Advertisement
Appavi Tamilan : கருத்துக்கள் ( 30 )
Appavi Tamilan
Advertisement
Advertisement
ஏப்ரல்
26
2015
அரசியல் கருணாநிதி- விஜயகாந்த் சந்திப்பு அரசியலில் திடீர் திருப்புமுனை
இந்நேரம் அல்லக்கைகள் கட்சியினருக்கு உதறல் துவங்கி இருக்கும். அதன் வெளிப்பாடே இந்த அரசியல் நாகரீகமான ஒரு சந்திப்பை கொச்சைபடுத்தி விமர்சிக்கும் கருத்துகள். யார் என்ன குரைத்தாலும் மக்கள் இந்த மக்கள் விரோத ஆட்சியை தூக்கி ஏறிய முடிவு செய்துள்ளனர். இடைத்தேர்தலில் வேண்டுமானால் அராஜகமான வாக்குப்பதிவை நடத்தி வெல்லலாம். ஆனால் பொதுத்தேர்தலில் மக்கள் அளிக்கப்போகும் அதிரடி தீர்ப்பு அடிமைகளுக்கு தக்க தண்டனையாக இருக்கும். அதன் முன்னோட்டமே இந்த சந்திப்பாக இருந்தால் மகிழ்ச்சி. திமுக ஆட்சி வந்தால் மட்டுமே தமிழகம் மீண்டும் வளர்ச்சிப்பாதையில் செல்லும் என்பதை மக்கள் உணர்ந்துவிட்டது போல தெரிகிறது. அது வாக்கு என்னும் வடிவில் 2016 தேர்தலில் எதிரொலிக்கட்டும். தமிழகம் மீண்டும் தலை நிமிரட்டும். அல்லக்கைகள் எப்போதும் போல மண் சோறு உண்பது, கோவிலில் உருள்வது என்று தொடர்ந்து வழிபாடு செய்துகொண்டே இருக்கட்டும்.   14:25:42 IST
Rate this:
73 members
1 members
307 members
Share this Comment

மார்ச்
4
2015
அரசியல் ஸ்ரீரங்கம் வாக்காளர் நடவடிக்கை சர்ச்சையானது ஆளுங்கட்சி வெற்றி
வீடு வீட்டுக்கு அமைச்சர்களே நேரில் சென்று பணம் கொடுத்ததை லைவாக வீடியோ பதிவு செய்து தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட்டிருந்தால், ஸ்ரீ ரங்கம் தேர்தல் முடிவே மாறி இருக்கும். மேலும் பணம் கொடுத்த குற்றத்திற்காக அல்லக்கைகள் கட்சியையே தடை செய்திருப்பார்கள். அதுவா நடந்தது?   10:48:09 IST
Rate this:
4 members
0 members
202 members
Share this Comment

