babu : கருத்துக்கள் ( 244 )
babu
Advertisement
Advertisement
அக்டோபர்
5
2017
அரசியல் டெங்குவுக்கு 400 பேர் பலி ஸ்டாலின்
சென்னை போரூர் கொளப்பாக்கம் MRK நகர் பகுதியில் உள்ள பால் பண்ணை மாடுகள் ரோட்டில் கட்டி போடப்படுகின்றன. அந்த பகுதி முழுவதும் சாணம் கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு வாயை மூடிக்கொண்டு உள்ளனர். தயவு செய்து டெங்கு பரவுவதற்கு முன் நடவடிக்கை தேவை....   17:24:02 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
20
2017
சிறப்பு கட்டுரைகள் டி.வி.ஆர்., வளர்த்த தமிழுணர்வு!
இன்று எந்த தனியார் பள்ளியில் குழந்தைகளுக்கு தமிழ் கற்று தருகின்றார்கள், எந்த தனியார் கம்பெனியில் (நம் தமிழ் நாட்டில் உள்ள) நம் தமிழ் வழி கல்வி பயின்ற மாணவர்களுக்கு வேலைக்கு சேர முன்னுரிமை தருகின்றனர் சொல்லுங்கள் பார்க்கலாம். எங்கு சென்றாலும் ஆங்கில மோகம் தானே அவர்களை ஆட்டுகின்றது. எத்தனை தமிழ் வழியில் நன்கு படித்த மாணவர்கள் ஆங்கில புலமை இல்லாததால் (அவர்கள் கிராமத்து பள்ளியில் ஆங்கில வசதி, அவர்கள் பெற்றோர்கள் பயிலாத காரணத்தால்) நம் தமிழ் நாட்டின் தலை நகரான சென்னை பெருநகரத்தில் ஆங்கிலம் பேச முடியாமல் தலை குனிந்து வெறுத்து போய் வேலை கிடைக்காமல் திரிபவர்கள் எத்தனையோ, இறந்தவர்கள் எத்தனையோ, ஹோட்டல்களில், சிறு கடைகளில் வேலை பார்க்கின்றனர். இவர்களை நமது அரசால் அடையாளம் காணப்பட வில்லை. ஆனால் எதாவது ஒரு பிரச்சனை என்றால் மட்டும் நாம் தமிழர் இனம் என்று மார் தட்டிக்கொள்கின்றோம். தயவு செய்து அரசு ( இந்த கருத்தை படிக்கும் அரசு துறை சார்ந்த மற்றும் தனியார் துறை சார்ந்த அதிகாரிகள்) மெத்தனம் காட்டாமல், உதவுங்கள். அப்பொழுது தான் நம் தாய் மொழி சிறப்பு பெறும். எங்கு பார்த்தாலும் புற்றீசல் போல தனியார் ஆங்கில பள்ளிகள் தோன்றி மக்களிடம் பணத்தை கறக்கின்றனர். லட்ச கணக்கில் கொட்டி இன்ஜினீர் படித்த மாணவர்கள் இன்று சொற்ப சம்பளத்தில் வேலை செய்வதை கண்டால் கண்கள் கலங்குகின்றன. மாணவ சமுதாயமே, முகநூல், வாட்ஸுப் போன்றவைகளுக்கு தங்களை அடிமைகளாக்காமல் மற்ற மொழிகளில் புலமை பெறும் அறிவை நம் தாய் வழியின் மூலம் தேடுங்கள்...............   11:19:48 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
29
2017
அரசியல் 30 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் ஜி.எஸ்.டி., அறிமுகம்...இ்ன்று!
முதலில் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் கேட்களை எடுங்கள், இதையும் நீங்கள் தானே ஆட்சிக்கு வந்தவுடன் கூறினீர்கள்....   11:11:16 IST
Rate this:
16 members
1 members
18 members
Share this Comment

ஜூன்
30
2017
பொது அரசு பள்ளிக்கு நிலம் தானம் டிரைவருக்கு விருது
அரசு தலை குனிய வேண்டும்.............. ஒரு தனிப்பட்ட ஏழை மனிதனே இவ்வளவு செய்யும் பொழுது மாநில அரசு உன்னால் ஏன் இடம் வழங்க முடியவில்லை... முடியவில்லையா அல்லது இடம் வழங்கிய பணத்தை முழுங்கி விட்டனரா............   11:04:14 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
21
2017
பொது வைகை அணைையை தூர் வாருவோம்
" பொதுமக்கள், கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் குழுக்களாக சேர்ந்து துார் வார களமிறங்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து இரவு, பகல் பாராது குழுக்களாக களமிறங்கினால் வண்டல் மண்ணை வெளியேற்றி விடலாம் " இதனை கேட்க நன்றாக உள்ளது. எவராவது வருவார்களா............. நிறைய படித்த, கொஞ்சம் படித்த, படிக்காத எல்லாருக்கும் வெளி நாடு போகணும், கை நிறைய சம்பாதிக்கணும், வெளி நாட்டில் வெள்ளை அடிச்சு, கழிவறை கழுவும் வேலை பார்த்தாலும் விடுமுறைக்கு என் தாய் நாட்டிற்கு வந்து அங்கிருந்து வாங்கிட்டு வந்த பொருட்களை வைத்துக்கொண்டு ஏழை மக்கள் முன் பந்தா காட்டுதல், நம் தாய் மண்ணை கேவலமாக பேசுதல் போன்ற இழிவான செயல்களை செய்வதை தானே வாடிக்கையாக கொள்வார்களே தவிர நம் மண்ணை தூர்வார எவரும் வர மாட்டார்கள்...............இதனால் நமது அரசும் கண்டும் காணாதது போலவே உள்ளது.... ஊர் கூடி உண்ண வேண்டும் என்பதை மறந்து இப்பொழுது ஊரை விட்டு ஓட வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் வளர்ந்து விட்டது. இதற்கு காரணம் வேலையில்லை என்பது தான். சென்னை போன்ற பெருநகரங்களில் தான் வேலை வாய்ப்பு என்றால் பேசாமல் அமைதியாக அனைத்து ஊர்களையும் மதுரை, கோவை, நெல்லை என்பதற்கு பதிலாக சென்னை, சென்னை, சென்னை என்றே அழைக்கலாமே..... அப்படியாவது எங்கள் ஊர் பக்கம் வேலை வாய்ப்பு பெருகும் என்ற ஒரு நம்பிக்கை தான் எங்களுக்கு......?   12:23:54 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
20
2017
பொது ஜனாதிபதி காரை நிறுத்திய எஸ்.ஐ., உயரதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டு
இறந்தவர்களை பற்றி பேசுவது அநாகரீகம் நண்பரே..................... இது தான் உங்கள் சிங்கப்பூர் வாழ்க்கை பாடமா....   17:31:50 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
20
2017
பொது ஜனாதிபதி காரை நிறுத்திய எஸ்.ஐ., உயரதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டு
இதே என் தமிழ் நாட்டு காவல் போக்குவரத்து துறை என்றால் உயர் அதிகாரிகள் வருவதற்கு சில மணிகளுக்கு முன்பாகவே போக்குவரத்தை நிறுத்தி பொது மக்களிடம் (வெயில், மழையில் நின்று தவிக்கின்றனர் என்று கூட அறியாமல் ) திமிராக நெஞ்சை தூக்கி கொண்டு, எந்த அவசர வாகனத்திற்கும் வழியை விட முடியாமல், விட தெரியாமல் அந்த அதிகாரிகள், அரசியல்வியாதிகள் அந்த இடத்தை கடக்கும் வரை கையில் விளக்கு மட்டும் ஏந்தாமல் காவல் புரிவர். அவர்கள் அந்த பகுதியை கடந்த பிறகு பொது மக்கள் எவன் போனால் என்ன, முட்டிகிட்டு செத்தால் என்ன என்று ஓடி விடுவார்கள், இவர்களுக்கெல்லாம் வீரம் காவல் உடையில் மட்டும் தான்......   10:42:00 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
17
2017
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
20
2017
பொது ஜல்லிக்கட்டில் தராத பரிசை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மல்லுக்கட்டு
ஒரு மாவட்ட கலெக்டர், ''மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசுகள் அறிவிக்கப்படவில்லை. விழா கமிட்டியினர் தான் அறிவித்தனர். அவர்கள் தான் பொறுப்பு " என்று இப்படி தான் பொறுப்பற்ற தனமாக பதில் அளிக்க வேண்டுமா.... இதற்கு தான் இவர் கலெக்டர் படித்து வந்தார்? ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும் முன் அதிகாரி என்பவர் தான் எங்கு செல்கின்றோம், எதற்காக செல்கின்றோம் என்று முறையாக விசாரிக்காமல் செல்வது தான் அழகா.... தங்கள் பதவியை அதிகாரத்தை மட்டும் நியாபகம் கொண்டுள்ள அதிகாரிகள் பொது மக்களின் எண்ணங்களையும் கொஞ்சம் நியாபக படுத்திக்கொள்ளுங்கள்...   11:16:23 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
20
2017
பொது ஜல்லிக்கட்டில் தராத பரிசை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மல்லுக்கட்டு
போடா முட்டாள்..... எதற்காக போராடினோம் என்பதை மறந்தாயா..   11:12:13 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment