R Sanjay : கருத்துக்கள் ( 1185 )
R Sanjay
Advertisement
Advertisement
செப்டம்பர்
21
2018
பொது விழுந்து எழுந்த பங்குச்சந்தைகள்
ஏன் விழுந்தது? காரணம் இதுதான். வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் அச்சத்தை போக்க தனியார் டிவிக்கு மதியம் ஒரு மணிக்கு கொடுத்த பேட்டிகளே காரணம். அவர்கள் கொடுத்த பேட்டிகள் முதலீட்டாளர்களின் பயத்தை இன்னும் அதிகரித்துவிட்டது இதன் காரணமாக அனைத்து முதலீட்டாளர்களும் அவர்கள் முதலீடுகளை விற்க துவங்கிவிட்டனர். பிறகு சந்தை சுதாரித்து மீண்டு எழுந்திருக்கிறது. வரும் நாடாளுமன்ற தேர்தல் வரை இது போன்ற சந்தை வீழ்ச்சி ஏதாவது ஒரு காரணத்திற்க்காக இனி அடிக்கடி நடக்கும்   15:14:02 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
21
2018
பொது விழுந்து எழுந்த பங்குச்சந்தைகள்
ஏற்கனவே கூறியபடி பங்குச்சந்தைகள் இனிமேல் அடிக்கடி விழும். எப்போதெல்லாம் பங்குச்சந்தை அதிகமாக வர்த்தகம் ஆகிறதோ அப்போதெல்லாம் மோடி புராணம் பாடுபவர்கள் தற்போது சந்தை வீழ்ச்சிக்கு கூறும் காரணங்கள் காமெடியாக இருக்கும். சென்செஸ் புள்ளிகள் இனி வரலாறு காணாத வீழ்ச்சி உண்டாகும் கூடிய விரைவில். அதே சமயம் நல்ல நிறுவன பங்குகளில் இது போன்ற சமயங்களில் சிறுக சிறுக வாங்குவது நீண்டகால பலன்களை தரும். தற்போது "Dewan Housing Finance Corporation" (350.rs)நிறுவனம் நாற்பதிலி இருந்து ஐம்பது சதவிகிதம் குறைவான விலையில் கிடைக்கிறது. இதை நீண்ட கால முதலீட்டிற்காக தற்போது சிறியளவு பங்குகளை வாங்கலாம்   15:05:08 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
சம்பவம் மற்றொரு ஆணவ கொலை முயற்சி தெலுங்கானாவில் பயங்கரம்
உங்களின் தாத்தா பாட்டி அவர்களின் தாத்தா பாட்டி அவர்களின் தாத்தா பாட்டி என்று பத்து தலைமுறைக்கு முன்னர் யாரை யாரை திருமணம் செய்தார்கள் என்று நினைத்து நீங்கள் கவலை பட்டுக்கொண்டு இருக்கிறீர்களா? யார் கண்டது நம்மை ஆண்ட வெள்ளைக்காரன் கூட பத்து தலைமுறைக்கு முன்னர் இருந்த நம் மூதாதையரை திருமணம் செய்து இருப்பான். அடுத்து நம் பத்து தலைமுறைக்கு பின்னால் வருபவர்கள் யார் யாரை திருமணம் செய்துகொள்வார்கள் என்று முடிவு உங்களால் அறுதியிட்டு கூற முடியோமா? ஆனால் நம் கண்முன் காணும் பெற்றவர்கள்/தாத்தா பாட்டிகள்/ மகன் மகள்கள்/பேரன் பேத்திகள் மட்டும் நாம் சொல்கிறவர்களை தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற வறட்டு கெளரவம் ஏன்? நீங்கள் உங்களின் தற்போதைய வாழ்க்கையை உங்களுக்காக வாழுங்கள் உங்கள் வாழ்க்கைக்காக வாழுங்கள். உங்கள் சந்தோஷத்திற்க்காக மற்றவர்கள் மனம் கஷ்டப்படாத வண்ணம் வாழுங்கள் உங்கள் எதிர்காலத்திற்காக வாழுங்கள். உங்கள் தேவை போக நீங்கள் மனது வைக்கும் பட்சத்தில் உங்கள் சேமிப்பில் சிறிது உங்கள் சந்ததிகளுக்கும் இந்த சமூகத்திற்கும் வைத்துவிட்டு போங்கள், ஆனால் நடைமுறையில் தன் மனைவி தன் பிள்ளை தன் தாய் தன் குடும்பம் தன் பரம்பரை என்று எழுதலைமுறைக்கு சொத்து சேர்த்துவைத்துவிட்டு செல்வது ஏன்? வாழும் மனிதன் இந்த ஜாதி மத வேறுபாடுகளால் தானும் நிம்மதியாக வாழாமல் மற்றவர்களையும் நிம்மதியாக இருக்கவிடாமல் கடைசியில் சந்தோசத்தை அனுபவிக்காமலே சென்று விடுகிறான் தேவையா இது. முடிந்த அளவு உங்கள் பிள்ளைகளுக்கு எடுத்து கூறுங்கள் இல்லையென்றா விதிப்படி நடக்கட்டும் என்று விட்டுவிடுங்கள். உலகில் உள்ள அனைத்து விலங்குகளும் தங்கள் பிள்ளைகளுக்கு இந்த உலகில் எப்படி வாழவேண்டும் என்று தான் கற்று தருகின்றனவே ஒழிய வாழ்நாள் முழுவதும் தங்கள் பிள்ளைகளுக்காக உழைத்து சொத்துக்கள் சேர்ப்பதில்லை.   10:43:47 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
பொது இன்றைய விலை பெட்ரோல் ரூ.85.48 டீசல் ரூ.78.10
அரசிற்கு தொடர்பு இல்லையா? கர்நாடக தேர்தலின் போது பத்தொன்பது நாட்கள் நாடு முழுவதும் பெட்ரோல்/டீசல் விலையேறாமல் அப்படியே இருந்ததே அதற்க்கு காரணம் யார்/என்ன? உண்மை நாடே அறியும்.   10:27:40 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
சினிமா இயேசு பற்றி விமர்சனம் : இளையராஜா மீது வழக்கு...
எந்த ஒரு மதத்தையும் அவர்களின் புனிதங்களையும், நம்பிக்கைகளையும், வேதாந்தங்களை பழித்து பேசுவது தவறு. இதற்க்கு இளையராஜா கண்டிக்கத்தக்கவரே. அதே போல் மதம் மாற்றுவதற்காக கிறிஸ்துவர்களும் மற்ற மதங்களில் கடவுள்களை பழிக்காமல் இருக்கவேண்டும். அவர்கள் அவர்கள் மதக்கடவுள்கள் அவர்கள் அவர்களுக்கு உயர்ந்தது இதில் உயர்வேது தாழ்வேது. எல்லா மதங்களும் அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் ஆன்மீகத்தையே போதிக்கின்றன. இறைவன் ஒருவனே அவரே நம்மை வழிநடத்துகிறார் என்கின்ற நியதியை புரிந்துகொள்ளாமல் நம் இறைவேனே உயர்ந்தவர் என்று நினைப்பது ஆன்மிகம் அல்ல.   09:35:20 IST
Rate this:
22 members
5 members
25 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
அரசியல் மகிழ்ச்சி! முஸ்லிம் பெண்களுக்கு பிறந்தது விடிவுதலாக் சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்
ஒரு மதத்தில் சிலர் பாதிக்கப்படுகிறார்கள் என்ற காரணத்திற்க்காக பல விவாதங்கள் இல்லாமல் இரு அவைகளிலும் நிறைவேற்ற தெரிந்த மத்திய பிஜேபி அரசுக்கு. பத்தாயிரம் கோடி இருபதாயிரம் கோடி என்று கோடிக்கணக்கில் கடன்வாங்கிவிட்டு வாங்கிய கடனில் சுகமாக சொர்க்க வாழ்க்கை வாழ்ந்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறி நம் நாட்டில் பொருளாதாரத்தை கேள்விக்குறியாக்கும் தொழிலதிபர்களை அவர்களுக்கு உதவியாக இருந்து வங்கி அதிகாரிகளை/ அரசியல்வியாதிகளை தண்டிக்க புதிய சட்டம் இயற்றுவதில் ஏன் தாமதம். இவர்கள் போன்றவர்களை தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லை என்று வெளிநாட்டிற்கு அனுப்ப தெரிந்த இந்த அரசாங்கத்திற்கு இவர்களை தடுக்க என்ன சட்டம் இயற்றி இருக்கிறது. மதங்களில் உள்ள இப்படிப்பட்ட தலாக் குற்றங்களை விட கொடியது நாட்டின் பொருளாதாரத்தை சீரழிப்பது அதற்க்கு இந்த காங்கிரஸ்/பிஜேபி அரசாங்கங்கள் என்ன செய்து இருக்கிறது. எதுவும் இல்லை ஏனெனில் வழங்கிய கடனில் அடித்த கமிஷனே இதற்க்கு காரணம்.   09:24:43 IST
Rate this:
76 members
1 members
9 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
பொது ஆங்கில ஊர் பெயர்களை மாற்ற முயற்சி
கடந்த ஐம்பது ஆண்டுகால தமிழ் தமிழ் என்று கூவிய திராவிட ஆட்சியில் இதற்க்கு ஒரு முற்றுப்புள்ளி எப்போதோ வைத்து இருக்கவேண்டும் அனால் ஊழல் கொள்ளை என்றே காலம் தள்ளிவிட்டனர் சரி காலம் கடந்து இப்போது தான் செய்கிறார்கள். இதை வரவேற்கலாம்.   09:17:29 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
சினிமா லலித் குமார் நல்லவன் இல்லை : டிவி நடிகை நிலானி கண்ணீர்...
"காந்தி லலித்குமார்"ருடன் சேர்ந்து மெட்டி அணிவது, அவன் உன் பாதங்களை முத்தமிடுவது அவனுடன் படுக்கையில் புரள்வது என திருமணம் ஆனா பிறகு நடக்கும் எல்லா விஷயங்களையும் செய்துவிட்டு என்ன அழகாக குறும்படம் எடுத்தேன் காதலிக்கவில்லை என்று கூறுகிறாய். ஒரு ஆண் எந்த நோக்கத்தோடு பழகுகிறான் என்று புரிந்துகொள்ள தவறியது உன் குற்றம். உனக்கு அவனை பிடிக்கவில்லையென்றால் அவன் நோக்கம் என்ன என்று தெரிந்த முதல் நொடியிலேயே அவனைவிட்டு நீ விலகி இருக்கவேண்டும். ஒரு ஆணை பற்றி எந்த ஒரு புரிதல் இல்லாமல் அனைத்து தவறுகளையும் செய்துவிட்டு அவனுக்கு ஆசைகளை அளவில்லாமல் ஏற்றிவிட்டு அவன் பரலோகம் சென்ற பிறகு கதை விடுகிறாய். அவன் உன் மனதை கவரும் பொது தெரியவில்லையா திருமணமான நம் மனதையே இப்படி சீக்கிரம் மாற்ற தெரிந்த இவனுக்கு மற்ற பெண்களை மடக்க எவ்வளவு நேரம் ஆகும் என்று? அவனுடன் சந்தோசமாக இருக்கும்போது தெரியவில்லையா அவன் இதே போல் பல பெண்களும் இருந்திருக்கமாட்டானா என்று? எல்லாம் முடிந்த பிறகு கடைசியில் உனக்கு ஞானோதயம் பிறந்திருக்கிறதா? உன் கணவன் உன்னை விட்டு பிரிந்து சென்றது என்ன காரணத்திற்காகவாவது இருந்து போகட்டும். அப்படி உன் கணவன் பிரிந்த பிறகு சமூகத்தில் நீ நேர்மையாக வாழவேண்டும் என்றால் ஒரு நல்ல நேரத்தில் ஒரு நல்லவனை நீ திருமணம் செய்து இருக்கவேணும். அப்படி இல்லையென்றால் யாருடைய தயவும் இல்லாமல் உன்னால் இந்த சமூகத்தில் வாழ்ந்திருக்க இருக்கவேண்டும் அதுவும் இல்லை. உனக்கு ஒரு ஆண் மூலம் உன் வாழ்க்கையில் உனக்கு தேவையான உதவிகள் கிடைக்க வேண்டும். ஆனால் அந்த ஆணின் தேவைகள் உனக்கு தேவை இல்லை. நீ சுதந்திரமாக வாழவேண்டும் என்று நினைத்தால் முதலில் நீ யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது. அப்படி சார்ந்து இருக்கவேண்டிய கட்டாயம் இருந்தால் சார்ந்து இருப்பவரின் தேவைகளையும் நீ பூர்த்தி செய்யவேண்டும். உன்னால் உன் அழகால் ஒரு உயிர் போனது தான் மிச்சம். இருக்கும் உன் குழந்தைகளையாவது ஒழுங்காக சமூகத்தில் முன்னேற்று   09:34:16 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

செப்டம்பர்
12
2018
சினிமா புகை பிடிக்கும் ஸ்ரேயா : பிறந்த நாள் அதிர்ச்சி வீடியோ...
அடுத்து சரக்கு அடிப்பது போல் காட்சிகள் வரும் அடுத்து இன்னும் பல பல மேட்டர்கள் சினிமாவில் இருந்து வெளிவரும். இவர்கள் தான் இந்நாட்டில் வாழப்பிறந்தவர்கள் ஆளப்பிறந்தவர்கள். பார்த்து உஷாராக கருத்து போடுங்கள் நாளை இவர்கள் கூட நாட்டின் முதலமைச்சராக வந்தாலும் வருவார்.   09:33:00 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X