Jaya Ram : கருத்துக்கள் ( 748 )
Jaya Ram
Advertisement
Advertisement
செப்டம்பர்
12
2017
அரசியல் சசிகலா பொதுச்செயலாளர் நியமனம் ரத்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்
நீங்கள் செய்வது சரிதான் ஆனால் அதிமுகவில் தலைவர் என்ற பதவி கிடையாது அதற்கு பதில் அவைத்தலைவர் என்ற பதவிதான் உருவாக்க பட்டது எம் ஜி ஆரால் ஏனெனில் திமுகவிற்கு தலைவர் பதவி கிடையாது பெரியார்தான் தலைவர் என்று அண்ணா அறிவித்தார் ஆனால் கலைஞர் வந்தவுடன் பதவி மோகத்தினால் செயலாளர் பதவியினை டம்மியாக்கி தான் தலைவராகி அனைத்து அதிகாரத்தினையும் அவர் கீழ் கொண்டு வந்தார் எனவே அந்நிலை வரக்கூடாது என்பதற்காகத்தான் அண்ணாவே இக்கட்சியின் தலைவர் என்று கூறி தலைவர் பதவியினை காலியாக வைத்தார், கூட்டங்கள் நடத்துவதற்கென அவைத்தலைவர் நியமிக்க பட்டார் முதலில் இ வே வள்ளிமுத்து அவர்கள் அவைத்தலைவரஆக நியமிக்கப்பட்டார் அதன் பின்னர் அதே வழியில் மது சூதனன் நியமிக்க பட்டார் ஆனால் எம் ஜி ஆர் இருக்கும்போதே நெடுஞ்சழியன், ப உ சண்முகம் போன்றவர்கள் பொதுச்செயலாளர் பதவி வகித்தனர், எனவே பொதுச்செயலாளராக எம் ஜி ஆர் காலத்து கட்சி துவங்கிய காலத்தில் இருந்து இருப்பவர் ஒருவரை விரைவில் தேர்ந்தெடுங்கள், அவருக்கு உறுதுணையாக வேண்டுமென்றால் வழிகாட்டும் குழு இருக்கலாம் ஏனெனில் இப்போ திமுகவில் அன்பழகனுக்கு எந்த பவரும் இல்லை இருப்பினும் அவர்பெயரால் தான் கட்சியின் சேர்த்தல், நீக்கல்,தேர்தல் கமிசினில், மனுகொடுத்தல் போன்றவைகள் அதிகாரபூர்வமாக நடைபெறுகின்றன அறிக்கைகளும் அவர்பேரால் வெளியிடப்பட்டால் தான் அதிகாரபூர்வ அறிக்கையாகும் எனவே நம் நாட்டின் ஜனாதிபதி போல் வைத்து செயல் படுங்கள் அப்படி செய்யும் பக்கத்தில் அணைத்து அதிமுக தொண்டர்களும் உளம் மகிழ்வார்கள் விருப்பு வெறுப்பின்றி செயல் பட உதவும் மற்றபடி நீங்கள் என்ன குழு அமைத்தாலும் தொண்டர்கள் மத்தியில் வெறுப்பினை உருவாக்கும் தவிர செயல் பட தொண்டர்கள் இருக்க மாட்டார்கள் மற்றபடி ஏற்கனவே உள்ள செயலாளர்கள் பொறுப்பில் ஏற்கனவே உள்ளவர்களே தொடரலாம் என்பது இந்த இயக்கத்திற்கு ரத்தம் சிந்தி வளர்த்த தொண்டர்களில் ஒருவனின் வேண்டுகோள்   12:13:52 IST
Rate this:
4 members
0 members
22 members
Share this Comment

செப்டம்பர்
6
2017
அரசியல் பொதுக்குழு உறுப்பினர்களை திரட்டும் பணி அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் தீவிரம்
எப்படியோ எம் ஜி ஆர் , மற்றும் நாங்கள் ரத்தம் சிந்தி வளர்த்த இந்த இயக்கம் கயவர்கள் கையில் போய்விடாமல் காப்பாற்றினால் வரவேற்போம்   17:30:43 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
6
2017
பொது தொடர் கனமழைவேகமாக நிரம்பும் தமிழக அணைகள்
அப்பா அதிகாரிகளே, ஊர்மக்களே, விவசாயிகளே அந்தந்த ஊர் இளைஞர்களே நீங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அரசினை எதிர்பார்க்காமல் அவரவர் ஊர் ஏரி, குளம் ,கண்மாய் வாய்க்கால்களை சீர்செய்தும் கரைகளை பலப்படுத்தியும் வைத்து இந்த மழை நீர் வீணாகாமல் சேமிக்க பாருங்கள் குடத்தினை தூக்கி மறியலுக்கு வரும் பெண்களையும் வணங்கி கேட்டுக்கொள்கிறேன் தன் கையே தனக்குதவி என்று நினைத்து தண்ணீரை சேமியுங்கள்   17:23:26 IST
Rate this:
0 members
1 members
14 members
Share this Comment

செப்டம்பர்
2
2017
அரசியல் தைரியம் இழக்காதீங்க! செங்கோட்டையன் அறிவுரை
ஆமாம் உங்களின் இந்த சண்டை இல்லாமல் இருந்திருந்தால் நீட் தேர்வினை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பியதோடல்லாமல் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்திருந்தால் இந்நிலைமை ஏற்பட்டிருக்காது மேலும் எம் ஜி ஆர் தொண்டர்களாக நீங்களே இப்படி பேசுவது வெட்கமாக இருக்கிறது   17:21:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
2
2017
அரசியல் ஓரிரு நாள் காத்திருப்போம் தினகரன்
ஆமாம் அதிமுக இவனோட அப்பன் வீட்டு சொத்து அதனால் இவனும் இவனோட சித்தியும் அவர்களை நியமித்தார்கள், ஏதோ எம் ஜி ஆர் செய்த தவறு ஜெயாவை கட்சியில் சேர்த்தது, அதனால் வந்த வினைகள் தான் இவைகள் பாவம் அம்மா இல்லாமல் இந்த பெண் ( ஜெயா ) அனாதையாக ஆதரவில்லாமல் இருக்கிறாளே என்று சேர்த்தார் ஆனால் அவர் கடைசியில் கட்சிக்காரர்களிடம் கூறவும் செய்தார் அந்த செய்தி பத்திரிக்கையில் வராமல் அப்போதிருந்த மறைந்த கே ஏ கிருட்டிணசாமியால் மறைக்கப்பட்டது அதன் விளைவு சுயநலமிக்க ஊழல்வாதிகள் இதில் உள்ளே நுழைந்து விட்டனர் ஒண்ட வந்த பிடரி ஊர்ப்பிடாரியினை விரட்டியது போல் எம் ஜி ஆரின் விசுவாசிகளும் இந்த கட்சியினை உருவாக்கி ஆட்சிக்கு கொண்டுவந்தவர்களும் வெளியேற்றப்பட்டனர் அல்லது மனம் வெதும்பி ஒதுங்கினர் இதுவே உண்மை இன்று இவனெல்லாம் பேசும் பேச்சுக்களை கேட்கும்போது கண்களில் ரத்தக்கண்ணீர் தான் வருகிறது அந்த (ஜெயா) அம்மாவிற்காவது அந்த கதி ஆனால் இவர்களுக்கு என்ன கதியோ ஏழை தொண்டர்களின் சாபங்கள் சும்மா விடாது. அந்த தொண்டன் எம் ஜி ஆர் வாழ்க என்ற கோஷத்தினை தவிர வேறெந்த சந்தோஷமும் அறியாதவர்கள்   16:09:37 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

செப்டம்பர்
1
2017
கோர்ட் போபர்ஸ் பீரங்கி வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு
இந்த நாட்டில் அறிவாளிகளுக்கு அளவே இல்லை என நினைக்கிறன், அதில் உள்ள முக்கிய குற்றவாளியேவே ஒரு பிரதமர் அவர் நல்ல கௌரவமான மனிதர் அவர்மீது தவறான வழக்கினை பதிவு செய்து விட்டோமென 18 வருட சி பி ஐ யின் உழைப்பையே வீணடித்து அவரை இந்த வழக்கில் இருந்து விடுவித்து விட்டனர். இன்னுமா இந்த கேஸ் நடக்கவேண்டுமென்று மக்கள் நினைக்கிறார்கள் என்று உச்ச கோர்ட் நினைக்கிறதா? வேண்டாமப்பா நாடு முன்னேற்றத்திற்கான வழியினை பாருங்கள், இந்த ஆதார், நதிநீர் இணைப்பு , மருத்துவ வசதிகள்கிடைக்காதது போன்ற வழக்குகளில் விரைந்து விசாரித்து தீர்வினை கண்டறியுங்கள் அந்த 1400 கோடியும் யார் பைகளுக்கு போகவேண்டுமோ அங்கு சென்றுவிட்டன இனியென்ன அந்த 1400 கோடி வருவதாக இருந்தால் வழக்கினை நடத்தலாம் இல்லயெனில் அடுத்த வழக்குகளை விரைந்து முடிக்கலாம்   12:25:56 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
31
2017
பொது பிறந்த நாளில் கட்சி துவக்கம்? தீவிர அரசியலில் இறங்குகிறார் கமல்
வேண்டாத வேலை இன்னொரு விஜய்காந்த் உருவாகிறார்   11:23:06 IST
Rate this:
7 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
31
2017
அரசியல் சில நாட்களில் ஆட்சி மாற்றம் ஸ்டாலின் திடீர் நம்பிக்கை
அப்பா ஸ்டாலின் உங்களுக்கு மேடையில் ஏறவில்லையா அல்லது மக்களையும் ஏனைய அரசியல் கட்சிகளயும் ஏமாற்ற நினைக்கிறீர்களா ? பன்னீர்செலவம் 10 எம் எல் ஏ க்கள் கேட்டவுடன் நம்ம்பிக்கை வாக்கு கோரவைத்தார் என்ற தவறான தகவலை மீண்டும், மீண்டும் சொல்கிறீர்கள் அது அப்படி அல்ல அவர்க முதலில் முதல்வர் பதவியினை ராஜினாமா செய்தார் அதை கடிதம் மூலம் கவர்நர் அலுவலகத்திற்கு தபால் மூலம் கொடுக்கப்பட்டது அதை திரும்ப பெறுவதாகவும் தன்னை மீண்டும் முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்ய அழைக்குமாறு காவெர்னோரை சந்தித்து கேட்டார் , அதே சமயம் சசிகலாவும் தன்னை அழைக்குமாறும் தனக்கு ஆதரவு தரும் எம் ஏக் ஏ க்களின் பட்டியலை கொடுத்தார் ஆனால் கோர்ட் அவருக்கு தண்டனை கொடுத்தவுடன் பழனிச்சாமியின் பெயரில் ஆட்சியமைக்க மனு கொடுக்கப்பட்டது எனவே ஏற்கனவே தன்னுடைய ஆதரவு எம் எல் ஏ க்களின் ஆதரவினை பெற்று மெஜோராட்டி நிரூபிப்பதற்கே அப்போது அவருக்கு உத்தரவிடப்பட்டது ஏற்கனவே ஆண்டு கொண்டிருந்த ஆட்சியினை மெஜோராட்டியை பன்னீர் செல்வத்தின் 10 எம் எல் ஏ க்களுக்காக நிரூபிக்க சொல்லவில்லை 5 ஆண்டுகால துணை முதல்வர், இப்போ எதிர்க்கட்சித்தலைவர் என கட்சியில் உள்ள சீனியர்களை பின்னுக்கு தள்ளி பதவி சுகம் அனுபவிக்கும் உங்களுக்கு எங்கே இதெல்லாம் புரிய போகிறது இப்போதைய நிகழ்வும் அதிமுகவின் 19 எம் எல் ஏ க்களும் முதல்வரை மாற்றவேண்டும் அவர்மீது நம்பிக்கை இழந்து விட்டதாக கூறி , ஒன்றிணைந்து கூட இல்லை தனி தனி யாக மனு கொடுத்துள்ளனர்,அவை அனைத்தும் தனி நபராக கருதப்படும் தவிர 19 பேராக கருதப்படாது மேலும் அவர்களில் 135 பேரில் 19 பேர் மட்டுமே முதல்வரை மாற்ற வேண்டும் என்று மனு கொடுத்துள்ளனர் எனவே மீதமுள்ள 116 பேர் முதல்வருக்கு ஆதரவாக அவருடைய கட்சியில் உள்ளனர் இது மெஜாரோட்டி அவர்கள் கட்சிஇல் , எனவே இது முழுக்க முழுக்க உள்கட்சி விவகாரம் அவர்கள் கட்சியில் தான் போராடவேண்டும் தவிர கவர்னரிடம் போய் முறையிடக்கூடாது, மேலும் கவர்னருக்கு