காவி தீவிரவாதிகளை உள்துறை அமைச்சர் ஷிண்டே அடையாளம் காட்டியுள்ளார். இனிமேல் அவர் மீது ரூ. 2,00,000/- கோடிக்கான ஊழல் புகாரை இதே பகுதியில் எதிர்பார்க்கலாம்.
28-ஜன-2013 05:29:17 IST
'காவி தீவிரவாதம்' உண்மைதான் 10 பேரின் பெயரை வெளியிட்டது மத்திய அரசு
சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு தீவிரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு தொடர்பு உள்ளதாக அறிவித்துள்ள மத்திய அரசு, அவற்றில் தொடர்புடைய 10 பேர்களின் பெயர்களை பகிரங்கமாக வெளியிட்டு உள்ளது.
“தீவிரவாதம் தொடர்பாக குற்றங்களில் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தொடர்புகள் உள்ளன” என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, கூறியிருந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஷிண்டே கூறியது சரியானதே. தீவிரவாதத்தில் ஆர்.எஸ்.எஸ்.க்கு தொடர்பு உள்ளது நிஜம்தான் என மத்திய அரசு கூறியுள்ளது.
மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் இது குறித்து கூறுகையில், “தீவிரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா ஷரீப்பில் நடந்த தீவிரவாத குண்டு வெடிப்பு தாக்குதல்களில், குறைந்தபட்சம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய 10 பேர் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன’’ என்று தெரிவித்தார்.
அந்த 10 பேருடைய பெயர், விவரங்களையும் ஆர்.கே.சிங் பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்:
மறைந்த சுனில் ஜோஷி, ஆர்.எஸ்.எஸ்ஸின் தேவாஸ் மற்றும் முவா இயக்கத்தில் 1990 முதல் 2003 வரை இருந்தவர். இவர் சம்ஜாவ்தா மற்றும் அஜ்மீர் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்.
தலைமறைவாக உள்ள சந்தீப் டாங்கே, ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் இயக்கத்தில் 1990 முதல் 2006 வரை இருந்தவர். இவர் இன்டோரை சேர்ந்தவர். சம்ஜாவ்தா, மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களில் லோகேஷ் சர்மா, ஆர்.எஸ்.எஸ்ஸின் கர்யவஹாக் அமைப்பையும், சுவாமி அசேமானந்த் ஆர்.எஸ்.எஸ் வனவாசி கல்யான் இயக்கத்தையும், ராஜேந்தர் என்கிற சமுந்தர் ஆர்.எஸ்.எஸ்ஸின் வர்க் விசாரக் அமைப்பையும் சேர்ந்தவர்கள்.
மேலும் குஜராத்தை சேர்ந்த முகேஷ் வசானி கோத்ரா ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும், தேவேந்தர் குப்தா ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்சாரக் அமைப்பையும், சந்திரசேகர் லெவே ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்சாரக் 2007 இயக்கத்தையும், கமல் சௌகான் பிரச்சாரக்கின் கிளை இயக்கத்தையும், தலைமறைவாக உள்ள ராம்ஜி கல்சங்ரா ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த 10 பேரும் சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ்.இயக்க மற்றும் கிளை உறுப்பினர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
28-ஜன-2013 05:21:29 IST
வாழ்த்துக்கள் அரசு அறிவித்துள்ள பரிசுத்தொகை ரூ. 10 லட்சம் வெறும் அறிவிப்போடு நின்று விடாமல் மாணவிக்கு உடனடியாக சென்றுசேர ஆண்டவனிடம் வேண்டுகிறேன்
25-ஜன-2013 06:35:28 IST
பெரியார் அவர்கள், பாம்பை "அடிக்காதே" என்று சொன்னதன் காரணம், அது விவசாயி-யின் நண்பன் என்பதால்... வயல்வெளிகளில் விளைந்த நெல்மணிகள் அறுவடைக்கு தயாராக இருக்கும்போது அவற்றை "பெருச்சாளிகள்" கவர்ந்தெடுத்து செல்லாதவண்ணம் பாம்புகள் விவசாயிக்கு துணைபுரிகின்றன. பாம்பையும், அதேநேரத்தில் கணபதியின் வாகனம் பெருச்சாளியையும் தெய்வத்திற்கு சமமாக கருதும் இந்து மத முறைப்படி கருணாநிதியின் கொள்ளுபேத்தியின் திருமணம் நடைபெற்றிருந்தாலும், கருணாநிதியை கைதுசெய்தபோது உடனிருந்த போலிஸ் அதிகாரி சண்முகராஜேஸ்வரன், பிற்பாடு கருணாநிதிமேல் எந்தவித தவறும் இல்லை என்பது தெரியவந்ததால், தனது மனசாட்சிப்படி, கருணாநிதியை சம்பந்தியாக்கி, தனது மகளை கருணாநிதி குடும்பத்தில் மருமகளாக அர்ப்பணித்திருக்கிறார் என்பதிலிருந்து, இது ஒரு சுயமரியாதைத்திருமணம் என்பதே உண்மை. இந்த திருமணத்திற்கு எனக்கு அழைப்பு இல்லாவிட்டாலும் பரவாயில்லை எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அழைப்பிதழ் கிடைக்காதவர்கள் "சும்மா" எரிச்சல்பட்டு இங்கே கருத்து எழுதுவதைவிட்டு, வளர்ப்புமகன் திருமணம் மற்றும் அதற்கு பிந்தைய காமெடி காட்சிகளை ஒருமுறை நினைத்துப்பார்த்து, மனதை தேற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறேன். (கொசுறுசெய்தி: சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு தீவிரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு தொடர்பு உள்ளதாக அறிவித்துள்ள மத்திய அரசு, அவற்றில் தொடர்புடைய 10 பேர்களின் பெயர்களை பகிரங்கமாக வெளியிட்டு உள்ளது. மேலும் விபரங்களுக்கு - ://tamil.webdunia.com/newsworld/news/national/1301/23/1130123033_1.htm என்ற லிங்கை ப்ரௌசரில் காப்பி-பேஸ்ட் செய்து படித்தறிந்துகொள்ளவும்.)
24-ஜன-2013 04:16:56 IST
நாட்டில் புலிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. எனவே, புலிகள் நடமாட்டம் அதிகமுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை புலிகள் சரணாலயமாக அறிவித்து, புலிகள் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏதுவான சூழ்நிலையை, அரசு உருவாக்கி, வனப்பகுதிகளை காப்பாற்றவேண்டும். காடுகள், மரங்கள், பெருகி விலங்குகள் சுதந்திரமாக நடமாடினால் நாட்டில் மழை பொழியும்.... விவசாயம் செழிக்கும்..... மின்சாரம் உற்பத்தியாகும்... தொழில் நடக்கும்... பொருளாதாரம் உயரும்... ஆனால் அதற்கு நல்ல ஆட்சியாளர்கள் வேண்டும்... (பெல் அடிச்சுட்டாங்கப்பா.... இத்துடன் நிறுத்திக்கிறேன்...)
22-ஜன-2013 02:08:41 IST
ஆதாயம் இல்லாமல் பா.ஜா.கா. மற்றும் சங்க் பரிவார் அமைப்பினர் குண்டு வைத்திருக்க மாட்டார்கள். அதேபோல், ஆதாரம் இல்லாமல் மத்திய உள்துறை அமைச்சர் இதைக் கூறி இருக்கவும் மாட்டார். ஒரு தேசிய கட்சி, அதுவும் சங்க் பரிவார் துணையுடன் தாங்கள் தேசபக்தர்கள் என்று கூறிக்கொண்டே, நாட்டில் குண்டு வைத்து பொதுமக்களை கொன்று, அதன்மூலம் தேர்தலில் வாக்காளர்களை மிரட்டி ஓட்டு வாங்கும் கோயபல்ஸ் திட்டத்தை, ஒரு சாதாரண கண்டன அறிக்கையோடு நிறுத்திவிடாமல் ஆதாரங்களை அம்பலப்படுத்தி, பா. ஜா.கா., ஆர்.எஸ்.எஸ். சங்க் பரிவார் போன்ற தேச விரோத அமைப்புகளை தடை செய்வதன் மூலம் இந்தியாவில் தேச ஒற்றுமை பாதுகாக்கப்படலாம். (இந்த குண்டு வெடிப்புகள் பற்றிய முந்தைய தினமலர் செய்திகளும், மற்ற ஊடகங்களின் செய்திகளும் கீழே தரப்பட்டுள்ளன. பிரவுசரில் காப்பி... பேஸ்ட்... செய்து படித்து தெரிந்துகொள்ளவும்...அல்லது கூகுள் மூலமாகவும் search செய்து தெரிந்து கொள்ளலாம்...)
://www.dinamalar.com/News_Detail.asp?id=616017
://www.dinamalar.com/News_Detail.asp?id=606638
://www.dinamalar.com/News_Detail.asp?Id=560347
://www.dinamalar.com/News_Detail.asp?id=145054&Print=1
://www.dinamalar.com/News_Detail.asp?Id=176161&Print=1
://zeenews.india.com/tags/Malegaon_blast.html
://en.wikipedia.org/wiki/2006_Malegaon_blasts
://timesofindia.indiatimes.com/india/Hindu-fanatics-behind-several-sensational-cases-Govt/articleshow/17976192.cms
://www.firstpost.com/india/malegaon-blast-police-custody-of-accused-exted-592399.html
21-ஜன-2013 03:23:18 IST
கூடவே, காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக பி.ஜெ. பீ. ஐ கண்டித்து பள்ளி, கல்லூரி மாணவிகளை தீ வைத்து கொல்லாமல், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமோ, மறியலோ நடத்தினால் அர்த்தமுள்ளதாக இருக்கும்
20-ஜன-2013 03:01:50 IST
காங்கிரசில் தற்போது இளைஞர்களின் நம்பிக்கை ராகுல் காந்திதான் என்றாலும், வரவிருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும் போது, அனுபவமும் திறமையும் வாய்ந்த திரு. சிதம்பரம் அவர்களை பிரதமர் பதவியில் அமர்த்துவது, இளைஞர் காங்கிரசார்க்கு அரசியலில் புது அனுபவமும், வழிகாட்டுதலும் தொலைநோக்கு சிந்தனையும், அடுத்து ஆட்சி அமைப்பதற்கான மனோதிடனும் கிடைக்கப்பெறும் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் என்ன செய்வது? வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக வரவேண்டுமெனில், இங்குள்ள தமிழர்களின் ஆதரவு கிடைக்கப்பெற வேண்டுமே? கடந்த காலங்களைப்போல் அல்லாமல் வரும் தேர்தலுக்கு முன்பாவது தமிழர்களுக்கு விழிப்புணர்வு வருமா? நம்பிக்கை பிறக்குமா?
20-ஜன-2013 02:47:09 IST
திருவாரூர் தொகுதியின் எம்.எல்.ஏ. வாக இருக்கும் கருணாநிதியை ஒட்டுமொத்த தமிழகத்தின் முதல்வராக இருக்கும் ஜெயலலிதா இப்படி போட்டுத் தாக்குவது, கருணாநிதி முதல்வராகவும் ஜெயலலிதா எதிர்கட்சி தலைவராகவும் இருப்பதைப்போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. தமிழகத்தில் நிலவும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற கொடுஞ்செயல்கள் நடவாமல் தடுப்பதற்கான யுக்திகளை கையாள்வதை விட்டுவிட்டு, மக்களின் அன்றாட தேவைகளான மின்சாரம், தண்ணீர், பேருந்து போக்குவரத்து, மற்றும் விவசாயம் அடியோடு சீர்குலைந்து கிடப்பதை பற்றி கவலைப்படாமல்... விலைவாசி ஏற்றத்தை கண்டுகொள்ளாமல்... கொடநாட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டு... எந்நேரமும் கருணாநிதியை வசைபாடிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது... கருணாநிதி ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் யாவும் நினைவுக்கு வந்து நிற்கிறது... "நேற்று" டெல்லியில்... "இன்று" நெல்லையில்... "நாளை" சென்னையில்... என்று அன்றாடம் தமிழகத்திற்காக உழைத்த கருணாநிதியை மீண்டும்... மீண்டும்... "தீய சக்தி" என்று கூறுவது அவர் மீது ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தி விடுகிறது... பாரதீய ஜனதாதான் "தீயசக்தி" என்று எடியூரப்பா கண்டுபிடித்து சொன்னதை நினைவிற்கொண்டு, கருணாநிதியை இன்னமும் "தீய சக்தி" என்று கூறுவதை ஜெயலலிதா நிறுத்திக்கொள்ள வேண்டும்.
18-ஜன-2013 02:19:56 IST