Advertisement
R.சுதாகர் : கருத்துக்கள் ( 16 )
R.சுதாகர்
Advertisement
Advertisement
அக்டோபர்
25
2014
சம்பவம் திருவாரூர் கமலாலய குள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
வடபுறம் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஓர் ஆண்டுக்கு மேலாகியும் இதுவரை வேலைகள் தொடங்கப்படவில்லை... திராவிட கட்சிகளுக்கு இதில் அக்கறை என்றால் கூட இதற்கு பிஜேபி என்ன செய்தது?   16:44:15 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
21
2014
சம்பவம் பஸ்சில் இருந்து குதித்து பெண் தற்கொலை
இது எப்படி தற்கொலையாகும் ?   03:03:28 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
31
2014
பொது இருப்பவர்கள் விட்டுக் கொடுத்தால் இல்லாதவர்கள் பயன்பெறலாம்
கொடுக்கிற வரிப்பணத்தை ஒழுங்காக உபயோகிக்க துப்பில்லை... ஒவ்வொரு இந்தியனின் தலையிலும் முப்பதாயிரத்துக்கும் மேலே கடன் சுமை இருக்கிறது... நம்மை விட குறைவாக வரி வசூல் செய்யும் தேசங்களெல்லாம் எப்படி நாட்டை ஒழுங்காக கொண்டு செல்ல முடிகிறது? தவறு எங்கே இருக்கிறது என்று சிந்தித்தாலே பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து விடும்... இப்படி உண்டியல் குலுக்க வேண்டியதில்லை.   14:21:39 IST
Rate this:
1 members
0 members
33 members
Share this Comment

ஜூலை
31
2014
உலகம் ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் பொருளாதார தடை தமிழகத்தில் கூடங்குளத்திற்கு பாதிப்பு வருமா?
அமெரிக்காவும் இது போன்ற தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. இங்கேயாவது பிரிவினை வாதிகள் அறியாமல் விமானத்தை சுட்டு வீழ்த்தினார்கள். 1988 இல் அமெரிக்க கப்பல் படை இரானிய விமானத்தை வளைகுடாவில் இருந்து தாக்கி வீழ்த்தி இருக்கிறது. இரான் எங்கிருக்கிறது அமேரிக்கா எங்கிருக்கிறது. அவர்கள் ஏன் துபாய் போய்க்கொண்டிருந்த பயணிகள் விமானத்தை தாக்க வேண்டும்? அவர்களுக்கு வளைகுடாவில் என்ன வேலை? அவர்களுக்கு ஈடாக மற்றொரு நாடு தலை தூக்கி விடாமல் பாதுகாத்துக் கொள்ளவே இவ்வளவும். உலகின் பல நாடுகளில் தனது ராடார் கருவிகளை நிறுவி பக்கத்து நாடுகளை கண்காணிக்கும் வேலையை அமெரிக்கா மட்டுமே செய்து கொண்டிருக்கிறது. ரஷ்யாவை சூழ்ச்சியால் உடைத்து, தான் என்ற அகங்காரத்தில் ஆட்டம் போட்டுக் கொண்டிருப்பது அமெரிக்கா தான். தற்போது அரபு நாடுகளில் நடைபெறும் பல யுத்தங்களுக்கு மறைமுக காரணம் அமெரிக்கா தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒபாமா முகத்தை சிரித்த மாதிரி வைத்துக் கொண்டிருப்பதாலும் புடின் எப்போதும் கடுகடுவென்றிருப்பதாலும், அமெரிக்கர்களை நல்லவர்கள் என்கிறீர்கள் போலிருக்கிறது...   13:39:37 IST
Rate this:
1 members
1 members
12 members
Share this Comment

ஜூலை
31
2014
பொது பெண்களுக்கு பிரத்யேக வங்கி மத்திய அமைச்சர் அறிவிப்பு
நானும் காலையிலிருந்து யோசித்துப் பார்த்து விட்டேன். இதனால் என்ன பயன் என்று சத்தியமாக எனக்குப் புரியவில்லை. அப்படி ஏதேனும் இருந்து, அது யாருக்காவது புரிந்தால் தயவு செய்து விளக்கவும்.   12:03:24 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
25
2014
விவாதம் சானியாவுக்கு கொடுத்த கவுரம் சரிதானா?
நிச்சயமாக இது உள்நோக்கம் கொண்ட, சர்ச்சையை கிளப்ப வேண்டும் என்ற நோக்கில் செய்யப்பட்ட தேர்வு தான். "ஹைதராபாத் சென்றாலே ஏதோ இஸ்லாமிய நாட்டுக்குள் நுழைந்த பிரமை தான் ஏற்படுகிறது, அங்கு உள்ள சேரிகளில் சில நேரங்களில் பாகிஸ்தான் கோடி பறப்பதை பார்க்கலாம்" என்று சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். இந்தியை விடுத்து உருது பேசும் இவர்களிடமிருந்து இது போன்ற செயலைத்தான் எதிர்பார்க்க முடியும்.   11:57:07 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
3
2014
உலகம் சச்சினை தெரியாத சரபோவா
கிரிக்கெட் என்றால் என்ன என்று கேட்கும் பல நாடுகள் இருக்கின்றன... ஏதோ நாம் இவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவதால் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.   12:02:14 IST
Rate this:
5 members
0 members
19 members
Share this Comment

ஜூன்
16
2014
பொது கூடங்குளத்தில் மீண்டும் மின் உற்பத்தி
கூடங்குளத்திலிருந்து மணிக்கொரு முறை தினமலருக்கு அப்டேட் கிடைக்கிறது. ஆனால் அது என்ன சோதனை என்றால் மட்டும் யாருக்கும் சொல்லாமலேயே நிறுத்தி விடுகின்றனர்...?   11:16:29 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
17
2014
எக்ஸ்குளுசிவ் எகிறி வரும் சி.எஸ்.ஆர்., சரிந்து வீழும் எப்.ஐ.ஆர்., பலன் தருமா காவல் துறையின் நடவடிக்கை?
எங்களைப் பற்றி நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். எங்கு சென்றாலும் எங்களுக்கு நியாயம் கிடைக்காது என்பதில் நாங்கள் தெள்ளத் தெளிவாக இருக்கிறோம். கோர்ட்டுக்கு சென்றால் மட்டும் என்ன? குற்றம் செய்தவனுக்கு தானே நீங்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு கரிசனம் காட்டுகிறீர்கள். பாதிக்கப் பட்டவன் வழக்கு தொடர்ந்தால் ஏதோ ஒரு தீவிரவாதியை பார்ப்பது போல் அல்லவா அவனை பார்க்கிறீர்கள். நாங்கள் தான் ஏற்கெனவே பாதிக்கப் பட்டு விட்டோமே... எங்களுக்கு அது போதும். நாங்கள் வழக்கு தொடர்ந்து, அதனால் போலீஸ், நீதிமன்றம் முதற்கொண்டு பல பேருக்கு தொல்லை தான். அந்த குற்றம் புரிந்தவர் தான் ரொம்ப பாவம். தான் செய்த குற்றத்தை எண்ணி தினம் தினம் வருந்திக் கொண்டே ஜெயிலில் கால் பந்தாடிக் கொண்டு, பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு, கலை நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டு ஏன் கஷ்டப்படவேண்டும்? எனவே, விதியே என்று எங்கள் தலைஎழுத்தை எண்ணி உள்ளுக்குள் குமுறி விட்டு, முடிந்தவரை உங்களிடம் வந்து புகார் கொடுக்காமல் பார்த்துக் கொள்கிறோம். பாதிக்கப்பட்டதை விட, உங்களிடம் வந்தால் நியாயம் கிடைக்கும் என்று ஒவ்வொரு நாளும் நம்பி ஏமார்ந்து போவது இன்னும் கொடுமையானது.   01:32:12 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
26
2014
பொது 450 ஆண்டுகளுக்கு முன்னரே கணிக்கப்பட்ட மோடியின் வெற்றி
அந்த மனிதர் இந்தியாவின் கீழ்க்கோடியில் கடலுக்கு அருகில் பிறப்பார் என்றும் தான் சொல்லி இருந்தார்... அப்படியென்றால் அது மோடி அல்லவே...   09:57:13 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment