கருப்பு சட்டை அணித்து ஆட்சி அதிகாரத்துக்கு வந்த திராவிட கட்சிகளால் நிர்வகிக்கப்படும் தமிழகத்தில் கருப்பு சட்டை அணிந்து வருவது குற்றமா .........
18-மே-2013 01:13:17 IST
ஆக மொத்தத்தில் இன்னொரு மின்கட்டண உயர்வுக்கு அடி போடப்படுகிறது நிச்சயமாக சொல்கிறேன் இந்த அரசு இதே ரீதியில் மின்விநியோக விஷயத்தில் மக்களை துன்புறுத்திக் கொண்டே போனால்.......வெறுத்துப் போவார்கள். மின்சாரத்துக்கு பதிலாக மண்ணெண்ணெய், மெழுகுவர்த்தி உபயோகப் படுத்தலாம் என நினைத்தாலும் அவற்றின் விலைகளும் எகிறி போய் இருக்கின்றன. சோலார் மின்னுற்பத்தி நோக்கி மக்களை விரட்டும் செயலாக கூட இது இருக்கலாம். அவ்வளவு செலவழித்து சோலார் பானல் அமைக்கும் நிலையில் பெரும்பாலானோர் இல்லை.
18-மே-2013 01:08:37 IST
காங்கிரசின் வாசன் உள்பட தமிழகத்தின் அனைத்து தரப்பினரின் கோரிக்கையும் இது தான். கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்று அமைச்சர்கள் பதவி ஏற்பதிலேயே இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய காங்கிரஸ் அரசு இந்த விஷயத்தில் அவசரம் காட்டுமா.........சித்தராமைய்யாவோடு சுமூக நட்பை வளருங்கள். காதும் காதும் வைத்தாற்போல் காரியத்தை முடியுங்கள். பாராட்டு விழாவில் இன்னொரு "தாய்" பட்டம் வாங்கும் நோக்கோடு கட்சை கட்டினால் சுப்ரீம் கோர்ட் கூட அடக்கி வாசிக்க வாய்ப்பு உண்டு.
18-மே-2013 00:59:20 IST
அரசு விவகாரங்களில் நீதிமன்றங்கள் தொடர்ந்து தலையிட்டுக் கொண்டிருந்தால் மக்களுக்கான ஆட்சியாக இல்லாமல் சட்டத்துக்கான ஆட்சியாகி விடும். தமிழ்நாடு போல மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் மாநிலங்களை வேண்டுமென்றால் தலையில் குட்டி தெளிவு உண்டாக்கலாம்.
18-மே-2013 00:51:44 IST
தமிழகத்தை பொறுத்த வரை மி.லி கணக்கில் தண்ணீ........விற்பனையால் தான் அரசாங்கமே நடக்கிறது. பெயர் ராசி போல.......இப்போது நல்ல தண்ணீர், குவார்ட்டர், ஆப்......என்று போகாமலிருந்தால் சரி.
18-மே-2013 00:44:06 IST
நேரம் போகணுமே....எதையாவது படித்து தான் ஆகணும். நல்ல ஆன்மீக புத்தகங்களின் மூலம் உண்மைகளை உணர்ந்து தெளிந்தால் சரி. இது சஞ்சய் தத்துக்கு மட்டுமானது மட்டுமல்ல் எல்லோருக்குமே ஏற்புடையது.....
18-மே-2013 00:15:54 IST
ஒன்றும் தெரியாத கருணாநிதி கண்டமேனிக்கு எல்லா விலைகளையும் ஏற்றி மக்களை காயப்படுத்தியதில்லை. எல்லாம் தெரிந்த உங்களை போன்றவர்களால் தான் சாமான்யர்களுக்கு பிரச்சினையே........மின்கட்டண உயர்வினால் பாதிக்கப்பட்டிருப்போர் ஏராளம், புதிய மீட்டர்களில் குளறுபடி செய்து கொள்ளை அடிக்கும் செயல்களெல்லாம் கருணாநிதி ஆட்களுக்கு செய்ய தெரியாததால் அவருக்கு மக்கள் மீண்டும் வாய்ப்பளிக்கவில்லை.
17-மே-2013 01:12:26 IST
ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை....பெரிய பூட்டாக எல்லாம் அறிந்த எம் எல் ஏக்களுக்கு போடப் பட்டிருக்கிறது, அவர்களால் வாயை திறக்க முடியாது......அவர்களுக்கும் சேர்த்து தான் மக்கள் ஊருக்கு ஊர் போராடுகிறார்கள்.
17-மே-2013 01:00:43 IST
பரவாயில்லையே....110ல் அறிவித்த கையேடு திட்டங்கள் ஏறத்தாழ எல்லா திட்டங்களும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க பட்டிருப்பதாக சொல்வதை பார்த்தால் மந்திரத்தால் மாங்காய் மட்டுமல்ல....திட்டங்களும் நிறைவேறி விடும் போல் தோன்றுகிறது. அப்படி என்ன தான் நிறைவேற்றப்பட்டு விட்டது என்பதையும் பத்திரிகைகள் பட்டியலிட்டிருந்தால் நாமும் அதன் பலனை பெற முயற்சிக்கலாம்.
17-மே-2013 00:57:05 IST