பிப்ரவரி
21
2015
பொது மீண்டும் அறிவிக்கப்படாத மின்வெட்டுக்கு வாய்ப்பு தேவையை விட உற்பத்தி குறைவு காரணம்
திமுக காலத்தில் இது போன்ற தேவையற்ற தொடர் மின்வெட்டு இல்லை. அதிகரிக்கும் மக்கள் தொகை மற்றும் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப புது மின்திட்டங்கள் பல திமுக ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டன. அதனால் அதிகபட்சம் 2 மணி நேரம் மட்டுமே மின்வெட்டு இருந்தது. அதுவும் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு என்பதால் தொழில்துறை பெரிதாக பாதிக்கப்படவில்லை. மின்வெட்டு நேரத்திற்கு ஏற்ப தொழிற்சாலைகள் இயங்கும் நேரத்தை மாற்றியதால் தொழில்கள் நசுங்கவில்லை. ஆனால் தற்போதைய ஆட்சியில் மின்சார துறையில் ஏகப்பட்ட குளறுபடிகள், ஊழல்கள் என்று அந்த துறையே ஏறத்தாழ முடங்கி கிடக்கிறது. எப்போது எந்த மின் நிலையத்தில் எந்த உபகரணம் வெடிக்குமோ, பழுதாகுமோ என்று யாரும் சொல்ல முடியாது. அந்த துறையின் அமைச்சர் வெறுமனே வாயில் வடை சுடுகிறார். இதுவரை மின்தடைக்காக எந்த நடவடிக்கையும் இந்த மூன்றரை ஆண்டுகளில் எடுக்கப்படவில்லை. திமுக காலத்தில் துவங்கப்பட்டவை என்தால் 7 மின்திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மின் உபகரணங்கள் கொள்முதல் செய்வதில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது ஏறாததால் உறுதிபடுத்தப்பட்டுவிட்டது. அதில் கொள்ளை அடித்தது போதாது என்று தனியாரிடம் மின்சாரம் வாங்குவதாக சொல்லிக்கொண்டு அதிலும் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. தொழில் நகரங்களான கோவை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூரில் தொழில்வளர்ச்சி பெருமளவு பாதிக்கப்பட்டு, அதனால் பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியின் 18 மணி நேர அறிவிக்கப்படாத மின்வெட்டுக்கு திமுக ஆட்சியின் வெறும் 3 மணி நேர அறிவிக்கப்பட்ட மின்வெட்டே பரவாயில்லை என்பது ஏன் இந்த மக்களுக்கு இன்னமும் விளங்கவில்லை என்பது புதிராக உள்ளது. தற்போது காற்றாலை மின்சாரத்திலும் முறையான பராமரிப்பு இல்லாததாலும், காற்றாலை நிறுவனங்களுக்கு தரப்பட வேண்டிய தொகை நிலுவையில் இருப்பதாலும், அதன் மூலம் கிடைக்கும் மின்சாரம் வெறும் ஊறுகாய் போலத்தான் உதவுகிறது. பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுவதைக்கூட, அதிமுக அரசு பார்த்து திருந்தவில்லை. ஆக அதிமுக ஆட்சியில் மின்வெட்டு மக்களுக்கு கிடைத்த ஒரு தண்டனை. 2016 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மக்கள் மீண்டும் அதிமுகவை தெரிவு செய்தால் அதற்கு பிறகு மின்சாரமே இல்லாமல் போகும். மக்கள் சிந்திக்க வேண்டும்.   13:38:56 IST
Rate this:
0 members
1 members
15 members
Share this Comment

பிப்ரவரி
18
2015
விவாதம் பேச வாய்ப்பு தருவதில்லை என்பதால் வௌிநடப்பு-கருணாநிதி
சட்டமன்றத்தில் எதிர்கட்சியினரை பேச அனுமதித்தால் இந்த ஆட்சியின் அசிங்கங்கள், மெகா ஊழல்கள்,அராஜகங்கள் போன்றவை வெளிப்பட்டுவிடும் என்ற பயத்தால் வாய்ப்பு தருவதில்லை. இது ஊழல் ராணி இருக்கும்போதும் நடந்தது. தற்போதும் நடக்கிறது,   13:10:51 IST
Rate this:
14 members
0 members
45 members
Share this Comment

பிப்ரவரி
10
2015
அரசியல் ஸ்ரீரங்கம் இடைத்ததேர்தலால் வாக்காளர்கள் வீட்டில் பணமழை 1,000 ரூபாய் புழக்கம் அதிகரிப்பால் அதிகாரிகள் அதிர்ச்சி
டெல்லி வாக்காளர்கள் அதி புத்திசாலிகள்...ஸ்ரீரங்கம் வாக்காளர்கள் கடைந்தெடுத்த அடி முட்டாள்கள்.... தேர்தல் விதுமுறை மீறல், எதிர்கட்சிகள் மீது கொலைவெறி தாக்குதல், பண விநியோகம், அதுவும் அமைச்சர்களே நேரில் சென்று வெளிப்பட பணம் கொடுப்பது போன்றவற்றுக்காக கட்சியை தடையே செய்யலாம்.... தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட்டால்....   10:34:59 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

