Advertisement
B SIVASUBRAMANIYAN S B : கருத்துக்கள் ( 31 )
B SIVASUBRAMANIYAN S B
Advertisement
Advertisement
ஜூன்
29
2013
அரசியல் மத்தியில் காங்., மீண்டும் ஆட்சியமைக்கும் வாசன் உறுதி
காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் சிறந்த நகைச்சுவை உணர்வு படைத்தவர்கள் . ரோம் நகரம் பற்றி எரிந்துகொண்டிருந்தபோது, யாரோ ஒரு மன்னன் பிடில் வாசித்துக்கொண்டிருந்தான் என்று சரித்திரம் சொல்கிறது. நாட்டு மக்கள் கடும் விலைவாசி உயர்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர். துயரிலும், மாளாத சோகத்திலும் தவிக்கின்றனர். ஊழலோ விண்ணை முட்டுகிறது.இப்படி இருக்கும்போது, காங்கிரசுக்கு எந்த கேனையனும் ஓட்டுப்போட மாட்டான். இந்தியா முழுவதும் சேர்ந்து காங்கிரஸ் முதல் முறையாக 100 சீட்டு கூட பெறமுடியாது. அப்படி இருக்கும்போது, காங்கிரசு மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று சொல்வது, திருவள்ளுவரைப்படித்ததால் வந்த சிந்தனை. " இடுக்கண் வருங்கால் நகுக " என்ற குறள் தான் திரு ஜி கே வாசன் அவர்களை இப்படிப்பேச வைத்துள்ளது.   08:17:18 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
28
2013
அரசியல் அரசியலில் திடீர் தாவல் அ.தி.மு.க.,வில் பரிதி -பா.ம.க., பொன்னுச்சாமி
பரிதி மேலே நில அபகரிப்பு வழக்கு வந்ததே என்று கேட்கும் அல்போன்சு அவர்களே, ஜெயா டி வீ நிகழ்ச்சி தயாரிப்பாளர் மீது புகார் வந்தபோது கூட காவல்துறை உடனே விசாரித்து கைது செய்து சிறையில் வைத்துள்ளது.இந்த ஆட்சியில் காவல் துறை சரியாக தான் செயல்பட்டு வருகிறது. திமுகவில் பரிதி இருக்கும் வரை நீங்கள் அவர் நில அபகரிப்பு செய்தார் என்ற புகாரை ஏற்றீர்களா ? இப்போது கட்சி மாறியவுடன் நீங்கள் பேசுவது , திமுக ஆட்சியில் நில அபகரிப்பாளர்களுக்கு காவல்துறை பற்றி பயம் எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது. திமுக ஆட்சியில் அமைச்சர் கண்முன்னே காவல்துறை அதிகாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டதை அனைவரும் தொலைக்காட்சியில் பார்த்தோம். சட்டக்கல்லூரி மாணவர்கள் காவல்துறை அதிகாரிகள் முன்னரே ஒருவரை ஒருவர் வன்முறை தாக்குதல் செய்வதையும் தொலைக்காட்சிகள் மூலம் அனைவரும் பார்த்தனர். கருணாநிதி ஆட்சியில் வழக்கறிஞர்கள்- போலீசார் மோதலில் உயர் நீதிமன்றத்திற்குள் புகுந்து போலீசார் தாக்குதலில் உயர் நீதிமன்ற நீதிபதி ரத்தம் சொட்ட சொட்ட வெளியேறியதையும் டி வீ மூலம் அனைவரும் பார்த்தார்கள். திமுகவுக்கு எதைப்பற்றியும் விமரிசிக்க யோக்கியதை கிடையாது. தங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.   13:29:29 IST
Rate this:
7 members
0 members
48 members
Share this Comment

ஜூன்
25
2013
அரசியல் சமாஜ்வாதி தலைவர் போடுறாரு கணக்கு! முலாயம் பிரதமராக 40 இடங்கள் போதும்
மூன்றாவது அணி மட்டும் அமைந்து ஆட்சியை பிடித்திருந்தால் இந்தியாவை என்றோ அழித்திருப்பார்கள். நல்லவேளை நாடு தப்பியது. மூன்றாவது அணி என்பது ஒரு சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்ளும் முயற்சி மட்டுமே. கம்யூனிஸ்டுகள் சேரும் அல்லது கம்யூனிஸ்டுகளை சேர்த்துக்கொள்ளும் எந்த அணியும் உருப்படாது. ஆமை மற்றும் அமீனா புகுந்த வீடு கதைதான்.   12:37:08 IST
Rate this:
2 members
0 members
25 members
Share this Comment

ஜூன்
19
2013
அரசியல் கனிமொழி வெற்றிக்காக தி.மு.க.,தீவிரம் சோனியாவை சந்தித்தார் டி.ஆர்.பாலு கருணாநிதியை சந்தித்து ம.ம.க., ஆதரவு
அறுபது வருட திமுகவில் மற்றவர்களுக்கு வாய்ப்பு வேண்டாமா ? திமுகவில் எத்தனையோ பேச்சாளர்களும் வழக்கறிஞர்களும் மருத்துவர்களும் டாக்டர்களும் உள்ளனர்.மகன்கள், மகள், இந்தி தெரிந்த பேரன் இவர்களுக்கு மட்டுமே பதவி என்றால் மற்றவர்களுக்கு நாமமா? கிரிமினல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு ஆறுமாதங்களுக்கு மேல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ள மகளுக்கு தான் பதவி கொடுக்கவேண்டும் என்றால் அதை விட கிறுக்குத்தனம் என்ன இருக்கமுடியும்.? குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று தீர்ப்பு வரும் வரை பொறுத்திருந்தால் என்ன? ஏற்கனவே எம்பி ஆக இருந்தவர்தானே ? அவருக்கே திரும்ப கொடுத்தால் மற்றவனெல்லாம் எதற்கு கட்சியில். விரல் சூப்பவா ? ஊரானை இந்தி படிக்காதே என்பதும் , தன்னுடைய அக்காள் பேரனுக்கு நேரடியாக கேபினெட் மந்திரி பதவி வாங்கி கொடுப்பதும், ஏனென்று கேட்டால் பேரனுக்கு இந்தி தெரியும் என்று சொல்வதும், மற்றவனெல்லாம் காதில் பூச்சுற்றியா இருக்கிறான் ? திமுகவின் அரசியல் அத்தியாயம் முடிந்துவிட்டது.   19:37:14 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

ஜூன்
19
2013
அரசியல் கனிமொழி வெற்றிக்காக தி.மு.க.,தீவிரம் சோனியாவை சந்தித்தார் டி.ஆர்.பாலு கருணாநிதியை சந்தித்து ம.ம.க., ஆதரவு
மீண்டும் காங்கிரசின் காலில் விழும் கருணா மக்கள் முகத்தில் இனி விழிக்கவோ, தெருவில் நடமாடவோ முடியாது. மக்கள் ஓட ஓட விரட்டி அடிப்பார்கள். இவர் புத்தி ஏன் இப்படிப்போகிறது. ? கனிமொழி தோல்வி உறுதி. காங்கிரஸ் ஆதரிக்கும் கட்சியை வேறு யாரும் ஆதரிக்க மாட்டார்கள். கருணாநிதிக்கு சொரணையே கிடையாதா ?   05:20:28 IST
Rate this:
10 members
0 members
125 members
Share this Comment

ஜூன்
19
2013
அரசியல் அத்வானிக்கு தலைமை பதவி தந்தாலும் மீண்டும் கூட்டணிக்கு வாய்ப்பில்லை சரத் யாதவ்
ஐக்கிய ஜனதா தளம் விலகலுக்கு பின் இருப்பது அத்வானி அல்ல, இந்திரா காங்கிரஸ் குடும்ப அரசு பீகார் மாநிலத்துக்கு வழங்கிய 44000 கோடி ரூபாய் நிதி உதவி என்ற பெயரிலான லஞ்சம். உங்கள் அம்மாவும் நிதி உதவி பெறவிரும்பி காங்கிரஸ் அணிக்கு வர வாக்குறுதி கொடுத்தால் உங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி தர இந்திரா காங்கிரஸ் குடும்ப அரசு தயார். உங்கள் அம்மா தயாரா ? பீகாரில் 40 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. தமிழ் நாட்டிலும் பாண்டிச்சேரி உட்பட 39+1= 40 தொகுதிகள் தான். நிதீஷுக்கு கொடுக்கப்பட்ட தொகை பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறத்தான் தம்பி. கூட்டணிக்கு அல்ல. தேர்தல் சமயத்தில் கூட்டணிக்கு சம்மதித்தால் அதற்கு தனியே தக்க சன்மானம் வழங்கப்படும். தமிழக ஆளும் கட்சியான அம்மா அவர்களும், அண்ணா திமுகவுடன் கூட்டு சேர காங்கிரசை அனுமதித்தால் , சில பல ரொக்க பரிசும், கணக்கில் சொல்லமுடியாத சில சலுகைகளும் வழங்கப்படும். அம்மாவிடம் யாராவது எடுத்துச் சொல்லி , எங்கள் காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி மாம்பழம் வாங்கித்தாருங்கள். நல்ல விலை தருகிறோம். பீகார் விலையைவிட சற்று அதிகமாக நிச்சயம் தருவோம். என்ன கூட்டணிக்கு யாராவது தயாரா?   13:08:05 IST
Rate this:
4 members
0 members
33 members
Share this Comment

ஜூன்
19
2013
அரசியல் பீகார் அரசின் முடிவுக்கான ஆரம்பம் தொடங்கிவிட்டது லாலு
காங்கிரசிடம் 44000 கோடி ரூபாய் நிதி உதவி என்றபெயரில் லஞ்சம் பெற்று உள்ளார் நிதீஷ். எனவே காங்கிரசுக்கு ஏற்றபடி குரைத்துத்தான் ஆக வேண்டும். வாங்கிய காசுக்கு குரைக்காத வங்களை என்ன செய்வார்கள் தெரியுமா ?   07:37:26 IST
Rate this:
1 members
1 members
26 members
Share this Comment

ஜூன்
19
2013
அரசியல் பீகார் அரசின் முடிவுக்கான ஆரம்பம் தொடங்கிவிட்டது லாலு
கற்பனைகள் செய்துகொண்டே போக எல்லோருக்கும் உரிமை உண்டு அண்ணா. பாஜக கூட்டணியிலிருந்து நிதீஷ் விலகியதால், நாற்பது தொகுதியிலும் அவர் கட்சி தோல்வி உறுதி. பாஜகவுக்கும் நாமம் தான். காங்கிரசுக்கும் நாமம் தான். லாலுவும், ராமவிலாஸ் பாஸ்வானும் சேர்ந்து 40 தொகுதியையும் கைப்பற்றப்போவது உறுதி.   07:35:18 IST
Rate this:
7 members
0 members
18 members
Share this Comment

ஜூன்
6
2013
விவாதம் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் தேவையா?
இந்த தேசீய தீவிரவாத தடுப்பு மையம் தேவை இல்லாதது. பிடிக்கப்பட்ட தீவிரவாதிகளிடம் உண்மை அறியும் பரிசோதனை ( BRAIN MAPPING AND NARCO ANALYSIS TESTS) நடத்தி , உண்மைகளை வரவழைத்தாலே தீவிரவாதிகளின் கோட்டை கலகலத்து விடும். தீவிரவாதத்தை வளர்த்து விடுவதே காங்கிரஸ்காரர்கள் தான். மும்பையில் வந்து 300 பேரை கொன்ற பாகிஸ்தானிய தீவிரவாதிகளை அனுப்பிய பாகிஸ்தான் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள் காங்கிரஸ்காரர்கள் ? எவ்வளவு நாள் பேச்சுவார்த்தை நடத்துவது ? ஐந்து வருடம் முடிந்துவிட்டது .( 2008-2013 ) காங்கிரஸ் ஒழிந்தாலே தீவிரவாதம் ஒழிந்துவிடும். காங்கிரஸ் நம் நாட்டை பிடித்த ஏழரை நாட்டு சனியன். சனி விலகும் நாள் வெகு தொலைவில் இல்லை.   20:22:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
8
2013
அரசியல் பா.ஜ.,வில் பிளவு அத்வானி வீடு மோடி ஆதரவாளர்கள் முற்றுகை
திமுக அதிமுக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்பது உண்மை. இந்த கலாட்டா செய்வோர் காங்கிரஸ் கட்சியின் குண்டர்களாக கூட இருக்கலாம். ஏனெனில் காங்கிரஸ் குண்டர்கள் கலைஞருடன் பலகாலமாக கூட்டணி வைத்திருந்ததால், திமுகவினரின் குறுக்கு விஷப்புத்தி அவர்களுடன் ஏராளமாக ஒட்டிக்கொண்டு விட்டது. கருத்து கண்ணாயிரம் எம் ஏ பாண்டி அவர்களே, காங்கிரஸ் கொள்ளையர் கட்சி, பாஜக அப்படியல்ல. காங்கிரசில் கொள்ளையர்கள் மட்டுமே உள்ளனர். ஒரே விதிவிலக்கு என்று விரல் விட்டு எண்ணக்கூடிய ஏ கே அந்தோனி , சிவராஜ் படீல் ஆகியோரை மட்டுமே கூறமுடியும். ஆனால் பாஜகவில் ஏராளம் பேர் நல்லவர்கள் உள்ளனர்.   18:29:59 IST
Rate this:
6 members
0 members
8 members
Share this Comment