அநாகரிகத்தின் உச்சகட்டம். இந்தமாதிரி நடந்துகொள்பவர்களுக்கும், ராஜபக்ஸே சகோதரர்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. உண்ணாவிரத நயவஞ்சக கருணா கும்பல்களிடம் இப்படி நடந்துகொண்டால் ஒரு நியாயம் இருக்கும். அதைவிட்டுவிட்டு, கடவுள்மேல் பாரத்தைப்போட்டு, நம்மை நம்பிவரும் சாதாரணமானவர்களிடம் வெட்டி வீரத்தைக் காட்டுவதில் என்ன பயன்?
17-மார்-2013 15:32:40 IST
தேசிய நதிகளின் இணைப்பை “சுற்றுச்சூழலுக்கு எதிரானது” என்றார் திரு.ராகுல் காந்தி... இவர்தான் காங்கிரஸின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக இருக்கக்கூடும்... இவர் பிரதமரானால், தேசிய நதிகளின் இணைப்புத் திட்டத்தின் கதி என்னவாகும்?... உணர்ந்து வாக்களிப்பீர் இந்திய மக்களே...
23-டிச-2012 19:20:35 IST
அரசாங்கங்கள் ஒழுங்காக ஆட்சி செய்தால் மாவோயிஸ்ட் நக்ஸலைட் என்று யாருமே உருவாக மாட்டார்கள்...குடும்பம் குழந்தை எல்லாரையும் தியாகம் செய்து துன்ப வாழ்வு வாழ்வு வாழ யார்தான் விரும்புவார்கள்?... அரசுகள் முதலில் ஒழுங்காக ஆட்சி செய்யட்டும்.... நாட்டில் இப்போது நடப்பதைப் பார்த்தால் ஒரு கட்டத்தில் எல்லாருமே நக்ஸலைட் மற்றும் மாவோயிஸ்ட்களாக மாறுவது உறுதி...
10-அக்-2012 18:36:39 IST
என்னுடைய நண்பர்கள் பலர் குஜராத்திகள், அவர்களில் பலர் பட்டேல்கள். அவர்களுடைய கணக்குப்படி கேசுபாய் பட்டேலின் ஓட்டுக்கள் பா.ஜ.க-வைப் பாதிக்காது, நரேந்திர மோடி நூற்று முப்பத்தைந்து இடங்களைப் பிடிக்கும் என்றும், காங்கிரஸ் மரண அடி வாங்கும் என்றும் சொல்கிறார்கள். நரேந்திர மோடியின் செயல்பாடு, இடைவிடாத ஊழலால் காங்கிரஸ் நாடு அளவிய அளவில் பெற்றிருக்கும் கடுமையான விமர்சனம் இதற்குக் காரணமாக இருக்கும் என்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்...
07-அக்-2012 13:24:34 IST