Ganapathy : கருத்துக்கள் ( 564 )
Ganapathy
Advertisement
Advertisement
நவம்பர்
16
2018
பொது சபரிமலை செல்ல முயன்ற இடதுசாரி பெண்ணுக்கு. எதிர்ப்பு! கொச்சி விமான நிலையத்தில் பக்தர்கள் போராட்டம்
சார் ஏன் பிஜேபி இந்த வழக்கில் கட்சி சேர்ந்து மேற் கூறிய வாதங்களை வைக்கவில்லை . எல்லோரும் அரசியல் ஒட்டு வங்கி காக்க போராட்டம் செய்கிறார்கள் . தீர்ப்பு வரும்முன்பு , தீர்ப்பு வந்த பின்பும் பிஜேபி தலைவர்களின் கருது என்ன? இப்போது உள்ள கருது என்ன ? . சரி , அப்படி போராட்டம் நடத்தவேண்டும் என்றல், உச்ச நீதிமன்றத்தின் முன்பு போராடவேண்டும், எதற்க்காக உண்மையான பக்தர்கள் பொதுவதற்கு தடை செய்கிறார்கள், ஐம்பத்தி இரண்டு வயது பெண்மணியை வயது பரிசோதிக்க , போராட்டக்காரர்களுக்கு என்னனு உரிமை,?   09:06:34 IST
Rate this:
99 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
17
2018
பொது கேரளாவில் இன்று திடீர் முழுஅடைப்பு
வாழ்க தேச பக்தி , ராத்திரி பத்துமணிக்கு மேல போகவேண்டாம்னு தடுத்தால் சசிகலா அங்கேயே இருந்தார் . நகர மறுத்ததால் கைது செய்யப்பட்டார் . இந்த தியாக செயலுக்கு இன்று கேரளா முழுவதும் பிஜேபி ஹர்த்தால் . ஒழுக்கங்க வேலைக்கு செல்லும் தேச துரோகிகள் ஒழிக. பிஜேபியின் செயல் நாளுக்கு நாள் மோசமாகி உள்ளது. இன்று கார்த்திகை ஒன்று , ஐயப்ப மலைக்கு செல்பவர்கள் விரதம் தொடங்கும் நாள் . இன்று ஐயப்ப பக்தர் என்று போலி வேடம் ஈடுபவர்களின் ஹர்த்தால். தீவிர வலது பட்சமும், தீவிர இடது பட்சமும் எத்தனை ஆபத்து என்பதை மக்கள் உணரவேண்டிய காலம் ..   08:40:12 IST
Rate this:
51 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
14
2018
அரசியல் சபரிமலை விவகாரத்தில் பினராயி விஜயன் சதி எச்.ராஜா குற்றச்சாட்டு
, தீர்ப்பு வழங்கியது அரசியல் சாசன பெஞ்ச் . அடிப்படை உரிமைக்கான வழக்கில் தீர்ப்பு வந்தால், உடன் நடைமுறைப்படுத்தவேண்டும் , ஒரு தூக்கு தண்டனையை நிறுத்த உத்திரவு வந்தால் உடன் நிறுத்த வேண்டும், அதுபோலத்தான் அடிப்படை உரிமைக்கான வழக்கில் , தீர்ப்பு வந்தவுடன் நடைமுறைப்படுத்த வேண்டியது அரசின் கடமை   08:42:57 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
11
2018
அரசியல் வைகோவுடன் போட்டோ எடுத்த அமைச்சர் தி.மு.க., எம்.எல்.ஏ.,வால் பெரும் பரபரப்பு
முதலில் நம் மனிதர்கள் , ஒரு வீட்டிலேயே அனைவருக்கும் பிடித்த உணவு கிடையாது , விருப்பப்பட்ட தெய்வம் கிடையாது, அனைவரும் விரும்பும் ஒரே நிறம் கிடையாது , கொள்கை மற்றும் எப்படி ஒன்றாக இருக்கமுடியும். பல கட்சிகளில் இருந்தாலும் ,அவர்களும் மனிதர்களே   08:38:07 IST
Rate this:
0 members
1 members
11 members
Share this Comment

நவம்பர்
12
2018
சினிமா மிக்ஸி, கிரைண்டர் வடிவிலான கேக் வெட்டி சர்கார் கொண்டாட்டம்...
இப்படி இலவசத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதனால் தான் யுவர் ஹானர் , நாங்கள் 15 லட்சம் ரூபாயை இன்னமும் மக்களது வாங்கி கணக்கில் சேர்க்கவில்லை .. ஹி ஹி .   08:51:06 IST
Rate this:
4 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
12
2018
அரசியல் காற்று மாசிலிருந்து தப்பிய முதல்வர் சமூக வலைதளங்களில் விமர்சனம்
இங்கு பலரும் கெஜ்ரிவாலை குறை கூறுகிறார்கள் .ஒரு தனி மனிதன் ,கட்சி அமைப்பு இல்லமல்,போராடி ஊழல் அரசுக்கு எதிராக வெற்றிபெற்று முதல் மந்திரி ஆனார் . நாடு முழுவதும் மோடி அலை அடித்தபோதிலும் , தில்லியில் அரவிந்தன் வெற்றி பெற்றார் . இப்படி எல்லோரையும் ஏதாவது உப்பு சப்பு இல்லாத காரணம் காட்டி குறை கூறினால் , பின் யார் தான் யோக்கியர் .ராமாயண கதையில் ராமனையே குறை கூறுபவர் உண்டு , அப்படி என்றால் ராமனை காட்டிலும் உத்தமனை காண்பிக்க முடியுமா? இல்லை .இருக்கும் அரசியல்வாதிகளில் இவர் எவ்வளவோ தேவலை   08:44:06 IST
Rate this:
74 members
1 members
23 members
Share this Comment

நவம்பர்
12
2018
அரசியல் மத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானார்
அன்னாரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்   08:37:33 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
3
2018
பொது மீண்டும்! சபரிமலையில் 1,200 போலீசார் குவிப்பு
என் மனதுக்கு பட்டதை சொல்கிறேன். நாம ஆட்கள் சபரி மலை , திருப்பதி என்று ஆண்டு தோறும் போகிறார்கள் , தவறு இல்லை , அதேசமயம் தங்களது குலதெய்வ வழிபாடு, பாடல் பெற்ற சைவ, வைணவ தலங்கள் எத்தனையோ தமிழகத்தில் இருக்கின்றன, தயவு செய்து அங்கேயும் போய்வாருங்கள், நம்ம ஆட்கள் காசை வெளிமாநிலத்திற்கு சென்று கொட்டுவதை விட, மேலே குறிப்பிட்ட கோவில்களுக்கு செல்லும்போது , அங்கே உள்ள சிறு வியாபாரிகள், கோவில் நிர்வாகம், எல்லோரும் பயன் அடைவார்கள், ஒரு முக்கியமான் செய்தி, பகவானுக்கும் ஒருவேளை நிவேதனமும் கிடைக்கும் .எத்தனையோ கோவில்கள்உள்ள குருக்கள், பூசாரிகளுக்கு வருமானம் இல்லாது இருக்கிறார்கள் , அங்கேசெல்வதனால், அவர்களுக்கும் ஒரு உற்சாகம் ஏற்படும், வாழ்வாதாரமும் பெருகும் .. உள்ளம் பெரும்கோவில்   09:48:42 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

நவம்பர்
4
2018
பொது தடை செய்துள்ள நேரத்தில் பட்டாசு வெடித்தால் சிறை!
உண்மையாக சொன்னால் ,முன்பு போல யாரும் பட்டாசு கொளுத்தி காசை செலவிடுவது இல்லை. ஒரு மிதமான அளவிலேயே அனைவரையும் தீபவளி நாள் அன்று பட்டாசு கொளுத்துகின்றனர் .பள்ளி பருவத்தில் இருக்கும்போது அதிகாலை நான்குமணிக்கு எல்லாமே எங்களை எழுப்பிவிட்டு எண்ணெய் தேய்த்து குளிக்க சொல்வர் . அப்போதே உறக்கத்தில் இருந்து எங்களை எழுப்புவது பட்டாசுதான் , எவண்டா காலம்கார்த்தலே வெடி போட்றானுந் திட்டிகிட்டே போட்டிக்கு நாங்களும் வெடிபோடுவோம் . வயது செல்ல செல்ல ,வாழ்கை பிரச்சனைகள் அதிகரிக்க இன்று ஒரு சந்தோஷமான தீபாவளி நாளை எப்படி கொண்டாடுவது என்றே தெரியாமல் பட்டிமன்ற பெட்டிக்கு முன்பு காலம் கழிக்கிறோம் . தீபாவளி என்றல் புத்தாடை, பட்டாசு , இனிப்பு பண்டங்கள் தன , சரி திங்கள் கிழமை இரவில் பட்டாசுக்கு ஏதேனும் வரைமுறை இருக்கா, எல்லோரும் காலம்கார்த்தலே ஆறுமணிக்கு பட்டாசு வெடிச்சா ஊர் தாங்குமா, மத்தாப்பு, புஸ்வானம் எப்போ கொளுத்தலாம், சங்கு சக்கரத்திற்கு தடை உண்டா, உயர பறந்து பலவண்ணங்களை கட்டி வெடிக்கும் ராக்கெட்டுக்கு இதுபொருந்துமா ( சப்தம் தான் கீழ கேட்காதே) என்று பல கேள்விகள் எழுகின்றன ஊருல இருக்கறவன் எல்லாம் எண்ணெய் தேய்த்து குளித்தால் ,சாக்கடை அசுத்தமாகி விடும் என்று யாராவது கேஸ் போடுவார்களா என்று ஐயம் ஏற்படுகிறது . அரசியல் காட்சிகள் மாநாடு என்ற பெயரில் நடுரோட்டில் கட்டவுட் வைத்து உயிர்பலி ஏற்படுதோம்போடு எல்லாம் , நீதி அரசர்கள் என்ன செய்துகொண்டுருந்தார்கள் என்று தெரியவில்லை?   09:41:38 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
31
2018
கோர்ட் ஓ.கே!, 20 தொகுதிகளுக்கும், விரைவில் இடைத்தேர்தல்
எம்ஜிஆர் , என்ற சக்தி வாய்ந்த தலைவரால் உருவாக்கப்பட்டு , ஜெயலலிதாவால் பலப்படுத்தப்பட்ட கட்சிக்கு , இரண்டு இடைத்தேர்தலை நடத்த தைரியம் இல்லை. இந்த கட்சியில் உள்ளவர்கள் ஒருகாலகட்டத்திலும் தலைவர்கள் ஆகமுடியாது . தலைமை பண்பு சிறுதும் இல்லாமல், ஒரு வாக்கு வங்கியும் இல்லாத பிஜேபிக்கு வெண்சாமரம் வீசுகிறார்கள் . விஜயகாந்த் எவ்வளவோ பரவாயில்லை , ஜெ பதவியில் இருந்தபோதே , கூட்டணியாகவும் எதிர்கட்சியாகவும் செயலாற்றினர் . தங்கள் செய்த ஊழல் புகாரில் சிக்கக்கூடாது என்பதற்காக தங்கள் கட்சியைமட்டும் அல்லது, தமிழக மக்களின் எண்ணத்திற்கு முற்றிலும் எதிராக செயல் படுகிறார்கள் . இந்த தலைமை பண்பு இல்லாத தலைவர்களிடம் அகப்பட்டு கட்சி சின்னாபின்னமாகி கொண்டு இருக்கிறது . இவர்களுக்கு ஒரே ஆறுதல் ரஜினி இன்னமும் கட்சியை ஆரம்பிக்கவில்லை , ஒருவேளை ரஜினியை இவர்கள் தலைமை ஏற்க அழைத்தாலும் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. பாராளுமன்ற தேர்தலில், மோடியின் முகம் காண்பித்து ,இவர்களும் கொஞ்சம் தொகுதிகளை வெல்லலாம் அனல், மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது . அதற்கு தேவை ஒரு பலம் வாய்ந்த தலைவர், தற்போது ஊழல் புகாரில் சிக்காத தலைவரால் மட்டுமே கட்சியை முன்னிறுத்தி செல்லமுடியும் .நல்ல திட்டங்களோடு , வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்ற உறுதியோடு காலத்தில் இறங்கினால் , இனி வாய்ப்பு திமுகவிற்கு தான்,   08:51:27 IST
Rate this:
82 members
1 members
9 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X