S.Baliah Seer : கருத்துக்கள் ( 1101 )
S.Baliah Seer
Advertisement
Advertisement
நவம்பர்
16
2018
சம்பவம் கொடைக்கானலில் 100 மரங்கள் சாய்ந்தன
தென் தமிழ்நாடு புயல்,காற்று ,கனமழையால் தவிக்கும்போது வட தமிழ்நாடு அதிலும் சென்னை மழையில்லாமல் வறண்டுவிட்டது.இந்த நிலை நீடித்தால் நிலத்தடி நீர் பற்றாக்குறையால் வட மற்றும் வடமேற்கு பகுதிகள் பாதிக்கப்படும்.அரசு இப்போதிருந்தே நிலையை சமாளிக்க போதிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கோடை நாட்களில் நிலைமை மோசமாகிவிடும்.   17:02:09 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
15
2018
அரசியல் பெயரை எப்போது மாற்றுவீங்க கொந்தளிக்கிறார் மம்தா
இதில் மத்திய அரசின் தவறு இருப்பதாக தெரியவில்லை. ஒரு பெயரைத் தேர்ந்தெடுக்கும் முன் அதில் போதிய கவனம் செலுத்த வேண்டும்.மேற்கு வங்கத்தை பெங்காலியில் Bangla என்றும் ஆங்கிலத்தில் Bengal என்றும் இந்தியில் Bangal என்றும் அழைக்க வேண்டும் என்றால் எப்படி முடியும்?இதில் Bangla -வுக்கும் Bangladesh என்ற ஒரு நாட்டுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது? கடைசியில் மேற்கு வங்கத்தை Paschim Bango என்று பெங்காலியில் மாற்ற வேண்டும் என்கிறார்களாம். இதற்கு மத்திய அரசு என்ன செய்யும்?   08:02:24 IST
Rate this:
9 members
0 members
46 members
Share this Comment

நவம்பர்
13
2018
பொது அய்யப்பன் ஆசிர்வாதமே காரணம் சபரிமலை தந்திரி
அப்படி என்றால் ஐயப்பனின் ஆசீர்வாதம் பெண்களுக்கு இல்லையா? ஏனய்யா இப்படி உளறுகிறீர்கள். இது போன்ற பேச்சுக்களே நாத்திகர்கள் உருவாகக் காரணம்.   20:20:26 IST
Rate this:
111 members
0 members
10 members
Share this Comment

நவம்பர்
13
2018
உலகம் இலங்கை பார்லி கலைப்புக்கு தடை
இலங்கை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பாராட்டுக்கள். ராஜபக்சே ,சிறிசேனா கூட்டணி எந்த லெவெலுக்கும் போகத் துணிந்தவர்கள் .மனித வர்க்கத்துக்கு எதிரானவர்கள். ராஜபக்சே பதவிப்பித்து பிடித்து அலைகிறார்.. பதவி வெறி என்பது ஒருவகை மெண்டல் டிஸார்டர். ஐ.நா சபை அவரை உளவியல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.   20:13:23 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

நவம்பர்
12
2018
பொது சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூடல்
தீபாவளி நரகாசூரன் அழிந்த நாள் என்பதே பெரும்பாலான மக்களின் நிலைப்பாடு. அதற்கு தீபஒளி திருநாள் என்ற பெயர் கொடுத்தாலும் அது எடுபடவில்லை. தீபாவளி கொண்டாடுவதை நாத்திகர்கள் விரும்பவில்லை. சிலர் நரகாசூரன் திராவிடன் என்றும் ஆரிய சூழ்ச்சியால் அவன் அரக்கனாக்கப்பட்டான் என்றும் சொல்லுகிறார்கள். இப்படி பல காரணங்களால் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதை சிலர் விரும்பவில்லை. அதனால் பொல்லுஷன் என்ற பெயரால் பட்டாசு வெடிப்பதை ஓரளவு தடுக்கிறார்கள். பாவம் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள். அவர்கள் போராட்டத்தில் நியாயம் உள்ளது.   16:41:44 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

நவம்பர்
12
2018
அரசியல் பாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம் சர்ச்சையை கிளப்பிய காங்., தேர்தல் வாக்குறுதி
யாராய் இருந்தாலும் ,எந்த கட்சியாய் இருந்தாலும் கடவுள்,ஜாதி,மதம் இவற்றின் பெயரைச் சொல்லி அரசியல் செய்யாதீர்கள். மக்கள் இவற்றினால் மிகவும் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். மனித சக்திக்கு அப்பால் பட்டு இயங்கும் அந்த உன்னத சக்திக்கு களங்கம் கற்பிக்காதீர்கள். கோயிலுக்குமுன் ஆடு,கோழி வெட்டுவதை ஆன்மிகம் என்பவர்கள், அந்த ஆன்மிகம் மனிதனுக்கு மட்டுமே என்று சொல்லி தயவு செய்து ஊரை ஏமாற்றாதீர்கள். காங்கிரசார் வாக்குகளுக்காக கிறித்துவம், பாதிரியார் என்ற பெயர்களை இழுப்பது அற்பத்தனமான அரசியல்.   16:21:32 IST
Rate this:
4 members
2 members
34 members
Share this Comment

நவம்பர்
11
2018
அரசியல் தப்பி ஓடிய முதல்வருக்கு கண்டனம்
Power and Responsibilities goes together . சகல அதிகாரங்களையும் கையில் வைத்துள்ள டெல்லி கவர்னர் என்ன செய்கிறார். பவருக்கு மட்டும் கவர்னர் முறைவாசலை கெஜ்ரிவால் செய்யவேண்டும் என்றால் எப்படி?   12:19:07 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

நவம்பர்
11
2018
அரசியல் அயோத்தியில் கோயில் கட்ட காங்., விரும்பவில்லை யோகி ஆதித்யநாத்
ராமன், அயோத்தியில் அவனுக்கு கோயில் இதை எத்தனைக் காலந்தான் சொல்லிக்கொண்டிருப்பீர் யோகியாரே மக்கள் நலனில் அக்கறை காட்டினால் மகேசனுக்கு படையல்போட்டது போல்.அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தால் அந்த மாவு உபயோகமற்றதாகி விடும்.   12:12:05 IST
Rate this:
7 members
0 members
20 members
Share this Comment

நவம்பர்
11
2018
பொது உலக மல்யுத்த வீரர்கள் பட்டியலில் இந்தியருக்கு முதலிடம்
பஜ்ரங் 65 -KG Free Style மல்யுத்தப் போட்டியில் தரவரிசையில் ஒன்றுதானே தவிர சாம்பியன் இல்லை. இந்த பிரிவு உண்மையான சாம்பியன் தகுதோ தரவரிசையில் 4 -வது இடம். ஒருவர் ஒரு சில போட்டிகளில் கலந்து கொள்ளாவிட்டால் அவருடைய தரவரிசை கீழே போய்விடும்.விளையாட்டு உலகில் தரவரிசை தேவையில்லாத ஒன்று. அந்த தரவரிசை கானல் நீர் போன்றது. ஒரு விளையாட்டு வீரர் எத்தனைப் போட்டிகளில் வென்று சாம்பியன்ஷிப் பெற்றார் என்பதே உண்மையான நிலை. ஹாக்கியில் நம் நாட்டின் சிறந்த பெனல்டிக் கார்னர் ஸ்பெஷலிஸ்ட் என்று சிலரை கூறுவார்கள். ஆனால் ஒரு ஆட்டத்தில் 10 -பெனல்டிக் கார்னர் வாய்ப்புக்கு கிடைத்தாலும் அவர் ஒரு கோல் கூட போடமாட்டார்.இப்படியே பட்டப்பெயர்கள் என்று உசுப்பேத்தியே நம் விளையாட்டு வீரர்களின் தரத்தை குறைத்து விடுகிறார்கள்.பஜ்ரங் உலக சாம்பியன் ,ஒலிம்பிக் சாம்பியன் போன்ற பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலேயே இதை எழுதுகிறேனே அன்றி அவரைக் குறைத்து மதிப்பிடவில்லை.வாழ்த்துக்கள் பஜ்ரங்.   12:00:35 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
8
2018
கோர்ட் உள்ளாட்சி தேர்தலை நடத்த எது தடை? ஐகோர்ட் கேள்வி
ஒரு நீதிபதி ஒரு கவுன்சிலரைப் பார்த்து கேட்ட கேள்வி:"70 லட்ச ரூபாய் பென்ஸ் காரை நீங்கள் வைத்திருக்கிறீர்கள்.நான் அதுபோன்ற காரில் உட்கார்ந்து கூட இல்லை." அதுமட்டுமல்ல யுவர் ஆனர்.எங்கள் பகுதி கவுன்சிலர் ஒருவர் 100 -கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கிறாராம்.அவருடைய கட்சிக்காரர்களே சொன்னது இது.பஞ்சாயத்து ராஜ் மக்களுக்கு எதிரானது.பார்லிமென்டில் இதை ஒழிக்க தீர்மானம் கொண்டுவர வேண்டும்.   10:06:48 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X