Appavi Tamilan : கருத்துக்கள் ( 144 )
Appavi Tamilan
Advertisement
Advertisement
மே
14
2017
வாரமலர் நாத்திக விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்!
அறிவியல் அறிஞர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அனைவருமே கடவுள் என்ற ஒன்று இல்லை என்றும், கடவுள் மற்றும் மதம் ஆகியவை மனிதனால் உண்டாக்கப்பட்டவை என்றும் அறிந்தவர்கள். ஆனால் அதை வெளிப்படையாக சிலர் மட்டுமே சொல்வதன் காரணம், அவர்கள் சிறுவயதில் இருந்தே அவரவர் மதங்களை சேர்ந்த கடவுளை வழிபட்டு வளர்ந்தவர்கள். ஆனால் அவர்கள் வயது மற்றும் மனமுதிர்ச்சி அடைந்தவுடன், கடவுள் என்ற ஒன்று உள்ளதா இல்லையா என்று ஆராய்ந்து அறிகின்றனர். மேலும் கடவுள் இல்லை என்ற உண்மையை அவர்கள் சொன்னால், அது பல கலவரங்களை உண்டாக்கும். குறிப்பாக கடவுளை நம்பும் கும்பல் சண்டை இட்டுக்கொள்ளும். என்னுடைய மதத்தின் கடவுள்தான் உண்மையில் உலகை படைத்தார், அவர்தான் கடவுள். அவர் எங்கோ இருக்கிறார் என்று சொல்லிக்கொள்ளும் எவனும் இதுவரை கடவுளை கொண்டதாகவோ, ஏன் உணர்ந்ததாகவோ கூட ஒப்புக்கொள்ளவில்லை. கேட்டால் கடவுள் எங்கும் இருப்பான், யாருக்கும் தென்படமாட்டான், உனக்குள் இருப்பான் என்றெல்லாம் அலப்பறை கொடுப்பார்கள் ஒழிய நேரடியான பதில் இருக்காது. கடவுளை நம்பியவன் மட்டுமல்ல கடவுள் இல்லை என்று சொல்பவனும் வாழ்வாங்கு வாழவில்லையா? உண்மையில் கடவுள் என்ற ஒன்று இருந்திருந்தால் இதுவரை வாழ்ந்து மடிந்த, கடவுளை நம்பிய ஒருவனுக்குக்கூடவா கடவுள் தென்படவில்லை??? கடவுள் இருப்பதாக சொல்லப்படும் மத வழிபாட்டுத்தலங்களை கடவுள் இருக்கிறார் என்று சொல்பவன்தான் அழிக்கிறான். மனித இனம் தோன்றி சிந்திக்க தொடங்கிய காலத்தில் இயற்கையின் செயல்பாடுகள்தான் அவற்றை யாரோ செயல்படுத்துவதற்காக எண்ணி, அதுதான் கடவுள் என்று துவங்கியது. பிறகு வந்த சில மூடர்கள், மனிதர் இடையே இனம் மற்றும் மத வேறுபாடுகளை உண்டாக்கி அவரவர்க்கு என்று ஒரு கடவுளை உண்டாக்கினார்கள். கடவுள் என்ற ஒன்று மனிதன் படைத்தது. மதங்கள் இவ்வுலகில் இல்லை என்றால், கடவுளே இல்லை. ஆனால் இயற்கை என்றும் இருக்கும். வேண்டுமானால் இயற்கையை கடவுளாக மதிக்கலாம். இயற்கையை அழிக்காமல் இருக்க அந்த மூட நம்பிக்கை ஒருவகையில் உதவும். அதைவிட்டுவிட்டு கல்லையும், சிலையையும், மனிதன் வரைந்த படங்களையும் கடவுளாக வழிபடுவதால் உண்டாகும் நன்மைகளை விட தீமைகளே மிக அதிகம் என்பதை உணரவேண்டும். இவன் வேறு மதத்தை சேர்ந்தவன், வேறு கடவுளை துதிப்பவன் என்று வேறுபாடு பார்க்கும் அறிவிலிகள், அதே வேறு மனிதனால் ஆதாயம் கிடைத்தால் மட்டும் ஏன் ஏற்றுக்கொள்கிறார்கள்??? எளிய சான்று வெளிநாடுகளில் வேலை செய்யும் மற்ற நாட்டவர். நான் கடவுளை நம்புகிறேன். என்னை அவர் காப்பாற்றுவார் என்றால், விபத்தில் அடிபட்டவுடன் ஏன் மருத்துவமனைக்கு செல்கிறார்கள். கடவுளை மட்டுமே வழிபட வேண்டியதுதானே. விஞ்ஞானிகள் மற்றும் அறிஞர்கள் என்ன நம்புகிறார்கள் என்பது மட்டும் முக்கியம் அல்ல. அனைவரும் கடவுள் என்ற ஒரு விடயத்தால் என்ன பலன் என்பதை அறியவேண்டும்.   16:02:24 IST
Rate this:
2 members
1 members
6 members
