SaiBaba : கருத்துக்கள் ( 1093 )
SaiBaba
Advertisement
Advertisement
டிசம்பர்
9
2018
அரசியல் டிசம்பர், 12ல் ரஜினி பிறந்த நாள் ஜெ., ஸ்டைலில் கொண்டாட திட்டம்
பிறந்த நாள் வாழ்த்துக்கள். நேற்று ஒரு பாகிஸ்தான்காரருடன் பேசிக்கொண்டிருந்தேன், தனது ஊர் லாஹூருக்கு அருகில் எதோ கிராமம் என்றும் ரஜினியை ரொம்பப்பிடிக்கும் என்றும், 2.0 பார்க்க வேண்டும் என்றும் சொன்னார். இலங்கை, பாகிஸ்தான், சீனர்களைக்கூட கவர ரஜினியால் மட்டுமே முடியும். ஒரு முறை அமெரிக்காவிலிருந்து ஒரு க்ளையண்ட் தொழில்ரீதியாக மேற்பார்வையிட சென்னை வந்தார். ரஜினியை பார்த்தே தீரவேண்டும் என்று அடம்பிடித்தார். ரஜினி அமெரிக்கா வரும்போது பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தோம். ரஜினி நல்லவர். நல்லவர்களை ஆதரிப்பதால் நாமும் நல்லவர்களாகிறோம். ரிஷி மூலம் நதி மூலம் பார்க்கக்கூடாது. நல்லவர்களை கொடும் சொற்களால் துன்புறுத்தினால் ஆண்டவனுக்குப் பொறுக்காது.   08:52:33 IST
Rate this:
4 members
1 members
5 members
Share this Comment

அக்டோபர்
31
2018
பொது எழுத்தறிவு தேர்வில் 96 வயது பாட்டி சாதனை
வாழ வயது தடையில்லை. நம் நாட்டில் 50 வயது ஆகிவிட்டாலே முதியவர் பட்டியலில் சேர்த்து விடுகிறார்கள். வெளி நாடுகளில் 50 வயதில் தான் திருமணத்தை நாடுகிறார்கள். எந்த வயதிலும் யாரும் வாழலாம். இந்த பாட்டியின் படிப்பு விருப்பம் மற்றவர்களுக்கு ஊக்கமாக அமையட்டும்.   11:56:09 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
22
2018
சினிமா மிரட்டி 50 முறை முத்தம் கொடுக்க வைத்தார்கள் : சஞ்சனா கல்ராணி...
பிடித்தவருக்கு முத்தம் கொடுக்கலாம். யாரோ ஒருவருக்கு காசுக்காகவும் தப்பான புகழுக்காகவும் முத்தம் கொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. படம் எடுப்பவர்கள் வக்கிர புத்திக்காரர்கள். அந்த வக்கிரத்தை மக்கள் மனங்களிலும் புகுத்துகிறார்கள். 96 என்று ஒரு நாகரிகமான படம் வந்திருக்கிறது. அதைக்கக்கூட எனது நண்பர்கள் வட்டாரத்தில் ஒருவர் கூடப்பார்க்கவில்லை. அந்த அளவிற்கு சினிமா என்றால் வெறுத்துப்போய் இருக்கிறார்கள்.   01:20:36 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
27
2018
அரசியல் வாய்ப்பு!காலியான, 20ல், 11 தொகுதிகளில் மும்முனை போட்டிஅ.தி.மு.க., - தி.மு.க.,
இனிமேல் காசு கொடுக்காத யாரும் தமிழகத்தில் வெல்ல வாய்ப்பில்லை. எனவே காசு கொடுக்க விரும்பாத கட்சியினர் தினகரன் செய்தது போல டோக்கன் கொடுக்கலாம். அதாவது ஒரு குடும்பத்துக்கு மோடி அறிவித்த மருத்துவ திட்டத்திற்கு ஆயிரம் ரூபாய் கட்டிடலாம், ஒரு வீட்டில் பிள்ளைக்கு பள்ளியில் ஸீட் வாங்கி கொடுக்கலாம். கட்சிகள் வித்தியாசமாக ஏதாச்சும் முயற்சி செய்து பாருங்களேன்.   01:05:23 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
27
2018
அரசியல் வாய்ப்பு!காலியான, 20ல், 11 தொகுதிகளில் மும்முனை போட்டிஅ.தி.மு.க., - தி.மு.க.,
தமிழர்களின் தரத்திற்கேற்ற தலைவர்கள் இவர்கள் தாம். ஒவ்வொரு தமிழனின் தேவையும் ஐநூறு ருபாய் மட்டுமே. அதை நிச்சயம் இந்த தலைவர்கள் பூர்த்தி செய்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். தமிழர்களின் தற்போதைய தரத்திற்கு இவர்களே போதும். அவர்களின் தரம் உயரும்போது நல்ல தலைவர்கள் வருவார்கள்.   00:58:45 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
24
2018
அரசியல் ரூ.80 கோடி குடியிருப்பு திட்டம் கேரள அரசுக்கு கடும் எதிர்ப்பு
தனக்கு தானே சூனியம் இது தானா? கம்யூனிஸ்ட் ஆளும் கேரளாவில் எப்படி மாந்த்ரீகர்களும் சூனியக்காரர்களும் கோலோச்சுகிறார்கள். இவர்களைக்கட்டுப்படுத்த இந்த அரசாங்கம் என்ன செய்தது? பெரியாரிஸ்ம் திராவிடம் பேசும் தமிழகத்தில் இந்த மந்திரம் மாயம் பில்லி சூனியம் மூலம் எவ்வளவு கோடிப்பணம் கொள்ளை அடிக்கிறார்கள். எவ்வளவோ குடும்பங்களை நிர்மூலமாக்குகிறார்கள். படித்த மற்றும் படிக்காத முட்டாள்கள் இந்த மாந்த்ரீகர்கள் பின்னால் அலைகிறார்களே. சாமியை எதிர்ப்பவர்கள் இந்த பூதங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?   03:13:42 IST
Rate this:
4 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
20
2018
அரசியல் காங்., - தி.மு.க., கூட்டணி உடைகிறது ஓவர்! ராகுலுடன் கமல் இரண்டாம் சுற்று பேச்சு
எனக்கு இலவச மிக்சி க்ரைண்டெர் எல்லாம் தேவையில்லை. எனது வருமானமான மாதம் ஒரு பத்தாயிரம் ரூபாய் செலவில் நானும் என் குடும்பமும் ஒரு நல்வாழ்க்கை வாழ வேண்டும், அதை எப்படி சாத்தியமாக்குவீர்கள். அதாவது கல்வி, வீட்டு வாடகை(சென்னை), வீட்டு மளிகைப்பொருட்கள், மருத்துவம், போக்குவரத்து எல்லாம் சேர்த்து. கமல், ரஜினி யார் தெளிவு படுத்துகிறார்களோ அவர்களுக்கு எனது வாக்கு. திராவிடக்கட்சிகளை நான் நம்பத்தயாரில்லை.   01:11:17 IST
Rate this:
1 members
1 members
10 members
Share this Comment

அக்டோபர்
20
2018
அரசியல் காங்., - தி.மு.க., கூட்டணி உடைகிறது ஓவர்! ராகுலுடன் கமல் இரண்டாம் சுற்று பேச்சு
காங்கிரஸும் இல்லை பாஜகவும் இல்லையென்றால் திமுக தன் எம்பிக்களை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகின்றது. தமிழக மக்களே - உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்து விட்டு அங்கிட்டு ஒவ்வொரு எம்பிக்கும் கோடி கோடி என்று கூவி விற்பார்கள்.   01:03:47 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

அக்டோபர்
19
2018
கோர்ட் ரூ.50 கோடி மோசடியில் ரயில்வே நீதிபதி...சஸ்பெண்ட்! சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அதிரடி
உங்களுடைய அதிரடி தொடரட்டும், நல்லவர்கள் நலமுடன் வாழவும் அல்லவர்கள் அடிபட்டு திருத்தவும் சட்டம் தன் கடமையை செவ்வனே செய்ய வேண்டும். வாழ்த்துக்கள்.   02:41:29 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

அக்டோபர்
15
2018
அரசியல் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறேன்
கமல் சார், நேர்மையாக இருப்போம், ஊழலை ஒழிப்போம் என்று பிதற்றினால் மட்டும் போதாது. தமிழகத்தில் ஒரு ப்ராசசை எடுத்துக்கொண்டு (உ-ம் மணல் கொள்ளை), அங்கு இப்பொழுது என்ன நடக்கிறது, அதை எப்படி மாற்றுவீர்கள் என்று ஒரு ப்ராஜெக்ட் மாதிரி செய்து காண்பியுங்கள். படித்தவர்கள் அப்போது மட்டுமே உங்களை நம்புவார்கள். உங்கள் எகனை மொகனை முக ராசி எல்லாம் இனி வேலை செய்யாது.   12:10:13 IST
Rate this:
4 members
1 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X