ஒரே நாளிலேயே பல முறை தன்னுடைய நிலையினை மாற்றி கொள்ளும் அதீத சக்தி படைத்தவர் நம் முலாயம் சிங் யாதவ்..நம்பகதன்மைக்கும் அவருக்கும் உள்ள பொருத்தம் எலிக்கும் பூனைக்கும் உள்ள பொருத்தத்துக்கு சமம்..யார் கண்டது இந்த அகிலேஷ் யாதவ் போகிற வழியில் ஆந்திராவின் கிரண்குமார் ரெட்டி வீட்டுக்கும் ஏன் எடியூரப்பா வீட்டுக்கு போயிருந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை...
23-ஏப்-2013 00:30:04 IST
அனைத்து தவறுகளுக்கும் ராஜாவே காரணம் என ஜே.பி.சி. கூறிய பிறகு கடந்த காலங்களில் "ராஜா தவறு செய்ததாக நான் நம்பவில்லை" என மன்மோகன் சிங் கூறியதற்கும் "2ஜி ஏலத்தில் ஜீரோ லாஸ்" என்று கபில்சிபில் கூறியதற்கும் என்ன பதில் சொல்ல போகிறது காங்கிரஸ்? பிரதமருக்கும் நிதியமைச்சருக்கும் தெரியாமல் இது நடந்தது என்றால் அவர்களை விட பெரியவர்களின் ஆசிர்வாதம் இருந்ததால் தான் இது சாத்தியம் என்ற வாதமும் இங்கே மேலோங்குகிறது..
20-ஏப்-2013 00:07:18 IST
கேள்வி: 2006-2011 வரையிலான திமுக ஆட்சியில் ராஜீவ் கொலை சம்பந்தப்பட்டவர்களுக்காக எந்த ஒரு தீர்மானமும் சட்டசபையில் நிறைவேற்றபட வில்லையே? பதில்: அப்பொழுது இந்த விஷயத்தில் கழகம் அடக்கத்தோடு செயல்பட்டது.
கேள்வி: அப்படியானால் இப்பொழுது தான் ஆக்கப்பூர்வமாக செயல்படுகிறீர்களா? பதில்: ஆட்சியில் இருக்கும் போது கண்ணியம் மற்றும் கட்டுபாட்டையும் ஆட்சியில் இல்லாத போது கடமையையும் கொண்டிருப்பது தான் அண்ணா பாசறையில் நாங்கள் கற்று கொண்ட பாடம். கேள்வி: கூட்டணியில் இருந்து விலகி விட்ட இந்த சூழ்நிலையிலாவது தாங்கள் மத்திய அரசுக்கு எதிராக ஆக்கப்பூர்வமாக போராடுவீர்களா? பதில்: நாங்கள் ஒன்றும் மாநிலத்தில் ஆட்சியில் இல்லையே.. கேள்வி: ஆட்சியில் இருப்பதற்கும் மத்திய அரசை எதிர்த்து போராடுவதற்கும் என்ன சம்பந்தம்? பதில்: ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மத்திய அரசை எதிர்த்து போராடமாட்டோம் என்பது தான் எங்கள் கொள்கை..
14-ஏப்-2013 00:22:20 IST
நாடாளுமன்ற தேர்தல் வரை காங்கிரஸோடு இணக்கமாக இருந்து மாநிலங்களுக்கு தேவையான காரியங்களை சாதித்து கொண்டு 2011ல் வைகோவை கழட்டி விட்டது போல கடைசி நேரத்தில் காங்கிரஸையும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஜெ. கழட்டி விட வேண்டும்.
14-ஏப்-2013 00:08:25 IST
டாக்டர் கைது செய்யப்பட்டது மிகவும் கண்டிக்கதக்கது. முதல்வர் இதற்கு உண்டான விளக்கத்தினை அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும்..
31-மார்-2013 00:07:50 IST
காங்கிரஸ் திமுக உறவு முறிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டாலும் ஒருவருக்கொருவர் ஆக்கப்பூர்வமான குற்றச்சாட்டுகளை இது நாள் வரையிலும் கூறிக் கொண்டதில்லை. அழகிரி எங்கள் நட்பு தொடரும் என கூறுகிறார். அன்பழகன் பொதுக்குழுவில் மத்திய ஆட்சி நிலைக்க வேண்டும் என விருப்பம் தெரிவிக்கின்றார். டி.ஆர்.பாலு இன்னும் மத்திய அரசின் பதவியில் தொடருகிறார். ஒரு வேளை பாராளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தால் அன்னிய முதலீட்டு விவகாரத்தில் பின்பற்றிய முறையை தான் அப்பொழுதும் திமுக பின்பற்றும். மொத்தத்தில் தமிழகத்தில் இப்பொழுது கொழுந்து விட்டு எரியு தீயை அணைக்க தான் இந்த நாடகம்.
29-மார்-2013 00:57:24 IST
ஸ்டாலின் வீட்டில் ஒன்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் ரெய்டு செய்யவில்லை. மாறாக வருகை தான் புரிந்தனர். 4 மாதங்களுக்கு முன்பே இந்த வழக்கு வெளிச்சத்துக்கு வந்தாலும் ஆதரவினை விலக்கிய மறுநாள் சி.பி.ஐ அதிகாரிகள் ரெய்டு சாரி வருகை புரிந்தது ராசா உட்கார 2ஜி முறைகேடு நடந்த கதை சாரி காக்கை உட்கார பழம் விழுந்த கதை தான். சி.பி.ஐ. ஒரு தன்னாட்சி அமைப்பு. அதனை யாரும் அரசியல் லாபத்துக்காக தங்கள் எதிரிகளை பழி வாங்க தூண்ட முடியாது. மாறாக மாஜி நண்பர்களை வேண்டுமானால் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி காப்பற்றலாம்.
25-மார்-2013 00:15:00 IST
கேள்வி: ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. ரெய்ட் நடந்தது பற்றி?
பதில்: மத்திய அமைச்சர்களே இதற்கு உரிய பதிலை அளித்திருக்கின்றனர். கேள்வி: இது அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என பா.ஜ.க., கம்னியூஸ்டு கட்சிகள் கூறியுள்ளனவே?
பதில்: இதற்கு உரிய பதிலை நாரயணசாமி உங்களுக்கு தருவார்.
கேள்வி: பிரதமர் ரெய்டுக்கு அதிருப்தி தெரிவித்து இருக்கிறாரே?
பதில்: பிரதமர் எத்தகைய உணர்ச்சிகளையும் காட்டதவர் என்ற உங்களுடைய விமர்சனங்களுக்கு அவர் தந்த பதிலடியாகவே இதனை பார்க்கிறேன்.
கேள்வி: சி.பி.ஐ. ரெய்ட் அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என்று நீங்கள் கூறியதற்கு என்ன பொருள்?
பதில்: காழ்ப்புணர்ச்சி இருந்தால் மாநில அரசும் இல்லை என்றால் மத்திய அரசும் காரணம் என பொருள்.
கேள்வி: இதனை சட்டபடி சந்திப்போம் என ஸ்டாலின் கூறியுள்ளாரே?
பதில்: இதனை சட்டபடி சந்திக்காமல் வேறு வழி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். அந்த வழியில் சந்திக்கிறோம்.
22-மார்-2013 00:14:02 IST