chails ahamad : கருத்துக்கள் ( 1341 )
chails ahamad
Advertisement
Advertisement
செப்டம்பர்
19
2018
அரசியல் கைவிடப்பட்ட பெண்களுக்கும் சட்டம் ஒவைசி
அடி மடியில் கை வைப்பது திரு . ஒவைசி போன்றவர்களுக்கு அழகில்லை , கணவனால் கை விடப்பட்டவர்களின் வரிசையில் நம்மையாளும் நாயகரின் துணைவியாரும் உண்டு என்பதை நாசுக்காக சொல்லி , அந்த சட்டமியற்றுபவரின் மீதே நடவடிக்கை எடுத்திட வலியுறுத்துவது எந்த வகையில் நியாயம் என்பதே அவரவர் மனசாட்சிக்கே விட்டு விடுவோம் .   16:05:17 IST
Rate this:
15 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
சம்பவம் காலை உடைத்து விடுவேன் மாற்றுதிறனாளியை மிரட்டிய மத்திய அமைச்சர்
மொத்தத்தில் பா ஜ கட்சியினரில் சாதாரண தொண்டன் முதல் , மந்திரிகள் எம் பி , எம் எல் ஏக்கள் வரைக்கும் ஆட்சி அதிகார மமதையில் அடாவடியில் ஈடுபடுவது சர்வ சாதாரணமாக நிகழ்வதை நாம் கவனத்தில் கொண்டால் , வரும் தேர்தலில் மக்கள் புகட்டுகின்ற பாடம் மிகவும் கடுமையாக இருக்கும் என்பதை உணர முடிகின்றது . ராசாதி ராசனாக வாழ்ந்தவர்கள் சென்ற இடம் தெரியவில்லையாம் , அற்ப கால ஆட்சியில் ஆடுகின்றார்கள் ஆட்டங்கள் , ஆட்சியின் அஸ்தமான காலத்தில் பயணிக்கின்றார்கள் என்பதை உணர வக்கற்றவர்கள் .   14:20:01 IST
Rate this:
3 members
0 members
38 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
பொது முத்தலாக் அவசர சட்டம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஏதோ லட்சங்களில் ஒன்றாக எங்கேயோ ஒருவர் இஸ்லாமிய வாழ்வியல் நடைமுறைகள் அறியாமல் முத்தலாக் ஒரே தடவையில் கூறி இல்லற பந்தத்தில் இருந்து விடுபடுவது, இஸ்லாம் வகுத்த இல்லற வாழ்வியல் நடைமுறைகள் அறியாமல் நடைபெறும் தவறுகளாகும், முத்தலாக் என்பதை எவராக இருந்தாலும் ஒரே தடவையில் கூற முடியாது, ஒவ்வொரு தடவையும் தலாக் கூறுவதற்கும் ஒரளவு இடைப்பட்ட காலங்கள் விடப்பட்டே தலாக் கூறி , அந்த இடைப்பட்ட காலத்தில் கணவன் மனைவிக்குள் சமாதானம் ஏற்படாத பட்சத்திலே உரிய காலங்கள் கழிந்த பிறகே முத்தலாக கூறி பிரிகின்ற நடைமுறைகளை இஸ்லாம் வகுத்துள்ளதை உணர வக்கற்று, ஏதோ இஸ்லாமிய சட்ட திட்டங்கள் பெண்களுக்கு அநீதி இழைப்பதாக கருதி கொண்டு , தனது மனம் போக்கில் முத்தலாக் சட்டத்திற்கு மந்திரி சபை ஒப்புதல் அளித்து பேரானந்தம் அடைகின்றார்கள், அந்த பேரானந்தம் அடைபவர்கள் யாரென்று சற்று நாம் கவனத்தில் கொண்டால், இன்றைக்கு ஆட்சி அதிகாரம் தமது கையில் உள்ளது என்ற மமதையில் முத்தலாக சட்டமியற்ற விழைகின்ற மதவெறியர்கள் யார் என்பதை நம்மால் உணர முடிகின்றது, ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பாகவே பெண்களுக்கும் சொத்தில் உரிமை உண்டு , கணவன், மனைவியின் இல்லற வாழ்வில் நெருடல்கள் இருந்தால் பிரிந்து செல்ல வழிகள் உண்டு என்ற நன்னெறிகளை இஸ்லாம் வகுத்துள்ளதை புரிந்து கொள்ள தவறுவதாலேயே, எங்கோ ஒரு இடத்தில் நடைபெறும் ஒரே சமயத்தில் கூறும் முத்தலாக்கை ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயமும் கூறுவதாக எண்ணி கொண்டு, ஆட்சியாளர்கள் முத்தலாக் சட்டம் நிறைவேற்ற துடிக்கின்றார்கள், நான் இன்று