கருப்பட்டி சுப்பையா : கருத்துக்கள் ( 1235 )
கருப்பட்டி சுப்பையா
Advertisement
Advertisement
மே
25
2018
பொது தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பியது
ஸ்டெர்லைட்டை மூடுவது தீர்வல்ல. உண்மையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தையும், சுற்றுச் சூழல் வாரியத்தையும் எதிர்த்துத் தான் மக்கள் போராட வேண்டும். தீர்வை நோக்கிய போராட்டமாக இருப்பதே தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்புகளுக்கும் நலன் பயக்கும். அதை விட்டுவிட்டு பூவுலகின் நண்பர்கள், பச்சைத் தமிழகம் உதயகுமாரன் மற்றும் மக்களுக்கு ஆதரவு என்ற பெயரில் ஆலையை மூடச் சொல்லி அரசியல் கட்சிகள் கூச்சல் போடுவதால் ஒரு பலனும் கிடையாது. வேண்டுமானால் கிராமக் கமிட்டி, மத்திய சுற்றுச் சூழல், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தையும், சுற்றுச் சூழல் வாரியத்தையும் கொண்ட ஒரு குழுவை அமைக்கலாம். அவர்கள் ஆய்வு செய்து கழிவுகளோ/ மாசு வெளியேற்றமோ அரசு குறிப்பிட்டுள்ள குறியீட்டுக்குள் இருக்கும் பட்சத்தில் ஸ்டெர்லைட்டை நடத்த அனுமதிக்க வேண்டும். அதுவரையிலும் ஆலையை நடத்த விடாமல் செய்வது மட்டுமே சரியான நடவடிக்கையாக இருக்கும். மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் மாநில அரசும் லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதிக்கும் என்பதால் ஆலையை மூடுவது தான் தீர்வென நம்பும் பட்சத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆலைகளையும் மூடுவதே நல்லது. ஏனெனில் மாநிலம் முழுக்க நிலைமை இப்படித் தான் உள்ளது. இறுதியாக வேலை இல்லாமல் தமிழன் சீரழிவான். படித்த பொறியாளர்களே மூட வேண்டும் என்று சொல்வதில் எனக்கு வியப்பில்லை. . கூட்டமாக ஒரு விஷயத்திற்கு பல கட்சிகளும் அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்தால் அதுதான் சரி என்கிற முடிவுக்கு வருவது கூட படித்தவர்களிடம் காண முடிகிறது. எவனுக்கும் எந்த விஷயம் சார்ந்தும் படித்துப் பேசுவோம் என்கிற அக்கறை கிடையாது. whatsapp ல் வரும் மெசேஜ் தரும் அடிப்படை ஆதாரமற்ற. எந்த அடிக்குறிப்பின்றியும் செய்திக்கான லிங்குகளின்றி வரும் துணுக்குகளும் வீடியோவுமே போதுமானது என்று நம்புகிறான். அதை வைத்துக் கொண்டு பேசுவது மட்டுமே இங்கு நடக்கிறது. செய்தியின் உண்மைத் தன்மை பற்றிய கவலை இங்கு யாருக்கும் கிடையாது. நமக்கு அது பற்றி எந்த ஞானமும் இல்லையென்றால் கூட்டத்தோடு கூட்டமாக நின்று விடுவோம் என்கிற ஜால்ரா மனநிலையே ஆலையை மூடு. நியுட்ரினோவைக் கொண்டு வராதே. பழுப்பு நிலக்கரி ஆலையை மூடு என கோஷம் போடச் செய்கிறது என்பதே யதார்த்தம். ஆலையை மூடு என்பது செருப்பு சைஸுக்கு இல்லாத காலை வெட்டு என்பதற்கு ஒப்பானது   14:35:20 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

மே
25
2018
சம்பவம் எதிர்கட்சிகள் பந்த் சென்னையில் பலத்த பாதுகாப்பு
கை நிறைய சம்பளம், சாகும் வரை பென்சன், செத்த பிறகு மனைவியின் காலம் வரை அவருக்கும் பென்சன் என பெறும் எந்த அரசு ஊழியர்களும் பொது பிரச்சனைகளுக்கு தங்களுடைய ஒரு நாள் வருவாயை இழப்பதில்லை.மாதம் லட்ச கணக்கில் சம்பாதிக்கும் சாப்ட்வேர் இளைஞர்கள் ஒருநாள் வருவாயை இழக்க தயார் இல்லை.போக்குவரத்து,வங்கி, ஆசிரியர்கள் என எந்த பணியாளர்களும் தங்களின் ஊதிய உயர்வுக்காக மாதம் பத்து நாட்கள் பணியை புறக்கணித்தாலும் பொது பிரச்சனைக்காக ஒரு மணி நேரத்தை கூட இழந்தது இல்லை... நீங்கள் எத்தனையோ சிறு மளிகை கடை அண்ணாச்சியை பார்த்திருப்பீர்கள், நாளை அவர்கள் கால்களை உற்று பார்க்கவும்.. 40வயதுக்கு மேல் உள்ள பெரும்பாலான அண்ணாச்சிகளுக்கு வெரிகோஸ்பெயின் வியாதியால் கால் நரம்பு புடைத்து இருக்கும். மருத்துவர் கூறும் ஆலோசனை அதிக நேரம் நிற்க கூடாது, ஆனால் அவர்கள் அமர்ந்தால் அடுத்த வேளை அவர்களுக்கு இல்லை என்பதே உண்மை. சாகும் வரை உழைத்தே ஆகவேண்டும், மீனவர்கள் நிலையும் கிட்டத்தட்ட இதை நிலைதான்... நாட்ல எங்க பிணம் விழுந்தாலும் முதலில் அரசியல்வாதிகளுக்கு கடைகள் பூட்டிரனும்...இவனுங்க டீவில நிமிசத்துக்கு லட்சகணக்குல விளம்பரத்தில் சம்பாதிச்சிட்டு இருப்பானுங்க..... இவனுங்க பிள்ளைகள் நடத்தும் நிறுவனங்களும் இயங்கி கொண்டு இருக்கும்.ஆனா கடைகள் திறக்க கூடாது... இப்ப கூட்டத்தில் வியாபாரசங்கம் ரவுடிகள் மற்ற, கட்டப்பஞ்சாயத்து தலைவர்களின் கையில் சிக்கி சீரழிகிறது.வடசென்னையில் ஒரு கட்டத்தில் வியாபாரிகள் தொழில் நடத்த முடியாத சூழலை மாற்றி அமைத்த அண்ணன் எர்னாவூர் நாராயணன் போன்றோர் கடைகளை தடையின்றி திறக்க போராடினர். இன்று மாதம் இருமுறை பூட்டுவதில் போட்டி போடுகின்றனர்.... ஸ்டாலின் உருவாக்கிய விக்ரமராஜா, வெள்ளையன் இவர்கள் ஒழித்தால் இனி சிறு வணிகங்கள் மேம்படும்....வணிகர்கள் நலன் குறித்து சிந்திக்காத இவர்களை புறக்கணியுங்கள் வணிகர்களே...   10:53:25 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

மே
24
2018
அரசியல் ஸ்டெர்லைட் பிரதமர் மவுனம் ஏன்? காங்., கேள்வி
மோதி கண்டனம் தெரிவிக்கவில்லையாம் அமெரிக்காவில் நடந்த போது கண்டனம் தெரிவிச்சாராம் ஆப்பிரிக்காவில் தெரிவிச்சாராம் ஐரோப்பாவில் தெரிவிச்சாராம் தூத்துக்குடிக்கு மட்டும் தெரிவிக்க வில்லையாம் ....அடேய் அதெல்லாம் தீவிரவாத தாக்குதல்கள்... துத்துக்குடி எல்லாம் மாநில சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் அடங்குவது.... அப்படியே கண்டிச்சாலும் ஒங்க மாநில சுயாட்சியில் தலையிடுவது இல்லையா.... ஆமா நந்திகிராம்லயும் சிங்கூர்லயும் ஒங்க சிங்கு இன்னா சொன்னாரு...ஏதாவது கண்டனம் பதிவு செஞ்சாரா..   09:43:37 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
24
2018
அரசியல் விஷமிகள் தூண்டுதலால் கலவரம் முதல்வர் பழனிசாமி திடீர் விளக்கம்
கலவரம் செய்து , அரசாங்க அதிகாரிகளை கொல்ல முயன்று, அரசாங்கத்தை தாக்கி, அலுவலகத்தை எரிக்க முயன்று கைதானால் சிறை தண்டனை . அந்த பயங்கரவாத வேலையை செய்யும்போது இறந்தால் 10 லட்சம் பணம், அரசு வேலை தருவார்கள். இது சரியா? நம் வரிப்பணம் பயங்கரவாதிக்கு தரலாமா?   07:34:44 IST
Rate this:
5 members
0 members
14 members
Share this Comment

மே
24
2018
சம்பவம் தென் மாவட்டங்களுக்கு தேவை திறமையான ஐ.பி.எஸ்., அதிகாரிகள்
ஒரு மாணவன் இருண்ட முகத்துடன், பெரும் மனத்தொய்வுடன் இருந்தான். பிடித்து செம திட்டு திட்டியதும் எல்லாவற்றையும் சொன்னான். அவன் IAS படிக்கிறவன். இன்னும் சில IAS IPS படிப்பவர்கள் பலர் புலம்பிவிட்டார்கள். இந்த படிப்பை முடித்தால் நாங்கள் தேசவிரோதியாகத்தான் போவோம். பாடத்திட்டம், கல்வி முறை எல்லாமே இடது சாரி சிந்தனையை வளர்க்கும் விதமாகத்தான் இருக்கிறது என்று. சேர சோழர்கள் பற்றியோ, பல்லவர்கள் பற்றியோ, தமிழர்கள் பற்றியோ ஒரு வார்த்தை கூட பெருமிதமாக இல்லை. எப்போது பார்த்தாலும் ஆங்கிலேயன், அல்லது முஸ்லீம் மன்னர்கள். இவர்கள்தான் தெய்வம் போலவும், இவர்கள் கொன்றதால்தான் நமக்கு மோட்சமே கிடைத்தது என்பது போலவும் இருக்கிறது பாடத்தில் என்ற ரேஞ்சுக்கு பேசினார்கள். இந்த சிந்தனையை மாற்ற ஒரு REFRESHING கோர்ஸ் நடத்தினால்தான் என்ன?   07:31:40 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

மே
25
2018
சம்பவம் தூத்துக்குடி கலவரத்திற்கு காரணம் யார்?
குறுகிய காலத்தில் பெரிய நெருப்பை உண்டாக்க பெட்ரோல் தேவை. அது கலெக்டர் அலுவலகத்துக்குள் எப்படி வந்தது? எங்கிருந்து இத்தனை கற்கள் கிடைத்தன? மாநில அரசு ஆதரவுடன் வழக்கு நடக்கும்போது தடையை மீறி எதற்காக இத்தனை பேர் திரளவேண்டும்? இந்த மூன்று கேள்விகளுக்கு மட்டும் துப்பாக்கி சூட்டை எதிர்ப்பவர்கள் பதில் சொல்லட்டும். போதும்.   06:58:34 IST
Rate this:
8 members
0 members
91 members
Share this Comment

மே
25
2018
சம்பவம் தூத்துக்குடி கலவரத்திற்கு காரணம் யார்?
போராட்டக்காரர்களே உஙகளை போல்தான் காவலர்களும் அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது . நீங்களாவது தினமும் உங்கள் மனைவி குழந்தைகளுடன் நேரம் ஒதுக்கி சந்தோசபடலாம்.. ஆனால் அந்த பாக்கியம் காவலர்களுக்கு கிடையாது.. அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது.. அதையும் நினைத்துப் பாருங்கள்.. போராட்டக்காரர்களுக்கு அவர்கள் பிரபலமாக்க உங்களை பயன்படுத்துகிறார்கள்.. நீங்களும் அவர்களுடைய கவர்ச்சியான பேச்சிலும் உணர்ச்சிவசபட்டும் எதுவும் அறியாமல் ஆத்திரப்பட்டு போலீஸ் மீது கல்லெரிந்து வாங்கிக்கொண்டீர்கள்.. இதே ஆர்வத்தை விவசாயத்தையும் அதன் ஆதாரங்களையும் அளிக்கும்போது பார்த்து சும்மா இருந்ததினால் நம் வாழ்வாதாரம் இழந்து நிற்கிறோம். விவசாய புரட்சியை ஊக்கப்படுத்துங்கள் இருக்கும் ஒருசில நீர்நிலைகளையாவது காப்பாற்ற முன் வாருங்கள் எந்த அரசு வந்தாலும் மக்களுக்கு இதே கதிதான் மனிதனாக இருக்க முயல்வாம்   06:57:05 IST
Rate this:
8 members
0 members
74 members
Share this Comment

மே
25
2018
சம்பவம் தூத்துக்குடி கலவரத்திற்கு காரணம் யார்?
1. முரட்டு பக்தன் இல்லாமல் sterlite நடத்தியிருக்க முடியாது 2. எல்லாவிதமான தடைகளையும் நீக்கி நல்லபடியா நடத்த துணைபுரிந்த திராவிடங்களுக்கு 3. சட்டத்தின் வழியாக சாதிக்க முடியும் எனத் தெரிந்தும் போராட தூண்டிய கூட்டம் மொத்ததில் உளவுத்துறை தோல்வி   06:52:06 IST
Rate this:
3 members
0 members
24 members
Share this Comment

மே
25
2018
சம்பவம் தூத்துக்குடி கலவரத்திற்கு காரணம் யார்?
போதும் போராளிகளே, போதும். ஏதோ இருக்கிற பிணங்களை வைத்து அரசியல் செய்துகொள்ளுங்கள். இறந்தவர்களில் யார் அப்பாவி, யார் படுபாவி என்று எனக்கு தெரியாது. ஆனால், இந்த துப்பாக்கி சூட்டுக்கு முழுக்க முழுக்க நீங்களும், கிறிஸ்தவர்களும், மாவோயிஸ்டுகளும், கம்யுனிஸ்டுகளும்தான் காரணம். அந்நிய கைக்கூலிகள் பேச்சை கேட்டு, அநியாயமாக உங்களை நம்பி வந்தவர்களை பலி கொடுத்துவிட்டீர்கள். சுட்டது போலீசாக இருக்கலாம். ஆனால், சுட வைத்தது நீங்கள்தான். இருக்கிற பிணத்தை வைத்துக்கொண்டு வியாபாரத்தை பாருங்கள். நீங்கள்தான் கொலைகாரர்கள். இந்த பாவம் உங்களை சும்மா விடாது. கிறிஸ்தவர்கள் சிந்திக்கவேண்டும். எப்படி ஒரு அரசியல் தலைவர், ஒரு பாதிரி, ஒரு சினிமாக்காரர் கூட இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை, எப்படி சொல்லி வைத்தாற்போல எல்லோரும் ஒதுங்கினார்கள் என்று.   06:46:20 IST
Rate this:
8 members
0 members
72 members
Share this Comment

மே
24
2018
அரசியல் விஷமிகள் தூண்டுதலால் கலவரம் முதல்வர் பழனிசாமி திடீர் விளக்கம்
இதுவரை கலவரத்தில் சிக்கியுள்ளேன். கலவரம் செய்பவர்கள் மிகவும் நல்லவர்கள். கண்ணியமாக நடந்துகொள்வார்கள் என்று அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர்கள் போலீஸ் செய்தது தவறு என்று சொல்லுங்கள். காலில், முழங்காலுக்கு கீழே சுடவேண்டுமாம். மேலே கற்கள் வந்து விழும்போது, உருட்டுக்கட்டையால் அடிபடும்போது, உயிரை காத்துக்கொள்ள தோன்றுமா அல்லது முட்டி எங்கே, இந்தப்பா கொஞ்சம் அசையாம நில்லு, சுடணும் என்று சொல்ல தோன்றுமா? போலீசை குறையே சொல்லாதீர்கள். சாமி, காக்க காக்க படமெல்லாம் பார்ப்போம். கைதட்டுவோம். சமூகத்தில் அமைதி நிலைநாட்டப்பட காவல்துறை மாறி நடந்துகொண்டால் அப்படியே பல்டி. அரசியல்வாதி என்ன செய்வான், அவன் வளர்ப்பு அப்படி. முன் கூட்டியே பார்த்து, பேசி, பொறுமையாக இருங்கள் என்று சொல்வது எல்லாம் என்னவென்றே தெரியாது. ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள். இப்போதுதான் முதுகுதண்டே இருப்பதை உணர்கிறார்கள்.   06:44:25 IST
Rate this:
6 members
0 members
12 members
Share this Comment