முதல்வரை மாற்றுவதற்கு உரிமையில்லை வேண்டுமென்றால் உங்களுக்கு இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லை என்றால் நீங்கள் தாராளமாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரலாம் சட்டசபை கூடும்போது அதுவரை காத்திருக்கத்தான் வேண்டும் இல்லையேல் லண்டன் சென்று ஓய்வெடுங்கள் ராகுல் மாதிரி   11:18:00 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2017
அரசியல் யாருக்கு ஆதரவு? முடிவெடுக்காத அதிமுக கூட்டணி எம்எல்ஏக்கள்
இவ்வளவு பேசும் நீங்கள் ஏன் அவர்களிடம் இப்படி பேசக்கூடாது, இப்போது பிரச்சினை தினகரன், பன்னீர் , பழனிச்சாமி தானே எனவே இவர்கள் மூவரும் அணைத்து பொறுப்புகளில் இருந்து விலகட்டும், ஆட்சிக்கு ஏற்கனவே ஜெயா முதல்வராக இருந்த போது ஜெயா பண்ணீருக்கு அடுத்து யார் இருந்தது அவரை முதலமைச்சர் அல்லது அனைத்து எம் எல் ஏக்களும் கூடி ஏகமனதாக தேர்ந்தெடுக்கும் ஒருவரை முதல்வராக்குவது இதில் இந்த மூவரும் எந்த எம் எல் ஏ வுடனும் கொஞ்சம் கூட தொடர்பு வைத்திருக்க கூடாது,மேலும் ஜெயலலிதா காலத்தில் யாருக்கு மந்திரி பதவி கொடுத்தாரோ அவர்கள் மட்டுமே மந்திரி பதவி வகிக்க வேண்டும், மாற்றங்கள் எதுவும் கூடாது, எனக்கு மந்திரி பதவி வேண்டும் என்கிறவர்கள் வேண்டுமானால் அவர்கள் சொந்த செல்வாக்கில் அதிமுக .இரட்டைஇலை என்ற கவசம் இல்லாமல் போட்டியிட்டு வென்று வந்த பிறகு பார்க்கலாம், கட்சிக்கு எம் ஜி ஆர் காலத்தில் இருந்து வரும் செம்மலை, பி ஹட்ச் பாண்டியன் , கோ சமரசம், தம்பிதுரை, இன்னும் கட்சி துவங்கிய காலத்தில் இருந்தவர்களில் நல்லவர் கட்சியினை காப்பாற்றக்கூடியவர் என்பதில் விலை போகாதவராகவும் இருக்கவேண்டும் அவரை பொதுச்செயலாளராக்குங்கள் இவை அனைத்தும் தற்காலிக ஏற்பாடுதான் விரைவில் மாவட்டம் தோறும் போது செயலாளருக்கான தேர்தல் நடத்தி அதில் ஜெயித்து வருபவர் தன கட்சிக்கு பொதுச்செயலாளராக வரவேண்டும் அதில் யார் வேண்டுமானாலும் போட்டி போடலாம் யாரும் தடுக்க கூடாது குறைந்த பட்சம் அவர்மீது எந்த வழக்கும் இருக்ககூடடது அப்படி இருந்து மறைத்து வெற்றி பெற்றதாகும் பின்னர் கண்டுபிடிக்க பட்டால் பதவியும் பறிபோகும் அடுத்த அதிக வோட்டை பெற்றவர் பொதுச்செயலாளராகி விடுவார் இதற்க்கு கட்டுப்பட்டால் ஆட்சி,மற்றும் கட்சியும் நிலைக்கும் இல்லையேல் ??????????????   17:32:44 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
25
2017
அரசியல் ஜெ., நியமித்தவர்கள் நீக்கம் தினகரன் தினமும் அறிவிப்பு
யார் உருவாக்கிய கட்சியில் யார் வந்து நாட்டாண்மை செய்வது எம்ஜி ஆர் தொண்டர்களை இந்த ஜெயா ஒதுக்கியதால் வந்த வினைதான் இந்த பொறம்போக்குகள் எல்லாம் இப்போ ஆடுகிறதுகள். உண்மையிலேயே கட்சி துவங்கி அடிதடி, குத்து, வெட்டு எல்லாம் சந்தித்த தொண்டர்கள் எல்லோரும் இவர்களின் வேடிக்கை வருத்தத்துடந்தான் பார்க்க உள்ளது ஏனெனில் அவர்கள் எல்லோரும் ரோசம் மிக்கவர்கள் ஜெயாவின் தொண்டர்கள் போல் மானங்கெட்டவர்கள் அல்ல அவர்கள் 1972 முதல் 1977 வரை வழக்கினை சந்தித்தவர்கள் இவர்கள் போல் வந்தவுடன் பதவி சுகம் பெற்றவர்கள் அல்ல, பதவிகளை துச்சமாக மதித்தவர்கள் ஜானகி அம்மா என்ன செய்தார்கள் கட்சியில் நமக்கு செல்வாக்கு குறைவாக இருக்கிறது என்றவுடன் ஜெயாவை கூப்பிட்டு உடனே கட்சியினை ஒப்படைத்து விட்டு அவர் பாட்டுக்கு வீட்டுக்கு சென்றுவிட்டார் அவருடைய உறவினர்கள் யாரும் கட்சியில் தலையிடவும் இல்லை,வரவும் இல்லை, ஆனால் இந்த சசிகலா என்ன செய்திருக்க வேண்டும் இவர்கள் கூறுவது போல் 30 ஆண்டுக்காலம் ஜெயாவுடன் இருந்ததனால் அவர் விட்டுச்சென்ற கட்சியினை எனக்கு தண்டனை கிடைத்துவிட்டது என்னால் கட்சிப்பணியில் செயல்பட முடியாது எனவே அனைவரும் ஒன்றுபட்டு செயல் படுங்கள் என்னுடைய குடும்பம் உங்கள் கட்சியில் தலையிடாது என்று கூறி கட்சியில் இருந்த மூத்த தலைவர்கள் ஒருவரை அழைத்து அவரிடம் செயலாளர் பொறுப்பினை ஒப்படைத்திருந்தால் அவர் மதிக்கப்பட்டிருப்பார் ஆனால் கலைஞர் போல் பதவி என்றால் மகன், மகள், பேரன்கள் இவர்களுக்கு எல்லாம் போக மீதி இருந்தால் மட்டுமே அவருடைய அடிமைகளான துரைமுருகன், அன்பழகன், ஆற்காட்டார் போன்றவர்களுக்கு கொடுப்பார் அது போல இவருடைய அக்காள் மகனாம் இந்தக்கட்சி ஆரம்பிக்கும் போது ட்ரவுசர் போட்டிருந்தவரை எல்லாம் செயலாளரும் எந்த எம்ஜிஆர் தொண்டன் ஏற்றுக்கொள்வான் இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதின் நோக்கமே , 1 . ஊழல் எதிர்ப்பு 2 . வாரிசு அரசியல் கூடாது என்பது தான் அந்த நோக்கங்களை சிதைத்ததில் மன்னார்குடி கும்பல் என்றுதான் சொல்லவேண்டும். அது புரியாமல் இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வேறு தமிழ்நாட்டு மக்களை மடையர்களாக்கி கொண்டிருக்கிறார்கள், இன்னொருவர் ஸ்டாலின் என்றொருவர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னர் உத்தரவிடவேண்டும் என்கிறார் ஏன் இவ்வளவு நாட்களாக சட்டசபையினை கூட்டுங்கள் என்று சும்மா கூச்சலிட்டனர் இப்போது நாங்கள் இந்த ஆட்சியின் மீது நம்ம்பிக்கையினை இழந்துவிட்டோம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருகிறோம் சட்டசபையினை கூட்டுங்கள் என்று கூற வேண்டியது தானே. என்னமோ இவர்தான் ஜீனியஸ் என்று நினைத்துக்கொண்டு பிதற்றுகிறார். இப்போ தமிழ் நாட்டில் அரசியல் ப்ரோக்கர்கள் பெருத்து விட்டார்கள், வீரமணி,எஸ்ரா சற்குணம்,சுபவீரபாண்டியன், இவர்கள் திமுகவின் ஆஸ்தான ப்ரோக்கர்கள் ஆதீனம், தமிழருவி மணியன், வை கோ, ஸ்டாலின், நாராயணசாமி ,சுப்ரமணியசாமி , போன்றவர்கள் நிலைமைக்கு தகுந்தாற் போல் பங்காற்றுபவர்கள்   16:46:46 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment