அன்பு : கருத்துக்கள் ( 2279 )
அன்பு
Advertisement
Advertisement
மே
24
2018
சம்பவம் தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு
போராட்டத்திற்கு திரண்டவர்கள், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் மற்றும் இதர ஆலைகளின் கெமிக்கல் பாதிப்புக்குள்ளான சாதாரண பொதுமக்கள். அவர்களை மாவோயிஸ்ட்கள், ஜிஹாதிகள், பாதிரியாரின் வெளிநாட்டு பணத்திற்காக வந்த கைக்கூலிகள், பிரியாணிக்கும் குவார்ட்டருக்கும் வந்தவர்கள் என்று ஏசுவது, அவர்களின் மனதை புண்படுத்தும். பிஜேபி காரர்கள் மக்களை இப்படி புண்படுத்தி பேசுவது, அவர்களின் கட்சிக்கு நல்லதல்ல. வன்முறையை போலீஸ் தூண்டினாலும், பலர் போலீசாருக்கு பாதுகாப்பு கொடுத்தார்கள். அதற்கான வீடியோவும் உள்ளது. பொதுமக்களை வன்முறையாளர்கள் என்று இகழ்பவர்களுக்கு, காலம் ஒருநாள் சரியான பதிலை அளிக்கும். நூறு நாட்கள் போராடியும் எந்த அமைச்சரும், ஆட்சியரும் கண்டுகொள்ளவில்லையென்பதால், முற்றுகை போராட்டம் நடத்தினர். பலர் சுட்டுக்கொல்லப்பட்டதால், தடியடி நடைபெற்றதால், ஒரு சில இடங்களில் பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள். அது முழுக்க முழுக்க தவறு. அதைத்தான் அரசும் போலீசும் எதிர்பார்த்தது. போராட்டத்தின் வலிமையை அது குறைத்துவிடும். போலீசும் மக்களின் அங்கம் தான். பொதுமக்கள் போலீஸ்காரர்கள் உறவுக்காரர்களுக்காகவும் தான் போராடினார்கள். அரசு சொல்வதை அனைத்தையும் கிளிப்பிள்ளை போன்று போலீஸ் கேட்கவேண்டும் என்பது இல்லை. போலீசிற்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டுமெனில் தமிழகமெங்கும் உள்ள ஹோட்டல்களில் சீருடையில் உள்ள போலீசுக்கு ஓசி சாப்பாடு இல்லை என்று ஒரு மாதத்திற்கு அனைத்து ஹோட்டல் உரிமையாளர்களும் போர்டு வைக்க வேண்டும். அப்போதுதான் போலீசுக்கு புரியும், நாமும் மக்களில் ஒருவர் தான் என்று.   02:17:58 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

மே
24
2018
சம்பவம் தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு
போராட்டக்காரர்களை மாவோயிஸ்ட், ஜிஹாதிகள், பயங்கரவாதிகள் என்று எழுதாமல் விட்டதற்கு நன்றி. போராட்டத்தில் ஐம்பதாயிரம் பேர் ஒன்றுகூடினார்கள். அவர்கள் அனைவருமே ஏதோ பிரியாணிக்கும் குவாட்டர்க்கும் வந்ததாக கூட சிலர் இகழ்ந்தார்கள். தூத்துக்குடி, நெடுவாசல், ஜல்லிக்கட்டுக்கு ஒன்று கூடியவர்கள் அனைவரும் பொதுமக்கள். அனைவரையும் ஏதோ காசுக்கு பிச்சை எடுப்பவர்கள் போன்று இகழ்வது சரியல்ல. பிஜேபி காரர்கள் பொதுமக்களின் உணர்வில் இருந்து பார்ப்பது அவர்களின் கட்சிக்கு நல்லது. போலீஸ் வன்முறையை தூண்டினாலும், பொது மக்கள் ஆத்திரமடைந்து வன்முறையில் ஈடுபடக்கூடாது. அது போராட்டத்தின் வலிமையை குறைத்துவிடும். அரசும் போலீசும் அதைத்தான் விரும்புகிறார்கள். பிரிட்டிஷாரின் அடக்குமுறையை எதிர்த்து வன்முறையில் நாம் ஈடுபட்டிருந்தால், நாம் இன்னும் சுதந்திரத்திற்காக போராடிக்கொண்டிருப்போம். கொடி காத்த குமரனை நினைவில் கொள்வோம். போலீசிற்கு நல்ல பாடம் கற்க விரும்பினால், தூத்துக்குடி படுகொலையை கண்டித்து ஒரு மாதத்திற்கு தமிழகமெங்கும் சீருடையில் இருக்கும் எந்த போலீசுக்கும் எந்த ஹோட்டலிலும் ஓசி சாப்பாடு கிடையாது என்று போர்டு போடுங்கள்.   01:14:40 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மே
24
2018
அரசியல் தடையை மீறி தூத்துக்குடி சென்ற கட்சியினர் மீது வழக்கு... பாய்ந்தது !
உணர்ச்சிவசப்படுவதும், ஆவேசமாக பேசுவதும், நமது கண்ணியத்தை குலைத்துவிடும். ஒருபோதும் நல்ல பயனை அது தராது. முதிர்ச்சி அடைந்த சமுதாயம் உணர்ச்சிவசப்படாது. எதையும் தீர்க்கமாக ஆராய்ந்து அமைதியாக விவேகமாக முடிவெடுக்கும். நாமும் அப்படிதான் செயலாற்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். அதற்கான வேலைகளில் இறங்க வேண்டும். அது தான் நாம் இழந்த பதிமூன்று இன்னுயிர்களுக்கு நாம் செய்யும் சமர்ப்பணம்.   00:54:39 IST
Rate this:
2 members
2 members
4 members
Share this Comment

மே
23
2018
சம்பவம் தூத்துக்குடியில் 2வது நாளாக வன்முறை போலீஸ் பஸ் எரிப்பு துப்பாக்கி சூட்டில் இளைஞர் பலி
பத்து பேரை கொன்றுவிட்டால், மக்கள் போராடுவதை நிறுத்திவிட்டு, அமைதியாக வேலை பார்க்க போய்விடுவார்கள் என்று அரசு நினைப்பது முற்றிலும் தவறு. இது தமிழ்நாடு. சட்டிஸ்கர், உத்ரகாந்த், ஒரிசா போன்று சிறு சிறு மாநிலங்கள் அல்ல. அனைத்து மக்களும் கல்வியறிவு பெற்றுள்ளார்கள். தூத்துக்குடியில் படுகொலை செய்வது, ஏதோ உத்ரகாந்த் மலைப்பிரதேசத்தில் இருபது பேரை கொல்வது போன்றல்ல. அனைவரிடமும் செல் வசதி உள்ளது. விஷயம் வெளிச்சத்திற்கு வந்துவிடும். ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டால், ஏதோ தமிழ்நாட்டின் பொருளாதாரமே பாதிக்கப்பட்டு விடும் என்பதை போல் பலர் புலம்ப கூடாது. தமிழர்கள் தொழில்நுட்பத்தோடு கல்வி அறிவு பெற்று வளர்ந்துள்ளார்கள்.ஒரு சாராருக்கு மட்டுமே கிடைத்து வந்த கல்வியை தலித் மக்கள் உட்பட அனைவருக்கும் போய்சேரும்படி செய்த நீதி கட்சிக்கு நன்றி. அனைவரும் படித்துவிட்டால், யார் தான் விவசாயத்தில் வேலை செய்வது என்று தான் ஒரு சாரார் அன்றும் புலம்பினார்கள். இன்று அனைவரும் கல்வியறிவோடு உள்ள சூழ்நிலையால் தான், தமிழகம் இந்தியாவில் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது. அமெரிக்காவில் உள்ள மெக்கானிற்கு, இந்தியாவில் உள்ள டாக்டரை விட அதிக சம்பளம். சுயநலமாக இருந்தால், ஒட்டுமொத்த சமூகம் முன்னேறாது. ஒட்டுமொத்த சமூகத்தின் வளர்ச்சியே, ஒவ்வொருவரின் வளர்ச்சி.   01:30:05 IST
Rate this:
7 members
0 members
9 members
Share this Comment

மே
23
2018
பொது படை அனுப்ப தயார் மத்திய அரசு
மக்கள் அமைதியாக நடந்து போய்க்கொண்டிருக்கும்போதே, போலீசார் தடியடி நடத்த ஆரம்பித்து விட்டார்கள். ஒரு வீடியோவில் ஒரு போலீஸ்காரர் ஒருத்தரையாவது போடணும் என்று சொல்கிறார். மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு போகும் முன்னரே, அங்கு தீ பற்றி எரிகிறது. உடனே போலீசார் வேனிலிருந்து சுட ஆரம்பித்து விடுகிறார். அதுவும் ஸ்னைப்பர் கன். போரின்போது வெளிநாட்டு ராணுவ வீரர்களை கொல்வதற்காக பயன்படுத்தும் கன்னை, ஆயுதம் ஏந்தாத அப்பாவி மக்களின் மீது போலீசார் பயன்படுத்துகிறார்கள். தூத்துக்குடியில் பாகிஸ்தான் வீரர்களுடனா நமது போலீசார் சண்டை போடுகிறார்கள்? எதற்கெடுத்தாலும், சாதாரண பொது மக்களை மாவோயிஸ்ட் என்று அழைப்பதும், என்னமோ அரசு எந்த தவறும் இழைக்காத மாதிரி புருடா விடுவதும் தயவுசெய்து வேண்டாம். நான் இங்கு போலீசாரை குறை சொல்லவில்லை. அவர்கள் அரசின் திட்டமிட்ட படுகொலைக்கு ஒரு கருவியாக பயன்பட்டுள்ளார்கள். பொது மக்களுக்காகத்தான் போலீஸ். அரசிற்காக அல்ல. அனைவரையும் தீவிரவாதிகள் என்று கூறுவதும், பலிப்பதும் இகழ்வதும், ஒருமுறை மனசாட்சியுடன் பரிசோதித்து பாருங்கள். பிரிட்டிஷார் காலத்திலும், அரசிற்கு ஆதரவாக இயங்கிய ஒரு சாரார் ஜெனரல் டயர் செய்த படுகொலையை நியாயப்படுத்தி கொண்டிருந்தார்கள். எல்லாவற்றிக்கும் காலம் பதில் சொல்லும்   01:02:05 IST
Rate this:
8 members
0 members
12 members
Share this Comment

மே
22
2018
சம்பவம் ஸ்டெர்லைட்..போராட்டத்திற்குள் ஊடுருவிய மாவோயிஸ்ட்கள் கண்காணிக்க தவறிய உளவுத்துறை
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தின் போது ஒன்றிணையமாட்டார்களா? இதில் ஏன் மாவோயிஸ்ட் கண்ணோட்டம்? பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைவது கூட, தீவிரவாத செயலா? இப்படி அனைத்தையும் தீவிரவாத கண்ணோட்டத்துடன் பார்ப்பது, மக்களிடம் இருந்து தூர விலகி செல்வதற்கு சமம். நாம் சுவாசித்த நல்ல காற்றை அடுத்த தலைமுறையினருக்கு விட்டு செல்வது ஒவ்வொருவரின் கடமை.   01:29:08 IST
Rate this:
14 members
0 members
28 members
Share this Comment

மே
22
2018
அரசியல் மக்கள் விரும்பாத திட்டத்திற்கு அரசு ஆதரவு அளிக்காது அமைச்சர் ஜெயக்குமார்
இவ்வளவு நாட்களாக மக்கள் போராடி கொண்டு இருக்கிறார்கள். மக்களுக்காக அரசா? ஆலைக்காக அரசா?   01:21:06 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மே
22
2018
சம்பவம் தூத்துக்குடியில் வன்முறை வெறியாட்டம்9 பேர் பலி
பொது சொத்துக்கள் மக்களுடையது. போலீசார் லத்தி சார்ஜ் செய்தாலும், சுட்டு கொன்றாலும் கூட, மக்களே தங்கள் சொத்துக்களை ஒருபோதும் சேதப்படுத்த கூடாது. இத்தனை நாட்கள் அமைதியாக நடந்த போராட்டம், கலவரம் ஆனதற்கு காரணம் அரசு மற்றும் போலீசின் சதியாக இருக்க கூடும். ஸ்டெர்லைட் போராட்டத்தை ஒட்டுமொத்தமாக நிறுத்த, பத்து பேரை போட்டு தள்ளினால் தான், மீண்டும் ஆலையை இயக்க முடியும் என்று கருதியும் கூட, அரசு போலீசை கொல்ல ஏவி இருக்கலாம். இந்தியாவின் எழுபது சதவீத காப்பர் இங்கிருந்து தான் செல்கிறது. அதனால் இந்த ஆலையை நெடுங்காலம் மூடி வைத்திருக்க முடியாது என்று கருதி, போராட்டத்தை ஒடுக்க அரசு எந்த சூழ்நிலைக்கும் செல்ல வாய்ப்புள்ளது. ஆனால் மக்களுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் ரெண்டு ஆண்டில் வேறொரு இடத்திற்கு ஆலையை மாற்றுவோம் என்று அரசு வாக்குறுதி கொடுத்திருக்க வேண்டும். மக்கள் வாழாத இடத்திற்கு, இந்த ஆலையை மாற்றவேண்டும். மக்களின் வாழ்க்கையை அழித்து விட்டு தான் ஆலையை நடத்தவேண்டும் என்பது இல்லை. மீத்தேனும் இதே பிரச்சனை தான். தமிழர்கள் தொழில் நுட்பம் தெரிந்தவர்கள். அறிவாளிகள். நாம் நமது வாழ்க்கையை தொலைத்து தான், பொருளாதாரத்தை வளர்த்து கொள்ளவேண்டும் என்பதில்லை. பிற வழிகளிலும் நம்மால் பொருளாதாரத்தை வளர்த்து கொள்ளமுடியும். கார்பரேட்களின் பசிக்கு, சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கையை கெடுக்க கூடாது. வளர்ந்த நாடுகள் ஒருபோதும் இப்படி மக்களின் உயிரை துச்சமாக நினைத்ததும் இல்லை. தூத்துக்குடியில் தாங்கள் வாழவில்லை என்பதற்காக, போராடுபவர்களை அனைவரையும் பயங்கரவாதிகள் என்று சாடுவதும், கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்று குறை காணுவதும் அடுத்தவரின் வலியை உணராதவர்களின் நகையாடல். மனசாட்சி உள்ளவர்கள் இதை செய்ய மாட்டார்கள். நாளை நீங்கள் வாழும்பகுதியில் மீத்தேன், ஸ்டெர்லைட் போன்று பிரச்சனை என்றாலும், இதே பயங்கரவாதிகள் தான் உங்களுக்காக போராடி, உயிர் விடுவார்கள். ஆண்டவன் இருப்பதை உண்மையாக நம்பினால், மனசாட்சிப்படி அடுத்தவரின் வலியை உணர்வீர். வெறும் மதத்தை மட்டுமே நம்பினால், கண்டிப்பாக அடுத்தவரின் வலி தெரியாது.   01:13:53 IST
Rate this:
10 members
0 members
7 members
Share this Comment

மே
21
2018
அரசியல் கர்நாடகா தேர்தல் முடிவால் பா.ஜ.,வுக்கு... நெருக்கடி! முக்கிய மசோதாக்கள் நிறைவேறுவதில் சிக்கல்
வெரி குட். மைனாரிட்டி அரசாக மத்திய கட்சி இருப்பதே நலம். இல்லையெனில், அவர்கள் இஷ்டம் போல் நீட், மீத்தேன் போன்றவற்றை திணிப்பார்கள்.   01:29:20 IST
Rate this:
8 members
0 members
23 members
Share this Comment

மே
21
2018
அரசியல் ஸ்டாலின் மீது சிறிய கட்சிகள் அதிருப்தி
சிறிய கட்சிகளை வளர்த்து விட்டவர் கலைஞர் மட்டுமே. பிறகு அவர்கள் தலைக்கு மேலேறி நர்த்தனம் ஆடுவார்கள். ஸ்டாலின் அந்த தவறை செய்யாமல் இருப்பதே நலம். பெரும்பாலான லெட்டர்பேடு கட்சிகள் ஜாதி அல்லது மத்தபின்புலத்தை வைத்தே இயங்குகின்றன.   01:24:59 IST
Rate this:
7 members
1 members
8 members
Share this Comment