Ram Mohan Thangasamy : கருத்துக்கள் ( 110 )
Ram Mohan Thangasamy
Advertisement
Advertisement
நவம்பர்
16
2018
சினிமா காற்றின் மொழி
அருமையான படம். கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்கவும். சிரித்து சிரித்து வயிறு புண்ணாகியது.(யோகிபாபு மற்றும் மயிலசாமி காமெடி) ஜோதிகா நடிப்பு அருமை. மற்ற அனைத்து துணை நடிகர்களும் நன்றாக நடித்துள்ளார்கள். நன்றி வணக்கம்   13:57:17 IST
Rate this:
6 members
2 members
5 members
Share this Comment

அக்டோபர்
30
2018
சினிமா செல்போனை தட்டிவிட்ட விவகாரம் : வருத்தம் தெரிவித்த சிவகுமார்...
திரு சிவகுமார் அவர்கள் செய்தது சரிஅல்லவே. அவர் செய்த யோகா இன்று வேலை செய்யவில்லை. ஊருக்கு நிறைய உபதேசம் தான் செய்தார். இன்றைய இளைஞர்கள், இளைஞிகள் செல்பீ மற்றும் டிக் டொக் மோகத்தில் உள்ளார்கள். இந்த இளைஞர் தவறை செய்தாலும் அதை திரு சிவகுமார் திருத்தி இருக்க வேண்டும் அல்லது திரு. கே.ஜே.யேசுதாஸ் சில வருடம் முன் செய்தது போல (அந்த போட்டோவை அழித்தார்). இனிமேல் தமிழ் ரசிகர்களிடம் நடிகர், நடிகைகள் மீது உள்ள மோகம் குறைய வாய்ப்பு உள்ளது. செல்போன் உடைந்த அந்த நபருக்கு புது செல்போன் வாங்கி குடுக்க வேண்டும். நன்றி வணக்கம்   16:39:29 IST
Rate this:
4 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
20
2018
அரசியல் காங்., உடன் கூட்டணி? கமல் பதில்
திரு கமல் காங்கிரஸ் கூட்டணியுடன் வரும் தேர்தலில் போட்டியிட்டால் DMK ஒதுக்கியுள்ள 6 MP தொகுதியில் இருந்து தான் ஒரு தொகுதி கொடுக்க வேண்டும். தென் சென்னையில் போட்டியிட்டு திரு கமல் அவர்கள், அவரின் கட்சியினை வளர்ப்பாராக. வாழ்த்துக்கள்.   13:52:30 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
20
2018
சினிமா புதிய சாதனை படைத்த சர்கார் டீசர்...
இதெல்லாம் படத்தை ஓட்ட செய்யும் வேலைகள். நேற்றோ பார்வையாளர்கள் 6700 இருக்கும் பொழுது 7212 லைக்ஸ் வாங்கியதாக நேற்றைய செய்தியில் வந்தது. ஆகையால் இது படத்தை ஓட செய்ய இது ஒரு உத்தி என்று தான் தெரிகிறது. இன்றைய சோசியல் மீடியா இருந்தால் எதுவும் செய்யலாம். படம் வெல்ல வாழ்த்துகிறோம்.   12:49:18 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
20
2018
பொது அமிர்தசரஸ் விபத்து ஏன்? ரயில்வே விளக்கம்
இது வருந்தத்தக்க செய்தி தான். மக்கள் கூடும் இடத்தில் காவல் துறை அதிகாரிகள் யாரும் இல்லையா?. மக்களின் மதிப்பற்ற உயிர் போனதால் எத்தனை குடும்பம் பாதித்திருக்கும். ரயிலை நிறுத்த முயற்சிக்காத ஓட்டுனரை கைது செய்து தக்க தண்டனை வழங்க வேண்டும். மாநில நிர்வாகமும் பொது கூட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இது போல வரும் காலத்தில் யாரும் இறக்க கூடாது. இறந்த அணைத்து மக்கள் மற்றும் அவரது குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். நன்றி வணக்கம்.   09:28:16 IST
Rate this:
24 members
0 members
26 members
Share this Comment

அக்டோபர்
10
2018
பொது தரணி போற்றும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா நாளை தொடக்கம்
திரு அறிவு நம்பி அவர்களுக்கு, காவேரியில் போன வருடம் செப்டம்பர் 12 முதல் 23 2017 வரை புஷ்கரம் விழா கொண்டாடப்பட்டது. தினமலரின் 12 ராசிப்படி உள்ள ஆறுகள் சரிதானா என்ற சந்தேகம் வருகிறது. தாமிரபரணி அகஸ்திய முனிவரால் உருவாக்கி இன்றும் வற்றாத ஜீவ நதியாக பெருக்கெடுத்து ஓடுகிறது. நதியை காப்பாற்ற வேண்டியது மக்களாகிய நமது கடமை. எதுவாக இருந்தாலும் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து தமிழ்நாட்டிலே கலக்கும் ஒரே நதி தாமிரபரணி என்பதில் சந்தேகமில்லை. நீங்கள் நாத்திகராக இருந்தால் ஒரு தடவை குடும்பத்தோடு சென்று அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி மற்றும் குற்றாலம் அருவிகளில் நீராடி இயற்கையை ரசியுங்கள். நீங்கள் நாத்திகராக இருந்தால், பாபநாசம் சிவன் கோவில் எதிரில் உள்ள தாமிரபரணியில் நீராடிவிட்டு இறைவனையே தரிசியுங்கள். உங்களுக்கு மற்றும் உங்கள் குடும்பத்திற்கு புத்துணர்ச்சி வரும். அந்தஊரில் பிறந்தவன் என்பதால் அதை நீங்கள் அங்கே பொய் தான் அனுபவிக்கவேண்டும். நல்ல தண்ணீர், சுத்தமான காற்று மற்றும் சுகாதாரமான உணவு. நன்றி வணக்கம்.   12:54:39 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

ஜூன்
23
2018
சினிமா
நேற்று (28 .06 .2018) தான் இந்த படத்தை பார்த்தேன். தமிழில் இது புது முயற்சி தான். வரவேற்போம். குடும்பத்துடன் பார்த்து ரசிக்க நல்லதொரு படம். ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் நடிப்பு அருமை. நன்றி வணக்கம்.   15:50:56 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
21
2018
சினிமா அவன் இவன் பட வழக்கு: அம்பை கோர்ட்டில் பாலா, ஆர்யா ஆஜர்...
ஒரு மாமனிதரை பற்றி (சிங்கம்பட்டி ஜாமீன்) படம் எடுக்கும் இயக்குனர் சிங்கம்பட்டி ஜமீனிடம் முறையாக அனுமதி பெற்று அவரது பெயர் மற்றும் புகழ் பரவ காரணம் இல்லமால் ஜமீனை சிறுமையாக கட்டுவது பாலா போன்ற இயக்குனருக்கு அழகல்ல. அதே போல இன்றைய இயக்குனர் ரஞ்சித்தும் காலா கற்பனை கதை என்பதை நெல்லை மக்கள் ஒரு போதும் ஒத்து கொள்ள மாட்டார்கள். இயக்குனர்களே வாழ்ந்த, தெய்வமாக மதிக்கும் மக்களை பற்றி படம் எடுக்கும் பொது தைரியமாக சம்பத்தை பட்டவர்களின் அனுமதியோடு படம் எடுங்கள். நன்றி வணக்கம்.   17:19:50 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
17
2018
சினிமா பிக்பாஸ் சீசன் 2 துவங்கியது : 100 நாள் உள்ளே யார், வௌியே யார்?...
கமல்ஹாசன் & பிக்பாஸ் டீமிற்கு வாழ்த்துக்கள். தமிழ்நாட்டின் பிரச்சினை மற்றும் அறிவார்ந்த சிந்தனையை இந்த குழு நாட்டிற்கு வழங்கட்டும். வெறும் பொழுது போக்காடு இல்லாமல் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளையும் கழுந்துரையாடலில் இருந்தால் இந்த நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெரும். அதே போல உடை விஷயத்திலும் நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் கண்ணியமாக உடை அணியவேண்டும். (நேற்றைய 17 ஜூன் 2018 நிகழ்ச்சியில் ஒரு பெண் தனது கருப்பு நிற பிரா மட்டுமே உடை அணிந்திருந்தார், பலர் ஆபாசமாக உடை அணிந்திருந்தார்கள்). இல்லையேல் "A " தர சான்றிதழ் இந்த நிகழ்ச்சிக்கு வழங்க வேண்டும். நன்றி வணக்கம்.   10:51:02 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
31
2018
சினிமா வருத்தம் தெரிவித்தார் ரஜினி...
திரு ரஜினிகாந்த் அவர்கள் மீது இருந்த மரியாதையை கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் குறிப்பாக ரசிகர்களிடம் குறைந்து கொண்டு தான் இருக்கிறது அவரை தூத்துக்குடி சென்று வந்த பிறகு. தமிழர் புத்தாண்டில் காற்று, நீருக்காக நாம் போராட வேண்டும் என்று சொன்னவர், போராடிய மக்களை சமூக விரோதிகள் என்று சொல்வதை பெருவாரியான மக்கள் விரும்ப மாட்டார்கள். தமிழர்களின் வாழ்க்கையே தினம் தினம் போராட்டமாக தான் இருக்கிறது. இறைவன் ஒருவன் தான் தமிழ்நாட்டையும் மக்களையும் காக்க வேண்டும். நன்றி வணக்கம்.   09:21:59 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X