அன்பு : கருத்துக்கள் ( 2328 )
அன்பு
Advertisement
Advertisement
ஜூன்
10
2018
அரசியல் பன்னீர், பழனிசாமி பதவி தேர்தல் கமிஷன் அதிரடி
அதிமுக என்ற கட்சியின் ஆணி வேர் பொதுச்செயலாளர் பதவி தான். அது இல்லாமல் எப்படி கட்சி ? தேர்தல் கமிஷன் கட்சிக்குள் ஒரு தேர்தலையாவது நடத்த சொல்லி இந்த தீர்ப்பை கொடுத்து இருக்க வேண்டும்.   07:56:42 IST
Rate this:
6 members
0 members
9 members
Share this Comment

ஜூன்
10
2018
பொது 2017 -18ம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளின் நஷ்டம் ரூ.87,000 கோடி! ஊழல், மோசடிகளால் வாராக்கடன் தொடர்ந்து அதிகரிப்பு
மோடியின் ஆட்சியில் நமக்கு கிடைத்த பெரிய வளர்ச்சியே வராக்கடன் வளர்ச்சி.   07:51:10 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment

ஜூன்
9
2018
சம்பவம் மனித வெடிகுண்டு வாயிலாக மோடியை கொல்ல திட்டம் அம்பலம்!
மோடி இன்னும் ஒரு வருடத்தில் அமைதியாக ஓய்வெடுக்க போகிறவர். அதற்குள் அவரை தியாகி ஆக்க தேவை இல்லை.   02:24:56 IST
Rate this:
63 members
0 members
44 members
Share this Comment

ஜூன்
8
2018
அரசியல் சகிப்புத்தன்மையே நம் நாட்டின் பலம் ஆர்.எஸ்.எஸ்., விழாவில் பிரணாப் பேச்சு
மதத்தை வைத்து அரசியல் செய்ய கூடாது. கடந்த பத்தாண்டுகளில் நடந்த விஷயங்களை பார்க்கும்போது, இந்தியா ஒரு காலத்தில் முன்னேறிவிடும் என்று இருந்த நம்பிக்கை சிறுக சிறுக போய்க்கொண்டு இருக்கிறது என்பது தான் உண்மை. ஊழல் நாட்டின் மிக பெரிய கேடாக இருந்தது. மோடி வந்தார். ஊழல் போய்விடும் என்று நம்பி ஏமாந்தது தான் மிச்சம். எதிரிகளை வேட்டையாடிய மோடி, ஊழலை கண்டுகொள்ளவில்லை. அரசியலில் இவ்வளவு பணம் புழங்கும்போது, ஊழல் எப்படி குறையும்? வளர்ந்துள்ள தமிழகம் உட்பட ஐந்தாறு மாநிலங்களை தவிர பெரும்பாலான மாநிலங்கள் ஏழ்மை நிலையில் ஊழல் பெருகி உள்ளது. மோடியின் புது நிதி கொள்கை திட்டத்தால், தமிழகத்தின் நிலை இன்னும் மோசமாகும். மக்கள் தொகை கணக்குப்படி வரியை பகிர்ந்து கொடுத்தால், தமிழகத்தில் உள்ள கட்டுமானங்களை மேம்படுத்த பணம் இருக்காது. கம்பெனிகள் தமிழகம் போன்று தொழில்நுட்பம் தெரிந்தவர்களின் இடத்திற்கு தான் வரும். ஆனால் போதுமான சாலைவசதிகள் இல்லையெனில், தமிழகம் மேற்கொண்டு வளராது. ரெண்டு ஐடி ஊழியர்களின் குடும்பத்தை, பத்து செக்யூரிட்டி ஊழியர்களின் குடும்பத்தோடு இணைத்துவிட்டால், ஒட்டு மொத்த பத்து குடும்பமும் வளராது. கடைசியில் ஐடி ஊழியர்களும் செக்யூரிட்டி வேலைக்கு போய்விடுவார்கள். அந்த கதை தான் தமிழகத்தின் இன்றைய நிலை.   02:13:55 IST
Rate this:
38 members
0 members
56 members
Share this Comment

ஜூன்
8
2018
சம்பவம் போர்வையாளர்கள் சதி அடுத்த பகீர் அம்பலம்
நீட் தேர்வில் மாநில உரிமை தான் பறிபோயுள்ளது. அதனால் ஸ்டெர்லைட் போன்று வன்முறை ஏற்படவழியில்லை. ஆனால் ஸ்டெர்லைட் பிரச்சனையில் வாழ்வுரிமை பறிபோனது. அதனால் தான் மக்கள் வெகுண்டு எழுந்தார்கள். ஆனால் நமது அரசு வழக்கம்போல் போராடியவர்களை சமூக விரோதிகள் என்று தூற்றியது. பிரதமர் நடந்த படுகொலைக்கு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. போராட்டக்காரர்கள் மோடியை தமிழகத்தில் இறங்கவிட வில்லை. அந்த கடுப்பில், பக்கத்துக்கு நாட்டு பிரதமர் போன்று நடந்து கொண்டார். இது போன்று எந்த நாட்டின் பிரதமரும் நடந்து கொள்ள மாட்டார்கள்.   01:54:01 IST
Rate this:
35 members
1 members
22 members
Share this Comment

ஜூன்
6
2018
அரசியல் மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைத்தால் விவசாய கடன் 10 நாளில் தள்ளுபடி
விவசாய கடன் தள்ளுபடி செய்வதை விட, வேறு வழியில் விவசாயிகளுக்கு உதவ முடியுமா? என்று ராகுல் சிந்திக்க வேண்டும். கடன் தள்ளுபடி என்பது பொதுமக்களின் பணத்தை வீணடிப்பதே. அது கார்ப்பரேட் என்றாலும் சரி, விவசாயிகளுக்கு என்றாலும் சரி. விவசாய கடன் தள்ளுபடி என்பது இப்போதெல்லாம் ஒட்டு வங்கி அரசியல் ஆகிவிட்டது. இந்தியாவின் வளர்ச்சிக்கு இது நல்லதல்ல. வரிப்பணம் நாட்டின் கட்டுமான வளர்ச்சி மற்றும் பொதுமக்களின் கல்வி மற்றும் மருத்துவ வசதிக்கு மட்டும் தான் உபயோகப்படுத்த வேண்டும். பணம் அதிகமாக இருந்தால், இந்த நாட்டில் உள்ள அத்தனை அரசு பள்ளிக்கூடங்களிலும் நல்ல கழிவறை வசதியோடு, AC வையுங்கள். பாடம் புத்தகங்கள் இலவசமாக கொடுங்கள். போக்குவரத்து வசதி செய்யுங்கள். சாலைகள் போடுங்கள். ஒவ்வொரு ஊருக்கும் ரெண்டு மூன்று AC வசதி மற்றும் இதர அத்தனை வசதிகள் நிரம்பிய அரசு மருத்துவமனைகள் உருவாக்குங்கள். நிறைய நர்ஸுகள் மற்றும் டாக்டர்களை பணியில் அமற்றுங்கள். இன்னும் அரசு மருத்துவக்கல்லூரிகள் கொண்டுவாருங்கள். செய்ய வேண்டியவை நிறைய உள்ளது.   02:20:33 IST
Rate this:
0 members
2 members
19 members
Share this Comment

ஜூன்
6
2018
பொது இளைஞர்களின் தேசம் இந்தியா பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
இளைஞர்களின் தேசத்தின் பிரதமராக இருக்கும் மோடிக்கு இளைஞர்களுக்கு முக்கியமாக வேலை வாய்ப்புகள் தேவை என்று புரியவில்லை. இவர் பிரதமர் வேலையை செய்யாமல், சேல்ஸ்மேன் போன்று ஊர் சுற்றி கொண்டிருக்கிறார். மோடி எவ்வளவு பெரிய சேல்ஸ்மேனாக இருந்தாலும், கம்பெனியில் உருவாக்கப்படும் பொருளின் தரம் சரியில்லை எனில் யாரும் வாங்க மாட்டார்கள். அது புரியாமல் வெறுமனே சேல்ஸ்மேன் வேலை மட்டும் தான் மோடிக்கு பிடிக்கிறது. நிர்வாகம் சுத்தமாக பிடிக்க வில்லை. பிறகு எதற்கு பிரதமர் பதவி? அதை சுஸ்மா விடம் கொடுத்துவிட்டு, வெளியுறவு துறையை மோடி கவனிக்க வேண்டியது தானே? ஆண்டிற்கு ரெண்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்குவேன் என்று புருடா விட்டு, வெறும் நாலு லட்சம் வேலை வாய்ப்புகள் தான் உருவாக்கி உள்ளார். காங்கிரஸ் காலத்தில் கூட, மன்மோகன் ஆண்டுதோறும் இருபது லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கினார்.   02:04:24 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment

ஜூன்
7
2018
கோர்ட் அ.தி.மு.க., மாஜி மந்திரி சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டு சிறை !
உயர் நீதி மன்றத்தில் இருபத்தொரு ஆண்டுகள் கடந்து தீர்ப்பு. பின்னர் உச்சநீதி மன்றத்தில் இன்னும் இருநூறு ஆண்டுகள் கழித்து நல்ல தீர்ப்பு வரும். அதுவரை சத்தியமூர்த்திக்கு ஜாமீன் கொடுங்கள். நாடு உறுப்புட்டுடும்.   01:54:52 IST
Rate this:
0 members
1 members
3 members
Share this Comment

ஜூன்
6
2018
பொது நான் கோடியில் ஒருவன் கமல்
தீர்ப்பு வந்துவிட்ட பிறகு, காவேரியில் பேசுவதற்கு ஒண்ணுமில்லை என்றாலும், அந்த தீர்ப்பை முறைப்படி நடைமுறைப்படுத்த, நல்லிணக்கம் வேண்டும் என்று கமல் கூறுவதில் என்ன தவறு உள்ளது? எல்லாவற்றையும் சந்தேக கண்ணோடு பார்க்க தேவை இல்லை. கர்நாடகாவிற்கு ஆதரவாக கமல் தமிழகத்தில் அரசியல் செய்யபோவதில்லை. அவர் தமிழகத்தில் தான் அரசியல் செய்கிறார். அதனால் தமிழகத்திற்கு எதிராக கமல் காவேரி விஷயத்தில் நடந்து கொள்வார் என்று கவலை கொள்ள வேண்டாம்.   01:51:51 IST
Rate this:
11 members
0 members
102 members
Share this Comment

ஜூன்
5
2018
சம்பவம் கர்நாடகா தேர்தலில் கள்ள நோட்டு புழக்கம்? கோவையில் விசாரணை தீவிரம்
ஓட்டுக்கு கொடுக்கப்பட்ட பணம் கள்ள நோட்டா? செல்லாத பணத்தை வாங்கிக்கொண்டு, ஒட்டு போட்ட மக்களுக்கு கள்ள நோட்டு கொடுப்பதில் தவறில்லை.   02:19:32 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment