PSV : கருத்துக்கள் ( 41 )
PSV
Advertisement
Advertisement
அக்டோபர்
12
2018
உலகம் பாலியல் புகார்கள் விசாரணை நடத்த முடிவு
இதை முழுமனதோடு வரவேற்கிறேன். ஆயினும் ஊழலும், உண்மைக்கு மாறான மனநிலையும் பரவிக்கிடக்கும் இன்றைய சமூகத்தில் இது பெயரளவில் ஒரு கண்துடைப்பு விசாரணையாக அமைந்துவிடும் ஆபத்து இருக்கின்றது என்பதை மறுக்க முடியாது. இத்தனைக் காலமாகப் பெரிய மனிதர்கள் என்ற போர்வையில் கீழ்த்தரமான செயல்களை இவர்களால் வெளியே தெரியாமல் செய்யமுடிகிறதென்றால், இவர்களது செல்வாக்கு வலைவீச்சும், பல்வேறு பலமான பொருளாதார, அரசியல் பின்புலன்களும் தான் காரணமாக இருக்கக் கூடும். அதையே தமக்கு உறுதுணையாகக் கொண்டு இந்தக் குற்றச்சாட்டிலிருந்தெல்லாம் எளிதாக தப்புவதற்கு அவர்களால் இயலும். இப்போதே கூட, தமக்கு ஏற்பட்டக் கொடுமையை இழைக்கப்பட்ட அநீதியை வெளியே சொல்லும் பெண்களை நம்புவதற்கும் பலர் யோசிக்கின்றனரென்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம். ஏன் இத்தனை வருடங்கள் மௌனமாய் இருந்தீர்களென்று எதிர்க்கேள்வியும் கேட்கின்றனர். ஆனால் அவர்களெல்லாரும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நேர்ந்ததை வெளியே சொல்வதற்கு எவ்வளவு தடைகளையும், மனஅழுத்தங்களையும் சந்திக்கிறார்களென்பதை உணரவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ மறுக்கின்றனர். பற்பல வருடங்களுக்கு முன்னர் அநீதி இழைத்ததை ஒருவர் மறந்துவிட்டிருக்கலாம், அல்லது அலட்சியப்படுத்தலாம். ஆனால் அத்தனைக் காலமும் அநீதி அழைக்கப்பட்டவர்கள் அந்த வலியை, வேதனையை நெஞ்சில் சுமந்தபடியே வாழ்கிறார்கள் என்பதே உண்மை. அது அவர்களின் வாழ்க்கைப் பாதையையே புரட்டிப் போட்டிருக்கக்கூடும்.ஒரு இயல்பான மகிழ்வான வாழ்வு அவர்களுக்கு கிட்டாமல் போயிருக்கக்கூடும். இதையெல்லாம் கருணை உள்ளத்தோடு அணுகி, தீர விசாரித்து, அநீதி இழைக்கப்பட்டது புலனானால், அதை இழைத்தவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.புகாரளிப்பதற்கு வெகு நீண்ட காலம் எடுத்துக்கொண்டால், அந்தப் புகாரின் உண்மைத்தண்மையை அது நீர்த்துப் போகச் செய்தாலும், அவரவர் மனமே அதற்கு சாட்சி. அநீதியின் இருட்டில் நீதி மறைந்தாலும், அது வெளிவரும் காலம் வந்துவிட்டது. இனிவருங்காலத்தில் இது போன்று செய்ய முற்படுபவர்கள் ஒரு முறைக்குப் பலமுறை யோசிக்க வேண்டிய அவசியத்தை இந்த 'மீ டூ" புரட்சி ஏற்படுத்தியிருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. முதலில் அநீதி இழைக்கப் பட்டதை வெளியே சொல்வதற்கு வெட்கப்படுவதை நிறுத்த வேண்டும். வெட்கப்பட வேண்டியவர்கள் தப்பு செய்பவர்களே. என்னதான் நடக்கும், பார்த்துவிடலாமென்று துணிந்து உண்மையை வெளியே உரக்கச் சொல்ல வேண்டும். முதலில் ஓரிரு குரல் ஒலிக்காத தொடங்கினாலும், அதுவே இப்போது வெடித்ததை போல் பன்மடங்கில் வெளிவரும். கலகம் பிறந்து வழி பிறக்கும். இதெல்லாம் நமக்குச் சொல்லித் தரும் பாடங்கள், குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கத்தைக் கற்றுத்தரத் தயங்கக்கூடாது. இது பெற்றோர், உற்றார், உறவினர், ஆசிரியர், சமூகம் அனைத்துத் தரப்பின் பங்களிப்போடு நடைபெற வேண்டிய செயலாகும். குழந்தைகளுக்கு இழைக்கப் படும் அநீதியை வெளியே சொல்லவும் அவர்களுக்குத் தெரியாது. அதைப்பற்றிய அறிவித்த, தங்கள் உடல் மீது அத்துமீறும் உரிமை யாருக்கும் இல்லை என்கிற தெளிவைப் புகட்ட வேண்டியது மிகவும் அவசியம், மற்றும் அவசரமும் கூட. பாதிக்கப்பட்டவரின் குரலுக்குப் பரிவோடு செவிசாய்ப்பது இன்றைய அவசியமான செயல். ஆதரவுக்கரம் நீட்டுவது அனைவரின் கடமை. எங்கோ இவருக்கோ நடப்பது என்று நாம் வாளாயிருந்துவிட்டால் அது ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் நம்மையேக் கடிக்க வரும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆண்களோ, பெண்களோ, சிறுவர் சிறுமியரோ- இதுபோன்ற பாலியல் வன்கொடுமைக்கு ஆளான யாருக்கும் அதற்குரிய நீதி கிடைக்க வேண்டும், அதற்கு சமூகத்தின் அங்கத்தினர் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். தீயவர்களைக் கண்டு பயந்து வாய்மூடியே இருப்போமானால், இதற்கு ஒரு முடிவே இல்லாமல் போய்விடும் என்பதை உணர்வோம். உண்மைக்குத் தோள் கொடுப்போம், நண்மைக்குக் காத்திருப்போம் தர்மம் வெல்லும்   17:13:28 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

அக்டோபர்
10
2018
உலகம் வாட்ஸ் ஆப் வீடியோ அழைப்பால் ஹேக் அபாயம்...
அளவுக்கு மிஞ்சினால் அமுதமே நஞ்சு எனும் போது, நவீன தொழில்நுட்பங்களின் குறைபாடுகளையும், அதனால் உருவாகக் கூடிய பிரச்சனைகளையும் பற்றிச் சொல்லவும் வேண்டுமா ? இன்றைய இணைய உலகில் யாருடைய தகவல்களும் திருடப்படலாம். என்னதான் இணையத்தை அடிப்படையாகக் கொண்டு சேவை வழங்கும் நிறுவனங்கள், பயன்பாட்டாளரின் பாதுகாப்பை உறுதி செய்வதாகக் கூறினாலும் இத்தகு இணையச் சேவைகளின் நுகர்வோர் தாம் இது பற்றிய விழிப்புணர்வோடு தம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.   22:29:55 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
8
2018
பொது சொந்த செலவில் 22 முதியவர்களை விமானத்தில் அழைத்து சென்ற விமானி
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் - வள்ளுவம். சிறு வயதில் சொன்னபடியே விமானி ஆகிக் காட்டியதோடு , "பெரியவர்களை விமானத்தில் அழைத்துச் செல்வேன்" என்று தான் சொன்ன சொல்லையும் மறக்காமல் காப்பாற்றும் வாய்மையும், நேர்மையும் இவரை வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் என்பது திண்ணம். விகாஸ் ஜியானிக்கு நல்ல மனது, பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்   06:23:41 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
2
2018
பொது கடத்தல் சிலைகளை வைத்திருப்போருக்கு ஐ.ஜி., எச்சரிக்கை!
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் ஐயா பொன்மாணிக்கவேல் அவர்கள் நன்றாக இருக்க வேண்டுமென்று என்னப்பன் முருகனை வேண்டுகிறேன். அவர் காரியம் யாவும் சித்தி பெற இறைவன் அருள் புரிவான்.   00:44:22 IST
Rate this:
0 members
0 members
24 members
Share this Comment

செப்டம்பர்
21
2018
சம்பவம் சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுந்தது
நேற்றுத்தான் 79 ஆவது முறையாக கண்ணாடி விழுந்தது என்று படித்த நினைவு. இன்று 81 ஆவது முறை ஆகிவிட்டதா ? போகிற வேகத்தைப் பார்த்தால் 100 முறை என்ன 1000 ஆவது முறை கூட சீக்கிரமே விழுந்துவிடும் போலிருக்கின்றது. யாரையும் ஒன்றும் சொல்வதற்கில்லை.வாழ்க வளமுடன்   21:00:36 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
அரசியல் கைவிடப்பட்ட பெண்களுக்கும் சட்டம் ஒவைசி
ஐயா ரஜாக் - //முத்தலாக் சட்டத்தை நீக்கி விட்டால் கொலை அல்லது கணவனால் கைவிட படுவார்கள் பெண்கள்// உங்களின் இந்தக் கருத்தைப் படித்தால் பெரும்பாலான இசுலாமிய ஆண்கள் அவர்களது மனைவிகளுக்கு துரோகம் என்னும் அநியாயம் செய்வதுடன் கொலை பாதகத்தையும் செய்யத் துணிந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை ஒரு இசுலாமியராக நீங்களே ஒப்புக்கொள்வதாகத்தான் புலப்படுகின்றது. இது இறைவன் கோட்பாட்டின் படி வாழ்க்கை நடத்துவதாகச் சொல்லிக் கொள்ளும் உங்கள் மார்க்கத்தவருக்கு அழகா ?   01:57:44 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
பொது வராகடனின் உண்மை அம்பலப்படுத்திய ரகுராம் ராஜன்
மணிமாறன் அவர்களே, முழு உண்மை தெரியாமல் "வங்கிகளே இதற்கு முழுப் பொறுப்பு " என்று கருத்திடாதீர்கள். வங்கியில் வேலை பார்க்கும் அதிகாரிகள் மொத்தமும் அப்படியே நல்லவர்கள், நாணயமானவர்கள் என்று சொல்லவில்லை. ஆனால், அரசியல் அழுத்தங்களால் மீள வராது என்று தெரிந்தும் பல்வேறு தனி நபர், சுய உதவிக்குழுக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு சரியான ஆவணங்கள் கூட இல்லாமல் சென்ற ஆட்சிக் காலங்களில் ஆயிரங்களிலும், லட்சங்களிலும், கோடிகளிலும் கடன் வழங்க வேண்டிய சூழலுக்குப் பல வங்கிகள் தள்ளப்பட்டன. ஒவ்வொரு ஆண்டு வெளியிடப்படும் அவைகளின் நிதிநிலை அறிக்கையிலும் இப்படிக் கொடுத்து வாராக்கடன்களாக வளர்ந்து நின்ற பல கோடி மதிப்பிலான கடன் நிலுவைகள், தங்களுக்கு எதிர்மறையாக வெளிவந்துவிடக் கூடாது என்ற காரணத்தால் , வங்கிகளால் மூடி மறைக்கப்பட்டன. ஏற்கனவே கடன் வாங்கியவர்கள், திருப்பி செலுத்தாதவர்களுக்கு மீண்டும் புதுக் கடன் வழங்கி பழைய கடனை வட்டியும் வசூலுமாக திருப்பியளித்து விட்டதாக வங்கிகள் ஒரு மாயையை உருவாக்கின. அதாவது, ஊழல் கறை படிந்த அரசியல்வியாதிகளால் தங்கள் கஜானாவிலிருந்து தங்களை நம்பிப் பணம் முதலீடு செய்த பொது மக்களது டெபாசிட் தொகையை அள்ளியெடுத்துக் கொள்ளைக்காரர்களுக்குக் கடன் என்ற பெயரில் வழங்க வேண்டிய நிர்பந்தத்திற்கு பொதுத்துறை வங்கிகள் ஆளாகியதோடல்லாமல், திரும்ப வராத அது போன்ற பல கடன்தாரர்களுக்கு மீண்டும் சில வருடங்களில் வட்டியும் முதலுமாக வளர்ந்துவிட்டக் கடனை அடைக்கும் விதமாக அதிகத் தொகையைப் புதுக்கடன் என்ற பெயரில் வழங்கிய குற்றத்தைத்தான் வங்கிகள் செய்துள்ளன. இதில் சில பல வங்கி ஊழியர்களுக்கும் கமிஷன் என்ற பெயரில் பணம் போயிருக்க வாய்ப்புண்டு என்பதை மறுப்பதற்கில்லை. எத்தனையோ நேர்மையான வங்கிப் பணியாளர்களை, லஞ்சம் மூலமாக அல்லாமல், பல்வேறு பயமுறுத்தல்கள் மற்றும் சிக்கலான சூழ்நிலைகளை உருவாக்கி, இது மாதிரியான கடனைக் கொடுக்க வைத்திருக்கிறார்கள் செல்வாக்கு மிகுந்த, நேர்மையற்ற புதுவாழ்வு மனிதர்கள். "ஏன் அப்போதே இது பற்றி வாயைத்திறந்து உண்மையை அந்த வங்கிகள் சொல்லியிருக்கலாமே ?" என்று கேட்க்கத் தோன்றலாம். ஆனால், நடைமுறையில் அப்படிச் செய்திருந்தால் உயிர்ப்பயம் உட்பட பல்வேறு சிக்கல்கல்களைத் தனி நபர்களாக அந்த நேர்மையான ஊழியர்களும் சந்தித்திருப்பார்கள் என்பதை நம்மால் ஊகிக்க முடியாதா? இந்தப் பிரச்சனையின் ஆணிவேர் இன்று பெரிய உத்தமர்கள் போலப் பேசும் மெத்தப் படித்தக் கிரிமினல் அரசியல்வியாதிகள் தான் என்பதை தயை கூர்ந்து உணருங்கள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசித் திரியும்ட முகமூடி மனிதர்கள் இன்று நம் நாட்டில் பெருகி விட்டார்கள், அவர்களது முகத்திரையைக் கிழித்து உண்மையை உணர வேண்டியதும், நாட்டைக் காப்பாற்றுவதும் பொறுப்புள்ள குடிமக்களாகிய நம் அனைவரின் கடமையாகும். வெற்றுக்காரங்களுக்காக கொள்கை கோட்பாடுகளற்றக் கொள்ளைக்காரர்கள் வசம் நாடு மீண்டும் சிக்கிவிடக் கூடாது. மாற்றம் முதலில் நமது மனதில் வரவேண்டும், அதுவே தானாக சமூகத்திலும் உருவாகும், நம் நாடு செழிக்கும். செயற்கையாக நம்மிடையேப் புகுத்தப்பட்டு, அந்நிய நாட்டு சூழ்ச்சிகளால் மென்மேலும் ஆழப்படுத்தப்பட்டுள்ள இன, மத, ஜாதி வேறுபாடுகளைக் களைந்து, குறுகிய மனப்பான்மையை விட்டொழித்து நாமெல்லோரும் ஒற்றுமையாக நாட்டு வளத்தைப் பற்றியே சிந்திப்போம், செயல்படுவோம்.   17:27:36 IST
Rate this:
0 members
0 members
24 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
பொது மன அழுத்தத்தில் லாலு சிகிச்சை அளிக்க முடிவு
ஆக மொத்தத்துல செய்த பாவத்திற்குக் கூலியாக நீதிமன்றம் வழங்கிய சிறை தண்டனையை அனுபவிக்க மனமில்லை. இது சரியில்லை, அது சரியில்லைன்னு மருத்துவமனையில் சேர்ந்து சொகுசா வாழலாம்னு திட்டம் போட்டாச்சுப் போலருக்கு. நடத்துங்க நடத்துங்க. ஊரை அடிச்சு சேர்த்த ஊழல் பணமிருக்குங்கற தைரியத்துல மனுஷப்பயலுக என்ன வேணாலும் அநியாயம் பண்ணலாம், ஆனால் தெய்வம் நின்று கொல்லும். தர்மம் வெல்லும்.   06:04:33 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
4
2018
பொது மருத்துவமனையில் கொசுத்தொல்லை, நாய்த்தொல்லையால் லாலு அவதி
இவர் என்ன பெரிய தியாகம் செய்துவிட்டு சிறை சென்றுள்ளாரா ? தண்டனை பெற்றதிலிருந்து ஒன்று பெயிலில் வெளி வந்து வீட்டிலிருக்கிறார் இல்லையென்றால் உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனையிலிருக்கிறார். போதாததற்கு இது சரியில்லை அது சரியில்லையென்று முணுமுணுப்பு வேறு. செய்த தவற்றிற்கு தண்டனை அனுபவிப்பதைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாத இவரைப் போன்ற மனிதர்கள் நம் நாட்டின் சாபக்கேடு. மற்ற கைதிகளுக்கும் இது போன்ற வசதிகள் செய்து தரப்படுகின்றனவா, இல்லை அரசியல்வாதிகளுக்கு மட்டும் தனியாக வசதிகள் ஏற்படுத்தித் தரும்படியானக் குற்றவியல் தண்டனைச் சட்டங்கள் நம் நாட்டில் உள்ளனவா?   06:02:16 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2018
பொது 20ம் ஆண்டில் உங்கள் தினமலர்.காம்
இணைய உலகில் இணையில்லாது வீறுநடையிடும் தினமலர் செய்திக் குழுமத்திற்கு எனது வாழ்த்துகள் மற்றும் நன்றி   21:14:00 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X