முதியோர் வரிசையில் வாழ்க்கை பயணத்தை மேற் கொண்டுள்ள நிலையில் , இத்தனை காலமும் என் வாழ்நாளில் கேள்விப்படாத முத்தலாக் விவகாரம் இன்றைய மதவெறி ஆட்சியாளர்களால் முன்னெடுக்கப்படுவது உள்ளபடியே அவர்களது சர்வாதிகார போக்கினை அப்பட்டமாக பாமரர்களும் உணர்கின்றார்கள் , எந்த ஒரு அநீதிகளுக்கும் தீர்ப்பாளன் இறைவனே என்பதால் , இன்றைய ஆட்சியாளர்களின் தவறான நடவடிக்கைகளுக்கு இறைவன் உரிய தீர்ப்பை வழங்கும் நாட்களை நாமும் கண்டு களிப்போம் வெகு விரைவில் என்பதே உறுதியாகும் .   14:09:14 IST
Rate this:
45 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
அரசியல் கரன்சி எண்ணுவோர் கம்பி எண்ணுவர் தமிழக அரசுக்கு ஸ்டாலின் கடும் எச்சரிக்கை
சங்கிகளின் புலம்பல்கள் வின்னை தொடுகின்றதே இறைவா , அவர்களுக்கு தமிழக நலனை பற்றிய சிந்தனையை தந்திடுவாயாக ...   10:17:14 IST
Rate this:
13 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
பொது பார்லி கூட்டுக்குழு விசாரணை மத்திய அரசு மறுப்பு
பார்லிமெண்ட் கூட்டு குழு விசாரணைக்கு உத்திரவு இடமுடியாதாம் , பிரச்சனையோ அங்கே தானே முட்டி கொண்டு நிற்கின்றதாம் , விசாரணைக்கு உத்திரவு இட்டால் , தற்போதைய பா ஜ ஆட்சியாளர்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறுவது உறுதியாகி விடுமே , இன்றைய ஆட்சியாளர்கள் தேர்தல் கால முதலீடுதார்ர்களுக்கு நன்றி கடன் செலுத்துவது மிகவும் அருமை என்றாலும் மக்களின் பணத்தை விரயம் செய்வதில் என்ன சுகமோ என்பதை பற்றி தேர்தலில் மக்கள் முடிவு செய்யும் போது , இன்றைய பா ஜ ஆட்சியாளர்கள் துண்டை காணோம் துணியை காணோம் என ஓடுவது உறுதியாகும் .   19:45:25 IST
Rate this:
5 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
அரசியல் பா.ஜ.,வுக்கு தொடர்பில்லை தமிழிசை
தற்போது சுய மரியாதை இயக்க தலைவர்கள் செயலற்று இருப்பதாக எண்ணி கொண்டு, சில பாசிச கட்சியின் தொண்டர்களான குண்டர்கள், ஆதிக்க சாதியினரின் கொட்டத்தை அடக்கி சென்ற நம்முடைய மரியாதைக்கு உரிய பகுத்தறிவு பகலவனாகிய அய்யா பெரியாரின் சிலையை சேதப்படுத்திட முனைவது தமிழனாக பிறந்த எவராலும் ஏற்று கொள்ள இயலாத செயலாகும் , அய்யா பெரியாரின் கொள்கைகளில் தளர்வு இல்லை அதனை செயல்படுத்திட தமிழர்கள் முனையும் காலங்கள் வெகு தூரமுமில்லை , தமிழகத்தில் அடிமைகள் ஆட்சியில் எதையும் செய்திடலாம் என வந்தேறிகள் வரன்மீறி நடந்து கொள்ள முயற்சிப்பதை வளர விட்டால் அதனின் எதிர்வினைகள் மிகவும் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்பதை உரியவர்கள் உணர்ந்து , அய்யா பெரியாரின் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது தக்க நடவடிக்கையை எடுத்திடுவது அவசரமும் , அவசியமுமாகும் .   16:26:29 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
பொது மல்லையா வழக்கில் சிக்கும் வங்கி அதிகாரிகள்
திரு. மல்லையா அவர்களுக்கு கடன் வழங்கியது காங்கிரஸ் ஆட்சியில் , ஆனால் அவரை பத்திரமாக நாடு விட்டு தப்பி செல்ல உதவி செய்தது பா ஜ ஆட்சியில் , ஏதோ காங்கிரஸ் ஆட்சியில் மட்டுமே தொழில் அதிபர்கள் கடனை பெற்று இருந்தாலும், அந்த அதிபர்களில் ஒருவராகிய திரு.மல்லையாவிற்கு எம் பி பதவியளித்து அழகு பார்த்தது பா ஜ கட்சியிலே என்பதை எண்ணி பார்த்தால், பொதுமக்களின் சேமிப்புகளை வங்கிகளின் வாயிலாக கொள்ளையடித்தவரை எம் பி யாக்கி , அழகு பார்த்து தேர்தல் கால முதலீடுதாரர்களாக அவர்களை பயன்படுத்தி , நாடு விட்டு தப்பி செல்ல உதவிகள் செய்தது பா ஜ வின் நன்றி கடனோ என்பதையும் நம்மால் உணர முடிகின்றது, எது எப்படியோ நாட்டில் ஏழைகள் பாடு என்றைக்கும் திண்டாட்டமே, கொள்ளையர்களுக்கோ ஆளும் ஆட்சியாளர்கள் யாராக இருப்பினும் கொண்டாட்டமே என்பதே உண்மையாகும் .   10:26:04 IST
Rate this:
20 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
16
2018
பொது விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-42
பொதுவாக உலக நாடுகளில் இந்தியர்களின் அறிவுக்கூர்மை பிரசித்தி பெற்றதாகும் , நம்முடைய அறிவியல் விஞ்ஞானிகளுக்கு முழுமையான ஆதரவையும் , பொருளாதார ஒதுக்கீடுகளையும் தாராளமாக வழங்கினால் , இன்னும் பல சாதனைகளை நம்முடைய விஞ்ஞானிகள் சாதித்து காட்டுவார்கள் , விண்வெளியில் நம்முடைய ஆதிக்கத்தையும் செலுத்திடலாம் என்பதே உண்மையாகும் , வின்னில் வெற்றிகரமாக பாய்ந்த பி எஸ் எல் வி - 42 வை உருவாக்கிய நம்முடைய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்வோம். வாழ்க பாரதம் .   23:38:43 IST
Rate this:
0 members
1 members
10 members
Share this Comment

செப்டம்பர்
15
2018
அரசியல் தி.மு.க., - காங்., கூட்டணியில் மேலும் குழப்பம் வலுக்கிறது
திமுக , காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் உள்ளதோ இல்லையோ , அதனை உருவாக்கிட ஒரு கும்பல் திட்டமிட்டு காய் நகர்த்துவதை தமிழக நலன் விரும்பும் அனைவரும் உணர்ந்தே உள்ளதால் , அந்த கூட்டணி உடையாதா என கனவு காணும் கும்பல்களின் திருவிளையாடல்கள் விழலுக்கு இறைத்த நீராகவே இருந்திடும் , பெயர் சொல்ல விரும்பவில்லை நோட்டாவின் நிரந்தர கூட்டாளிகளுக்கு தமிழகத்தில் எந்நாளும் இடமில்லை தாமரையும் மலருவதில்லை என்பதே உறுதியாகும் .   01:36:05 IST
Rate this:
24 members
0 members
15 members
Share this Comment

செப்டம்பர்
15
2018
பொது மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது
வரவேற்ககூடிய உத்திரவாக இருந்தாலும் , முதலில் நடைமுறையில் அரசு மருத்துவமனைகளில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் , பிறகு தானாகவே தனியார் மருத்துவமனைகளில் செயல்பாட்டுக்கு வந்து விடும் , அதே சமயம் இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் தொகை அதிகமாயிருப்பதால் , ஒவ்வொரு நோயாளிக்கும் மருந்து சீட்டுகளை கம்ப்யூட்டரில் பிரிண்ட் செய்து கொடுப்பது என்பது நேரம் விரயங்களே ஆகும் , பிற நோயாளிகள் மருத்துவரை காண காத்து இருக்கும் நேரங்கள் நீண்டு கொண்டே இருக்கும் என்பதையும் கவனத்தில் கொண்டால் , இந்த திட்டத்தினால் தேவையற்ற மன உளைச்சல் மருத்துவருக்கும் , நோயாளிக்கும் ஏற்படுவதை தவிர்க்கவும் இயலாது .   23:13:45 IST
Rate this:
4 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X