Share this Comment

மே
9
2017
அரசியல் டில்லி சட்டசபையில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி... காமெடி!ஓட்டு இயந்திரத்திலும் முறைகேடு செய்யலாமாம்
இதே வாக்கு இயந்திரத்தை வைத்து முறைகேடு செய்யலாம் என்றும், இந்த இயந்திரங்கள் மக்களாட்சியை சிதைத்துவிடும் என்றும் முன்னர் இதே பாஜக கூப்பாடு போட்டு அலறியதே. நினைவுள்ளதா??? அவர்களுக்கு வந்தால் ரத்தம், மற்றவர்க்கு வந்தால் தக்காளி சட்னியா? கெஜ்ரிவால் அரசு, பாஜகவின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டுவிட்டது.   21:54:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
7
2017
பொது சட்டையை கிழித்து கொண்ட மாணவர்கள்
நீங்க ரொம்ப அறிவாளின்னு தெரியுதுல்ல. அன்னான் டிடிவி கிட்ட பிடிபட்ட பலகோடி பணம் என்ன அவரு பிச்சை எடுத்ததா?? இல்ல சம்பாதிச்சதா??? 3 வாரத்துக்கு முன்னாடி கன்டைனர்ல கள்ளப்பணம் சென்னை துறைமுகத்துல பிடிபட்டது உங்களுக்கு தெரியுமா??? ஏடிஎம்ல இன்னைக்கு வரைக்கும் போலிநோட்டுங்க அதுவும் தப்பு தப்ப வாங்கி பெயர் அச்சடிச்சு வருது உங்களுக்கு தெரியுமா அறிவாளி? கருப்பு பணம்னா என்னன்னு தெரிஞ்சுட்டு கருத்து சொல்லுங்க. வெறும் அச்சு அசல் கட்சி தொண்டன் மாதிரி மட்டும் கருத்து சொல்லாதீங்க.   23:21:27 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
7
2017
பொது சட்டையை கிழித்து கொண்ட மாணவர்கள்
மோடி ஆட்சியில நாட்டுல என்னவெல்லாம் நடக்குது பாத்தீங்களா??? பணமதிப்பிழப்பு மூலமா கருப்பு பணம் ஒழியும்னு சொன்னாங்க, ஆனா அது இப்போதான் அதிகமாகி இருக்கு. போலி நோட்டுகளை அச்சடிக்கறது இப்போ ரொம்ப எளிமையா இருக்குன்னு சொல்றாங்க. பாஜக ஆட்சிக்கு வந்தா தீவிரவாதம் அடியோடு ஒழியும்னு சொன்னாங்க. ஆனா கடந்த மூணு வருஷம்தான் தீவிரவாத தாக்குதல்கள் மிக மிக அதிகமாகி இருக்கு. இதே மாதிரி, கங்கை ஆற்றை சுத்தம் செய்வோம்னு சொல்லி பல ஆயிரம் கோடி வீணடிச்சது தொடங்கி மாடுகளை காக்கும் ஆரசியல்னு போய், இப்போ மருத்துவ நீட் தேர்வு எழுதற மாணவர்கள் சட்டையை கிழிச்சுக்கற அளவுக்கு நிலைமை மோசமாகி இருக்கு. இதென்ன பிரமாதம் மாடுகளுக்கு ஆதார் கார்டு, காதலர்களை அடித்து துவைக்கும் ஆன்டி-ரோமியோ படைப்பிரிவுன்னு ஸ்பெஷல் ஐட்டம்கள் நெறைய இருக்குன்னு அரசு சொல்றத பாத்தா நாடு என்ன நிலைமைக்கு ஆளாகுமோன்னு அச்சமா இருக்கு.   19:05:34 IST
Rate this:
16 members
0 members
11 members
Share this Comment

மே
2
2017
பொது பாயும் பாக்.,- பதுங்கும் இந்தியாஇது தான் காரணமா?
கை ஆண்டப்போ இதுபோல நடந்த தாக்குதல்களுக்கு குய்யோ முறையோ என்று அலறித்துடித்து கண்டனம் தெரிவித்து, பிரதமர் பதவி விலகியே ஆட வேண்டும் என்று கூப்பாட்டு போட்டவரு என்ன சொல்லுவாரு???   21:57:37 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
2
2017
பொது பாயும் பாக்.,- பதுங்கும் இந்தியாஇது தான் காரணமா?
கையும் கமலமும் ஒன்னு. இதை அறியாதவங்க வாயில மண்ணு.   21:55:10 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
22
2017
சம்பவம் வைகை அணையில் தெர்மோகூல் அமைச்சர் செல்லூர் துவக்கிய கூத்து நீர் ஆவியாவதை தடுக்குமாம்!
அட விடுங்கப்பா... ஏற்கனவே கடலில் கொட்டிய எண்ணையை சிறு வாளி கொண்டு அகற்றியது மட்டுமின்றி அதை பாராளுமன்றத்திலும் சிறு கை அடக்க கருவி கொண்டு அகற்றினேன் என்று அறிக்கை கொடுத்த நமது பொன்னார் அவர்களின் சாதனையை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம் அல்லவா.. அதே போல இத்தனையும் பார்த்து விட்டு அமைதியாக இருப்போம். தேர்தல் வந்தால் காசையும்,சாராயத்தையும் வாங்கிக்கொண்டு மீண்டும் இவர்களை போன்றோருக்கே வாக்களிப்போம்...அவசரப்பட்டு கருத்து சொல்லாதீர்கள்...   19:54:24 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
3
2017
அரசியல் காலாவதியான இந்தி எதிர்ப்பு கைகொடுக்குமா திமுகவுக்கு
இந்த அடிமுட்டாள் கும்பலுக்கு வேறு உருப்படியாக ஒன்றும் செய்வதற்கு இல்லையோ??? இந்தியில் மைல்கல் வைப்பதற்கு புண்ணாக்குபோல காரணம் சொல்லும் இவர்கள், தமிழக லாரி ஓட்டுனர்கள் பல லட்சம் பேர் வடமாநிலங்களுக்கு சரக்குகளை கொண்டு செல்வதால், அங்குள்ள மைல்கல்களில் தமிழில் எழுத ஒப்புக்கொள்வார்களா??? இந்திகாரனே, தமிழகம் வந்து தமிழ் பயின்று நம்மை அண்டி பிழைக்கிறான். பிறகு எதற்கு இந்தியை இங்கே புகுத்த வேண்டும்??? நாட்டில் ஊழல், தீவிரவாதம், வறுமை போன்ற பல பிரச்னைகளை கவனிக்காமல் இப்படி தேவை அற்ற வேலைகளை செய்வதையே தொடர்ந்து இந்த கும்பல் செய்துவருதும், ஆதரிப்பற்றி கவலைகொள்ளாமல் தலைமை இருப்பதும், வரும் காலத்தில் அந்த கட்சிக்குத்தான் பிரச்னையாக முடியும்.   18:58:39 IST
Rate this:
11 members
0 members
18 members
Share this Comment

பிப்ரவரி
23
2017
அரசியல் குடிநீர் பிரச்னையை தீர்க்க குடிமராமத்து பணி துவக்கம் முதல்வர் பழனிச்சாமி
இந்த திட்டத்தை மாபியா கும்பலை சேர்ந்த ஒருவருக்கு டெண்டர் விடுவார்கள். அதில் நல்ல கொள்ளை லாபம் கிடைக்கும். ஆனால் மக்களின் குடிநீர் பிரச்னை மட்டும் தீராது. அதை யாராவது கேள்வி கேட்டாலோ அல்லது போராடினாலோ, இது திமுக திட்டமிட்டு தூண்டிவிடும் போராட்டம் என்று சப்பைக்கட்டு கட்டி அரசியல் செய்துவிடுவார்கள். இதைத்தானே கடந்த 6 ஆண்டுகளாக நாம் பார்த்து வருகிறோம்.   21:24:57 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

பிப்ரவரி
16
2017
அரசியல் ஜெ., சமாதியில் நிறுத்தப்பட்ட ‛அம்மா.. பாடல்
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஜெயாவும் குற்றவாளிதான். எனவே அவரின் சமாதியை முதலில் மெரினா கடற்கரையில் இருந்து அகற்ற வேண்டும். அவரின் புகைப்படங்கள் அரசு அலுவலகங்களில் இருந்து நீக்கப்பட வேண்டும். அவரின் போயஸ் இல்லத்தை அரசு பராமரிக்க கூடாது. அது யார் பெயரில் சட்டப்படி செல்ல வேண்டுமோ அதன்படி கொடுக்கப்பட வேண்டும். ஜெயா உயில் எதுவும் எழுதவில்லை என்றால், அந்த இல்லம் ஏலத்தில் விடப்படவேண்டும். ஜெயா பற்றிய குறிப்புகள், அவரின் புகைப்படங்கள் பள்ளி பாடத்தில் இருந்து முற்றிலுமாக அகற்றப்படவேண்டும். தமிழகத்திற்கு பேரவமானத்தை உண்டாக்கிய ஜெயாவுக்கு அரசு மரியாதை எவ்விதத்திலும் கொடுக்கப்பட கூடாது. ஒருவர் இறந்துவிட்டால் அவர் செய்த தவறுகள் சரி என்றோ, அவர் புனிதர் என்றோ ஆகிவிடாது. பின் லேடன், ஹிட்லர், இடி அமீன் போன்றவர்கள் இறந்த பிறகும் தீயவர்களாக கருதப்படுவதைப்போல ஊழல் குற்றவாளி ஜெயாவும் கருதப்படவேண்டும்.   13:20:43 IST
Rate this:
13 members
1 members
39 members
Share this Comment