யாரோடயும் கலந்துக்கிட்டதில்ல. அப்போ கட்சியில் உருவாக்க போகும், முக்கிய பொறுப்பு உறுப்பினரை அறிமுகப்படுத்தும் விழா இது/ முதலில் குடும்பத்தை திருந்தட்டும், பிறகு அடுத்தவரை திருத்தலாம். வயதாயும், பல தலைமுறைக்கு சொத்து சேர்த்தும், இன்னும் பணத்தாசை அடங்காத இவரெல்லாம், பணம் அதிகமா இருந்தா நிம்மதி போய்டும் என்று ஊருக்கு உபதேசிக்கத்தான் லாயக்கு. முதலில் தன் குடும்ப முதுகில் இருக்கும் அழுக்கை சரி செய்துவிட்டு, பிறகு அடுத்தவர் முதுகை கழுவ வரட்டும். மழைக்கு கூட பள்ளியின் பக்கம் ஒதுங்காதவர் எல்லாம் பள்ளியின் முதல்வர் ஆவதும், நிழலுக்கு கூட சட்டசபை பக்கம் ஒதுங்காதவர் எல்லாம் மாநிலத்தின் முதல்வர் ஆவதும், இந்திய ஜனநாயத்தின் கேலிக்கூத்துகளில் ஒன்று.   05:42:15 IST
Rate this:
4 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X