P R Srinivasan : கருத்துக்கள் ( 242 )
P R Srinivasan
Advertisement
Advertisement
செப்டம்பர்
16
2018
பொது திராவிட பிள்ளையார் நடிகை கஸ்தூரி கிண்டல்
விநாயக சதுர்த்தி கொண்டாடும் எல்லோரும் திமுகவிற்கு எதிர்த்து வாக்களித்து, ஸ்டாலின் சொன்னது தவறு என்று அவருக்கு உணர்த்தலாம்.   08:22:54 IST
Rate this:
3 members
0 members
26 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
பொது வராகடனின் உண்மை அம்பலப்படுத்திய ரகுராம் ராஜன்
இதை ரகுராம் ராஜன் பதவியிலிருந்த போது சொல்லியிருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். அவருடைய புகழ்வாய்ந்த எடுத்துக்கூறு " ஐ டூ வாட் ஐ டூ " உண்மையாக இருந்திருக்கும். பதவி முடிந்து, வெளி நாட்டில் இருந்து கொண்டு அறிக்கை விட்டால் அவ்வளவாக எடுபடாது.   08:12:30 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
சம்பவம் பெண்ணை தாக்கிய திமுக பிரமுகர் கைது
எங்கெல்லாம் ஜனநாயக முறைப்படி ஜெயிக்க முடியாதோ அங்கெல்லாம் வன்முறையை கையாண்டது திமுக ஒரு காலத்தில். எம்ஜிஆர் இந்த வன்முறை கும்பலை இரண்டு எதிர் எதிர் சக்தியாக மாற்றினார். வன்முறை அடங்கியது. இப்போது இரண்டு கட்சிக்கும் ஜனநாயக எதிர்ப்பு இருந்தால் எல்லாம் ஓன்று சேர்ந்து வன்முறை மீண்டும் நடைமுறைக்கு வரும். வலிமையான தலைமை இல்லாவிட்டால் இந்த வன்முறை மக்களுக்கு எதிராக திரும்பும். எளியோர்கள் பாதிக்கப்படுவார்கள். அதிமுகவில் வன்முறை கும்பல் கம்மி. அதனால் ஆட்சியிலிருக்கும் போது திமுக வன்முறை சிறிது அடங்கும். இப்போது அதிமுகவின் தலைமை வலிமையாக இல்லாததால் திமுக வன்முறை தலை தூக்குகிறது.   08:00:55 IST
Rate this:
0 members
1 members
113 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
கோர்ட் விஞ்ஞானி கைது தேவையற்றது ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
கைது செய்யும் முகாந்திரத்தை நிரூபிக்கவிட்டால், கைது செய்ய உத்தரவிட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அந்த மாதிரி செய்தால் தான் அரசியல்வாதிகள் உத்தரவின் பேரில் கைது செய்யும் பழக்கம் முடிவிற்கு வரும்.   07:49:44 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
அரசியல் எதிர்க்கட்சி கூட்டணியில் பிளவா?
காங்கிரஸ் நாட்டின் இப்போதய சீரழிவிற்கு முக்கியமான காரணம். மாநிலத்தில் எதிர்ப்பு, மத்தியில் ஆதரவு மக்களை குழப்பும். மாநில கட்சிகளுக்கு மக்களின் ஆதரவு பலவீனமடையும்.   07:51:07 IST
Rate this:
6 members
0 members
17 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
பொது சிறையில் சசிகலாவிடம் நேரடி விசாரணை!
காலம், மக்களின் வரிப்பணம் விரயம். உண்மை வெளிவரப்போவதில்லை. வந்தாலும் மக்களுக்கு ஒரு பயனும் இல்லை.   07:48:15 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
10
2018
பொது ஓய்வுக்கு பிந்தைய வாழ்வுக்கு சேமிப்பதில் இந்தியர்கள் எப்படி?
58 வயதில் பணியிலிருந்து ஒய்வு பெறும் ஒருவர் தனது தேவைக்காக சேர்த்துவைக்கும் பணத்தை வங்கியில் முதலீடு செய்து வட்டியிலிருந்து தனது தேவையை பூர்த்தி செய்ய விரும்புகிறார்கள். அவர் இறக்கும் தருவாயில் அவர் டெபாசிட் செய்த பணம் அவரின் குழந்தைகளுக்கு போகும். அவர் காலம் முழுவதும் வட்டி தனது தேவைக்கு போதவில்லை என்று அரசை குறை கூறிக்கொண்டிருப்பார். அதற்கு வங்கிகள் வட்டியோடு அசலின் ஒரு சிறிய பகுதியையும் கொடுத்தால் இந்த பிரச்சனை இருக்காது. ரிவர்ஸ் இஎம்ஐ போன்ற திட்டங்கள் தரவேண்டும். 80 வயதுவரை ஒருவரின் சேமிப்பின் அசலையும் வட்டியையும் சேர்த்து செலவழிக்கலாம். 80 வயதிற்கு மேல் வாழ்பவர்களுக்கு அரசு எல்லா செலவையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த மாதிரி ஒரு திட்டத்தை அரசு கொண்டுவந்தால் வயதானவர்களுக்கு மேன்மையான வாழ்வு கிடைக்கும்.   07:45:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
சம்பவம் ராஜ வாழ்க்கை வாழும் பயங்கரவாதிகள் உல்லாச விடுதியாக மாறிய புழல் சிறை
விஜய் மல்லையாவிற்கு இது மகிழ்ச்சி தரும். ஜெயில் அதிகாரிகள், அரசியல் வாதிகள் வெளியில் உல்லாச வாழ்க்கை வாழ உள்ளே இருப்பவர்களுக்கு உதவி செய்கிறார்கள். இதனால் தான் பொது மக்களும் உல்லாச வாழ்க்கை வேண்டும் என்று தலைவர்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.   07:28:40 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
9
2018
பொது யாராலும் வெல்ல முடியாத இந்தியா பிரதமர் நரேந்திர மோடியின் புதிய கோஷம்
பலமான இந்தியா என்றால் ஒன்றுபட்ட இந்தியாவாகத்தான் இருக்க முடியும். ஒன்றுபட்ட இந்தியாவிற்கு ஊழலின்மை, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, இவற்றுடன் பெரும்பான்மை மக்களின் ஆதரவு என்கிற மூன்றும் இருந்தால் ஒரு கட்சி சிறப்பாக வெற்றியடையும். இதைத்தான் பாஜக குறிவைக்கிறது. ஆனால் பெரும்பான்மை மக்களின் ஆதரவு அரசின் கொள்கையையும், மக்களின் எளிதான வாழ்க்கை முறையை ஊக்குவிக்க அரசின் திட்டங்களும் உதவி செய்யும். ஆனால் இப்போது பெட்ரோல் டீசல் விலை மக்களை அச்சுறுத்துகிறது. எப்படி வெங்காயத்தால் டெல்லியை இழந்ததோ அவ்வாறு பெட்ரோல் டீசலால் இழக்கும் வாய்ப்பு அதிகம். ஆனால் ஒரு சாதகமான விஷயம், திரு மோடியின் தலைமை. அவரது தலைமைக்கு சமமான தலைமை எதிர்கட்சிகளிடம் இல்லாமல் இருப்பது பாஜவிற்கு சாதகம்.   07:24:34 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
9
2018
அரசியல் திருவாரூரில் அழகிரிக்கு செல்வாக்கு எப்படி...
தேர்தலில் போட்டியிடுவது அழகிரிக்கு நன்மை தரும். இவரது பலம் நிரூபிக்கப்பட்டால் திமுகவில் இவரது இடம் நிச்சயமாகும். திரும்பவும் திமுகவில் உட்கட்சி ஜனநாயகம் வரும். யார்வேண்டுமானாலும் தலைமைக்கு போட்டியிடலாம் என்கிற நம்பிக்கை தொண்டர்களுக்கு உற்சாகம் தரும்.   07:10:33 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X