மலரின் மகள் : கருத்துக்கள் ( 7085 )
மலரின் மகள்
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
14
2018
பொது துருக்கி பிரச்னை இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
சில நிகழ்வுகளில் மேம்பாக்காக அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்கள் பாரிக்கிறார்களோ என்ற அச்சம் சில பல சமயங்களில் வருகிறது. துருக்கியின் பொருளாதார பிரச்சினையில் இந்தியாவின் கரன்சி மதிப்பு குறைகிறது. இதை மேம்போக்காக பார்க்க கூடாது. அமெரிக்கா நிறைய பணம் வைத்திருக்கிறது. கடன் பட்டாவது நிறைய பணம் கையிருப்பு வைத்திருக்கிறது. ஆராய்ச்சிகளை அது எல்லா திசைகளிலும் செய்கிறது. ஓரிடத்தில் சில நாட்களில் மட்டும் குப்பை அதிகம் கூடினாலும் அது எதற்கு என் அதனால் பாதிப்புகள் மற்றும் ஆதாயங்கள் என்ன என்று ஆராய்கிறது. அதே காரணிகளை வேறிடத்தில் செயல் படுத்தி பார்க்கிறது. நாமோ ஆராய்ச்சி என்பது அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி தான் என்றும் மற்றவைகள் அனைத்தும் வியாபார சம்பந்தமாக வாங்கி விற்பது என்று நிறுத்தி வைத்து விட்டோம் அது மிகவும் தவறு, இருக்கட்டும். துருக்கியின் பிரச்சினைக்கு வருவோம். நமது கரன்சி மார்க்கெட் ஏற்றத்தாழ்விற்கு ஏற்ப மாறுபடும் வகையில் வைத்திருக்கிறோம். இந்திரா காந்தி காலத்தின் பின்பகுதியில் எடுத்த ஒரு தைரியமான பொருளாதார முடிவால். அதற்கு முன்பு நமது கரன்சி ஒவ்வொரு வருடம் அல்லது குறிப்பிட்ட கால அளவில் அமெரிக்கர்களின் நிர்பந்தத்திற்கு ஏற்ப குறைக்கபடும். நம்முடைய அந்நிய வர்த்தகம் பெரும்பாலும் அமெரிக்க டொலர் சார்ந்து உள்ளது அதை தவிர்க்கவே முடியாது தான். மற்ற பெரிய கரன்சிகளில் வர்த்தகம் சொற்ப அளவிற்கு தான். யூரோவில் கரன்சி தேசத்திடமும் நாம் டாலரில் வணிகம் செய்யும் படிக்கு வைத்திருக்கிறோம். அனைத்தையும் டால்ரராக மாற்றி தான் அதை ரூபாயில் பணமாற்றம் செய்கிறோம். அமெரிக்க கடந்த அரை நூற்றாண்டாக பொருளாதார யுத்தம் என்ற ஒன்றை கண்டறிந்து அதை தொடர்ந்து பயின்றும் செயல் படுத்தியும் வருகிறது. சில மணித்துளிகளில் அதனால் பொருளாதாரத்தை சாய்த்து பார்க்க முடியும் தாற்காலிகமாக மஹாபாரத போரில் ஜயத்ரதனை போல. அவ்வாறு நிறுத்தும் சில மணி நேர பாதிப்புக்களை சரி செய்ய பல மாதங்கள் பிடிக்கும் என்பது அறிந்த ஒன்று. ஒவ்வொரு தேசத்தையும் குறிப்பாக சிறிய தேசத்தை மிரட்டும் பாணியிலேயே அரசியல் செய்கிறது. சுற்று சூழல் சுகாதார கேட்டினால் பெருமளவிற்கு மக்கள் பாதிப்பு ஏற்படுத்தும் யுத்தமும் அவர்கள் இந்த நூற்றாண்டில் அறிந்திருக்கிறார்கள் அதையும் செய்து பைலட் முறையில் பார்க்கிறார்கள். அமெரிக்க நிறுவனங்களின் முதலீட்டை மிகவும் கவனமாகத்தான் ஈர்க்க வேண்டும். அதை தவிர்ப்பதும் நல்லது தான், அவர்கள் முதலீட்டை வெளி தேசத்தில் வைப்பதற்கு எதுவாகவும் அதை உடனடியாக திரும்ப பெற வசதியாகவும் அமெரிக்க பொருளாதார கொள்கை மற்றும் வட்டி விகிதங்கள் தயார் செய்து வைக்க பட்டிருக்கின்றன. அவ்விதிகளுக்கு உட்பட்டே வெளிநாடுகளில் முதலீடுகள் செய்ய படுகின்றன. நினைத்த மாத்திரத்தில் முதலீட்டின் பெரும்பகுதியை திரும்ப அழைத்து கொண்டு முதலீடு செய்த தேசத்தின் பொருளாதார சிக்கல்களை அவர்களால் உண்டு பண்ண முடியும். பணமாக பெறுவதற்கு பதிலாக தழிற்சாலைகளை உயரிய தொழில் நுட்பத்துடன் அவர்கள் நிறுவி இணைந்து நடத்த எந்த தேசத்தினராலும் அழைக்க முடியாது, சீனாவை தவிர. பணமாகத்தான் முதலீடு செய்கிறார்கள் அதுவும் எப்போது வேண்டுமானாலும் எடுத்து செல்லும் வழியில். அதற்கு சம்மதித்தாள் தான் முதலீடு செய்வார்கள் அவ்வாறு விதிகளை வசதியாகி நடித்திருக்கிறார்கள். துருக்கி என்றோ ஐரோப்பாவின் நோஞ்சான், நோயாளி என்று தான் வரலாறு சொல்கிறது. உலகப்போரின் போதே சீரழிந்து விட்டவர்கள். அவர்கள் வெளிநாட்டு உதவி பெற்று தான் சமாளிக்கிறார்கள். அவ்வாறு இருக்கையில் அந்த முஸ்லீம் தேசம் அமெரிக்காவிற்கு சவால் விட முடியாது. அங்குள்ள பெரிய கிரிசித்துவ மத தலைவர் துருக்கியின் அரசியலை ஆட்டிப்படைக்கும் வகையில் பல செய்கைகளை திரை மறைவில் செய்திருக்கிறாராம். நிறைய பணஉதவி செய்து அவர்களுக்கு எதிராகவும், மிஸ்சோநரிகள் வேலை செய்திருக்கிறார். தேச குற்றம் சுமத்த பட்டு சிறையில் 35 வருடங்களுக்கு அடைபடுகிறார். அவருக்கு பின்னால் அமெரிக்க இருப்பதால், அவர்கள் துருக்கியின் மீது பொருளாதார யுத்தம் நடத்துகிறார்கள். பொருளாதார யுத்தம் எல்லா தேசத்தினரிடமும் செய்ய முடியாது, அப்போது பொருளாதாரா தடை கொணருவார்கள். மற்ற சிறிய தேசத்தின் மீது பொருளாதார யுத்தம் தான் செய்வார்கள் அது தான் இன்றைய பொழுதில் அங்கே நடக்கிறது. துருக்கி அமெரிக்காவின் சொல்படி கேட்டால் உடனடியாக பொருளாதார யுத்தம் நிறுத்த பட்டு அவர்களுக்கு பல நிதி உதவிகளும் சலுகைகளும் தருவார்கள். துருக்கி முஸ்லீம் தேசம். அரபு தேசத்தினருடன் நல்லிணக்கம் என்றாலும் அவர்களால் துருக்கிக்கு நேரடியாக எந்த உதவிகளும் பெரிதளவில் செய்து விடமுடியாது. அந்த செல்வந்தா தேசத்தின் பணத்தை அமெரிக்கர்கள் தங்கள் தேசத்தில் சென்று ட்ரெசேரியில் பாதுகாப்பாக வட்டியில்லாமல் வைக்க சொல்லி நிர்பந்த படுத்தி அதை அவர்கள் அங்கே வைத்திருக்கவேண்டி இருக்கிறது. அதனால் டாலருக்குனு நிகரான அரபு தேசத்தினரின் கரன்சி மாறுவது இல்லை. ஒவ்வொருவரிடமும் திரைமறைவில் பேசி ட்ரில்லியன் டாலருக்கு குறையாமல் பணத்தை அவர்கள் கருவூலத்தில் கொணர்ந்து வைப்பு நிதியாக வைத்து கொள்கிறார்கள். அதனால் தான் பெரும்பாலான அரபு தேசத்தாரின் கரன்சி எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே மாதிரியாகவே இருக்கும். அமெரிக்க டாலரின் உயர்வால் அவர்களின் கரன்சியும் உயரும். டாலரை உயர்த்தி அரபு தேசத்தினரின் பொருளாதாரத்தையும் உயர்த்துவார்கள். துருக்கி அமெரிக்காவின் பினாமியாக இருந்த அந்த மத தலைவரை கைது செய்ததால், அவர்களின் தேசத்தில் அவர்கள் செய்த முதலீட்டை தொடர்ந்து வெளியேற்ற செய்து லிராவை அதல பாதாளத்திற்க்கு கொண்டு செல்கிறார்கள். அமெரிக்கா இரண்டு வகையில் முதலீடு செய்கிறது. ஒன்று அவர்களின் நிறுவங்கினாள் நேரடியாக FII FDI வழியாக வருகிறார்கள். மற்றொன்று வேறு தேசங்களில் முதலீடு செய்து அந்த தேசத்தின் நிறுவனங்கள் மூலமும் முதலீடு செய்வார்கள். முதலீட்டை திரும்ப அலைக்கும் பொது அமெரிக்க நிறுவங்கினாள் மட்டுமே அதை திரும்ப பெறாது. அவர்களை தொடர்ந்து வேறு தேசத்தினரும் முதலீட்டை திரும்ப பெறுவார்கள். இங்கு வேறு தேசத்தின் என்பதும் அமெரிக்க நிறுவனங்களே மறைமுகமாக இருப்பவையே. இதனால் அனைத்து தேசத்தினரையும் பணத்தை வெளியேற்றுவதற்காக ஒரு தோற்றம் வரும். அதனால் அந்த முதலீடு பெட்ரா தேசம் அஞ்சும். அதனோடு மற்ற தேசத்தினார்கள் அவர்களாகவே முதலீட்ஸ் செய்திருந்தாலும் அவர்கள் பணம் வேகமாக மதிப்பிளப்பில் செல்வதால் அவர்களும் பணத்தை வேகமாக எடுக்கவே செய்வார்கள். ஆகா வெளிநாட்டினரின் முதலீடு துடைக்கப்படும். ஆகையால் துருக்கி போன்ற தேசங்கள் சரணாகதி அடைவதே கதி. எந்த அமெரிக்கர்கள் எந்த நோக்கத்திற்காக அவர்கள் சுற்றுலா அல்லது பேணிக்காக்க எந்த தேசத்திற்காக வந்தாலும் அவர்கள் வந்து சீக்கிரம் வெளியேறட்டும் என்று தான் பலர் பார்ப்பார்கள். நாரி வளமோ இடமோ செல்லட்டும் என்றுதான் நோக்குவார்கள் பெருபாலான தேசத்தின். அவர்கள் உண்மையில் அவர்களாக வந்தார்களா இல்லத்து அனுப்பி வைக்க பட்டார்களா என்று அறிய முடியாது என்பதால். துருக்கியின் நிலை இப்போது அமெரிக்க பொருளாதார யுத்தத்தை எதிர்கொள்வது தான். அது அவர்களால் முடியாது என்பதே உண்மை. சரி இதனால் இந்திய கரன்சியின் மதிப்பு ஏன் குறைகிறது? அமாவாசைக்கும் அப்துல் காத்திருக்கும் ஏன் முடிச்சு போடுகிறார்கள். இறக்குமதிக்கு சரியான தருணம் இன்றி செய்து வைத்தது ஏன்? சென்செஸ் என்பது தொடர்ந்து உயர்ந்து வருவது உள்நாட்டு பணத்தை எங்கும் பாதுகாப்பாக லாபகரமாக வைக்க வழிவிடாமல் பரஸ்பர நிதியில் மட்டுமே அதிகம் வைக்கவேண்டும் என்று செய்து கொண்டதால் வெளிநாட்டு முதலீடு வெளியே எவ்வளவு போனாலும் சென்செஸ் ஏறிக்கொண்டே செல்லும். இருக்கட்டும். ருபாய் மதிப்பு குறைவதை எப்படி கட்டுப்படுத்துவது. ஏன் குறைகிறது? அந்நிய பணம் நாட்டிற்கு வருகின்ற பெரிய வழி அரேபிய தேசத்தில் உழைக்கும் வர்கம். அவர்கள் மே மாதத்திலேயே அதிகம் அனுப்பி தற்போது பணம் அனுப்புவதற்கு வசதியற்று தான் இருக்கிறார்கள். விடுமுறையில் தான் பெரும்பாலானோர் இந்தியாவில் இருக்கிறார்கள். அவர்கள் இந்த மாத இறுதியில் திரும்பி சென்று நவம்பர் மாதத்தில் தான் பணம் அனுப்ப முடியும். அதுவரையில் மனித உழைப்பால் வரும் அந்நிய செலாவணி வருவது பெருமளவில் இருக்காது. இத்தகு காலகட்டத்தில் ஏற்றுமதி அதிகம் இருக்கவேண்டும் அது இல்லாமல் போனதா? எப்படி குறைகிறது. அமாவாசைக்கும் அப்துல் காத்திருக்கும் எப்படி முடிச்சு போடுவது? சொல்கிறேன் முதலில் எனது இந்த எண்ணம் பதிவாகி நல்ல மார்க் கிடைக்கட்டும்.   20:49:37 IST
Rate this:
1 members
2 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2018
பொது அண்ணா பல்கலை மறுமதிப்பீடு முறைகேடு அதிகாரிகளிடம் விசாரிக்க போலீசுக்கு அனுமதி
பல்கலையின் போட்டோ எதற்கு. குற்றம் செய்தார்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போட்டோவை அல்லவா தந்திருக்க வேண்டும். எங்கே அந்த பழைய பதிவாளர் பற்றி இதில் செய்தி இல்லை. மறு மதிப்பீட்டில் மட்டும் தான் ஊழலா அல்லது முதல் மதிப்பீட்டிலேயே கூட ஊழலா? கோவை அ ப கலையின் ஊழல் து வே கேள்வித்தாள், விடியாய்த்தால் மற்றும் மதிப்பெண் முறையில் டிஜிட்டல் முறை கொண்டுவந்தார். அவருடன் இருந்த சி ஓ இ ராணுவத்தில் அதிகாரியாக இருந்தவர் என்பதால் அவர் கண்டிப்பாக சில நல்ல விஷயங்களை கொணர்ந்தார். அதை போன்ற மாற்றத்தை சென்னை அ ப காலை செய்ய மாட்டோம் என்று கூறி பழைய முறையையே பின்பற்றியது இன்றும் பின்பற்றுகிறது. கோவை பல்கலை உருவானபோது ஜூனியர் மாணவர்கள் கோவை முறையிலும் சீனியர் மாணவர்கள் சென்னை முறையிலும் இருவகையான தேர்வுகளை ஒரே கல்லூரியில் எழுதினார். சென்னை அ ப கலையின் தேர்வு முறை குறிப்பாக இணைப்பு கல்லூரிகளுக்கான முறை சரி அல்ல. அவர்கள் எப்போதும் தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக சொல்வார்கள். முதலாண்டு தேர்வின் முடிவுகளை இரண்டாமாண்டு ஆரம்பித்து மிகவும் தாமதமாகவே வெளியிடுவார்களாம் அதற்கு காரணம் முதலாண்டு மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் வங்கிகள் அவர்களுக்கு இரண்டாவது ஆண்டிற்கான கல்வி கடனை தராது என்பதால். தேர்வு முடிவுகள் வரவில்லை என்றால் அதையே காரணம் காட்டி மாணவர்கள் அந்த ஆண்டிற்கான கடனை பெற்று கல்லூரிகளுக்கு தந்து விடுவார். அதன் பொருட்டே முதலாண்டு தேர்வு முடிவுகள் september அக்டோபர் என்று கல்லூரி திறந்து இரண்டு மூன்று மாதங்கள் கழித்தே வெளியிட படுமாம். சொல்கிறார்கள் பொதுவாக. அப்படி இருக்கலாம் என்று பேச்சு உள்ளது.   09:32:16 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
அரசியல் கட்சி தொண்டர்கள் என் பக்கம் அழகிரி
சில வாசகர்கள் கூறுவதை போல நடக்க வாய்ப்பிருக்கிறது. அழகிரி, ரஜினி பிஜேபி என்கிறார்கள். தென் மாவட்டங்களில் அழகிரிக்கு நல்ல சொல்வாக்கு. அவரால் சிறப்பாக செய்ய முடியும். தற்போது தென்னகத்தில் திமுக மற்றும் வேறெந்த காட்சியிலும் சிறப்பாக செயல் படும் தலைவர்கள் இல்லை. அழகிரி மீண்டும் பழைய படி முயற்சி செய்தால் அவர் அங்கு கோலோச்சுவார். திமுகவில் இணைய வேண்டும் என்பது கூட இல்லை. பிஜேபி கு கூட்டணி வைத்து கொண்டு முயலலாம். அழகிரி TTV ஒரு நடிகர் இணைந்து பிஜேபி கூட்டணியில் தேர்தலை சந்திப்பார்கள் என்றும் அது எளிதில் வெற்றி கொள்ளும் என்றும் சொல்ல படுகிறது மேலிடத்து வட்டாரங்களில். மற்றவர்கள் சுதாரித்து கொள்ளவேண்டும்.   22:39:03 IST
Rate this:
2 members
0 members
20 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
பொது உதிரி பாகங்கள் பற்றாக்குறையில் தவிக்கும் ஏர் இந்தியா
தொழிலார்கள் ஒரு நிறுவனத்தின் சொத்துக்கள் என்ற நிலை மாறி, அவர்களை சுமையாக பார்க்கிறது பல நிறுவனங்கள். அவர்களை எப்படியாவது குறிப்பாக அவர்களாகவே வெளியேறும் வண்ணம் செய்து விட்டால் அதன் பிறகு லாபத்திற்கு விற்று விடலாம் என்று நினைக்கிறார்கள் போல. ஒரு விமான சேவை நிறுவனத்தை விற்க முயன்றார்கள், விலைக்கு கேட்போர் யாருமே இல்லையாம். காரணம் விமான சேவையை மட்டும் ஏற்று நடத்துவதாகவும் அவர்களின் ஊழியர்களில் பலர் தங்களுக்கு வேண்டாம் அவர்களை பணிக்கு அமர்த்தி கொண்டு சேவை தொடரவேண்டும் என்று கூறினால் உங்கள் நிறுவனத்தை வாங்க மாட்டோம் என்று தனியார் நிறுவனங்கள் வெளிஏறி விட்டதாம். தனியாருக்கு விற்பதற்கு முன்னாள் தொழிலார்களை வெளியேற்ற வேண்டும், நஷ்டத்தை பெரிதாக காட்ட வேண்டும் அப்போது தான் எண்ணம் நிறைவேறும். இந்த நிலையை தான் தற்போது தென்தமிழகத்து கோடியில் பல கல்வி நிறுவனங்கள் கூட செயல் படுத்துகின்றனவாம். சூரியன் அமிர்தம்.   22:29:47 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
பொது நானே போராட்டத்தில் இறங்கி இருப்பேன் ரஜினி காட்டம்
சில கருத்துக்கள் பலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனாலும் சொல்கிறேன், அரசியல் கட்சி தலைவர்கள், மாநில முதல்வர்கள் அரசு பேரதிகாரிகள் இறுதி ஊர்வலம் மற்றும் ராஜாஜி ஹாலுக்கு வராமல் இருந்திருக்க வேண்டும். கட்சியின் உண்மை தொண்டர்களும் இரவு பகல் பாராது கண்விழித்து தலைவருக்காக பிரார்த்தனை செய்தவர்கள் உள்ளன்போடு இருந்தவர்கள் இறுதியில் நேரடியாக தலைவரின் முகத்தை பூதவுடலை கண்ணால் பார்க்க வேண்டும் என்று எவ்வளவு நேரம் முயன்றும் முடியாமல் போனதே இதற்கு காரணம் பல்வேறு மாநில முதல்வர்கள் கட்சி தலைவர்கள் தான். தலைவரின் சைவ பெட்டியை ஆவது தொட்டு விட வேண்டும் என்று கூட முயன்றவர்கள் தொண்டர்கள். அவர்கள் எல்லோரும் மறுநாள் அல்லது அதன் பிறகு மெரினாவில் அஞ்சலி செலுத்தி இருக்கலாம். தொண்டர்கள் இறுதி அஞ்சலி செலுத்த முடியாமல் போனதற்கு பெரும் புள்ளிகளே காரணம். கலைஞர் உடன் பிறப்பிற்காகவும் தொடர்களுக்காகவும் தான் தொடர்ந்து எழுதினார் குரல் கொடுத்தார். அவர்கள் தான் வி ஐ பி கள் அவர்களுக்கு அன்று அனுமதி கிடைக்காமல் போனதே. கண்ணீர் அஞ்சலி செலுத்தியது உண்மை தொண்டர்கள் தானே தவிர கூட்டணிக்காக வந்த தலைவர்கள் அல்ல.   22:06:36 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
பொது 2 நாட்கள் சபரிமலைக்கு பக்தர்கள் வரவேண்டாம் தேவசம்போர்டு
வாட்ஸ் ஆப் குழுவில் செய்திகள் வந்தது. ஆனால் அதை உறுதி செய்யமுடியவில்லை. எங்களுக்கு தெரிந்தவர்கள் மறை மலை நகரில் இருந்து கூட இன்று இரவு கிளம்புவதற்கு ஆயத்தமாக இருந்தார்கள். பம்பை சென்று விட்டு அங்கு தங்கி இருந்து பார்த்து கொள்ளலாம் என்று இருந்தார்கள். அவர்களுக்கு குழப்பம் இருந்தது. காலையில் தான் அங்குள்ளோரிடம் விசாரித்து அதன் பிறகு பயணத்தை தொடர்வதென்று திட்டமிட்டிருந்தார். தினமலரின் செய்தி உடனடியாக கிடைக்க பெற்றதில் மகிழ்ச்சி. அந்த ஐயப்பனே செய்தி தந்ததாக கருதுகிறார்கள். செய்தி அறிந்து மலரில் வந்ததால் வேறெங்கும் விசாரிக்காமல் பயணத்தை நிறுத்தி இருக்கிறார்கள். தினமலருக்கு நன்றி. உடனடியாக செய்தியை தந்ததற்காக.   20:06:38 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2018
பொது கருணாநிதி மறைவால் ஸ்டாலினுக்கு நெருக்கடி
கட்சி தன கொள்கை நிலை பிறழ்ந்து மாறுதலுக்காக தன்னை சுய பரிசோதனை செய்யும் கட்டத்தில் இருக்கிறது. தலைவர் அதை முழுதும் அறிந்ததாக தெரியவில்லை. தொண்டர்கள் உள்ளூர் தலைவர்கள் என்று பரவலாக சித்தார்த்த மாற்றத்தை முழுமையாக ஏற்க இருக்கிறார்கள். தலை கீழ் மாற்றம் ஏற்படும் நிலை. கடவுள் கிடையாது மத சடங்குகள் வேற்று சம்பிரதாயங்கள் தவறானவை அவையே சமுதாய மாற்றத்திற்கு தடை கற்கள் என்று ஆரம்பித்து வலுப்பெற்ற திராவிட கழக கொள்கைகளை தன்னகத்தே கொண்டே அதன் அரசியல் இயக்கமாக மாற்றிக்கொண்ட கட்சி தமிழ் என்று பறை சாற்றியே ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. இன்றோ அனைத்து தமிழக மற்றும் பக்கத்து மாநிலங்களில் கூட தமிழையும் சமூக கொள்கைகளையும் மறந்து விட்டு, அவரவர் நம்பிக்கையின் அடிப்படையில் கட்சியில் வியாபார லாபத்திற்காக வாழ்வாதாரத்திற்காக அதை பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் இணைந்திருக்கிறார்கள். கடவுள் எதிரிபு என்று ஆரம்பித்தவர்கள், இந்து மத கடவுள், இந்து மத நம்பிக்கை மட்டுமே தவறு மற்ற மத நம்பிக்கைகள் சரி என்று ஆடி விரதத்தில் பங்கேற்காதவர்கள், மற்ற மாதத்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். பிற மதத்தின் நம்பிக்கைக்கும் கொள்கைகளுக்கும் முற்றிலும் மாறாக எதிர்ப்பாக அந்த மதத்தினரின் ஏற்ற தாழ்வுகளை மனிதனில் கண்டு ஐடா ஒதுக்கீடும் தந்தார்கள். ஒட்டு ஒன்றே எங்கள் தாரக மந்திரம் அதன் வழியே கோடானு கொடிகளை பெறலாம் என்ற நிலைக்கு அவர்கள் தங்களை மாற்றி கொண்டார்கள். இன்றைய நிலையில் பழுத்தமரம் வேரோடு சாய்ந்து விட்ட நிலைல்யில் அந்த வானம் மாறுகிறது. பாலைவனமாக மாறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு இன்றைய தலைவருக்கு மட்டுமல்ல அவரோடு காலம் காலமாக இருக்கும் அடுத்த கட்ட தலைவர்களுக்கும் இருக்கிறது. பேராசிரியர் முற்றிலும் ஒதுங்க வேண்டும். மிக குறுகிய காலமே இருக்கின்ற நேரத்தில் தேர்தலுக்கு நம்பிக்கையோடு தொண்டர்களை தயார் படுத்த வேண்டி இருப்பதும், மக்களின் மனதில் நம்பிக்கை பெறுவதும் இயலாத காரியம் தான். அனைவரும் இணைந்து பெரு முயற்சி செய்ய வேண்டும். அதற்கு பொது குழு செயற்குழு ஆட்சி க்ளூ என்று இருப்போர் இணைந்தே உழைக்க வேண்டும். சரியான வழிகாட்டுதல்களும், நெறிபிறழ்வா நெறிமுறைகளும் கண்டு அதன் வழி நடக்கவேண்டும்.   10:11:02 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2018
பொது இம்ரான்கான் பதவியேற்பு விழா கவாஸ்கர் புறக்கணிப்பு
உப்பு சப்பில்லாத காரணம். சொந்த விஷயம். இதை செய்தி ஆக்கியிருக்க வேண்டாம். முதலில் எதோ தேசம் சார்ந்த நிகழ்வுகளுக்காக தனது எதிர்ப்பை தெரிவிக்க மறுத்திருப்பாரோ என்று நினைத்து படித்தால் நேரம் விரயம் தான் மிச்சம்.   09:36:06 IST
Rate this:
0 members
0 members
41 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2018
உலகம் பலுசிஸ்தானில் அடக்குமுறை இந்தியா கவலை
பலுசிஸ்தானில் அடக்குமுறை பெருகினால் ஒரு விதத்தில் நல்லது என்று கொள்ளவேண்டும் போல. அடக்குமுறை இருந்தால் புரட்சி வரும், அதன் பின்னர் ஜனநாயகம் பிறக்கும். அமைதி நாடி மக்கள் நன்மார்க்கம் திரும்புவர். பாகிஸ்தான் கத்தார் துபாய் பஹ்ரைன் போன்று சிறிய தேசங்களாக இருக்கட்டுமே. அதுதானே அவர்களுக்கு சரி. குட்டி தேசமாய் இருந்து விட்டு போகட்டும். அவர்கள் பெரிய தேசமாய் பெரிய நிலப்பரப்பை இருந்து கொண்டு சந்ததி பெருக்கத்தை கூட்டி கொண்டே செல்வது அவர்களும் சரி அல்ல நமக்கும் தொந்தரவு தான். காஸ்மீர் பிரச்சினை முடிந்து விடும். பாகிஸ்தான் நானோ பாகிஸ்தான், மினி நானோ பாகிஸ்தான் மைக்ரோ நானோ பாகிஸ்தான் என்று பிறந்தால் என்று சொல்கிறார்கள் அமைதி விரும்பும் அரசியல் நோக்கர்கள்.   12:17:43 IST
Rate this:
0 members
1 members
28 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X