Advertisement
சாதனா : கருத்துக்கள் ( 67 )
சாதனா
Advertisement
Advertisement
ஏப்ரல்
25
2016
அரசியல் ஜெ., சொத்து மதிப்பு ஐந்து ஆண்டுகளில்...இரட்டிப்பு! 2011ல் 64 கோடி - 2016ல் 113 கோடி ரூபாய்
திரு.வேலு கருப்பையா அவர்களே, வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, அதிகாரி உக்கார்ந்து கொண்டு தான் மனுவை வாங்க வேண்டும் என்பதும், மனுவை கொடுப்பவர் நின்றுகொண்டு தான் கொடுக்க வேண்டும் என்பதும் தான் விதிமுறை. ஆனால் ஜெயலலிதாவிடம் மனுவை வாங்கிய பெண் அ‌திகாரிதான் விதியை மீறி ( அல்லது ஜெ. க்கு பயந்து ) நின்று கொண்டு வாங்குகிறார்.   18:07:53 IST
Rate this:
6 members
0 members
48 members
Share this Comment

ஏப்ரல்
12
2016
அரசியல் தி.மு.க., அ.தி.மு.க., கட்டிய வீட்டுக்குள் புகுந்த கருநாகங்கள் விஜயகாந்த் விளாசல்
கொஞ்சம் காசு கூடுதலாக கொடுப்பதாக கருணாநிதியோ ஜெயலலிதாவோ சொல்லியிருந்தால் அவர்கள் இவருக்கு இனித்திருப்பார்கள். கேட்ட பணம் கிடைக்கவில்லை. அதனால் சீறுகிறார். இவர் என்ன மக்களுக்கு சேவை செய்யவா கட்சி ஆரம்பித்தார். காசு சம்பாதிக்க தானே ஆரம்பித்தார். அப்புறம் என்ன பெரிசா பேசுறார். இவர் என்னவோ தன்னை எல்லோருமாக சேர்ந்து தேர்ந்தெடுத்து முதல்வா் ஆக்கி விடுவார்கள் என்று கனவு கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறார். மக்கள் என்ன அவ்வளவு கேனையன்களா இவரை தேர்ந்தெடுக்க...தேர்தல் முடியட்டும் பார்ப்போம் இவர் என்ன ஆகிறார் எ்ன்று....   21:31:07 IST
Rate this:
32 members
0 members
48 members
Share this Comment

ஏப்ரல்
8
2016
பொது அதிக கட்டணம் வசூலிக்கும் கால்டாக்சிகளுக்கு ஆப்பு!
ஜெகன் சரியாக சொன்னீர்கள். தாம்பரம் ரெயில்வே ஸ்டேஷனிலும் பிரிபெய்டு ஆட்டோ வசதி இருக்கிறது. அதிக கட்டணம் கேட்கும் ஆட்டோ நம்பரை குறிப்பிட்டு நாம் ஆர்டிஓ ஆபீசுக்கு எழுத்து மூலமாக புகார் அனுப்பினால் கண்டிப்பாக அவர்கள் நடவடிக்கை எடு்ப்பார்கள். புகார் எதுவும் செய்யாமல் புலம்பிக்கொண்டே இருந்தால் புலம்பிக்கொண்டே இருக்க வேண்டியது தான்.   08:26:04 IST
Rate this:
1 members
1 members
15 members
Share this Comment

மார்ச்
4
2016
பொது பின்­தங்கும் பியட் இனி­ வேகம் எடுக்­குமா?
திரு.கோவிந்த் சொல்வது உண்மைதான். அவர்கள் நன்கு மார்க்கெட்டிங் செய்ய தெரிந்த நிறுவனங்களிடம் டீலர்ஷிப் கொடுக்கவில்லை என்றே நானும் நினைக்கிறேன். சர்வீசும் மோசம் என்றும், ரொம்ப தாமதமாகிறது என்றும் கேள்விப்பட்டேன். எனவே காரை குறை சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன்.   09:39:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
29
2016
அரசியல் அ.தி.மு.க., எதிர்ப்பு நிலை தக்கவைக்க தி.மு.க., வியூகம்
ஜெ ஜெ அவர்களே, எம்ஜிஆர் எவ்வளவு பெரிய அடிமுட்டாள் என்பதை ஒத்துக்கொண்டதுக்கு நன்றி. கவுன்சிலர்கள் கொள்ளை அடிக்கிறார்கள் என்று உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைத்து விட்டாராக்கும். ஏன்...எம்எல்ஏ க்கள் கொள்ளை அடிக்கிறார்கள் என்று சட்டமன்ற தேர்தலையும்....எம்பிக்கள் கொள்ளை அடிக்கிறார்கள் என்று பாராளுமன்ற தேர்தலையும் நிறுத்திவிட வேண்டியது தானே....   12:12:15 IST
Rate this:
946 members
2 members
1633 members
Share this Comment

பிப்ரவரி
29
2016
உலகம் பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பிக்க தனக்கு தானே தீ வைத்த சிறுமி
நரசிங்கமணி பாஸ்கரன் அவர்களே, அம்மா கால் சென்டரிலும் சொல்லி விடுங்களேன்...   11:51:51 IST
Rate this:
4 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
29
2016
அரசியல் தமிழகத்தில் மின்வெட்டே இல்லை முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்
சந்திரமெளலி, திமுக தரம் தாழ்ந்த மின்பொருட்களை வாங்கினார்களாக்கும், அதிமுக தரமான மின்பொருளை வாங்குகிறார்களாக்கும்....அப்போ திமுக காலத்தில் மின்வெட்டு இருந்ததுக்கு தரமில்லாத மின்பொருட்கள் தான் காரணமாக்கும். ஓகே ஓகே புரிஞ்சிபோச்சி.   11:23:31 IST
Rate this:
9 members
2 members
34 members
Share this Comment

பிப்ரவரி
20
2016
உலகம் பாப் இசை கேட்ட சிறுவனின் தலையை துண்டித்த ஐ.எஸ்.,
மேற்கத்திய இசையை கேட்டதால் சிறுவனின் தலையை துண்டித்தார்களாம். முட்டாள்தனம் என்றால் இதுதான். இவர்கள் கைகளில் வைத்திருக்கும் இயந்திர துப்பாக்கி, ஏவுகனைகள் மேற்கத்திய நாடுகளில் கண்டுபிடித்து தயாரித்தது. இவர்கள் அணியும் ஜீன்ஸ், டி சர்ட் மேற்கத்திய கலாச்சாரம் இல்லையா ? இவர்கள் பயணிக்கும் கார்கள் மற்றும் டிரக்குள் என்ன... இவர்கள் நாட்டில் தயாரித்ததா ?? இவர்கள் பயன்படுத்தும் தகவல் தொடர்பு சாதனங்கள் இவர்கள் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதா ? ஏன் இவைகளை மட்டும் இவர்கள் பயன்படுத்துவார்களாம். ஆனால் பொதுமக்கள் மட்டும் மேற்கத்திய நாட்டு கலாச்சாரத்தில் மோகம் கொள்ள கூடாதாம்.. ஏன் இவர்கள், அவர்கள் நாட்டு வழக்கப்படி உடை உடுத்தி, ஒட்டகங்களில் வந்து, கத்தி வாள் போன்ற ஆயுதங்களை கொண்டு சண்டை போட வேண்டியது தானே???   06:19:16 IST
Rate this:
0 members
0 members
50 members
Share this Comment

பிப்ரவரி
19
2016
பொது கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த பிரதமர் மோடி
டாக்டர் விஜய சவுமியன் அவர்களே, நீங்கள் சொல்வது உண்மைதான். இங்கு கெளரவ டாக்டர் பட்டம் அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது எனவே அந்த டாக்டர் பட்டத்துக்கு இங்கு மதிப்பில்லை. மேலும் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றவர்கள், டாக்டர் என்ற பட்டத்தை அவர்கள் பெயருக்கு முன் போட்டு விளம்பரப்படுத்திக்கொள்ள கூடாது என்று அந்த பட்டத்திலேயே போட்டிருந்தாலும் பெரும்பாலானவர்கள் டாக்டர் என்றே போட்டுக்கொள்கிறார்கள். என்ன செய்வது ???   05:50:37 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

ஆகஸ்ட்
26
2015
பொது நடிகர் சிவாஜிக்கு அரசு சார்பில் மணிமண்டபம் ஜெ., அறிவிப்பு
1967 முதலே நாம் கூத்தாடிகளால் தான் ஆளப்படுகிறோம். அதனால் இங்கு கூத்தாடிகளுக்கு தான் மதிப்பு. பரவை முனியம்மா உடல்நலம் சரியில்லாமல் இருந்தால், அரசு, மக்கள் வரிப்பணத்தில் இருந்து லட்சக்கணக்கில் பண உதவி செய்கிறது. இப்போது சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம். எந்த ஒரு அடிபபடை கல்வி அறிவும் இன்றி, எந்தவித வயது வரம்பும் இன்றி, ஒருவர் கோடிக்கணக்கில் சம்பாதிக்க முடியும் என்றால் அதற்கு ஏற்ற ஒரே துறை சினிமா துறைதான். எந்த ஒரு நடிகரோ அல்லது நடிகையோ, தனது சம்பாத்தியத்தை சரியாக சொல்லி, அதற்கு வருமான வரி கட்டியதுண்டா ? அதிலும் அரசாங்கத்தை ஏமாற்றுவது. தன் சுகபோக வாழ்க்கைக்கு சினிமாவில் நடித்து விட்டு,அதில் பெயரும் பெற்றுவிட்டு, அதைக்கொண்டே அரசியலிலும் நுழைந்து முதல் அமைச்சர் ஆவதற்கே பலரும் நடிப்பு தொழிலில் இருந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி தன் சுயலாபத்திற்காக நடித்துக்கொண்டிருப்பவர்களுக்கு எதற்கு மக்கள் வரி பணத்தில் இருந்து மணி மண்டபம் ? இதை எல்லோரும் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும்.   21:32:42 IST
Rate this:
6 members
0 members
123 members
Share this Comment