Suresh : கருத்துக்கள் ( 1001 )
Suresh
Advertisement
Advertisement
நவம்பர்
1
2018
கோர்ட் அஸ்தானாவுக்கு எதிராக ஆதாரம் உள்ளது டில்லி கோர்ட்டில், சி.பி.ஐ., பதில் மனு
CBI உயர் அதிகாரிக்கு எதிராக தூண்டிவிடப்பட்ட அதிகாரி இவர், மத்திய அரசின் ஊதுகுழல் இவர், பரபரப்பை திசை திருப்ப அரசு எடுக்கும் முயற்சி ..மக்களை முட்டாள் ஆக்க நினைக்கும் செயல்...   07:00:12 IST
Rate this:
6 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
28
2018
பொது அள்ளிக்கோ! வீட்டிற்கே மணல் சப்ளை செய்ய முடிவு
அனைத்திலும் அரசு மூக்கை நுழைப்பது திட்டங்களை நாளடைவில் நீர்த்துபோகச்செய்யும். தற்போதுள்ள சூழ்நிலையில் அரசு அனைத்து மக்களுக்கும் மணலை எப்படி கொண்டுபோய் சேர்க்கப்போகிறார்கள். பதிவு செய்தவுடன் மணல் கிடைக்க வாய்ப்பில்லை அதனால் இடைத்தரகர்கள் ஆங்காங்கே முளைப்பார்கள் அவ்ளவுதான் நடக்கப்போகிறது. இன்னும் பல தனியார் நிறுவனங்களுக்கு இறக்குமதிக்கு அனுமதியை வழங்கிவிட்டு தர கட்டுப்பாட்டை அரசின் கையில் வைத்திருந்தால் மட்டும் இந்த திட்டம் நிலைக்கும் என்ன ஒண்ணு அவ்வாறு செய்யும் பொழுது அரசியல்வாதிகளுக்கு வரும்படி குறையுமே. கப்பலில் வந்தால் எனக்கும் ஒண்ணு இருக்கட்டும் என்று யார்தான் நினைக்கமாட்டார்கள்...   04:25:49 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
24
2018
பொது சி.பி.ஐ.,யில் ரூ.3 கோடி ஊழல் புகாரால் மத்திய அரசு... அதிரடி!
உயர் பதவிகளை வகிப்பவர்கள் தங்களுக்கு கீழ் உள்ள இரண்டு நபர்களிடம் சண்டையை மூட்டி விட்டு காரியத்தை கட்சிதமாக முடிப்பது பொதுவாக நடைமுறையில் உள்ள வழக்கம். விஜய்மாலியா நாட்டை விட்டு கிளம்பும் பொழுது அருண் ஜெய்ட்டிலிக்கு தெரியாது அதேபோல் அம்பானி சகோதரர்களின் உறவினர் சின்னமோடி வெளிநாட்டிற்கு செல்லும் பொழுதும் பிரதமருக்கு தெரியவே தெரியாது. நான்கு நீதிபதிகள் மீடியாக்களுக்கு தங்களுக்குள் உள்ள குழப்பங்களை வெளியில் தெரிவித்தபொழுதும், தற்போது CBI டைரக்டர்ஸ் சண்டை போடும்பொழுதும் பிரதமர் மிகவும் கருணை உள்ளத்தோடு மத்தியஸ்தம் செய்து நேரத்தை வீணடித்துவிட்டார்..காங்கிரஸ் கட்சி ஊழல் செய்து நாட்டு மக்களை வெறுப்படையச் செய்தார்கள் ஆனால் இவர்களோ ஒரு துறையையும் விட்டு வைக்கவில்லை...   07:35:29 IST
Rate this:
7 members
1 members
14 members
Share this Comment

செப்டம்பர்
22
2018
அரசியல் நாகர்கோவில்! மாநகராட்சி ஆகிறது... முதல்வர் அறிவிப்பு
முதல்வருடைய மாநகராட்சி முயற்சியினை வரவேற்கலாம் ஆனால் அதற்கு முன்பு இதனால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை அரசு வெளியிடவேண்டும் அல்லது செய்தி நிறுவனங்களாவது வெளியிடவேண்டும்..சாதக பாதகங்களை அறிவதற்குள் எப்படி மக்கள் எங்கு மகிழ்ந்தார்கள்? ஒருவரை உயர்த்தி பேசி காரியம் சாதிப்பது மிகவும் எளிது அதேபோல் மக்களிடமிருந்து அதிக பணம் வசூலிக்கலாம் என்ற எண்ணத்தில் அரசு செயல்படாது என்பதே குமரி மக்களின் நம்பிக்கை...   03:04:14 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
7
2018
அரசியல் ராகுல் வெளியிட்ட புகைப்படம் போலி மத்திய அமைச்சர் காட்டம்
அட அறிவாளி அமைச்சரே மனிதனின் நிழல் அவர்களுடைய வலது பக்கத்தில் தெரிகிறது கைத்தடியின் நிழலும் வலது பக்கத்தில் பூமியில் தான் தெரியும் ஆகாயத்தில் நிழல் தெரியாது நிழல் படும் இடம் படத்தில் வந்திருக்க வாய்ப்பில்லை படத்தை எடுத்தவர் நிழலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்க மாட்டார் இது தெரிந்திருந்தால் மனிதனை விட அதற்கு முக்கியத்துவம் கொடுத்து கிளிக் செய்திருப்பார்...   09:50:49 IST
Rate this:
5 members
0 members
19 members
Share this Comment

ஏப்ரல்
30
2018
அரசியல் கர்நாடகாவில் இன்று முதல் தீவிர பிரசாரத்தில் குதிக்கிறார்! மோடி...
நாட்டுடைய பிரதமர் பதவியில் இருக்கும்பொழுது தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதிக்கவேண்டும்..மாநிலத்தை வளைக்க சிலவிடும் நேரத்தையும் பணத்தையும் நாட்டின் வளர்ச்சியில் காட்டவேண்டும்..பிரதமர் ஒட்டுமொத்த நாட்டிற்கு சொந்தமானவர் தனி மாநிலத்திற்கில்லை...போன வருடம் குமரிமாவட்டத்தில் ஒக்கி புயல் பாதித்தபொழுது பிரதமர் குஜராத்தில் தீவிர பிரச்சாரத்தில் இருந்தார் 3 வாரங்கள் கழித்து ஒப்பனைக்காக வந்ததைப்போல் வந்து 273 கோடி 95 பைசா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊறுகாய் வாங்குவதற்கு கூட பத்தாத அளவிற்கு கொடுத்து விட்டு சென்றார்..வருங்காலங்களிலாவது மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்வதை தடைசெய்வதற்கு தனி சட்டம் கொண்டுவரவேண்டும்..   10:15:10 IST
Rate this:
10 members
0 members
22 members
Share this Comment

ஏப்ரல்
27
2018
உலகம் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி கொரிய அதிபர்கள் சந்திப்பு
வட கொரிய மக்களை பட்டினிமேல் பட்டினிபோட்டு சித்ரவதை செய்தது தான் மிச்சம், வடகொரியாவுக்கு சீனா மறைமுகமாக உதவி அமெரிக்காவிற்கு எரிச்சல் ஊட்டிக்கொண்டிருந்தது..தென்கொரிய புதிய அதிபருடைய முயற்சியும் பலன் அளித்துள்ளது, ஊருடன் புகைத்தால் வேருடன் சாயும் என்பார்கள், இனிமேலாவது இவர்கள் ஒற்றுமையோடு செயல்பட்டு நாட்டுமக்களுடைய பட்டினியை போக்கவேண்டும்...   11:03:57 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
27
2018
கோர்ட் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுகள் தி.மு.க.,வுக்கு பளார்!
நீதிபதிகளின் இந்த தீர்ப்பை எதிர்பார்த்தது தான் அதே நேரம் இத்தனை மாதங்களுக்கு மறைத்து வைத்துவிட்டு திடீரென தள்ளுபடி செய்வது காலம் கடந்த ஞான உதயம் போல் உள்ளது..அந்த 18 பேருக்கும் இதே நிலமையாக தான் இருக்கக்கூடும், சபாநாயருடைய முடிவில் இன்னொருவர் குறுக்கிட முடியாது என்பதை தான் கூறப்போகிறார்கள் அது தான் உண்மை நிலையும் கூட.. சட்ட சவையில் எதிர்ப்பிற்குரியவர்களின் படங்களை வைப்பது அதே கட்சி ஆட்சியில் இருக்கும்பொழுது யாராலும் ஒன்றும் செய்ய முடியாது, ஆட்சி மாறும்பொழுது காட்சிகளும் மாறும்...   10:49:30 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

ஏப்ரல்
26
2018
கோர்ட் ஜெ.,யின் ரத்த மாதிரி இல்லை ஐகோர்ட்டில் அப்பல்லோ பதில்
கிட்டத்தட்ட ஆறுகோடி மருத்துவ சிலவிற்காக வாங்கிய மருத்துவமனையில் ஒரு ரத்த மாதிரி சாம்பிள் இல்லை என்பதை எப்படி மக்கள் நம்பப்போகிறார்கள், அப்பல்லோவில் இல்லை என்றால் தீபாவின் DNA வும் அம்ருதாவின் DNA வையும் வைத்து ஒப்பிட்டு பார்க்கவேண்டும்.. தாயை இழந்து கண்டுபிடிக்க முடியாமல் வாடும் அம்ருதாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்...   07:34:44 IST
Rate this:
1 members
0 members
18 members
Share this Comment

ஏப்ரல்
26
2018
சம்பவம் சிறையில் நிர்மலா தேவியிடம் ஆறு மணி நேரம் விசாரணை ஒத்துழைப்பு கொடுத்ததாக சந்தானம் தகவல்
கிராமங்களில் கூறுவார்கள் அசிங்கத்தை அடித்து சிதறடிக்கக்கூடாது செய்தவர்களை சிதறடிக்கவேண்டும் என்று அதுபோல் இங்கு தவறு செய்தவர்களையும், தவறை செய்ய துணை போனவர்களையும், தவறுக்காக காத்திருந்தவர்களையும் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும்..   07:20:44 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X