தமிழக அரசு சுகாதாரத்தைப் பின்பற்றாத கம்பெனிகளின் மீது நடவடிக்கை எடுக்கும் பொது மற்றவர்களும் சேர்ந்து இந்த மாதிரி வேலை நிறுத்தம் செய்வது மிகவும் கண்டிக்கத் தக்கதும் தண்டிக்கத் தக்கதும் ஆகும்.அரசு இவ்வளவு வசதிகள் செய்திருந்தும் இந்த போலிகளிடம் மக்கள் ஏமாந்து வருவதால்தான் இவர்களுக்கு குளிர்விட்டுப் போய் உள்ளது.அரசே முன்வந்து தூய குடிநீரை குறைந்த விலையில் விநியோகம் செய்தால் இவர்களின் கோட்டம் அடங்கி விடும்.முதல்வர் அவர்கள் இதை கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
ஈஸ்வரன்,பழனி.
18-மே-2013 07:08:33 IST
முதலில் இந்த சினிமா நடிகருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதே தவறு.மேலும் இவர் இந்த தேசத்தை பயங்கரவாதிகளுடன் சேர்ந்து சேதப் படுத்தியுள்ளார்.போதாக் குறைக்கு இந்த நாட்டையே ஊழால் சுருட்டிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கார மந்திரிகள் முதல் தலைவர்கள் வரை இந்த நடிகருக்குத் தண்டனையே கொடுக்கக் கூடாது என்பதாகக் கூறித் திரிகின்றனர்.இதையெல்லாம் பார்க்கும் பொது இந்த நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்ற அச்சம் வராமலில்லை.
ஈஸ்வரன்,பழனி.
18-மே-2013 06:55:28 IST
இந்த T-20 என்பதே சுத்தமான சூதாட்டம்தான்.இதில தனியா சில பேரு கம்ப்யூட்டர வச்சு சூதாடறாங்க அவ்வளவுதான்.இந்த T-20 கிரிக்கெட் விளையாட்டையே தடை செய்ய வேண்டும்.நம்ம ஊரு தீவிர ரசிகனுங்க இருக்கற வரைக்கும் எந்தச் சூதாட்டமா இருந்தாலும் ஆபிசுக்கும் பள்ளிகுடத்துக்கும் கட்டடித்து விட்டு இதே வேலையாத்தான் இருப்பார்கள்.நம்ம ஊரு டாஸ்மாக்க விட இந்த T-20 சூதாட்டம் மோசம்.
18-மே-2013 06:37:17 IST
அரசுப் பள்ளியில் பயின்று 1000 மார்க்குக்கு மேல் வாங்கிய மாணவனுடன் இன்று தமிழ் நாடு முதல் மாணவனை மொத விட்டுப் பாருங்கள் சிறந்த அறிவாளி யார் என்று? கண்டிப்பாக அரசுப் பள்ளியில் பயின்ற மாணவனாகத்தான் இருப்பார். இது உறுதி.
10-மே-2013 17:07:08 IST
இந்த எட்டப்பா மன்னிக்கவும் எடியூரப்பா தான் கேட்டதும் இல்லாமல் ஓட்டைப் பிரித்து பா ஜ க வையும் கெடுத்ததோடல்லாமல் கர்நாடகத்தில் உலக ஊழல் புகழ் காங்கிரசை ஆட்சியில் அமர வைத்து விட்டார். இந்த மக்களின் பாவம் இந்த நபரை சும்மா விடாது. அகில இந்திய அளவில் காங்கிரஸ் துடைத்தெரியப் படும் வேளையில் கர்நாடகத்தில் அதை காப்பாற்றி இந்த தேசத்துக்கே தீமை செய்துள்ள இவரை கடவுள் தண்டிப்பார்.
10-மே-2013 13:44:18 IST
தனியார் பள்ளிகளில் நன்கு படிக்கும் மாணவர்களாக மட்டுமே சேர்த்துக் கொள்கின்றனர்.அவர்களை வைத்து அதுவும் +2 பாடத்தையே இரண்டு வருடங்களுக்கும் படிக்கச் சொல்லி மார்க் எடுக்க வைக்கின்றனர்.ஆனால் , அரசுப் பள்ளியில் அப்படியெல்லாம் இல்லை.வசதி குறைந்தவர்கள்தான் பெரும்பாலும் இங்கு சேர்த்துப் படிக்க வைக்கின்றனர்.அதுவும் சுத்தமாகப் படிக்காதவர்கள் எல்லாம் இங்கு சேர்ந்து கல்வி கற்கின்றனர் . அவர்களையெல்லாம் தயார் செய்து இந்த அளவுக்கு தேர்ச்சி பெற வைப்பதே உண்மையிலேயே பெரிய அதிசயம்தான்.அரசுப் பள்ளிகளுக்கு தேவையான வசதிகளையும்,தேவைக்கு உரிய ஆசிரியர்களையும் நியமித்து அவர்களுக்கு கல்விப் பணியல்லாது வேறு பனி கொடுக்காமலிருந்தால் அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகளை விடவும் சிறப்பாக செயல்படும் என்பது உறுதி.
ஈஸ்வரன்,பழனி.
10-மே-2013 08:36:44 IST
கர்நாடகாவில் இடது வலது கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரம்மாண்ட வளர்ச்சியால் அவர்களின் கடின முயற்ச்சியால் மதவாத பா ஜ க தோற்கடிக்கப் பட்டது.
08-மே-2013 21:28:53 IST
இதை பி ஜே பி தோல்வியாக கருதாமல் உண்மையாக மக்களின் பிரச்சினைக்காகப் பாடுபட்டால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியும்.இனி எந்தக் காரணம் கொண்டும் எடியூரப்பாவின் தயவை நாடவே கூடாது.இது மட்டுமே கர்நாடகாவில் பா ஜ க வை மீட்டெடுக்க வழி.
08-மே-2013 15:11:02 IST
இங்கு காங்கிரஸ் ஜெயிக்கவில்லை . இது மாநில அரசின் ஊழலால் தோற்றது.இதே போலத்தான் மத்திய அரசின் ஊழலால் அதுவும் அம்போவாகப் போவது உறுதி.இது காங்கிரசின் அகில இந்திய தோல்விக்கு ஒரு முன்னோட்டம்.
ஈஸ்வரன்,பழனி.
08-மே-2013 15:06:58 IST