Advertisement
Pa. Saravanan : கருத்துக்கள் ( 7 )
Pa. Saravanan
Advertisement
Advertisement
மே
2
2014
பொது அரசியல் விளையாட்டு குண்டுவெடிப்பு விசாரணையிலும் சிக்கல்
இந்த செய்தி மனச்சோர்வைத் தருகிறது. இதிலெல்லாம் அரசியல் கூடாது. உச்சகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவாகவே நம் நாட்டின் உளவுப் பிரிவுகளுக்குள் ஈகோ மோதல் உண்டு என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். மனித உயிர் போயிருக்கின்ற இந்த வருத்தமான சூழ்நிலையில் ஒருங்கிணைந்து செயல்படுங்கள். மக்களின் மனதில் நிச்சயமற்ற எதிர்காலம் குறித்த பயத்தை உருவாக்கி விடாதீர்கள். சிறு சிறு சம்பவங்களையும் கவனத்துடன் ஆராயுங்கள். நாட்டின் மீது அக்கறை கொண்ட, நம் நாடு எப்படியும் முன்னேறிவிடும் என்று ஆசைகொண்ட, இக்கால இளைஞர்கள் நாளை உலகை மாற்றுவார்கள் என்று மிகுந்த நம்பிக்கை கொண்ட, அதற்காக சிறு துரும்பாக உதவத் தயாராக இருக்கின்ற ஒரு சாமானிய குடிமகனின் கூக்குரல் இது. இதை அலட்சியம் செய்து விடாதீர்கள். உலகமெங்கும் நல்லெண்ணம் பரவட்டும். கவலைகளோடும், நம்பிக்கைகளோடும்......   11:10:37 IST
Rate this:
5 members
1 members
86 members
Share this Comment

பிப்ரவரி
17
2014
அரசியல் தி.மு.க., அணி பேரணியாக மாறும் திருச்சியில் கருணாநிதி நம்பிக்கை
தமிழ் சிங்கம், தமிழில் ஒரு சொல்லுக்குமுன் அ சேர்த்தால் எதிர்மறையான பொருள் மட்டும்தான் வரும் என்பதில்லை. நேர்மறையான பொருளும் வரும். உதாரணமாக கல்யா என்றால் அழகில்லாதவள் என்று பொருள். அகல்யா என்றால் அழகிலாதவள் அற்றவள் அதாவது அழகி என்று பொருள். அதேபோல் தி.மு.க என்றால் நன்மை இல்லை என்று பொருள், அ.தி.மு.க என்றால் நன்மை இல்லை என்பது இல்லை என்று பொருள் கொள்ளலாமே. என்ன ஒரு உண்மை என்றால் உங்கள் தலைவரைப்போல் சமயோசிதமாகப் பேச அங்கு ஆள் இல்லை.   11:06:03 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
13
2014
அரசியல் மிளகு பொடி ஸ்பிரே அடிப்பு கத்தியுடன் வந்த எம்.பி.,க்கள் வெட்கப்படுகிறோம் மீரா குமார்
அன்புப் பெருமக்களே, இதுதான் காங்கிரஸ்சின் உண்மை முகம். இவர்களை ஆட்சியில் அமரவிட்டதற்காக நாம்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும். வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பொது கண்ணியம் மிக்கவரைத் தெரிவு செய்யவேண்டும். எங்கே..? நாம் வசதி படைத்தோரை அல்லவா தேடுகிறோம். படாடோபமாக வாக்குக் கேட்க வந்தால் தான் நாமே மயங்குகிறோம். எளிமையானவர்களை நேர்மையானவர்களை என்றைக்கு மதித்தோம்? இப்படி நம்மிடமும் தவறுகள் இருக்கும் பொது எங்கிருந்து ஒழுக்கம் வரும்? நாம் யாரைக் குற்றம் சொல்லமுடியும்? நம் நாட்டின் மானம் இப்படியா சந்தி சிரிக்க வேண்டும்?   14:13:05 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
10
2014
பொது ஆம்., நான் இஸ்லாமை பின்பற்றுகிறேன்- இளையராஜா மகன் யுவன்சங்கர் ராஜா
நண்பர்களே, மதத்தைக் காட்டி மக்களைப் பிரிப்பது அரசியல்வாதிகள்தான். மக்கள் ஒற்றுமையாய்த்தான் வாழ விரும்புகிறார்கள் என்று மேடை நாகரீகம் கருதித்தான் பேசி வந்திருக்கிறோம் என்று இப்போதுதான் தெளிவாகிறது. ஒரு தனி மனிதன் தான் விருப்பப்பட்ட மதத்தைத் தழுவுவது உங்களை எப்படி பாதிக்கிறது? அவரின் மத மாற்றத்தை விமர்சிக்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது? அதெப்படி நண்பர்களே அந்த மதத்தில் பல தாரம் மணந்து கொள்ளலாம் என்று வாய் கூசாமல் சொல்கிறீர்கள்? அவ்வாறு பலதாரம் மணந்துகொண்ட இஸ்லாமியர்கள் எவ்வளவு பேரை உங்களுக்குத் தெரியும்? இஸ்லாமியர் ஆகிவிட்டால் ஆஸ்கார் விருது வந்து விடுமா? ஏ. ஆர். ரகுமான் ஆஸ்கார் பெற்றது அவர் திறமைக்காக, இஸ்லாமியர் என்பதால் அல்ல. உங்களது காழ்ப்புணர்ச்சியால் அந்த நல்ல கலைஞன் பெற்ற பெருமையைக் குலைத்துவிடாதீர்கள். வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு. இது நம்முடைய குறுகிய மனப்பான்மையையும், குறைந்துவிட்ட சகிப்புத் தன்மையையும்தான் காட்டுகிறது. அந்த மனிதன் தேடுவது மன அமைதியை. அது அவருக்குக் கிடைக்க நாம் நம் கடவுளை வணங்குவோம் அவர், அவர் நம்பும் இறைவனை வேண்டட்டும். நன்றி.   11:55:33 IST
Rate this:
13 members
3 members
72 members
Share this Comment

ஜனவரி
30
2014
அரசியல் தொடர்கிறது வீதிக்கு வந்த தி.மு.க., குடும்ப சண்டை ஊருக்கு ஊர் கண்டன போஸ்டர், உருவ பொம்மை எரிப்பு
அன்புப் பெரியோர்களே, தாய்மார்களே, நாம் என்றோ விதைத்த முட்செடி நாம் பாதையிலே காத்துக் கிடந்து காலைப் பதம் பார்க்கிறது. மீண்டும் அழகிரி கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படலாம். ஆனாலும் சண்டையில் கிழிந்த சட்டை கிழிந்ததுதானே. ஹ ஹ ஹ ஹ ஐயம் வெரி ஹாப்பி......   11:19:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
24
2014
அரசியல் கட்சியின் கட்டுப்பாட்டை மீறினார் தி.மு.க.,வில் இருந்து அழகிரி நீக்கம்
மாத்தி நடந்தா உஷ்ஷு. மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த இஷ்ஷு. நம்ம அரசியலே இதுதான் உஷ்ஷு, இஷ்ஷு.   17:19:44 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
7
2014
சிறப்பு கட்டுரைகள் தேவையற்ற செய்திகளை படிப்பதில்லை பார்ப்பதில்லை ஸ்டாலின் பதிலடி
உதாரணப்படி பழம் மூத்தவருக்கு, அதாவது அழகிரிக்கு என்று சொல்லுங்கள்.   11:44:20 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment