நண்பர்களே சற்று சிந்தியுங்கள், இவர் மாவட்ட ஆட்சியாளராக இதனை செய்யவில்லை. தனி ஒரு நபரின் முயற்சியால் 100 கி.மீ., சாலை அமைத்து உள்ளார். நாமும் ஏன் முயற்சி செய்ய கூடாது?. நம் வீதியில், தொகுதியில் உள்ள குறைபாடுகளை நாமே சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும். அரசாங்கம் செய்யும் என்று எதிர்பார்த்தால், தரம் இல்லாத பணி காலம் கடந்து செய்வர்கள். ஏதேனும் மாற்று கருத்து இருந்தால் வரவேற்க படும்.
08-நவ-2012 10:47:41 IST
மின்சாரம் இல்லை, காஸ் இல்லை. இன்னும் கொஞ்சம் நாளில் அரிசி, தண்ணீர் என்று அத்தியாவசிய பொருள்களும் சிறிதளவே தருவார்கள். நம் நாட்டில் சரியான தொலை நோக்கு திட்டம் இல்லை. அதனை நிறைவேற்ற வேண்டிய பணம், எல்லாம் அரசியல்வாதிகள், சினிமாகாரர்கள், கிரிகெட் விளையடுபவர்களிடம் உள்ளது. இதற்கு, மக்கள் புரட்சி வர வேண்டும். சாதி, மதம் என்று பாராமல் அனைவரும் சேர்த்து போராடவேண்டும்.
05-அக்-2012 09:33:00 IST
அதிகாரிகள் வேலை செய்யும் தருணத்தில், காபி, பண், VIP விசிட், சாப்பாடு , யானைக்கு அல்வா செலவு ஏறக்குறைய ரூ 7 லட்சம். கணக்கு சரியாகி விட்டது. எல்லாரும் வீட்டுக்கு போங்க.
29-ஜூலை-2012 06:13:31 IST
கடலூர் வாசி என்ற முறையில், நான் இதனை எழுதுகிறேன். கடத்த இருபது ஆண்டுக்குக்கு முன் இருந்த மாதிரி கடலூர் உள்ளது. எந்த ஒரு முன்னேற்றம் இல்லை. மஞ்சகுப்பம் நெடூ சாலை குறுகிய சாலையாக உள்ளது. மஞ்சகுப்பம் மைதானம் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. அண்ணா மேம்பாலம் சரியான பராமரிப்பு இல்லை. முக்கிய சாலைகள் சரியான முறையில் இல்லை. கட்டண கழிப்பிடம் ( தபால் நிலையம் அருகில்) சரியான பராமரிப்பு இல்லை. இதனை எல்லாம் சரி செய்ய, திரு. சம்பத் அவர்கள் தக்க நடவடிக்கை எடுபார் என்று நம்புவோம். கடலூர் நகரத்தை முன்மாதிரி நகரமாக மாற்றுவர் என்று நம்புவோம்.
07-மார்-2012 14:17:18 IST