Pats : கருத்துக்கள் ( 57 )
Pats
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
16
2017
சம்பவம் தி.மு.க., தலைவர் கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
இன்னும் ஒரு 5 ஆண்டுகள் இவர் நினைவுடன் இருக்கவேண்டும். திமுக அழிவதை பார்க்கவேண்டும்.   07:22:07 IST
Rate this:
24 members
0 members
42 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2017
அரசியல் கொடியேற்றிய போது திடீரென தடுமாறிய முதல்வர்
58-60 வயது வரை பணத்தின் பின்னால் ஓடுபவன், நின்று நிதானித்து, தான் கடந்துவந்த பாதையை திரும்பி பார்த்து, பக்குவப்பட்ட, ஒரு சீர்மிகு தந்தை ஸ்தானத்தில் இருந்து தனது குடும்பத்தினரையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து அந்த சமீகத்தின் மூத்தவராக, நலன் காப்பவராக உருவெடுத்து 60 வயத்திற்கு பிறகுதான். இது அவரின் அனுபதின்மூலம் கற்ற வாழ்க்கை பாடம் அதுபோலவேதான் அரசியல் தலைவர்களும். மூத்தோர் வழிநடத்த இளையோர் முன்னேறும் நிர்வாகமே சிறந்ததாக இருக்கும். தலை சரியில்லையென்றால் வால் ஆட்டம்போடும். உதாரணம் கருணாநிதி, ஜெயா.   07:20:11 IST
Rate this:
1 members
2 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2017
அரசியல் நீட் தேர்வு விவகாரம் முதல்வர் ராஜினாமா செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்
எல்லோரையும் பதவி விலக சொல்லுங்க. அப்படியே கட்டுமரத்தை ஜனாதிபதி ஆக்குங்க, ராஜாத்தியை உபஜனாதிபதி ஆக்குங்க, கனிய பிரதமர் ஆக்குங்க, ராசாவை மத்திய கல்வி அமைச்சர் ஆக்குங்க, நீங்க முதலமைச்சர் ஆயிடுங்க... நாடு விளங்கிடும்.   15:41:30 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2017
அரசியல் நீட் தேர்வு விவகாரம் முதல்வர் ராஜினாமா செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்
ராஜினாமா செஞ்சா சரி ஆயிடுமா? இவரு முதல் அமைச்சரானா அப்படியே பாலும் தேனும் ஓடும்.   15:35:52 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2017
அரசியல் நீட் தேர்வில் தமிழகத்திற்கு ஒராண்டு விலக்கு? நிர்மலா தகவல்
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் (13/08/2017 அன்று டிவியில் சொன்ன) கருத்தை கூர்ந்து கவனித்தால் விவரம் புரியும். நீட் ரேங்கில் சமச்சீர் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் பெரும்பாலும் தோல்வியடைந்துள்ளனர். பாஸ் செய்த மிகச்சிலரும் மிக கேவலமான ரேங்க் எடுத்துள்ளதால், மருத்துவ படிப்புக்கு சமச்சீர் திட்டத்தில் படித்த 99% பேருக்கு அட்மிஷன் கிடைக்காது. ஏற்கெனவே சமச்சீர் முறையில் படித்தவர்களில் மிக குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கே மருத்துவ அட்மிஷன் கிடைத்தது. இந்தமுறை அதுகூட கிடைக்காத சூழல். எனவேதான் அதிமுக அரசின் அவசர சட்ட முயற்சி. நீட் என்பது சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி இந்தியா முழுமைக்கும் பொதுவானதால் மத்திய அரசு பெரிதாக ஏதும் செய்யமுடியாது என்பதுதான் உண்மை. அப்படியே அவர்கள் தலையிட்டாலும் வேற்று மாநில அரசுகளோ, மாணவர்களோ கோர்ட்டுக்கு போகும் வாய்ப்பு மிக அதிகம். அப்படி அவர்கள் கோர்டுக்குப் போனால் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டின் கண்டனத்துக்கு ஆளாக நேரிடும். அதன் மூலம் தமிழக அரசு ஏதும் செய்யமுடிடாத நிலை ஏற்பட்டுவிடும். தமிழக மாணவர்களின் இன்றைய இந்த நிலைக்கு முக்கிய காரணங்கள்: (1) கருணாநிதி கொண்டுவந்த சமச்சீர் திட்டம். ஓரளவு நன்றாக இருந்த மெட்ரிகுலேஷன் கல்வியையும் குழிதோண்டி திமுக புதைத்தது. (2) திமுகவின் இந்த முட்டாள்தனமான முடிவை அன்று ஆதரித்தவர்கள் விசிக, பாமக, கம்யூனிஸ்டுகள், மதிமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள், மற்றும் பிரின்ஸ் கஜேந்திர பாபு போன்ற புல்லுருவிகள். (எதிர்த்தவர்கள் அதிமுக, பாஜக மட்டுமே). (3) நன்மை தீமைகளை சீர்தூக்கி பார்க்காமல் காசுக்காக ஊளையிடும் பத்திரிகைகள், டிவிக்கள், பிரின்ஸ் கஜேந்திர பாபு போன்ற அல்லக்கைகள். (4) பிளஸ் 1 வகுப்புகளை எடுக்காமல் நேரடியாக பிளஸ் 2 வகுப்புகளை இரண்டு ஆண்டுகள் நடத்திய கல்வி நிறுவனங்கள். (5) மார்க் மட்டுமே மருத்துவ அனுமதிக்கு போதும், அதுவும் மனப்பாடம் செய்து வாந்தியெடுத்தால் போதும் என்ற நிலைக்கு மாணவர்களை கொண்டுவந்த அரசு நிர்வாகம், கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள். (6) எல்லாவற்றிற்கும் மேலாக தகுதியற்றவர்களை ஜாதி, லஞ்சம் மூலம் ஆசிரியர்களாக வேலைக்கு அமர்த்தும் அரசாங்கம். இவற்றையெல்லாம் நேர்செய்த / நேர்செய்ய முயற்சியெடுக்கும் பாஜக அரசை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 1. இனி ஆசிரியர்கள் பாடங்களை ஒழுங்காக சொல்லிக் கொடுத்தே ஆகவேண்டும். 2. இனி கல்வி நிறுவனங்கள் எந்த பாடத்தையும் சொல்லிக் கொடுக்காமல் ஏமாற்ற முடியாது. 3. இனி மாணவர்கள் ஒழுங்காக படித்தே ஆகவேண்டும். 4. இனி மருத்துவ கல்லூரிகள் சீட்டுகளை காசுக்கு விற்கமுடியாது. 5. இவை எல்லாம் நன்மைக்கே. சற்று பழைய கதையையும் பார்ப்போம்: சென்ற அதிமுக அரசு பதவிக்கு வந்தவுடன் சமச்சீர் பாடத்திட்டத்தை மாற்ற முயற்சித்தது. அப்போதும் பிரின்ஸ் கஜேந்திர பாபு மற்றும் திமுக, விசிக, பாமக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வம்படியாக எதிர்ப்பு தெரிவித்தனர். கோர்ட்டுக்கு போய் தடை உத்தரவு வாங்கி ஜெயலலிதாவை ஏதும் செய்யவிடாமல் தடுத்தனர். அப்போது மத்தியில் திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தது. வெறுத்துப்போன ஜெயா கைகழுவி விட்டார். பாவம் மாணவர்கள். காரணம் யார்? அதிமுகவா, பிஜேபியா அல்லது இன்றும் தமிழகத்தில் ஆட்டம்போடும், நீலிக்கண்ணீர் வடிக்கும் உருப்படாத கட்சிகளா? இப்போதும் பிரின்ஸ் கஜேந்திர பாபு மற்றும் திமுக, விசிக, பாமக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தாங்கள் செய்த தவற்றையெல்லாம் மறந்துவிட்டு, அதிமுக, பாஜக விற்கு எதிராக அரசியல் மட்டுமே செய்கிறார்கள். படித்ததற்கு நன்றி. வணக்கம்.   15:28:47 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2017
சம்பவம் கேரளாவில் மாணவர்களிடையே பாரபட்சம் காட்டிய பள்ளி
வீடியோவை பார்த்தால் அந்த பள்ளியில் பெரும்பாலான மாணவர்கள் மக்கு என்று அந்த முதல்வர் ஒப்புக்கொண்டது போல் இருக்கிறது. இதேபோல ஒழுங்காக பாடம் நடத்தாத, சொல்லிக் கொடுக்கும் திறமையற்ற ஆசிரியர்களுக்கு காலில் செருப்பு அணியாமல் வரவேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கலாம்.   14:08:43 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2017
கோர்ட் நீட் தேர்வு தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி
Jaya Prakash - Medan,இந்தோனேசியா என்பவர் "குஜராத்தில் 85 சதவிகிதம் ஸ்டேட் கோட்டா சீட் தனி..... வெறும் 15 சதவிகிதம் தான் மத்தவர்களுக்கு." என்று சொல்லியிருக்கிறார். இதேதான் தமிழகத்திலும் 15 சதவிகிதம் ஆல்-இந்தியா கோட்டாவில் வரும் மற்ற மாநில மக்களுக்கானது. 85 சதவிகிதம் மாநில மாணவர்களுக்கு. இப்போது தமிழக அரசு வீம்பு செய்வது அந்த 85 சதவிகிதத்தில் 13 சதவிகிதமே சி.பி.எஸ்.சி. மாணவர்களுக்கு, மீதி 72 சதவிகிதம் சமச்சீர் பாடத்திட்டத்திற்கு ஒதுக்க வேண்டும் என்பது. இதைத்தான் கோர்ட் எதிர்க்கிறது. மாநில மாணவர்களிடம் பாகுபாடு பார்ப்பதை ஏற்கமுடியாது என்று தள்ளுபடி செய்துவிட்டது. Jaya Prakash அவர்கள் சரியாக புரிந்துகொள்ளாமல் கருத்துச் சொல்லியிருக்கிறார்.   15:10:23 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
3
2017
பொது 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து மத்திய அமைச்சரவை ஒப்புதல்
"வச்சா குடுமி, சிரைத்தால் மொட்டை" என்பது போல நாட்டிலேயே மட்டமான "சமச்சீர்" பாடத்திட்டத்தை கொஞ்சநாள் உயர்த்தி பிடித்து வீம்பு செய்தனர். இப்போது "கேம்பிரிட்ஜ்" பாடத்திட்டத்தை கொண்டுவரப்போவதாக பிலிம் காட்டுகின்றனர். இருப்பதை விட்டு, பறப்பதை பிடிக்கும் வீண் முயற்சியாக, கையில் என்.சி.ஆர்.டி./சி.பி.எஸ்.சி. என்ற வெண்ணெய்யை வைத்துக்கொண்டு, "கேம்பிரிட்ஜ்" நெய்க்கு திடீரென அலைய ஆரம்பித்திருக்கிறார்கள். தமிழர்கள் என்ன செய்தாலும் "எக்ஸ்ட்ரீம்" தான். குரங்கு கையில் சிக்கிய பூமாலையாக ஆகிவிட்டது தமிழக குழந்தைகளின் எதிர்காலம். வருத்தமாக இருக்கிறது. நெஞ்சு பொருகுதில்லையே... இந்த நிலைகெட்ட மனிதரை பார்க்கையிலே...   11:59:38 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
3
2017
பொது 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நான் பலமுறை இதற்கு முன் சொல்லிவிட்டேன். தமிழக அரசு இப்போதும் போகாத ஊருக்கு வழி தேடுகிறது. நமது சமச்சீர் பாடத்திட்டத்தை ஒழித்துவிட்டு சி.பி.எஸ்.சி. திட்டத்தை ஏற்றுக் கொண்டு, சமூக அறிவியலில் தமிழகம் சார்ந்த சில பாடங்களை சேர்த்தால் போதும். மற்றபடி கணக்கு, பொருளாதாரம், வர்த்தகம், அறிவியல், ஆங்கிலம் போன்றவை எல்லோருக்கும் ஒன்றே.   11:46:55 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
3
2017
பொது 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து மத்திய அமைச்சரவை ஒப்புதல்
(தொடர்ச்சி) ஒரு ஆசிரியரின் தகுதிகள்: 1. அடிப்படைக் கல்வி (கல்லூரியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்) 2. தொடர்ந்து கல்வி கற்கும் ஆர்வம் (தொடர்ந்து மேற்படிப்பு மற்றும் அறிவுசார் குழுக்களில் உறுப்பினராய் இருத்தல்) 3. பொது அறிவு, பேச்சு திறமை, மற்றவர்களுக்கு கற்பிக்க விருப்பம், பொறுமை, நிதானம், நீதி, நேர்மை, நியாயம், பொறுப்புணர்ச்சி, தன்னலமின்மை போன்ற குணங்கள். 4. மாணவ, மாணவிகளை தன் கண்களாக, தனது குழந்தைகளாக, சகோதர, சகோதரிகளாக பாவிக்கும் தன்மை. 5. எல்லாவற்றிக்கும் மேலாக 5, 8 மற்றும் 10ம் வகுப்புகளில் மாணவர்களின் குணம், திறன் அறிந்து அவர்களை தரம் பிரிக்கும் திறன் இருக்க வேண்டும். விளையாட்டு, இயல், இசை, வீரம், அறிவியல், பொருளாதாரம், வர்த்தகம், விவசாயம், கைத்தொழில் என்று அவரவர் திறமைக்கேற்ப திசைகாட்டும் கருவியாக விளங்க வேண்டும். இவ்வளவு (இதற்கு மேலும்) திறமைகளும் இருப்பவரே ஆசிரியராக தகுதி பெறவேண்டும். அவர்களுக்கு அரசும், மக்களும் சகல உதவிகளையும் கொடுத்து ஆராதிக்கவேண்டும். என்று ஆசிரியர் பணியை ஒரு தொழிலாக இல்லாமல், தேச சேவையாக ஒரு சமூகம் (பெற்றோர், மற்றோர் மற்றும் அரசு) பார்க்க துவங்குகிறதோ அன்றுதான் ஒரு நாடு முன்னேற துவங்கும். (முற்றும்)   11:40:00 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment