பார்லி., தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் வராதா என்ற நப்பாசை, ஏக்கம் உங்களிடம் இருப்பதை உணர முடிகிறது. சிறுவர்களும் குழந்தைகளும் இப்படி சிந்திப்பது வழமையான ஒன்றுதான், நீங்கள் சட்டசபையில் எதிர்க்கட்சி நிலையிலும் இல்லை எதிர்க்கட்சியான தேமுதிக விடமிருந்து இப்படியொரு குரலை தட்டி எழுப்பிவிடவேண்டும் என்று நீங்கள் மற்றும் தாத்தாவும் மாறி மாறி குட்டையை குளப்பிக்கொண்டிருப்பது புரிகிறது. ஆனால் அவர்கள அதுபற்றி கவலைப்படவில்லை
பார்லி., தேர்தலில் வெற்றி வாய்ப்பு, அ.தி.மு.க.வுக்கு பிரகாசமாக இருக்கிறது என்பதுதான் யதார்த்தம்.
இரண்டு ஆண்டு கால ஆட்சியில், அவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஏராளமான அறிவிப்புகள் வெளியிட்டிருக்கலாம். அது ஜனநாயக மரபுக்குட்பட்டதுதானே ஜனநாயக மரபு சம்பிரதாயங்களுக்கு உட்பட்டுத்தானே விதி எண் 110 பாவித்து முதல்வர் நல்லதிட்டங்களை வெளியிடுகிறார். இன்னொன்றை நீங்கள் கவனிக்கவேண்டும் ஆட்சியை பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளாகியும் முதலமைச்சர் சினிமா கேளிக்கை கொண்டாட்டம் மற்றும் தனக்கான சுய விளம்பரங்களை வளர்த்துக்கொள்ளும் நோக்கில் அரச பணத்தை கொட்டி தாத்தா பாராட்டு விழாக்களை தீமுக ஆட்சியில் நடந்ததுபோல ஒரு நிகழ்வும் நடைபெறவில்லை. மக்கள் 2011 தேர்தலில் எவ்வளவு விளிப்பாக இருந்து தீர்ப்பெழுதியிருந்தனர் என்பது உங்களுக்கு தெரியும் வரவிருக்கும் தேர்தலிலும் சரியான தீர்ப்பை பதிவு செய்வார்கள்.
ஈழத்தமிழர் பிரச்சினைதான் உங்களை சுத்தமாக வீட்டுக்கு அனுப்ப காரணமாக இருந்தது ஈழத்தமிழர் பிரச்னையை பொறுத்தவரை அங்கு மிச்சம் இருக்கும் தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான் அனைவரோட விருப்பமும் அது சம்பந்தமாக இனியொரு பொழுது உங்கள் கட்சியை உலகம் நம்பத்தயாராக இல்லை. திமுக வின் கறுப்பு பக்கங்களை டெசோ என்ற உக்கிப்போன ஆணியை வைத்து பொருத்திவிடலாம் என நீங்கள் நினைப்பது பரிதாபமாகவுள்ளது.
23-மே-2013 08:50:13 IST
ஆட்சி அது தன்பாட்டுக்கு இருந்துகொண்டுதான் இருக்கிறது. அரசியல் வியாதிகளுக்கு அது நிரந்தரமானதல்ல என்பது உலகம் அறிந்ததுதான். இந்திய அரசியல் வரலாற்றில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள்போல நாட்டை கொள்ளையடித்த கட்சிகளும் இல்லை மக்களை துன்புறுத்திய கட்சிகளும் இல்லை. கலியாண வீட்டு விழாவுக்கு மாப்பிள்ளைக்கு தட்டி வைத்தாலும் பரவாயில்லை ஸ்டாலினுக்கு தட்டி வைத்து பொதுமக்களை அசௌகரியப்படுத்துவதை தடுக்க வேண்டியது போலிசாரின் கடமை. தாத்தா குழந்தைத்தனத்தை விட்டு விட்டு வயசுக்கு தகுந்த மாதிரி சிந்திக்கலாமே.
22-மே-2013 13:17:09 IST
நாட்டில் ஆட்சியாளர்களால் ஈடேற்றப்பட்டுவரும் அதிகார துஷ்பிரயோகம் கணக்கிட முடியாத ஊழல் ஒன்றுக்கும் நேர்மையாக தீர்ப்பு வழங்க இந்த நீதிபதிகளுக்கு தெரியவில்லை, கன்னித்தன்மை ஆராய்வுக்குள் ஏன் வந்தனர் என்று தெரியவில்லை பெண்கள் சம்பந்தமான இப்படியான பரிசோதனைகளுக்கு 100 வீதம் பெண் டொக்டர்களை மருத்துவ மனைகள் பாவிக்கவேண்டும் என்ற விதியை பாவிக்கலாம். வல்லரசு எங்கிறாங்க.
20-மே-2013 09:29:47 IST
மகளிர் அணி, இலக்கிய அணியென்றால் கனிமொழியின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. மாணவர் அணி, இளைஞர் அணி, எக்ரா எல்லாம் பெரியவர் ஸ்டாலின் கட்டுப்பாட்டுக்குள் தொடர்ந்து இருக்கிறது. ஊர் ஊருக்கு உருவாகும் அணியென்று அண்ணன் அஞ்சா நெஞ்சுவின் ஆதரவாளர் அணியை தாத்தா குறிப்பிட்டிருக்கக்கூடும். திமுகவுக்குள் அழகிரி அணி, ஸ்டாலின் அணி, கனிமொழி அணி தவிர வேறு ஊருக்கு ஊர் உருவாகி வேறு அணிகள் இருப்பதாக தெரியப்படவில்லை. ஆனாலும் தாத்தாவால் அஞ்சா நெஞ்சுவை அழைத்து உட்கார வைத்து அணி சேர்க்க வேண்டாம் என்று சொல்லும் தைரியமும் இல்லை. தொண்டர்களை கட்டிவைத்து அவர்களது காதை கடிப்பதே வழக்கமாக கொண்டுவருகிரார். திருமாவுடன் சீமானையும் ஒன்றாக்கி தனது பட்டிக்குள் அடைக்கும் நோக்கமும் தெரிகிறது அல்லது சீமான் ஆதரவாளர்களை கவரும் நோக்கோடு இரை வைக்கிறாரோ என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
20-மே-2013 09:15:14 IST
தாத்தா நீ எம் எல் ஏ யாக இருந்துகொண்டு சபையில் வந்து விவாதிக்க வேண்டிய விஷயங்களை முரண்பாடாக தினமும் வீட்டு திண்ணையிலிருந்து வெளியிடுவது உங்க வயதுக்கும் அனுபவத்துக்கும் நல்லா இல்லையென்று நான் சொன்னா கேக்க மாட்டேன்கிறாய். திண்ணையை விட்டுட்டு சட்ட சபைக்கு போ. நாட்டுக்காக போராடு. கொண்டாடு.
17-மே-2013 08:42:07 IST
110 விதியின்கீழ் அறிவிதல்களை வெளியிடலாம் என்பது ஜனநாயகவிதி என்பதுகூடத்தெரியாமல் திமுக சட்டசபையில் வங்குறோத்து நிலைக்கு வந்திட்டுதே எங்கிறதுதான் என்னோட டவுட்டு.
16-மே-2013 08:24:00 IST
சாதியை காட்டி கட்சி நடத்துவது தப்பு என்றாலும், ஜனநாயக முறைமைக்குட்பட்டு அதற்கும் மதிப்பளிக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் ஜனநாயகத்தையே பலவீனமாக்கி வன்செயலில் ஈடுபட்டால் என்ன செய்யலாம். ஜனநாயகத்துக்குட்பட்டு விரைந்து சட்ட நடவடிக்கைகளை எடுத்து பொதுமக்களை காப்பாற்ற வேண்டும்.
11-மே-2013 08:25:24 IST