Suri : கருத்துக்கள் ( 477 )
Suri
Advertisement
Advertisement
டிசம்பர்
14
2018
கோர்ட் ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் அரசின் முடிவு சரியானது சுப்ரீம் கோர்ட்
சீலிடப்பட்ட உறையில் நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவு என்று பசப்பு காட்டி இருப்பார்கள். இவர்களுக்கு ஒன்றுமே இல்லையென்றாலேயே பெரிசாய் பசப்பு காட்டுவார்கள். இதில் கேட்கவா வேண்டும். ஒரு தகர கொட்டகை மட்டுமே இருந்த நிறுவனத்துக்கு, திறக்கப்பட்டு சில நாட்களே ஆன நிறுவனத்திற்கு , திவாலுக்கு பயந்து தன்னுடைய சில நிறுவனங்களில் இருந்து விலகிய ஒரு அதிபருக்கு, வங்கி நடவடிக்கையிலுருந்து தப்ப தன் நிறுவனத்திலிருந்தே விலகிய ஒரு தொழிலதிபருக்கு ஒப்பந்தம் வழங்க ஒரு தில் வேண்டும். அந்த தில் நிறையவே உள்ளது மோடிக்கு.   11:55:58 IST
Rate this:
20 members
1 members
9 members
Share this Comment

டிசம்பர்
14
2018
கோர்ட் ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் அரசின் முடிவு சரியானது சுப்ரீம் கோர்ட்
2G வழக்கில் அனைவரும் விடுவிக்கப்பட்ட போது எழுந்த கூக்குரல் இப்பொழுது எழாது. ஏனென்றால் பெரியவர்கள் ( உயர்ந்தவர்கள் ) செய்தால் பெருமாள் செய்தா மாதிரி.   11:51:40 IST
Rate this:
8 members
0 members
8 members
Share this Comment

டிசம்பர்
14
2018
கோர்ட் ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் அரசின் முடிவு சரியானது சுப்ரீம் கோர்ட்
இப்பொழுது வலது சாரிகளுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தை வசை பாடும் கூட்டம் என்ன செய்யும்? சபரி மலை தீர்ப்பு, தலாக் தீர்ப்பு, ஓரின சேர்க்கை தீர்ப்பு சமயத்தில் வசை பாடிய கூட்டம் இப்பொழுது என்ன கருத்திடும் என்று காத்திருக்கிறேன் .   11:11:54 IST
Rate this:
3 members
1 members
4 members
Share this Comment

டிசம்பர்
13
2018
அரசியல் ரூ.629 கோடி ஊழல் புகாரிலிருந்து ஸ்டாலின், துரைமுருகன்... தப்பினர்!
ஏதாவது இருந்திருந்தால் ரகுபதி கமிஷன் ( ஜெயாவாள் அமைக்கப்பட்டவர் பார்த்து பார்த்து ) அவரே வெளிக்கொணர்ந்திருப்பார். இவ்வளவு காலம் அரசு பணத்தை வீணடித்துவிட்டு ஏதேனும் கிடைக்குமா என்று roving விசாரணை நடத்துவது , இல்லை என்றால் கேஸ் காட்டாய் திருப்பி கூட பார்க்காமல் இரவோடு இரவாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பி தன காழ்ப்புணர்ச்சியை தீர்த்துக்கொள்வது என்று வேலை புரிந்தால் இது தான் நடக்கும். லஞ்ச ஒழிப்பு திரைக்கு அனுப்பப்பட்ட்ட நேரத்தில் அடிமை எடப்பாடிக்கு எதிராக பெரிய பெரிய தலைப்பு செய்திகள் வந்து கொண்டிருந்தன. அதில் இருந்து கவனத்தை திசை திருப்பவும், வஞ்சத்தை தீர்க்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை சுவரில் அடிக்கப்பட்ட்ட பந்து போல திரும்பி வந்துள்ளது. அடிமை கூட்டம் அரசில் இருக்கும் பொது இந்த அடிமை கூட்டம் நீதிமன்ற வழக்குகளை நடத்தும் விதம் மிகவும் கேலிக்குரியது மற்றும் அவமானானகரமானது. காவேரி விஷயத்தில், ஸ்டெர்லிட் விஷயத்தில், மேகதாது விஷயத்தில், எதாவது ஒரு விஷயத்திலாவது நீதிமன்றங்களின் தீர்ப்பை தனக்கு சாதகமாக பெற துப்பு கெட்டவர்கள் தான் இந்த அடிமை கூட்டம்.ஒரு நல்ல வாய்ப்பை ஸ்டாலினை மாட்டிவிடக்கூடிய வாய்ப்பை தவறவிட்டார்கள், தங்கள் அறிவீலித்தனத்தால். இவர்கள் தனக்கு , தன் கல்லா பெட்டியை நிரப்ப மட்டும் தான் ஆட்சி நடத்துகிறார்கள். இவர்களுக்கு தெரியும் இனி எக்காலத்திலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று. அதனால் எதிர்காலத்துக்கு உதவும் என்று இப்போ ஸ்டாலினுக்கு உதவி புரிந்துள்ளார்கள் இப்படிப்பட்ட குளறுபடியான வகையில் வழக்கை நடத்தி, மற்றும் முடிவு எடுத்து.   10:00:14 IST
Rate this:
7 members
1 members
6 members
Share this Comment

டிசம்பர்
12
2018
வங்கி மற்றும் நிதி ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி புதிய கவர்னர் உறுதி
இவரை வைத்து பீ ஜெ பீ தேர்தல் சமயத்தில் பல வேலைகளை சாதிக்கும். தேர்ந்த பொருளாதார மேதைகள் இருக்கும் நிலையில் பொருளாதார படிப்பு படிக்காத ஒரு generalist ஐ இந்த பதிவியில் அமர்த்தும் பீ ஜெ பீ யின் இந்த முடிவு உள்நோக்கம் கொண்டது. இவர் பணமதிப்பிழக்க நடவடிக்கையின் பொது நாளுக்கொரு அறிவிப்பு செய்து அரசின் தலையாட்டி பொம்மையாக இருந்தவர். இவர் இந்த பதவியில் தன்னாட்சியை காப்பாரா என்பது மாபெரும் கேள்விக்குறி.   14:57:29 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
13
2018
அரசியல் காலியாகிறது தினகரன் கூடாரம்
தாமரை இந்த கள்ள சிரிப்புக்கு அதிபரான இவரை அழிக்காமல் விடாது. கூடவே டோக்கன் புகழ். இந்த டோக்கன் formula இந்த முறை செல்லாது. கொள்ளை அடித்து இருக்கும் பணத்தை எல்லாம் வெளியே கொண்டுவந்து மக்களுக்கு கொடுத்தால் நல்லது.   13:46:16 IST
Rate this:
7 members
0 members
16 members
Share this Comment

டிசம்பர்
13
2018
அரசியல் நோட்டாவால் வெற்றியை இழந்த 4 அமைச்சர்கள்
தேர்தல் அகராதியில் பீ ஜெ பிக்கு பிடிக்காத ஒரே வார்த்தை NOTA .   13:43:19 IST
Rate this:
16 members
0 members
17 members
Share this Comment

டிசம்பர்
13
2018
அரசியல் சறுக்கலை சரிசெய்து பா.ஜ, வெல்லும்
மக்கள் காதில் இன்னும் நல்ல பூ சுத்தும்.. வெறும் வெத்து கோஷங்களையும், போலி , மற்றும் பொய் புள்ளி விவரங்களையும் மேலும் அள்ளி வீசும். போலி என்கவுண்டர் நடத்தும். ராணுவத்தை துல்லிய தாக்குதல் நடத்த கூறி அழுத்தம் கொடுத்து அதை அரசியலாகும். எதிர் கட்சிகள் கேள்வி எழுப்பினால் தேச பக்தி என்ற போலி ஆயுதம் எடுக்கும். இவர்களின் ஸ்கிரிப்ட் அனைவருக்கும் தெரிந்ததே.   09:21:19 IST
Rate this:
2 members
0 members
12 members
Share this Comment

டிசம்பர்
12
2018
அரசியல் ஆர்பிஐ கவர்னர் நியமனம் தவறு
மோடிக்கு வேறு யாரும் தேவையில்லை. மோடி கட்சி ஆட்களே போதும் அவருடைய முகமூடியை கிழிக்க. இப்பொழுது அனைவரும் தயாராக உள்ளனர். மோடிக்கு எதிராகவும், அமித் ஷாவிற்கு எதிராகவும் கச்சை கட்டுவதற்கு. இன்னும் யஸ்வந்த் சின்ஹா கருத்து, ஜஸ்வந்த் சிங்க் கருத்து கேட்க ஆவலாக உள்ளார்கள் பொதுமக்கள்.   15:56:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
12
2018
அரசியல் ஆட்சி அமைக்க பா.ஜ., உரிமைகோராது சிவராஜ் சிங்
இரவு முழுதும் செய்த வேலை வெற்றிகரமாக முடியவில்லை. தேர்தல் முடிவு அறிவிக்க இத்தனை நேரம் எடுத்திருக்க தேவையே இல்லை வெளி குறுக்கீடுகள் இல்லாமல் இருந்திருந்தால். அனைத்து குறுக்கீடுகளும் பலன் அளிக்கவில்லை. எனவே பீ ஜெ பீ ஜகா வாங்கிவிட்டது.   15:36:00 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X