ஜனவரி
4
2015
அரசியல் தி.மு.க.,வில் ஸ்டாலின் தரப்பு நடத்திய ராஜினாமா டிராமா கருணாநிதி முடிவால் பொதுச்செயலராகும் வாய்ப்பு பறிப்பு
ஊழல் ராணிக்கு எதிராக மன்னார்குடி மாபியா தலைவி செய்த சூழ்ச்சிகளின் பொது நடந்த நாடகங்களை விட இது ஒன்றும் பெரிதல்ல... அப்பப்பப்பா ...எத்தனை காட்சிகள், திருப்பங்கள். 4-5 முறை தோட்டத்தை விட்டே சாராய ஆலை தலைவியும் மன்னார்குடி மாபியா தலைவியுமான சசியை, இவளால் என் உயிருக்கே ஆபத்து என்று சொல்லி, அல்லக்கைகள் யாரும் அவரோடு தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்று மிரட்டல் அறிக்கை விடுத்தது எல்லோருக்கும் மறந்துவிட்டதோ? ஆட்சியையே கவிழ்த்து வாய்தா ராணியை ஒழித்துவிட்டு, கட்சி, ஆட்சி மற்றும் கொள்ளை அடித்த சொத்துக்களை மொத்தமாக ஆட்டையை போட மன்னார்குடி கும்பல் தலைவி நடத்திய சூழ்ச்சிகள் மிக பயங்கரம் என்றால் மறுபுறம் இனிமேல் சசியொடு எந்த தொடர்பும் இல்லை என்று கூறி பின்னர் திரும்ப அழைத்து தன் அருகிலேயே வைத்துக்கொண்ட வாய்தா ராணி நடத்திய நாடகம்தான் சிறந்த மக்களை ஏமாற்றும் நாடகம். தற்போதும் அந்த நாடகம் திரை மறைவில் தொடர்ந்து நடக்கிறது. தீர்ப்பு பாதகமாக வந்தால், மன்னார்குடி கும்பல் மொத்தமாக அபகரிக்க கழுகுகள் போல காத்திருக்கிறது. ஆகவே ஜெயில் ராணிக்கு வெளியே இருக்கும் எதிரிகளை விட, உடன் பிறவா சகோதரிமூலம் இருக்கும் பேராபத்துதான் மிக முக்கியம்.   12:21:24 IST
Rate this:
32 members
0 members
11 members
Share this Comment

நவம்பர்
21
2014
கோர்ட் எப்படி விசாரணை நடத்துவது? கோர்ட்டிடம் விளக்கம் கேட்டு சகாயம் மனு
மைக்கேல் டி குன்ஹா வைத்த ஆப்புக்கு பிறகு அடுத்த மிகப்பெரிய ஆப்பாக இந்த பல லட்சம் கோடி கொள்ளை போன கிரானைட், தாது மணல் ஊழல் இருக்கும். இந்த வழக்கையும் மைக்கேல் டி குன்ஹா போன்ற, காசுக்கு விலை போகாத நீதிமான்கள் விசாரித்தால், உறுதியாக அடிமை அல்லக்கைகளின் கொள்ளைக்கார கும்பல் தலைவிக்கும், இந்த மெகா ஊழலில் தொடர்புடைய சில கூன் பாண்டிகளுக்கும் ஆப்பு உறுதி.   13:01:17 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
17
2014
அரசியல் சட்டசபை இணையதளத்தில் மாற்றம் ஜெ.,க்கு பதில் ஓ.பி.எஸ்., பெயர்
தற்போதே அடுத்து கட்சியையும் பல கோடிக்கணக்கான சொத்துக்களையும் யார் பிடுங்குவது என்று தீவிர ஆலோசனைகள் நடக்கின்றனவாம். அவற்றை வைத்து திட்டங்கள் தீட்டுவதில் மன்னார்குடி மாபியா கும்பல் ஒருபுறம் பரபரப்பாக இருக்க, மறுபுறம் ஹெலிகாப்டர் நிழல் முதல் பிரச்சார வேன் டயர் தடம் வரை எல்லாவற்றையும் தொட்டுக் கும்பிட்டு கூன் விழுந்த கூன்பாண்டிகள், எப்படியும் இனி 10 ஆண்டுகளுக்கு கும்பிடு குருசாமிகளாக இருக்க வேண்டியதில்லை என்று தற்போது நிமிர்ந்து நிற்க பழகிவிட்டார்களாம். அவர்களுக்குள் யாரை தலைமையாக வைத்து எல்லாவற்றையும் கைப்பற்றுவது என்று திட்டங்கள் தீட்டுவது மெல்ல ஆரம்பம் ஆகிவிட்டதாம். ஒரு அரசாணை முதல் வண்டலூரில் தப்பிய புலியை பிடிப்பதுவரை கூட பிணையில் வெளிவந்த கொள்ளைக்காரி வழிகாட்டுதலின் பேரில்தான் ஆட்சியே நடக்கிறது என்று சொரணையே இல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தால் மக்களின் கடும் கோபம் இன்னும் அதிகரிக்கும் என்று கூன்பாண்டிகளும் உணரத் தொடங்கி விட்டார்களாம். இந்நிலையில் முன்னாள் மன்னார்குடி கும்பலுக்கு பல்லாக்கு தூக்கிய பல மாண்புமிகுக்கள் மீண்டும் அந்த கும்பலில் சேரலாமா அல்லது கட்சியில் தன்னை முன்னிலைப்படுத்தலாமா என்று தீவிர சிந்தனையில் உள்ளார்களாம். காசை வாங்கிக்கொண்டு காவடி எடுப்பது, பிரியாணியும் சாராயமும் கொடுத்தால் பேரணி மற்றும் வழிபாடு நடத்துவது என்று எத்தனை நாட்களுக்குத்தான் நம் பணத்தை செலவு செய்வது என்று பல வட்டம், ஒன்றியம், மாவட்டங்களும் சற்றே அடக்கி வாசிக்கிறார்களாம். எது எப்படியோ மக்களை ஏமாற்றி கொடுங்கோல் ஆட்சி செய்து கொள்ளை அடித்து கட்டிய மாளிகை, இந்த மக்கள் விரோத ஆட்சியில் பாதிக்கப்பட்ட மக்கள் விட்ட சாபத்தால் சீட்டுக்கட்டு போல சரியத்தொடங்கிவிட்டது. அடுத்து அந்த அடிமைகள் கூட்டம் எக்கேடு கெட்டுப்போனால் என்ன என்று மக்களும் அடுத்து யாருக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கினால் மீண்டும் தமிழகம் முன்னேறும் என்று சிந்திப்பது தெரிகிறது. மறுபுறம் மோடி அவர்கள் நடத்தும் ஆட்சி மக்களுக்கு ஓரளவு நம்பிக்கை அளித்துள்ளது. மாநில அரசு செயல்படாமல் இருந்தாலும் மத்திய பாஜக அரசு நம்மை காப்பாற்றும் என்று மக்களும் நம்புகின்றனராம். பார்ப்போம். என்ன நடக்கும் என்று...   12:09:21 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
16
2014
அரசியல் பார்லிமென்டில் கேள்வி கேட்க தமிழக எம்.பி.,க்கள் தயக்கம் நடைமுறைகள் பற்றி தெரியாமல் விழிக்கும் பரிதாபம்
ஊழல் ராணியை போற்றி பக்கம் பக்கமாக பேச தெரிந்த கூன்பாண்டிகளுக்கு பாராளுமன்றத்தில் வாய் திறக்கவே பயம். பினாமி முதல்வரே ஜெயில் ராணி எழுதிக்கொடுப்பதை மட்டும் பேசுகிறார். இந்த அவலட்சணத்தில் 37 மங்குனிகள் பற்றி சொல்லவே வேண்டாம். வாக்களித்த தொகுதி மக்களுக்கு ஏதாவது நல்லது செய்வதற்கோ, தமிழகத்தில் உள்ள பல பிரச்னைகள் மற்றும் தேவைகள் பற்றி பேசவோ இந்த கோமாளிகளுக்கு ஒன்றும் தெரியாது. திமுகவில் இருந்த எம்பிக்கள் எவ்வளவோ பரவாயில்லை எனலாம். வெறும் 18 தமிழக எம்பிக்கள் இருந்தபோது தமிழகத்திற்கு கிடைத்த பல நல்ல திட்டங்களில் சிலவற்றைக்கூட தற்போதைய 37 கூன்பாண்டிகளால் பெற இயலவில்லை என்பது வெக்கக்கேடு.   13:17:20 IST
Rate this:
2 members
0 members
159 members
Share this Comment

நவம்பர்
4
2014
அரசியல் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு உறுதி மாற்று வழியை பரிசீலிப்பதாக அமைச்சர் கட்காரி தகவல்
இந்த கால்வாய் அமைந்தால் ராமர் கட்டிய பாலம் அழிந்து போகும் என்று முதலிலும், அந்த பருப்பு வேகாததால் பின்னர், இந்த பாலம் சுற்றுப்புற சூழலுக்கு ஆபத்து என்றும், பின்னர் அந்த பருப்பும் வேகாததால் இறுதியில் இந்த கால்வாய் அமைந்தால் சிறிய கப்பல்கள் மட்டுமே செல்ல முடியும் என்றும் பல வகையில் நாடகமாடி, இந்த அற்புதமான திட்டத்தை எதிர்த்து வழக்குப்போட்ட அல்லக்கைகள் கட்சி தற்போது என்ன செய்யும்? இந்த திட்டம் அமைவதை இனியும் எதிர்த்தால் மக்களுக்கு அவர்களின் வேடம் தெரிந்துவிடும். அதே நேரம் இந்த திட்டத்தால் திமுகவிற்குத்தான் நற்பெயர் கிடைக்கும். என்ன செய்வார்கள் என்று பார்ப்போம்.   13:39:44 IST
Rate this:
14 members
0 members
20 members
Share this Comment